=================
கிறிஸ்துமஸ் கீதங்கள்
=================
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் (ஏசாயா 9:6)
பாடல் 01
பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்!
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மாதேவ தேவனே!
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்!
- பிறந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே!
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய் திகழ்ந்தார்!
- பிறந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே!
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்!
- பிறந்தார்
4. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்!
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்!
- பிறந்தார்
5. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ!
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்!
- பிறந்தார்
6. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்!
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்!
- பிறந்தார்
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனைப் பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனைத் தேடி
வாரீர்! வாரீர்! வாரீர்! நாம் செல்வோம்
1. அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
- அதிகாலையில்
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
நம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
அந்த காட்சியை கண்டிட நாமும்
- அதிகாலையில்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட!
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிடமுதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்
பாடல் 02
அதிகாலையில் பாலனைத் தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தேவ பாலனைப் பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனைத் தேடி
வாரீர்! வாரீர்! வாரீர்! நாம் செல்வோம்
1. அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
- அதிகாலையில்
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
நம் சிந்தை குளிர்ந்திட போற்றும்
அந்த காட்சியை கண்டிட நாமும்
- அதிகாலையில்
பாடல் 03
ஆதித் திரு வார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட!
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிடமுதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்
தாம் தாம் தன்னரர் வன்னரர்
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
- ஆதித் திரு வார்த்தை
1. ஆதாம் சாதி ஏவினர்;
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
- தாம் தாம் தன்னரர்
2. பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்
- தாம் தாம் தன்னரர்
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கீர்த இங்கீர்த இங்கீர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
- ஆதித் திரு வார்த்தை
1. ஆதாம் சாதி ஏவினர்;
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்
- தாம் தாம் தன்னரர்
2. பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்
- தாம் தாம் தன்னரர்
3. அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்பரன் தற்பரனார்
- தாம் தாம் தன்னரர்
கர்த்தன் ஏசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
- பெத்தலகேம்
ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்பரன் தற்பரனார்
- தாம் தாம் தன்னரர்
பாடல் 04
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் ஏசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
- பெத்தலகேம்
1. எல்லையில்லா ஞானபரன் வெல்லை மலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்
- பெத்தலகேம்
2. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ
ஆன பழங் கந்தை என்ன பாடோ?
- பெத்தலகேம்
3. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
- பெத்தலகேம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்
- பெத்தலகேம்
2. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ
ஆன பழங் கந்தை என்ன பாடோ?
- பெத்தலகேம்
3. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
- பெத்தலகேம்
4. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
- பெத்தலகேம்
5. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
- பெத்தலகேம்
6. நட்சத்திரம் கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபம் போளம் வைத்து சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே!
- பெத்தலகேம்
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
- பெத்தலகேம்
5. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
- பெத்தலகேம்
6. நட்சத்திரம் கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபம் போளம் வைத்து சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே!
- பெத்தலகேம்
பாடல் 05
அதி மங்கல காரணனேதுதி தங்கிய பூரணனே –நரர் வாழ
விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!
- அதி மங்கல காரணனே
- அதி மங்கல காரணனே
1. மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும் –உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட
வையாய் துங்கவனே!
- அதி மங்கல காரணனே
2. முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும் – நீங்கி
மாட்டிடையே பிறந்தாட்டிடையர் தொழ
வந்தனையோ தரையில்?
- அதி மங்கல காரணனே
3. தீய பேய்த்திரள் ஓடுதற்கும்
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும் - உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்தற்கும்
பெற்ற நற்கோலம் இதோ?
- அதி மங்கல காரணனே
பாடல் 06
ஆரிவர் ஆராரோ - இந்தஅவனியோர் மாதிடமே!
ஆனடை குடிலிடை மோனமாயுதித்த
இவ்வற்புத பாலகனார்!
1. பாருருவாகு முன்னே - இருந்த
பரம்பொருள் தானிவரோ
சீருடன் புவிவான் அவை பொருள் யாவையும்
சிருஷ்டித்த மாவலரோ!
- ஆரிவர் ஆராரோ
2. மேசியா இவர் தானோ – நம்மை
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ!
- ஆரிவர் ஆராரோ
மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ!
- ஆரிவர் ஆராரோ
3. தித்திக்கும் தீங்கனியோ
நமது தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசயமேவிய விண்ணொளியோ!
- ஆரிவர் ஆராரோ
4. பட்டத்து துரை மகனோ – நம்மை
பண்புடன் ஆள்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்பு
காட்டிடும் தாயகனோ!
- ஆரிவர் ஆராரோ
5. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்
தீர்த்திடும் பானமோ தான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவர் இவர் தானோ!
- ஆரிவர் ஆராரோ
பாடல் 07
அரசனைக் காணாமலிருப்போமோ - நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ!
பரம்பரை ஞானத்தை பழிப்போமோ - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ! - யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே
- யூத அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்!
மேற்குத் திசை வழி காட்டி முன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே- அவர்
பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே!
- யூத அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! - நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்!
- யூத அரசனை
4. அரமனையில் அவரை காணோமே! அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே
பெத்லேம் வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார்!
- யூத அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே- ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல்
- யூத அரசனை
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல் - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல்
- யூத அரசனை
பாடல் 08
பெத்தலையில் பிறந்தவரைபோற்றித்துதி மனமே - இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்!
- பெத்தலையில்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுந்தொட்டிலில் படுத்திருக்கிறார்!
- பெத்தலையில்
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே!
- பெத்தலையில்
4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்!
- பெத்தலையில்
5. இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே!
- பெத்தலையில்
பாடல் 09
ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதே - என்றன்ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே - இதோ!
1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே
என்னை அனைவரும் பாக்கிய யென்பாரே,
முடிவில்லா மகிமை செய்தாரே
பலமுடையவர் பரிசுத்தர் என்பாரே! -இதோ!
- ஆத்துமா கர்த்தரை
2. பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்! - இதோ!
- ஆத்துமா கர்த்தரை
3. முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல்
அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸ்ரேல்
அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல்! -இதோ!
- ஆத்துமா கர்த்தரை
பாடல் 10
காரிருள் வேளையில் கடுங்குளிர்நேரத்தில் ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உம் மாதயவே தயவு - 2
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமலே மானிடனானது
மாதயவே தயவு - 2
- காரிருள்
2. விண்ணிலே தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் மலர்ந்தது
உந்தன் மாதயவே தயவு - 2
- காரிருள்
பாடல் 11
ஓசன்னா பாடுவோம்ஓசன்னா பாடி மகிழ்வோம்
தாவீதின் மைந்தன் தேவ குமாரன்
தரணி மீதினில் உதித்தார்!
1. இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததே
அருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததே
ஆடிடுவோமே பாடிடுவோமே
ஆனந்தம் கொள்வோமே
பாலகன் இயேசு பாரினில் வந்தார்
பாடி மகிழ்வோமே! ஓசன்னா
- ஓசன்னா பாடுவோம்
2. மரியின் மகவாய் மாந்தர துயர் போக்கவே
2. மரியின் மகவாய் மாந்தர துயர் போக்கவே
மாதேவன் இயேசு உலகில் மனுஉருவெடுத்தார்
முன்னுரைப்படி முன்னணை மீது மழலை உருவிலே
முன்னுரைப்படி முன்னணை மீது மழலை உருவிலே
தன்னிகரில்லா தேவன் உதித்தார் ஆனந்தம் ஆனந்தமே
-எந்நாளும் ஆனந்தம் ஆனந்தமே - ஓசன்னா
பாடல் 12
கண்டேனென் கண்குளிர - கர்த்தனைஇன்று கண்டேனென் கண்குளிர
கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்
- கண்டேனென்
1. பெத்தலேம் சத்திர முன்னணையில்
1. பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனைக்
- கண்டேனென்
2. தேவாதி தேவனை தேவ சேனை
2. தேவாதி தேவனை தேவ சேனை
ஓயாது ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
- கண்டேனென்
3. பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
3. பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்
- கண்டேனென்
4. மண்ணோர் இருள்போக்கும் மாமணியை
4. மண்ணோர் இருள்போக்கும் மாமணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியைக்
- கண்டேனென்
5. அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
5. அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனைக்
- கண்டேனென்
இவர்தாம்! (2) இவர்தாம்! (2)
1. நம தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
பாடல் 13
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர்தாம்! (2) இவர்தாம்! (2)
1. நம தாதி பிதாவின் திருப்பாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
- சமாதானம்
2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயர் இவர்
- சமாதானம்
3. ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
3. ஆதிநரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
- சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
- சமாதானம்
4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
- சமாதானம்
5. மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே
- சமாதானம்
6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலைநாட்டினாரே முடிசூட்டினாரே!
- சமாதானம்
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
பாடல் 14
1. கேள்! ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்
3. வாழ்க சாந்த பிரபுவே!
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்
பாடல் 15
1. பக்தரே வாரும்ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
- சாஷ்டாங்கம்
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
- சாஷ்டாங்கம்
4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்
4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்
- சாஷ்டாங்கம்
சிவந்தப்பட்டு ரோஜா ஆராரோ!
பாவி எனக்காய் பாரினில் வந்த பனிபடா மலரே ஆராரோ!
தேவகுமாரனே ஆராரோ! மனித குமாரனே ஆராரோ! - சிங்
1. மாட்டுத் தொழுவத்தில் இந்த
பாடல் 16
சிங்கார ஐயனே ஆராரோ!சிவந்தப்பட்டு ரோஜா ஆராரோ!
பாவி எனக்காய் பாரினில் வந்த பனிபடா மலரே ஆராரோ!
தேவகுமாரனே ஆராரோ! மனித குமாரனே ஆராரோ! - சிங்
1. மாட்டுத் தொழுவத்தில் இந்த
மானிட மீட்பை எண்ணி
மேன்மையை வெறுத்து தாழ்மையை ஏற்ற
சின்னஞ்சிறு கண்ணே ஆராரோ!
- தேவ குமாரனே
2. தங்க தொட்டில் இல்லை அங்கு
2. தங்க தொட்டில் இல்லை அங்கு
தாதியர் கூட இல்லை
தஞ்சம் இன்றி தரணியில் வந்த
தவபெரும் செல்வமே ஆராரோ!
- தேவ குமாரனே
பாடல் 17
1. ஒப்பில்லா - திரு இரா!இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்!
அன்பின் அதிசயமாம்!
2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்!
எத்தனை தாழ்த்துகிறார்!
3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
பாடல் 18
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்!
2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்!
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்!
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்!
5. என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்!
6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்!
பாடல் 19
1. ராயர் மூவர் கீழ்த்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்!
ஓ... ஓ... இராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்!
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்!
2. பெத்லகேம் வந்த இராஜாவே
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
கிரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே! - ஓ...
3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே! - ஓ...
4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன்! - ஓ...
கூதலடிக்கிறதோ! பாலா குளிரும் பொறுக்கலையோ!
1. மூடத் துணியில்லையோ! - இந்த
உம்மை நித்திய வேந்தன் என்றேன்
கிரீடம் சூடும் நற்பொன்னை நான்
வைத்தேன் உம் முன்னமே! - ஓ...
3. வெள்ளை போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் கடவுளே
துஷ்ட பாவ பாரம் தாங்கி
மரிப்பார் தேவனே! - ஓ...
4. தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெப தூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன்! - ஓ...
பாடல் 20
ஏதுக்கழுகிறாய் நீ! ஏழை மாது நான் என்ன செய்வேன்கூதலடிக்கிறதோ! பாலா குளிரும் பொறுக்கலையோ!
1. மூடத் துணியில்லையோ! - இந்த
மாடடையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ!
வாடையடிக்கிறதோ!
பாலா வாடித் தவிக்கிறாயோ!
- ஏதுக்கழுகிறாய்
2. தந்தைக்கு தச்சு வேலை
2. தந்தைக்கு தச்சு வேலை
உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில்
இந்த மாசங்கடத்தில்
பாலா என்ன பெருமையுண்டு!
- ஏதுக்கழுகிறாய்
3. இல்லாத ஏழைகட்கு
3. இல்லாத ஏழைகட்கு
இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால்
ஏழை மாது நான் என்ன செய்வேன்!
- ஏதுக்கழுகிறாய்
4. ஜோதியே சுந்தரமே
மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால்
நாதனே நீ அழுதால்
இந்த நாடும் சிரியாதோ!
- ஏதுக்கழுகிறாய்
ஆதிபன் பிறந்தார்!
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார்! - ஆ!
1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய உச்சிதவானே! - ஆ!
2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார்! - ஆ!
பாடல் 21
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்!
ஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார்! - ஆ!
1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய உச்சிதவானே! - ஆ!
2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற, - அன்று
அல்லிராவினில் - தொல்லையிடையினில்
புல்லணையிற் பிறந்தார்! - ஆ!
3. ஞானியர் தேட, வானவர் பாட, - மிக
நன்னய, உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார்! -ஆ!
4. கோனவர் நாட, தானவர் கொண்டாட, - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே, யூத கோத்திரன் பிறந்தார்! - ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, ஏரோது,
மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்! - ஆ!
நன்னய, உன்னத - பன்னரும் ஏசையா
இந்நிலம் பிறந்தார்! -ஆ!
4. கோனவர் நாட, தானவர் கொண்டாட, - என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே, யூத கோத்திரன் பிறந்தார்! - ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, ஏரோது,
மைந்தனின் சிந்தையெழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்! - ஆ!
பாடல் 22
ஏசாயா தீர்க்கன் அன்றொரு நாள் தரிசனம் கண்டான்!தேவமைந்தன் கன்னி மரியின் மடியில் தோன்றுவான்!
1. கடுங்குளிரில் மேய்ப்பர் மந்தை காத்து நிற்கையில்
தேவ தூதன் வானில் தோன்றி வாழ்த்து கூறினான்
எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் தரும்
நற்செய்தி கூற இங்கு வந்துதித்தாரே!
- ஏசாயா தீர்க்கன்
2. தாவீதின் குமாரன் இயேசு பெத்லகேமிலே
2. தாவீதின் குமாரன் இயேசு பெத்லகேமிலே
மாட்டுத் தொழுவில் ஏழ்மையாக அவதரித்தாரே!
கர்த்தராகிய கிறிஸ்து உலக ரட்சகர்
பாலனாக உன்னில் தோன்ற இடம் தருவாயா?
- ஏசாயா தீர்க்கன்
பாடல் 23
ஒரு ரோஜா மலர்ந்தது போலேஇயேசு ராஜா பிறந்தனரே!
போற்றுவோம் போற்றுவோம் இயேசு பாலனை
போற்றுவோம் போற்றுவோம் இயேசு பாலனை
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் கன்னி மைந்தனை!
- ரோஜா மலர்ந்தது
1. கோடி கோடியாய் மலர்ந்திடும் ரோஜா
1. கோடி கோடியாய் மலர்ந்திடும் ரோஜா
வாடி வாடியே உதிர்ந்துவிடும்
வாடாத மலராம் என் இயேசு ராஜா
பாடாத பாடல் முழங்கிட பிறந்தார்
- ரோஜா மலர்ந்தது
2. கோடி கோடியாய் தூதர்கள் மகிழ
ஓடி ஓடியே வாழ்த்துச் சொல்ல
வாடாத கண்கள் துன்பத்தால் ஏங்க
வாழ்வாயோ நீயும் பாவங்கள் நீங்க
- ரோஜா மலர்ந்தது
பாடல் 24
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லைமாட்டுத் தொழுவில் பிறந்தாரையா - இயேசு
முன்னணையில் உதித்தாரையா!
ஏழைகளை தேடி வந்த இயேசு என்று
ஏழைகளை தேடி வந்த இயேசு என்று
சொல்லிப் பாடி மகிழ்வோமையா!
1. மச்சு வீடு பல இருந்தும் மன்னவருக்கு இடமில்லை
1. மச்சு வீடு பல இருந்தும் மன்னவருக்கு இடமில்லை
தச்சன் வீட்டில் பிறந்தாரையா - இயேசு
மோட்ச ராஜன் உதித்தாரையா!
- ஏழைகளை தேடி
2. விலை மதியா வஸ்திரங்கள்
2. விலை மதியா வஸ்திரங்கள்
விதவிதமாய் குவிந்திருந்தும்
கந்தலாடை அணிந்தாரையா - இது
விந்தையான மகிமையையா!
- ஏழைகளை தேடி
3. பஞ்சனைகள் பல இருந்தும்
பிஞ்சுக் குழந்தைக்கிடமில்ல
நெஞ்சனையில் தவழ்ந்தாரையா - மரியின்
தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா!
- ஏழைகளை தேடி
பாடல் 25
அடையாளம் தூதன் சொன்னதாலே - இனிதடையேது ஆண்டவரைக் காண
உடை கந்தையோடு குழந்தையாக
உடை கந்தையோடு குழந்தையாக
மாட்டுக்குடிலொன்றில் காண்பீர் விரைந்து சென்று
1. மாட்டுத் தொழுவம் காட்டும் கோலம் ஏழ்மை அதில்
1. மாட்டுத் தொழுவம் காட்டும் கோலம் ஏழ்மை அதில்
மறைந்து கிடக்கும் சிலுவைக் காட்சி மேன்மை!
நாட்டிலுள்ள ஏழை மாந்தரிடமே
இயேசு நன்மை செய்து வாழ்கின்றார் தினமே!
- அடையாளம் தூதன்
2. வந்த மீட்பர் கந்தை கோலம் புதுமை - அவர்
2. வந்த மீட்பர் கந்தை கோலம் புதுமை - அவர்
உலகில் புதுமை பரப்புகின்றார் உண்மை
எந்த நாளும் இந்த புதுமை ஏற்போம் - அதில்
இருக்கின்றாரா கிறிஸ்து என்று பார்ப்போம்!
- அடையாளம் தூதன்
ஓ பெத்லகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார்!
நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை
பாடல் 26
1. கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடிஓ பெத்லகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார்!
நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை
2. மகத்துவ ராஜா, சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா!
முன்னணை தானோ உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை
3. விண் மண்ணிலும் கர்த்தர் கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி போற்றி துதியுங்கள்.
நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை
4. அநாதி பிதாவின் வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே!
ஜென்மித்தீர் என்று உம்மை ஸ்தோத்திரிப்போம்!
நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை.
பாடல் 27
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
இரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்.
2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.
3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடி இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.
4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.
5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பை சிந்தை செய்வோம் நாம்;
தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.
6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்
அவரின் நித்திய துதி பாடுவோம்.
பாடல் 28
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே.
2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே.
3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேரூபீன் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே.
4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப் சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தாள்
முக்தி பக்தியோடு தொழுதாள்.
5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ என்தன் நெஞ்சம் படைப்பேன்.
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேரூபீன் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே.
4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப் சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தாள்
முக்தி பக்தியோடு தொழுதாள்.
5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ என்தன் நெஞ்சம் படைப்பேன்.
பாடல் 29
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் வந்தார்! - பாரில்
1. இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் வந்தார்! - பாரில்
2. வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர்
2. வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்! - பாரில்
3. நித்திய பிதாவின் நேய குமாரன்
3. நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்! - பாரில்
4. மெய்யான தேவன் மெய்யான மனுடன்
4. மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்! - பாரில்
5. தீவினை நாசர் பாவிகள் நேசர்
5. தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்! - பாரில்
6. ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
6. ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்! - பாரில்
பாடல் 30
வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ?என்ன இது?
ஞானவான்களே நிதானவான்களே
என்ன இது? - வானம்
1. பொன்னகரத்தாளும், உன்னதமே நீளும்
பொறுமை கிருபாசனத்துரை, பூபதி வந்ததே அதிசயம்!
ஆ! என்ன இது! - வானம்
2. சத்யசருவேசன், துத்ய கிருபைவாசன்,
2. சத்யசருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர் மகத்துவக் குமாரனோ இவர்!
ஆ! என்ன இது! - வானம்
3. மந்தைக் காட்டிலே மாட்டு கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
3. மந்தைக் காட்டிலே மாட்டு கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
நிந்தை பாவிகள் சொந்தக் கண்காட்சி!
ஆ! என்ன இது! - வானம்
4. வேறே பேரல்ல சுரர் விண்ணவர் ஆருமல்ல;
4. வேறே பேரல்ல சுரர் விண்ணவர் ஆருமல்ல;
மாறில்லாத ஈறில்லாத வல்லமை தேவனே
புல்லில் கிடக்கிறார்! ஆ! என்ன இது! -வானம்
5. சியோனின் மாதே, இனி திரிந்தலையாதே
5. சியோனின் மாதே, இனி திரிந்தலையாதே
மாயமென்ன உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ?
ஆ!என்ன இது! -வானம்
பாடல் 31
நல்ல செய்தி ஒன்னு இருக்குதுங்க!அதை சொல்லத்தானே வந்தோமுங்க!
1. உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்
1. உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்
சந்தோஷ செய்தியுங்க!
மனுஷரில் பிரியம் மன்னவர் பிறந்தார்
மகிழ்ச்சி செய்தியுங்க!
இது சுவிசேஷ செய்தியுங்க!
மகிழ்ச்சி செய்தியுங்க!
இது சுவிசேஷ செய்தியுங்க!
ஏற்றுக் கொண்டால் புண்ணியமுங்க!
- நல்ல செய்தி
2. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
2. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன்!
நித்திய பிதா சமாதான பிரபு
என்பது அவர் நாமம்! இது சுவிசேஷ செய்தியுங்க!
ஏற்றுக் கொண்டால் புண்ணியமுங்க!
- நல்ல செய்தி
பாடல் 32
இராஜாதி இராஜனிவர் அல்லேலூயா (2)கர்த்தாதி கர்த்தனிவர் அல்லேலூயா(2)
வழுவாது காப்பவராம் அல்லேலூயா(2)
மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா(2)
மகிமை நிறைந்த புனிதரேசு தேவன் இவரே
மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா(2)
மகிமை நிறைந்த புனிதரேசு தேவன் இவரே
கிருபை இரக்கம் அளிக்க வந்தவராம்
உலகை மீட்கும் இயேசு மாமன்னராம்
புதிய ஜீவன் தந்திடவே தேவாதி தேவன் மண்ணில் வந்தார்!
மானிடனானார் ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே கன தேசார் நீதமே!-ஒளிர்
காசினி மீததி நேசப் பிரகாச
விண் வாச கிருபாசன!
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் - வளர்
பாடல் 33
மாசில்லா தேவ புத்திரன்மானிடனானார் ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே கன தேசார் நீதமே!-ஒளிர்
காசினி மீததி நேசப் பிரகாச
விண் வாச கிருபாசன!
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் - வளர்
பெத்தலேம் ஊர்தனிலே
கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்!
3. அந்தரம் பூமியும அதி சுந்தர நேமியும் - தினம்
கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்!
3. அந்தரம் பூமியும அதி சுந்தர நேமியும் - தினம்
ஐந்தொரு நாளினிலே
தருமுந்தின மூன்றிலொன்றாகிய!
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்!
பாலன், இயேசு கிறிஸ்துதான்!
தருமுந்தின மூன்றிலொன்றாகிய!
பாடல் 34
1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்!
பாலன், இயேசு கிறிஸ்துதான்!
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே!
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்!
3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார்!
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்!
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்!
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்!
மா கர்த்தாதி கர்த்தரே!
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்!
3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார்!
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்!
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்!
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்!
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்!
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே!
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்!
இந்த லோகத்தை மீட்டிடவே!
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்!
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்!
1. மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே - தோன்றி
தேவனைத் துதித்தனரே!
2. ஆலோசனை கர்த்தரே - இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு - சர்வ
வல்லவர் பிறந்தனரே!
3. பொன், பொருள், தூபவர்க்கம்
கண்ணால் கண்டு களிப்போம்!
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே!
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்!
பாடல் 35
இயேசு மானிடனாய் பிறந்தார்!இந்த லோகத்தை மீட்டிடவே!
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்!
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்!
1. மேய்ப்பர்கள் இராவினிலே - தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே - தோன்றி
தேவனைத் துதித்தனரே!
2. ஆலோசனை கர்த்தரே - இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு - சர்வ
வல்லவர் பிறந்தனரே!
3. பொன், பொருள், தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே!
4. மாட்டுத் தொழுவத்திலே - பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் - அவர்
ஏழ்மையின் பாதையிலே!
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே!
4. மாட்டுத் தொழுவத்திலே - பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் - அவர்
ஏழ்மையின் பாதையிலே!
பாடல் 36
1. வாரும் பெத்லகேம் வாரும்வாரும் வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்!
2. எட்டி நடந்து வாரும் -அதோ ஏறிட்டு நீர் பாரும்;
2. எட்டி நடந்து வாரும் -அதோ ஏறிட்டு நீர் பாரும்;
பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்!
3. ஆதியிலத மேவை-அந்நாள்! அருந்திய பாவவினை
பாரும் மகிழ்ந்து பாரும்!
3. ஆதியிலத மேவை-அந்நாள்! அருந்திய பாவவினை
ஆ! திரிதத்துவ தேவன் மனிதத்துவ மாயினார் இது புதுமை!
4. விண்ணுலகாதிபதி -தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்மானிடனா யுதித்தார்!
5. சொல்லுதற் கரிதாமே - ஜோதி சுந்தர சோபனமே
5. சொல்லுதற் கரிதாமே - ஜோதி சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதிபூபதிதான் பிறந்தார்!
6. மந்தை மாடடையில் - மாது மரியவள் மடியதனில்
6. மந்தை மாடடையில் - மாது மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்!
7. தூதர் பறந்துவந்து தேவ துந்துமி மகிழ்பாட
காரணமாய் அணிந்தார்!
7. தூதர் பறந்துவந்து தேவ துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட!
பாவி என் பாவம் தீர்க்கவே
மாமாரி சுதனாய்
தொழுவின் முண்ணையில்
ஏழையாய் அவதரித்தார்
1. இடையர்கள் கூடி ஆனந்தமாய்
காணிக்கையுடன் தொழவே
நட்சத்திரம் கண்டு
சாஸ்திரிகள் அறிந்து
பெத்தேலே ஏகினாரே
- பாலன் இயேசு
2. போற்றுவோம் நாமே ஆனந்தமாய்
இரட்சகர் இயேசுவையே
ஏற்ற காணிக்கையுடன் இந்நாளில்
அகமகிழ்ந்தாரிப்போம்
- பாலன் இயேசு
தாரகைகள் தாளம் அங்கே போடுகின்தோ
ஏழை நானும் இயேசு பாலா
தாலாட்டு பாடுவேன் (2)
ஆரிராரிரோ ஆரிராரீரோ
ஆரிராரிரோஆரிராரீரோ (2)
மாடுகட்டும் இடம் உந்தன், வீடாய் மாறி போனதோ
பாடுபடும் பாலகா உன்னோடு வரலாகுமோ
கஞ்சி காய்ச்சி நான் குடிச்சு பாலுனக்கு ஊட்டுவேன்
பஞ்சு மெத்த செய்சி உன்னை படுத்துறங்க
பன்னுவேன், கண்ணுறங்கு ஆரீராரோ
தாலாட்டு நான் பாடுவேன், ஆரிராரோ
ஆரீராரோ ஆரிராரோ ஆரீராரிரோ
- வான் நிலவு
பாடல் 37
பாலன் இயேசு உதித்தார்பாவி என் பாவம் தீர்க்கவே
மாமாரி சுதனாய்
தொழுவின் முண்ணையில்
ஏழையாய் அவதரித்தார்
1. இடையர்கள் கூடி ஆனந்தமாய்
காணிக்கையுடன் தொழவே
நட்சத்திரம் கண்டு
சாஸ்திரிகள் அறிந்து
பெத்தேலே ஏகினாரே
- பாலன் இயேசு
2. போற்றுவோம் நாமே ஆனந்தமாய்
இரட்சகர் இயேசுவையே
ஏற்ற காணிக்கையுடன் இந்நாளில்
அகமகிழ்ந்தாரிப்போம்
- பாலன் இயேசு
பாடல் 38
வான் நிலவு வாழ்த்து பாடல் பாடுகின்றதோதாரகைகள் தாளம் அங்கே போடுகின்தோ
ஏழை நானும் இயேசு பாலா
தாலாட்டு பாடுவேன் (2)
ஆரிராரிரோ ஆரிராரீரோ
ஆரிராரிரோஆரிராரீரோ (2)
மாடுகட்டும் இடம் உந்தன், வீடாய் மாறி போனதோ
பாடுபடும் பாலகா உன்னோடு வரலாகுமோ
கஞ்சி காய்ச்சி நான் குடிச்சு பாலுனக்கு ஊட்டுவேன்
பஞ்சு மெத்த செய்சி உன்னை படுத்துறங்க
பன்னுவேன், கண்ணுறங்கு ஆரீராரோ
தாலாட்டு நான் பாடுவேன், ஆரிராரோ
ஆரீராரோ ஆரிராரோ ஆரீராரிரோ
- வான் நிலவு
பாடல் 39
பொன்னாளே நான் செய்துவச்சேன்பூவை போல ஆசை தொட்டில்
மின்னல் போல கயிராய்
தரிச்சி; மேகத்தோடு கட்டிவச்சேன்
சிரிச்சி உறங்கும் அழகு தனி தான்
உன்மதுரம் இரண்டும் அழகு கனி தான் (2)
தூங்கட்டும் தூங்கட்டும் ஏசையா (2)
மனசு தாங்கட்டும் தாங்கட்டும் ஏசையா
1. இந்த வருடம் நீயும் பிறக்க இரட்டிப்பான சந்தோஷமே
உம்மைப் போல பிறந்திரிக்கா
என் மடியில் அன்பு நேசம்
சின்ன விழிய மூடி மூடி – நீ
சிரிச்சபடி தூங்கு ராஜா
- தூங்கட்டும்
2. எல்லோருடைய வீட்டிலேயும்
நீதானப்பா செல்லப்பிள்ளை
எல்லாம் மொத்தம் சேர்த்தால்
நீதானப்பா மூத்தபிள்ளை
ராகத்தோடு பாடுகின்றேன் – நீ
ராப்பாகலா தூங்கு ராஜா
- தூங்கட்டும்
பாடல் 40
பிதாவின் சித்தப்படியே ஓர் வார்த்தையானவர்மாம்சமாகியே மானிடனாய் பிறந்தார்
பரிசுத்த பாலகனாய் பிறந்தார்
பரிசுத்த பாலகனாய் பரினிலே ஜெனித்தார்
நாம் பாடியே போற்றிடுவோம்
பராபரன் கிருபையால் – பிதாவின்
உன்னத தேவனுக்கே உலகில் சமாதானம்
நாம் பாடியே போற்றிடுவோம் பராபரன் கிருபையால்
- பிதாவின்
பாடல் 41
தேவா உம்மை தேடிவந்தோம் (3)யூதரின் ராஜா, எங்கே என்று தேடிவந்தோமே
மூவேந்தர் போல எங்கே என்று தேடிவந்தோமே (2)
பகலிலும் இரவிலும்
தேவா உம்மை தேடிவந்தோம்
எங்கள் தேவா எங்கள் தேவா
ஏன் இந் கோலம், கொண்டதும் ஏனோ
ஏழையின் சாயலாய்
தாழ்மையின் உருவமாய்
மானிட உருவில் வந்ததும் ஏனோ
- தேவா உம்மை
உம்மைத்தேடி நான் வருவேன்
என்னை பாரும் இயேசு நாதா
எந்தன் நாதா என் தன் நாதா
ஏன் இந்த கோலம் கொண்டதும் ஏனோ
ஏழையின் சாயலாய்
தாழ்மையின் உருவமாய்
மானிட உருவில் வந்ததும் ஏனோ
- தேவா உம்மை
பாடல் 42
பெத்லேகேமின் ஊரில் புல்லனையின் மீதினில்
சுற்றிய துணியில்
துயிலும் விண்பாலனே
இம்மானுவேலன் அவரே
இன்றுதித்தார் நமக்காய்
மற்றல்லா மனிதருக்கும்
மிகுந்த சந்தோஷம்
- பெத்லகேமின்
உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
மனிதர் மேல் பரிரியமும்
அன்பு கொள்ளவந்தாயே
- பெத்லகேமின்
பாடல் 43
சின்னக்குழந்தை ஏசுவுக்குஎன்ன கொடுப்பது
நான் என்ன கொடுப்பது
மலரை படைத்த மழழைக்கு
மலரை கொடுப்பதா
கனியை படைத்த கண்மணிக்கு
கனியை கொடுப்பதா
- சின்னக்குழந்தை
குரலை கொடுத்த பூமானுக்கு
இசையை எழுப்ப வா
இரவும் பகலும் அவர் புகழை
பாடி புகழ்வதா
- சின்னக்குழந்தை
பாடல் 44
இயேசு பிறந்து விட்டார்மேசியாவும் வந்து விட்டார்
சேர்ந்து பாடுங்கள் தன்னான்னானே
தூதர் சொல்லி விட்டார்
அமைதியும் தந்து விட்டார்
சேர்ந்து, ஆடுங்கள் தன்னான்னானே
பெத்தலேகேம் ஊரினிலே
மாட்டிடையின் தொழுவினிலே
ஏழையின் குடிசையிலே பிறந்தவனே
தேவ தூதன் சொன்ன சேதியிது
பாவம் போக்க வந்த தெய்வம் இது
கூடுவோம் நாமும் ஆடி பாடி
நாடுவோம் அவரின் அருளை தேடி
- இயேசு பிறந்து விட்டார்
காட்டினிலே திருவிழா வீட்டினிலே பெறுவிழா
இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்
விண்மீன் காட்டி தந்த வழியுமிது
மண்ணின் இருளை போக்கும் தெய்வம் இது
கூடுவோம் நாமும் ஆடி பாடி
நாடுவோம் அவரின் அருளை தேடி
- இயேசு பிறந்து விட்டார்
பாடல் 45
கண்மணி நீ கண்மலராய் விண்மணி நீ உங்கிடுவாய்
கண்மணி நீ கண்மலராய்
1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீக்கும் துன்பம் நிறைவேற
ஏங்கும் மக்கள் இன்னல் நீக்கிட
தாங்கா துன்பம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ
- கண்மணி
2. சின்ன இயேசு செல்ல பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னை பாரும் எந்தன் மைந்தனே
சொன்ன தேவ வாக்கு உன்னில் நிறைவேற
ஏழை மகனாய் வந்தானையோ
- கண்மணி
பாடல் 46
அதிசய பாலகனேஅற்புத பாலகனே (2)
அன்பாலே மீட்பை தந்து
ஆசீர்வதிக்கும் பாலனே (2)
அதிகாரம் அரண்மனையில்
தாழ்மையோ புல்லனையில் (2)
தலைசாய்க்க இடமில்லாமல்
தவித்த எங்கள் பாலனே (2)
அரண்மனையில் இடமில்லை
சத்திரத்திலும் இடமுமில்லை
மாட்டுத்தொழுவம் முன்னனையில்
தவழும் அன்பு பாலனே
தாழ்மையோ புல்லனையில் (2)
தலைசாய்க்க இடமில்லாமல்
தவித்த எங்கள் பாலனே (2)
அரண்மனையில் இடமில்லை
சத்திரத்திலும் இடமுமில்லை
மாட்டுத்தொழுவம் முன்னனையில்
தவழும் அன்பு பாலனே
- அதிசய பாலகனே
2. ஆத்துமா அழியாதே
பரிசுத்தம் வேண்டுமே (2)
அற்பணித்து தியாகம் செய்த
எங்கள் இயேசு பாலகனே (2)
விண்ணை விட்டு பூமிக்கு வந்த
விந்தை இயேசு பாலகனே
ஆடுகளை இரட்சிக்க வந்த
துhய இயேசு பாலகனே
- அதிசய பாலகனே
3. தூதர்கள் பாடிட
நற்செய்தி கூறுவோம் (2)
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
புதுவருட வாழ்த்துக்கள் (2)
பூமியில் சமாதானம்
என்றும் உண்டாவதாக
மனுஷர்மேல் பிரியம்
என்றும் இருப்பதாக
2. ஆத்துமா அழியாதே
பரிசுத்தம் வேண்டுமே (2)
அற்பணித்து தியாகம் செய்த
எங்கள் இயேசு பாலகனே (2)
விண்ணை விட்டு பூமிக்கு வந்த
விந்தை இயேசு பாலகனே
ஆடுகளை இரட்சிக்க வந்த
துhய இயேசு பாலகனே
- அதிசய பாலகனே
3. தூதர்கள் பாடிட
நற்செய்தி கூறுவோம் (2)
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
புதுவருட வாழ்த்துக்கள் (2)
பூமியில் சமாதானம்
என்றும் உண்டாவதாக
மனுஷர்மேல் பிரியம்
என்றும் இருப்பதாக
- அதிசய பாலகனே
மகிமைதனை விட்டுவிட்டு உலகில் வந்தார்இயேசு
மகிழ்ந்து நாம் களிகூறுவோம்
கிறிஸ்மதுஸ் கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவின் துhய முகம் காண்போம்
பெத்தலகேம் சத்திர முன்னனையிலே (2)
- மகிழ்ந்து
2. துயருற்ற நம்மையே துhயவராய்மாற்றவே
துன்பங்களை சகித்து மீட்க வந்தார் இயேசு (2)
- மகிழ்ந்து
மாமன்னர் பிறந்தாரே
மகிமையாய் பிறந்தாரே (2)
விண்ணவரின் உலகினில்
விந்தை பாலனாய்
மாட்டுத் தொழுவத்திலே
பிறந்தாரே இயேசுபாலன் (2)
- இறைமகன்
2. மேய்ப்பர்கள் மந்தையிலே
சந்தோஷ செய்திகேட்டு
வாழ்த்திட விரைந்தனரே
வாழ்த்துவோம் நாமெல்லாரும் (2)
- இறைமகன்
3. சாஸ்திரிகள் வானத்திலே
அதிசய நட்சத்திரம் கண்டு
ஆனந்தம் அடைந்தனரே
சந்தோஷம் எங்கும் பொங்குதே (2)
பாடல் 47
மானிடனாய் மனுகுலத்தை மீட்க வந்தவர் இயேசுமகிமைதனை விட்டுவிட்டு உலகில் வந்தார்இயேசு
மகிழ்ந்து நாம் களிகூறுவோம்
கிறிஸ்மதுஸ் கொண்டாடுவோம்
பாலகன் இயேசுவின் துhய முகம் காண்போம்
பெத்தலகேம் சத்திர முன்னனையிலே (2)
- மகிழ்ந்து
2. துயருற்ற நம்மையே துhயவராய்மாற்றவே
துன்பங்களை சகித்து மீட்க வந்தார் இயேசு (2)
- மகிழ்ந்து
பாடல் 48
இறைமகன் இயேசு உலகத்தில் பிறந்தார் - 2மாமன்னர் பிறந்தாரே
மகிமையாய் பிறந்தாரே (2)
விண்ணவரின் உலகினில்
விந்தை பாலனாய்
மாட்டுத் தொழுவத்திலே
பிறந்தாரே இயேசுபாலன் (2)
- இறைமகன்
2. மேய்ப்பர்கள் மந்தையிலே
சந்தோஷ செய்திகேட்டு
வாழ்த்திட விரைந்தனரே
வாழ்த்துவோம் நாமெல்லாரும் (2)
- இறைமகன்
3. சாஸ்திரிகள் வானத்திலே
அதிசய நட்சத்திரம் கண்டு
ஆனந்தம் அடைந்தனரே
சந்தோஷம் எங்கும் பொங்குதே (2)
- இறைமகன்
4. காணிக்கை படைத்தனரே
பொன் வெள்ளைப் போலத்தையும்
காணிக்கை படைத்திடுவோம்
புதுவாழ்வு தந்தார் இயேசு (2)
- இறைமகன்
4. காணிக்கை படைத்தனரே
பொன் வெள்ளைப் போலத்தையும்
காணிக்கை படைத்திடுவோம்
புதுவாழ்வு தந்தார் இயேசு (2)
- இறைமகன்
பாடல் 49
பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்பிறந்தார் பிறந்தார் இரட்சகர் பிறந்தார் (2)
சந்தோஷத்தை தந்தாரே – 2
இயேசுபாலன் பிறந்தார் எங்கள் பாலன் பிறந்தார்
ஏழைக்கோலம் எடுத்தாரே (2)
இயேசு பிறந்த செய்தி கேட்டு
எல்லோருக்கும் சந்தோசமே (2)
பூலோகத்தில் யாவருக்கும்
சமாதானம் தந்து விட்டார் (2)
- பிறந்தார்
2. இறைமகன் இயேசு வந்தாலே
பாவத்திலே விடுதலை (2)
வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திருக்க
ஆசீர்வாதம் தந்துவிட்டார் (2)
3. இயேசு பிறந்த செய்தி கேட்டு
கீதங்கள் பாடி மகிழ்ந்திடுவோம் (2)
எல்லோருக்கும் நல்ல செய்தி
எப்போதுமே சொல்லிடுவோம் (2)
- பிறந்தார்
இரட்சகராய் பிறந்தாரே
வானத்தையும் படைத்தவர் பூமியையும் படைத்தவர்
மானிடராய் பிறந்தாரே
மாமன்னர் பிறந்தாரே
மகிமையாய் பிறந்தாரே (2)
அல்லேலுhயா…
- சர்வவல்ல
பெத்தலகேம் ஊரிலே சத்திரத்தில் இடமின்றி
மாட்டுத்தொழுவில் பிறந்தாரே (2)
சின்னஞ்சிறு பாலகன் அன்னைமரி மடிதனில்
அன்புறுவாய் தவழ்ந்தாரே (பிறந்தாரே) (2)
- மாமன்னர்
2. வானத்திலே துhதர்கள் வல்லமையாய் பாடினர்
கிறிஸ்து பிறந்தாரென்று (2)
மந்தை மேய்த்த மேய்ப்பர்கள் வியப்புடனே சென்றனர்
பாலன் பிறந்தனரே (2)
- மாமன்னர்
3. சாஸ்திரிகள் வானிலே நட்சத்திரம் கண்டனர்
இயேசு பாலனை தேடிச் சென்றனர் (2)
பொன் வெள்ளைப் போலமும் துhபவர்க்கமும் படைத்தனர்
சாஸ்டாங்கம் செய்தனரே (2)
- மாமன்னர்
இரட்சகராய் பிறந்தவராம்
யோசேப்பின் கரங்களில் மரியாளின் மைந்தனாய்
மான்பாக பிறந்தவராம்
1. உன்னதத்தின் தேவனுக்கு
கனமும் மகிமையைச் செலுத்துகிறோம் (2)
பூமியிலே சமாதானத்தை – 2
அனைவருக்கும் கூறுகிறோம்
- ஆபிரகாம்
2. தாவீதின் மைந்தனாய் ஈசாயின் வேராக
இலையாகத் துளிர்த்தவராம் (2)
ஓங்கிபடர்ந்திடுவார் செழிபாய் வளர்ந்திடுவார்
என்றும் நிலைத்திருப்பார் (2)
- ஆபிரகாம்
3. யூதரின் ராஜனாய் மேசியா தோன்றினாரே
பெத்தலயில் பிறந்தாரே (2)
தேவனின் ராஜ்யத்தை என்றும் ஆட்சிசெய்வார்
நீதியை நிலைநாட்டுவார் (2)
- ஆபிரகாம்
4. நமக்கொரு பாலன்
ஈவாகக் கொடுக்கப்பட்டார்
அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தர் - அவர்
வல்லமை தேவன் அவர்
சமாதான பிரபு அவரே
- ஆபிரகாம்
2. இறைமகன் இயேசு வந்தாலே
பாவத்திலே விடுதலை (2)
வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திருக்க
ஆசீர்வாதம் தந்துவிட்டார் (2)
3. இயேசு பிறந்த செய்தி கேட்டு
கீதங்கள் பாடி மகிழ்ந்திடுவோம் (2)
எல்லோருக்கும் நல்ல செய்தி
எப்போதுமே சொல்லிடுவோம் (2)
- பிறந்தார்
பாடல் 50
சர்வவல்ல ஆண்டவர் மனுக்குலத்தை படைத்தவர்இரட்சகராய் பிறந்தாரே
வானத்தையும் படைத்தவர் பூமியையும் படைத்தவர்
மானிடராய் பிறந்தாரே
மாமன்னர் பிறந்தாரே
மகிமையாய் பிறந்தாரே (2)
அல்லேலுhயா…
- சர்வவல்ல
பெத்தலகேம் ஊரிலே சத்திரத்தில் இடமின்றி
மாட்டுத்தொழுவில் பிறந்தாரே (2)
சின்னஞ்சிறு பாலகன் அன்னைமரி மடிதனில்
அன்புறுவாய் தவழ்ந்தாரே (பிறந்தாரே) (2)
- மாமன்னர்
2. வானத்திலே துhதர்கள் வல்லமையாய் பாடினர்
கிறிஸ்து பிறந்தாரென்று (2)
மந்தை மேய்த்த மேய்ப்பர்கள் வியப்புடனே சென்றனர்
பாலன் பிறந்தனரே (2)
- மாமன்னர்
3. சாஸ்திரிகள் வானிலே நட்சத்திரம் கண்டனர்
இயேசு பாலனை தேடிச் சென்றனர் (2)
பொன் வெள்ளைப் போலமும் துhபவர்க்கமும் படைத்தனர்
சாஸ்டாங்கம் செய்தனரே (2)
- மாமன்னர்
பாடல் 51
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் வம்சத்தில்இரட்சகராய் பிறந்தவராம்
யோசேப்பின் கரங்களில் மரியாளின் மைந்தனாய்
மான்பாக பிறந்தவராம்
1. உன்னதத்தின் தேவனுக்கு
கனமும் மகிமையைச் செலுத்துகிறோம் (2)
பூமியிலே சமாதானத்தை – 2
அனைவருக்கும் கூறுகிறோம்
- ஆபிரகாம்
2. தாவீதின் மைந்தனாய் ஈசாயின் வேராக
இலையாகத் துளிர்த்தவராம் (2)
ஓங்கிபடர்ந்திடுவார் செழிபாய் வளர்ந்திடுவார்
என்றும் நிலைத்திருப்பார் (2)
- ஆபிரகாம்
3. யூதரின் ராஜனாய் மேசியா தோன்றினாரே
பெத்தலயில் பிறந்தாரே (2)
தேவனின் ராஜ்யத்தை என்றும் ஆட்சிசெய்வார்
நீதியை நிலைநாட்டுவார் (2)
- ஆபிரகாம்
4. நமக்கொரு பாலன்
ஈவாகக் கொடுக்கப்பட்டார்
அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தர் - அவர்
வல்லமை தேவன் அவர்
சமாதான பிரபு அவரே
- ஆபிரகாம்
==========
CHORUSES
=========
CHORUS 1
காரிருள் வேளையில்கடுங்குளிர் நேரத்தில்
வாழ்த்துக்கள் கூறுகிறோம்
கிறிஸ்து பிறப்பிற்கும்
மனமிக்க புத்தாண்டுக்கும்
வாழ்த்துக்கள் கூறுகிறோம் (2) (அல்லேலூயா)
CHORUS 2
ஐயா உங்களுக்கு...அம்மா உங்களுக்கு...
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஐயா உங்களுக்கு அம்மா உங்களுக்கு
கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
CHORUS 3
மகிழ்ந்து களிகூறுங்கள் (2)இயேசு ராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்!
CHORUS 4
ஒரு Good News கொண்டு வந்தோம்இயேசு பாலனை சுமந்து வந்தோம்
கிறிஸ்துமஸ் தாத்தா குட்டி Angels
எல்லோரும் சேர்ந்து வந்தோம்
அங்க பாருங்க நட்சத்திரம் சிரிக்குது
அங்க பாருங்க நட்சத்திரம் சிரிக்குது
இங்க பாருங்க பூக்களெல்லாம் மலருது
உள்ளமெல்லாம் இன்ப வெள்ளம்
காரணம் என்ன சொல்லுங்க!
Happy Christmas (3) Christmas - 2
1. உங்கள் இல்லம் அன்பும் அமைதியும்
அருளும் நிறைய வாழ்த்துகிறோம்
நீங்கள் செய்யும் தொழிலும் சிந்தும்
வியர்வை ஜெயிக்க நாங்கள் ஜெபிக்கின்றோம்
அன்பில் ஒன்றாய் இணைவோம்
அருளின் மலையில் நனைவோம்
இன்பம் பொங்கும் அன்பு தங்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
CHORUS 5
Once upon a time அந்த Beauty வானிலேAngel கூட்டம் பாடி ஒரு Message சொன்னாங்க
1. Hello Hello மேய்ப்பரே பயப்படாதிங்க
Happy-யான செய்தி ஒன்னு சொல்றோம் கேளுங்க
1. Hello Hello மேய்ப்பரே பயப்படாதிங்க
Happy-யான செய்தி ஒன்னு சொல்றோம் கேளுங்க
பாவம்போக்க ரட்சகர் சத்திரத்தின் முன்னணையில்
பாலனாக பிறந்தாரே God and See
2. இயேசு பிறந்த நல்ல செய்தி மேய்ப்பருக்கே First
பெத்லேம் நோக்கி விரைந்தாரே பயணம் Super Fast
2. இயேசு பிறந்த நல்ல செய்தி மேய்ப்பருக்கே First
பெத்லேம் நோக்கி விரைந்தாரே பயணம் Super Fast
மேசியாவை கண்டிட மேள தாளம் முழங்கிட
ஆட்டம் பாட்டம் எல்லாமே Best O! Best
CHORUS 6
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க - ஓ!
1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி
1. மண்ணில் சமாதானம் விண்ணில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
2. மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
ராஜன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்
2. மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
ராஜன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்
CHORUS 7
We Wish you a Merry ChristmasMerry Christmas Merry Christmas
We Wish You a Merry Christmas
And the Happy New Year
CHORUS 8
We Wish you a Merry Christmas (3)
And the Happy New Year!
CHORUS 9
Merry Merry Christmas (2)
Merry Merry Christmas - and
The Happy New Year!
CHORUS 10
May God BlessAll Friends Here
Wish A Merry Merry Christmas
And The Happy New Year!
CHORUS 11
Jingle Bells,Jingle Bells
Jingle All The Way
Oh! What Fun It Is To Ride
In A One-Horse Open Sleigh, Hey!
பாடல் அட்டவணை
=================
1) அதிகாலையில் 022) அதிசய பாலனே 46
3) அதி மங்கல 05
4) அடையாளம் 25
5) அரசனைக் காணாமல் 07
6) ஆ! அம்பர 21
7) ஆத்துமா 09
8) ஆதித் திருவார்த்தை 03
3) அதி மங்கல 05
4) அடையாளம் 25
5) அரசனைக் காணாமல் 07
6) ஆ! அம்பர 21
7) ஆத்துமா 09
8) ஆதித் திருவார்த்தை 03
9) ஆபிரகாம் ஈசாக்கு 51
10) ஆரிவர் ஆராரோ 06
10) ஆரிவர் ஆராரோ 06
11) இயேசு பிறந்து விட்டார் 44
12) இயேசு மானிடனாய் 35
13) இராஜாதி இராஜனிவர் 32
12) இயேசு மானிடனாய் 35
13) இராஜாதி இராஜனிவர் 32
14) இறைமகன் இயேசு உலகத்தில் 48
15) ஏசாயா தீர்க்கன் 22
16) ஏதுக்கழுகிறாய் 20
17) ஒரு ரோஜா 23
18) ஒப்பில்லா 17
19) ஓசன்னா 11
20) கட்டின வீடு 24
21) கண்டேனென் 12
15) ஏசாயா தீர்க்கன் 22
16) ஏதுக்கழுகிறாய் 20
17) ஒரு ரோஜா 23
18) ஒப்பில்லா 17
19) ஓசன்னா 11
20) கட்டின வீடு 24
21) கண்டேனென் 12
22) கண்மணி நீ கண்மலராய் 45
23) காரிருள் 10
24) கிறிஸ்தோரே 26
25) கேள் ஜென்மித்த 14
26) சமாதானம் 13
23) காரிருள் 10
24) கிறிஸ்தோரே 26
25) கேள் ஜென்மித்த 14
26) சமாதானம் 13
27) சர்வவல்ல ஆண்டவர் 50
28) சிங்கார ஐயனே 16
28) சிங்கார ஐயனே 16
29) சின்னக்குழந்தை ஏசுவுக்கு 44
30) தேவா உம்மை தேடிவந்தோம் 41
31) நடுக் குளிர் 28
32) நல்ல செய்தி 31
33) பக்தரே வாரும் 15
31) நடுக் குளிர் 28
32) நல்ல செய்தி 31
33) பக்தரே வாரும் 15
34) பாலன் இயேசு உதித்தார் 37
35) பிதாவின் சித்தப்படியே 40
36) பிறந்தார் பிறந்தார் 01
36) பிறந்தார் பிறந்தார் 01
37) பிறந்தார் (2) இயேசு பிறந்தார் 49
38) பெத்தலகேம் 04
38) பெத்தலகேம் 04
39) பெத்தலையில் 08
40) பெத்லேகேமின் ஊரில் 42
41) பொன்னாளே நான் செய்துவச்சேன் 39
42) மன்னுயிர்க்காக 29
43) மாசில்லா தேவ 33
42) மன்னுயிர்க்காக 29
43) மாசில்லா தேவ 33
44) மானிடனாய் மனுக்குலத்தை 47
45) மெய் பக்தரே 27
46) ராக்காலம் 18
47) ராயர் மூவர் 19
48) ராஜன் தாவீதூரிலுள்ள 34
49) வாரும் பெத்லகேம் 36
50) வானம் பூமியோ 30
45) மெய் பக்தரே 27
46) ராக்காலம் 18
47) ராயர் மூவர் 19
48) ராஜன் தாவீதூரிலுள்ள 34
49) வாரும் பெத்லகேம் 36
50) வானம் பூமியோ 30
51) வான் நிலவு வாழ்த்து பாடல் 38
CHORUSES
1) ஐயா உங்களுக்கு 2
2) ஒரு Good News 4
3) காரிருள் வேளையில் 1
4) பிறந்தார் (2) கிறிஸ்து பிறந்தார் 6
5) மகிழ்ந்து களிகூறுங்கள் 3
6) Jingle Bells 11
7) May God Bless 10
8) Merry Merry Christmas 9
9) Once upon a time 5
10) We Wish you 7
1) We Wish you 8
====================
கிறிஸ்துமஸ் கீத பவனி வசனங்கள்
=====================
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை ஒவ்வொரு இல்லங்களுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடனும், குருவானவருடனும் இணைந்து சென்று அறிவிப்பது வழக்கம். அப்படி நாம் வாழ்த்து கூறும்போது இந்த வசனங்களைச் சொல்லியும் வாழ்த்தலாமே!
முதல் வசனம் (1)
இயேசுவாகிய நான் உங்களுக்கு பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாயிருக்கிறேன். (வெளிப்படுத்தல் 22:16)
சாஸ்திரிகள் ஏரோதைப் பார்த்து: யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். (மத்தேயு 2:2)
இரண்டாம் வசனம் (2)
இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:23)
மூன்றாம் வசனம் (3)
நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன். (யோவான் 14:18)
மரியாள் ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். (மத்தேயு 1:21)
நான்காம் வசனம் (4)
நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன். (செப்பனியா 3:20)
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, தாவீது என்னும் வேரிலிருந்து கிறிஸ்து என்னும் கிளை எழும்பிச் செழிப்பார். (ஏசாயா 11:1)
ஐந்தாம் வசனம் (5)
நித்திய ஜீவனை கொடுப்பேன் என்பதே கிறிஸ்து உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம். (1 யோவான் 2:25)
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, இயேசுவைத் தந்து, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
ஆறாம் வசனம் (6)
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். (ஏசாயா 60:20)
இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது. (மத்தேயு 4:15)
ஏழாம் வசனம் (7)
கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். (சங்கீதம் 138:8)
புறஜாதிகளாகிய நமக்கு பிரகாசிக்கிற ஒளியாகவும், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது. (லூக்கா 2:30-32)
எட்டாம் வசனம் (8)
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். (ஏசாயா 9:6)
ஒன்பதாம் வசனம் (9)
என் கிருபை உனக்குப் போதும். (2 கொரிந்தியர் 12:9)
கடவுளாக இருந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். (யோவான் 1:14)
பத்தாம் வசனம் (10)
அந்த நேரமே பரம சேனையின் கூட்டம் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். (லூக்கா 2:13,14)
பதினொன்றாம் வசனம் (10)
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த கிறிஸ்து என்னும் மெய்யான ஒளி. (யோவான் 1:9)
பன்னிரென்டாம் வசனம் (12)
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். (யோவான் 16:20)
உங்களை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தை உண்மையானது. எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. (1 தீமோத்தேயு 1:15)
பதிமூன்றாம் வசனம் (13)
உன் அலங்கத்துக்குள்ளே சமாதானமும் உன் அரமனைக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:7)
சாஸ்திரிகள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, இயேசு பாலனையும் அவரின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும், தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அவருக்கு காணிக்கையாக வைத்தார்கள். (மத்தேயு 2:11)
பதினான்காம் வசனம் (14)
அநாதி தேவனே உன் அடைக்கலம். (உபாகமம் 33:27)
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரம் கிராமங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். (மீகா 5:2)
பதினைந்தாம் வசனம்
பயப்படாதே, நான் உனக்கு துணைநிற்கிறேன். (ஏசாயா 41:13)
தேவதூதன் உங்களை நோக்கி: பயப்படாதிருங்கள், இதோ உங்களுக்கும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறார். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10,11)
பதினாறாம் வசனம்
உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன். (மீகா 7:15)
சமாதானக் கர்த்தராகிய கிறிஸ்து வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நீதிஆட்சி அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் கிறிஸ்து இயேசுவினிடத்தில் சேருவார்கள். (ஆதியாகமம் 49:10)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.