Type Here to Get Search Results !

Exodus Five 5 Bible Quiz Questions with Answers | யாத்திராகமம் 5 பைபிள் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Five (5)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் ஐந்தாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. வனாந்தரத்தில் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி என் ஜனங்களை போகவிடு என்று பார்வோனிடம் கேட்டது யார்?
A) மோசே, ஆரோன்
B) மோசே, இஸ்ரவேலரின் தலைவர்கள்
C) ஆரோன், இஸ்ரவேலரின் தலைவர்கள்
Answer: A) மோசே, ஆரோன்
    (யாத்திராகமம் 5:1,3)

02. நான் கர்த்தரை அறியேன் என்றது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) ஆரோன்
Answer: B) பார்வோன்
    (யாத்திராகமம் 5:2)

03. --------- தேவன் எங்களை சந்தித்தார் என்று மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சொன்னார்கள்?
A) சர்வவல்ல தேவன்
B) முன்னோர்களின் தேவன்
C) எபிரெயருடைய தேவன்
Answer: C) எபிரெயருடைய தேவன்
    (யாத்திராகமம் 5:3)

04. மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடப் போகாதிருந்தால் அவர் தங்கள் மேல் எதை வரப்பண்ணுவார் என்றார்கள்?
A) வாதை, பட்டயம்
B) வாதை, கொள்ளைநோய்
C) கொள்ளைநோய், பட்டயம்
Answer: C) கொள்ளைநோய், பட்டயம்
    (யாத்திராகமம் 5:3)

05. எகிப்தில் இஸ்ரவேலரை தங்கள் வேலைகளை விட்டு கலையப்பண்ணியது யார்?
A) பார்வோன்
B) மோசே, ஆரோன்
C) ஆளோட்டிகள்
Answer: B) மோசே, ஆரோன்
    (யாத்திராகமம் 5:4)

06. இஸ்ரவேலர்களுக்கு செங்கல் செய்வதற்காக எதை தரமாட்டேன் என்று பார்வோன் சொன்னான்?
A) தாளடி
B) சுண்ணாம்பு
C) வைக்கோல்
Answer: C) வைக்கோல்
    (யாத்திராகமம் 5:6,7)

07. இஸ்ரவேலர்கள் சோம்பலாயிருக்கிறார்கள் என்றது யார்?
A) தேவன்
B) பார்வோன்
C) மோசே
Answer: B) பார்வோன்
    (யாத்திராகமம் 5:8)

08. "வீண் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவிடாதிருங்கள்;" யார்? யாரிடம் சொன்னது?
A) மோசே – ஆரோன்
B) பார்வோன் - ஆளோட்டிகள்
C) மோசே – ஆளோட்டிகள்
Answer: B) பார்வோன் - ஆளோட்டிகள்
    (யாத்திராகமம் 5:9)

09. செங்கள் செய்ய ஜனங்கள் வைக்கோலுக்கு பதிலாக எதை பயன்படுத்தினார்கள்?
A) பாறைகள்
B) சுண்ணாம்பு
C) தாளடிகள்
Answer: C) தாளடிகள்
    (யாத்திராகமம் 5:12)

10. எதை சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்?
A) செங்கல்
B) வைக்கோல்
C) தாளடிகள்
Answer: C) தாளடிகள்
    (யாத்திராகமம் 5:12)

11. இஸ்ரவேல் ஜனங்களை வேலையை செய்துமுடிக்கும்படி அவர்களை துரிதப்படுத்தியது யார்?
A) பார்வோனின் படைவீரர்
B) இஸ்ரவேலரின் தலைவர்கள்
C) ஜனங்களின் ஆளோட்டிகள்
Answer: C) ஜனங்களின் ஆளோட்டிகள்
    (யாத்திராகமம் 5:13)

12. செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்தது போல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு அவர்களை அடித்தது யார்?
A) பார்வோனின் படைவீரர்
B) இஸ்ரவேலரின் தலைவர்கள்
C) இனங்களின் ஆளோட்டிகள்
Answer: C) இனங்களின் ஆளோட்டிகள்
    (யாத்திராகமம் 5:14)

13. உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உம்முடைய அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றது யார்?
A) மோசே
B) இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
C) இஸ்ரவேல் ஜனங்கள்
Answer: B) இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
    (யாத்திராகமம் 5:15,16)

14. தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டது யார்?
A) பார்வோன்
B) இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
C) மோசே, ஆரோன்
Answer: B) இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
    (யாத்திராகமம் 5:19)

15. இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படுகையில் வழியில் நின்ற யாரை பார்த்தார்கள்?
A) காவலர்கள்
B) மோசே, ஆரோன்
C) ஆளோட்டிகள்
Answer: B) மோசே, ஆரோன்
    (யாத்திராகமம் 5:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.