Type Here to Get Search Results !

கிறிஸ்து பிறப்பு நாடகம் | Birth of Jesus Christ Drama | Jesus Sam

=============
கிறிஸ்து பிறப்பு நாடகம்
=============


பின் இசை: ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணுலகை விட்டு இந்த மண்ணுலகில் ஓர் குழந்தை இயேசு என்ற பெயரில் உதித்தது. இந்த அகில உலகத்தையும் படைத்த அற்புத தேவன், தாம் படைத்த இந்த மனுக்குலத்தை மிகவும் நேசித்ததால், தமது செல்லக் குமாரனாம் இயேசுவை, நம்மை மீட்டு இரட்சிக்கும்படியாக இவ்வுலகிற்கு அனுப்பினார். நம்மை நமது பாவங்களிலிருந்து இரட்சிக்க வந்த இரட்சகர் இயேசுவின் பிறப்பு வித்தியாசமானது. தேவன், அவரை ஒரு கண்ணிகையின் வயிற்றில் உருவாக்க சித்தம் கொண்டார். கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்த அந்த கன்னிகையிடம் உடனடியாக இச்செய்தியை அறிவிக்க விரைந்தார். யார் அந்தக் கன்னிகை. வாருங்கள் நாமும் நாசரேத்தூருக்குச் செல்லுவோம்.

MUSIC
கடவுள் : Oh. No. நான் உண்டாக்கின உலகமாயிது. ஒரு பக்கம் அழுகை மறுபக்கம் ஆட்டம் பாட்டம் ஒரு பக்கம் சண்டை ஒரு பக்கம் சந்தோஷம் உலகம் அக்கிரமத்தினால் நிறைந்ததிருக்கிறது. எனக்கும் கீழே இருக்கும் என் பிள்ளைகளுக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாய் உணர்கிறேன்.

குட்டி ஏஞ்சல்: ஏன் ஆண்டவரே.

கடவுள் : அவர்கள் செய்கிற பாவந்தான் அவர்களோடு Friend ஆக பழகமுடியவில்லை. இதுவே சரியான நேரம்.

குட்டி ஏஞ்சல்: எதற்கு சரியான நேரம் ஆண்டவரே.

கடவுள் : இறங்கி போக வேண்டிய நேரம்

பெரிய ஏஞ்சல்: ஆண்டவரே சேனையை தயார் பண்ணலாமா? பயிற்சியை ஆரம்பிச்சிடலாம். கற்றுத் தரலாம்.

கடவுள் : இல்லை.. இல்லை.. படையை அனுப்பவேண்டாம். அதற்கு அவசியமில்லை ஒரு தனி நபர் போதும்.

குட்டி ஏஞ்சல்: என்னது ஒரு நபரா?

கடவுள் : ஆம் ஒரே நபர்

குட்டி ஏஞ்சல்: பாரே, Wow அவங்க இத எதிர்பார்க்க மாட்டாங்க.

பெரிய ஏஞ்சல்: கீழ உலகத்தில் பல கோடி மக்கள் ருக்கிறார்கள். அனுப்பபோகிற நபர் மிகவும் பலமும் வல்லமையும் திறமை சாலியாய் இருக்க வேண்டும்.

கடவுள் : இல்லை இல்லை பலம் திறமை எதுவும் வேண்டாம். ஒரு பச்சிலம் குழந்தையை அனுப்பபோகிறேன்.

குட்டி ஏஞ்சல்: என்னது ஒரு குழந்தையா?

குட்டி ஏஞ்சல்: பாரே… Wow அவங்க இத எதிர்பார்க்க மாட்டாங்க

குட்டி ஏஞ்சல்: ஆண்டவரே, இந்த Plan ரொம்ப risk ஆ இருக்குமே. பச்சில குழந்தை ரொம்பா பலவீனமாயிருக்குமே. அதுனால அந்த குழந்தை அரண்மனையில்ல இல்லைனா ஒரு பெரிய ராஜாவிடம் பிறந்தா மட்டுமே அந்த குழந்தை பாதுகாப்பாக இருக்க முடியும்.

கடவுள் : உண்மையிலே சொல்லபோனா ஒரு அழகிய அருமையான இருதயமும் தைரியமும் கொண்ட ஏழை கிராம பெண்ணிடம்தான் அனுப்ப தீர்மானித்திருக்கிறேன்.

குட்டி ஏஞ்சல்: ஒரு ஏழை பெண்ணிடமா?

குட்டி ஏஞ்சல்: பாரே… Wow அவங்க இத எதிர்பார்க்க மாட்டாங்க. அந்த குழந்தை ஒரு தாழ்மையான ஏழை பெண்ணிடம் பிறப்பது இந்த உலகத்திற்கு ஒரு பெரிய அதிர்ச்சி. ஆனால் ஒரு குழந்தையாய் என்ன முடியும்.

கடவுள் : அது ஒரு சாதாரண குழந்தையில்லை நான் பரலோகத்தின் இளவரசரைத்தான் அனுப்பப்போகிறேன்.

குட்டி ஏஞ்சல்: என்னது பரலோகத்தின் இளவரசரையா?

குட்டி ஏஞ்சல்: உம்முடைய நேசகுமாரனையா?

குட்டி ஏஞ்சல்: பாரே, Wow அவங்க இத எதிர்பார்க்கமாட்டாங்க

பெரிய ஏஞ்சல்: ஆண்டவரே, நம்முடைய இளவரசரை உருமாற்றி குழந்தையாக அனுப்புவது அதுவும் அரண்மனையில்ல இல்லாமலா? அதுவும் ஒரு ஏழையிடத்தில் அனுப்புவது ரொம்ப பெரிய Risk

குட்டி ஏஞ்சல்: இப்படிப்பட்ட கொடுரமான உலகத்திற்கு நாம் இலவரசரை எப்படி தனியாக அனுப்பவது.

குட்டி ஏஞ்சல்: குழந்தை இலவரசருக்கு பரலோகம் சோனை பாதுகாப்பு வேண்டும்.

குட்டி ஏஞ்சல்: அதுநால நாங்களும் போரோம்.

கடவுள் : இல்லை. ஒரு தனிநபர் மட்டுமே செல்ல வேண்டும்

குட்டி ஏஞ்சல்: சரி ஆண்டவரே, அப்படினா நம்முடைய இலவரசர் கண்டிப்பாக குடிசையில் பிறக்கக் கூடாது. மாளிகையில் தான் பிறக்கனும்.

கடவுள் : நீ சரியாக சொன்னாய். இலவரசர் குடிசையில் பிறக்க கூடாது. அவர் ஒரு மாட்டுத்தொழுவில் பிறக்க வேண்டும்.

குட்டி ஏஞ்சல்: ஒரு மாட்டுத் தொழுவமா? நாற்றம் இருக்கும்

குட்டி ஏஞ்சல்: பாரே…Wow அவங்க எதிர்பார்க்கவே மாட்டாங்க.

குட்டி ஏஞ்சல்: ஆண்டவரே இவரசர் அங்கே இருக்கிறார் என்று ஜனங்கள் எப்படி அறிவார்கள்.யாரும் கவனிக்கவில்லை என்றாள். யாருக்கும் தெரியவில்லை என்றாள்.

கடவுள் : யாரு அவர்களை தேடுகிறார்களோ. அவர்கள் அவரை கண்டடைவார்கள். அவர் உலகில் செய்ய போகும் காரியங்கள் எல்லா ஜனங்களையும் என் கிட்ட நெருங்கி வர உதவிச் செய்யும். அவர்கள் தவறு செய்தாலும் இலவரசர் உலகில் என்னுடைய வேலையை செய்து கொண்டிருப்பதால் என்னுடைய அன்புக்கும் ஜனங்களுக்கும் நடுவில் எதுவும் இருக்க முடியாது.

குட்டி ஏஞ்சல்: யாரெல்லாம் அவரை தேடுகிறார்களோ, அவர்களுக்கு ஒரு குளு கொடுக்களாமா? நட்சத்திரங்கள் மூலமாக.

கடவுள் : Oh! மிகவும் அருமையான திட்டம் ஏன் செய்யக்கூடாது. ஒரு பெரிய நட்சத்திரத்தை உண்டாக்குவோம். அது இலவரசருக்கு நேராய் வழிநடத்தும்.

குட்டி ஏஞ்சல்: நாங்கள் பாடலாமா?

குட்டி ஏஞ்சல்: அவரை Welcome பண்ண பாடலாமா?

கடவுள் : சேரி… நீங்க பாடலாம்.

குட்டி ஏஞ்சல்: Aiiiii…..

கடவுள்:ஆனால் முழு உலக்திற்கும் மல்ல அரசருக்கும் அல்ல, அரமனைக்கும் அல்ல.

குட்டி ஏஞ்சல்: மேய்ப்பர்களுக்கு பாடலாமா? ஏன்னா அவர்கள் தனிமையில் வேலை செய்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தலாமா?

கடவுள்: வாரேவா……. Wow இதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டாங்கள். சேரி காபிரியேல் நீ உலகத்திற்கு போய், அங்கு கலிலேயாவில் உள்ள தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிற கண்ணிகையாகிய மரியாளிடம் போய் இந்த நற்செய்தியை சொல்.

MUSIC
தேவதூதன்: கிருபை பெற்றவளே நீ வாழ்க. கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.

மரியாள்: இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ?

தேவதூதன்: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவரின் குமாரன் எனப்படுவார்.

மரியாள்: இது எப்படி ஆகும்? எனக்குத் தான் இன்னும் கல்யாணம் ஆகவில்லையே.

தேவதூதன்: பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது. அந்தக் குழந்தை தேவனுடைய குமாரன் எனப்படும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.


MUSIC
பின் இசை: தனக்கு திருமணத்திற்காக நியமிக்கப்பட்ட மரியாள், கர்ப்பவதியாய் இருப்பதைக் கேள்விப்பட்ட யோசேப்பு, என்ன செய்தான் என்பதைக் காண்போமா?

யோசேப்பு: இப்ப என்ன பன்றது, மரியாள் கர்ப்பமாள இருக்காளாம். கேட்டா தேவக்குழந்தைங்கிறா, நம்ம ஜனங்களுக்கு தெரிஞ்சா, நம்மல என்ன நினைப்பாங்க. மரியாளும் பாவம் ரொம்ப நல்ல பெண். அவளை கஷ்டப்படுத்தவும் விரும்பல, வேணும்னா ஒன்னு செய்யலாம். இப்ப கல்யாணம் முடிக்க விரும்பலனு தட்டிக்கழிக்கலாம். ம்ம்….. அதுதான் சரி.

தேவதூதர்கள்: இப்ப என்ன செய்வது?...

கடவுள்: காபிரியேலே நீ போய் யோசேப்பிடம் பேசு

தேவதூதன்: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.

MUSIC
தேவதூதர்கள்:
1. ஐ யோசேப்பு எப்படியோ மரியாளை சேர்த்துக்கிட்டாரு
2. நீங்க செய்ய நினைத்ததை யாரால் தடுக்க முடியும்

முரசு: இதனால், சகல ஜனங்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், உலகமெங்குமுள்ள ஜனங்களை கணக்குப்பார்க்கும்பணி நடக்க இருப்பதால் மக்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தாமதப்படுத்தக் கூடாது. மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்……… இது நமது மாட்சிமை பொருந்திய பேரரசர் கட்டளை……

MUSIC
யோசேப்பு: ஐயா, இங்க தங்குறதற்கு ஏதும் சத்திரம் உண்டாய்யா.

சத்திரக்காரன்: என்ன கணக்கெழுத புறப்பட்டு வந்தீங்களாக்கும்.

யோசேப்பு: ஆமா ஐயா, நாசரேத்துல இருந்து வர்றோம். இது என் மனைவி மரியாள், நிறைமாத கர்ப்பிணி.

சத்திரக்காரன்: உங்களப் பாத்தா பாவமாதான் இருக்கு, ஆனா என்ன செய்யுறது. போனவாரமே இங்க உள்ள எல்லாச் சத்திரமும் நெரஞ்சிட்டு, தின்ணையில கூட இடங்கெடயாது.

யோசேப்பு: ஐயா, ரொம்ப களைப்பா வேற இருக்கு, நானாவது பரவாயில்லை. என் மனைவி ரொம்ப சோர்வாயிருக்கா.

சத்திரக்காரன்: ம்.. கொஞ்சம் இருங்க, இந்தா பக்கத்து சத்திரத்து ஆள் வாரான், அவன்ட்ட கேட்போம். யோ… சத்திரக்காரரே, இவங்க இரண்டு பேரும் நாசரேத்துல இருந்து வந்திருக்காங்க. உம்ம.. சத்திரத்தில இடம் இருக்கா.

சத்திரக்காரன் (2): ஏம்ப்பா, உனக்கு வேற வேலையில்லையா, அவென் அவென் எனக்கு வேண்டிய ஆளு, உனக்கு வேண்டிய ஆளுன்னு சிபாரிசுபண்ணியுமே சத்திரத்தில நுழைய இடமில்லாம நிரஞ்சிபோய் கிடக்கு. சுத்தம்பண்ணக்கூட முடியல. ஒருத்தன் கூட நகரமாட்டேங்குறான்.

யோசேப்பு: சத்திரத்தில உள்ள இடம் இல்லேன்னா கூட பரவாயில்லப்பா. பின்னால ஏதாவது ஒரு ஓரத்தில் சின்ன இடம் கொடுத்தாலும் போதும், கொஞ்சம் தயவு காட்டுங்கப்பா.

சத்திரக்காரன் மனைவி: இவங்கள பாத்தா பாவமா இருக்கு, எப்படியாவது இவங்களுக்கு உதவி செய்யுங்களேன்.

சத்திரக்காரன் (2): ம்ம்… சொன்னாலும் கேட்க மாட்டீங்க, பின்ன என்ன பண்ண, சத்திரம் உள்ள போங்க பின்னால மாட்டுத்தொழு இருக்கு மாடெல்லாம் ஓரமா தான் கட்டியிருக்கு என்ன… சுத்தம் பண்ணாம கிடக்கு. சமாலிச்சி இருந்துக்கிடுவிங்கன்னா இருங்க, பாவமா வேற இருக்கு என்ன செய்ய?…

யோசேப்பு: மரியாள், வேறு எதாவது இடம் தேடலாமா?

மரியாள்: வேண்டாங்க… வயிறுவலி வேற அதிகமாகிகிட்டே இருக்கு இந்த இடமே பரவாயில்லைங்க.

யோசேப்பு: ரொம்ப நன்றி ஐயா, நாங்க சமாலிச்சிக்கிறோம்.

சத்திரக்காரன் மனைவி: பாத்து வாங்கம்மா பாத்து மெதுவா வாங்க.


MUSIC
மரியாள்: ஆ…. வலிக்குதே…. அம்மா (3)….
(Joy to the world the Lord is come
Let earth receive her king
Let every heart prepare Him room
And heaven and nature sing
And heaven and nature sing
And Heaven and Heaven and nature sing)

MUSIC
தேவதூதன்: ஸ்டார அடையாளமா அனுப்பலாமா? யாருக்கு காண்பிக்கலாம்.

கடவுள்: எப்ப பாத்தாலும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்காங்கலே, அந்த சாஸ்திரிங்ககிட்ட அனுப்புங்க.

தேவதூதன்: அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி மந்தையை காத்திட்டு இருக்காங்க. காபிரியேல் நீ போய் நற்செய்தியைச் சொல். அப்புறம் எல்லாரும் வந்து பாடுங்க.

MUSIC
பின் இசை: தேவக் குமாரன் ஓர் மாட மாளிகையில் பிறந்திடாமல், ஓர் மாட்டுத்தொழுவில் பிறப்பதற்கு, தன்னையே தாழ்த்தினார். அவர் பிறந்த நற்செய்தி முதல் முதலில் யாருக்கு அறிவிக்கப்பட்டது. வயல்வெளிகளில் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பருக்குத் தான். அந்தக் காட்டியை நாமம் காண்போமே.

மேய்ப்பர் (1): ஏ.. மாமோ..
ஏய்.. சித்தப்போ பாருங்க இந்த இடம் பூராம் ஒரே வெளிச்சமாயிருக்கு.

மேய்ப்பர் (2): ஏய் அட ஆமா நம்மல சுத்தில பிரகாசமாயிருக்கு,
ஏய்… என்ன நடக்குதுன்னே தெரியலையே…

மேய்ப்பன் (3): எனக்கு பயமா இருக்குப்பா

தேவதூதன்: பயப்படாதிருங்கள், இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னனையில் கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.

Joy to the world (2) Hallelujah (Music)

மேய்ப்பர் (1): அண்ணேன். இது என்ன அதிசயம் என் கண்ணையே என்னால நம்ப முடியலையே.

மேய்ப்பர் (2): நம்ம எல்லாரையுமே அவர் இரட்சிக்க போறவராமே. கேட்கிறதற்கே எவ்வளவு சந்தோஷமாயிருக்கு ஏய்… அபியு நம்ம ஆட்களெல்லாம் கூப்பிடு, நேரம் காலமெல்லாம் இப்ப பாக்க வேண்டாம்பா, நம்ம உடனே பக்கத்துல இருக்குற தாவீதின் ஊரான பெத்தலகேமுக்குப் போய் அவர பாப்போம் வா, சீக்கிரம்.

மேய்ப்பர் (3): சரி சித்தப்பா, இந்தா உடனே புறப்பட்டுறளாம்.

பாடல்
ஆடு மேய்ப்பவங்க நாங்க
நடு இராத்திரியில் விண் ஜோதி கண்டோமுங்க
கண்கலங்கி நிற்கையிலே காபிரியேல் தூதன் வந்து
கர்த்தர் பிறந்த செய்தியை சொன்னாருங்க (2)
ஆடு மேய்ப்பவங்க நாங்க… நாங்க….


MUSIC
வாயிற்காவலர்: மகாராஜா தாங்களை காண வேண்டும் என்று சாஸ்திரிகள் மூவர் வந்துள்ளார்கள்.

அரசர்: உள்ளே வரச்சொல்.

வாயிற்காவலர்: உத்தரவு அரசே

MUSIC
சாஸ்திரிகள்: ராஜாவே நீர் வாழ்க.

அரசர்: நல்லது! யார் நீங்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்ன காரியமாக வந்திருக்கின்றீர்கள்?

சாஸ்திரிகள்: நாங்கள் வானசாஸ்திரிகள் கீழ்திசை தேசத்திலிருந்து வந்திருக்கிறோம். யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவரைக் காண வந்தோம். கிழக்கே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம்.

அரசர்: என்ன? யூதருக்கு ராஜா பிறந்திருக்கின்றானா. ம்ம்..... யார் அங்கே.

மந்திரி: அரசே!

அரசர்: சிறப்பான செய்தி கொண்டு வந்த வானசாஸ்திரிகளுக்கு சிறப்பான விருந்து அளித்து, சிங்கார மாலிகையில் தங்க ஏற்பாடு செய்யுங்கள். படுத்துரங்கி சிறிது இளைப்பாரட்டும். மந்திரி அவண செய்யுங்கள்.

MUSIC
அரசர்: மந்திரி

மந்திரி: அரசே

அரசர்: கேட்டீரா. ஒரு புதிரான செய்தியை.

மந்திரி: அரசே. செய்தி கொண்டு வந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, வானசாஸ்திரிகள். அவர்களுடைய கணிப்பு தப்பாது.

அரசர்: ஆம்ம்.. அவர்களுடைய கணக்கு தப்பாது என்றால், அரண்மனையில் பிள்ளையே பிறக்கவில்லையே.

மந்திரி: யூதருக்கு ராஜா பிறந்திருப்பதால், அக்குழந்தை அரண்மனையில் தானே பிறந்திருக்க முடியும் என்று எண்ணி, செய்தியை இங்கே வந்து சொல்லிவிட்டார்கள்.

அரசர்: அப்படியென்றால்.....

மந்திரி: வானசாஸ்திரிகள் சொன்னது முற்றிலும் உண்மையாகத்தான் இருக்கும். பிள்ளை அரண்மனையில் பிறக்கவில்லை. ஆனால், எங்கோ பிறந்திருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.

அரசர்: ஆஆஆ.... என்ன இந்த ஏரோது ராஜாவுக்கு எதிராக இன்னொரு ராஜா பிறந்திருக்கின்றானா?.. ம்....
பிறக்கவில்லை…… பிறந்திருக்க…. முடியாது…. பிறக்கவும் கூடாது. அப்படியே பிறந்திருந்தாலும் அவனை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது. யார் அங்கே.

வாயிற்காவலர்: அரசே.

அரசர்: நம்நாட்டில் உள்ள வேதபாரகர், ஆசாரியர்கள் அனைவரையும் உடனே வரச் சொல்லுங்கள்.

வாயிற்காவலர்: நல்லது மன்னா! உடனே ஏற்பாடு செய்கிறேன்.

MUSIC
வே.பா & ஆசாரியர்: மன்னா வாழ்க. ராஜா எங்களை அழைத்ததன் நோக்கம்.

அரசர்: நோக்கம் ஒன்றே. எனது ஐயம் நீங்க கேட்கயிருப்பதும் ஒன்றே, வேதபாரகரே, ஆசாரியர்களே, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார். திட்டமாக, தெளிவாகச் சொல்லுங்கள்.

வே.பா & ஆசாரியர்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார். அதேனென்றால் யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல. என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது.

அரசர்: ம்ம்.... திட்டமான, தெளிவான, தீர்க்கமான தீர்க்கதரிசன வார்த்தை. ம்ம்.... என்ன செய்வது? கிறிஸ்து பிறந்திருக்கும் இடம் அறிந்து கொள்ள வேண்டுமானால், முல்லைக் கொண்டே முல்லை எடுக்க வேண்டும். சாஸ்திரிகளைக் கொண்டே கிறிஸ்து பிறந்த இடம் அறிந்து கொண்டு, பின் ஆவன செய்வோம். மந்திரி.

மந்திரி: மன்னா

அரசர்: சாஸ்திரிகள் இங்கு வர உத்தரவிடுகிறேன்

மந்திரி: நல்லது மன்னா.


MUSIC
அரசர்: சாஸ்திரிகளே, நீங்கள் சென்று கிறிஸ்து பிறந்திருக்கும் இடம் அறிந்து எனக்கு தெரிவியுங்கள். நானும் சென்று கிறிஸ்து என்னும் குழந்தையை கண்டு பணிந்துகொள்கிறேன். ம்.ம்.... சென்று வாருங்கள் மறந்துவிடாதிருங்கள். நீங்கள் சென்று கண்டு மீண்டும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுச் செல்லுங்கள். ம்ம்..செல்லுங்கள்.

MUSIC
எல்லோரும் பெத்லகேம் நோக்கிச் செல்கின்றனர். வாருங்கள் நாமும் அவர்களுடன் சென்று, அந்த பாலகனை தரிசிப்போம்.

பாடல்
(ராயர் மூவர் கீழ் தேசம்
விட்டு வந்தோர் வெகு தூரம்
கையில் காணிக்கைகள் கொண்டு
பின் செல்வோம் நட்சத்திரம்

ஓ..ஓ.. ராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழி காட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்)

சாஸ்திரி (1): நான் காணிக்கையாக படைக்க பொண் கொண்டு வந்தேன்.
(பெத்லகேம் வந்து ராஜாவே
உம்மை நித்திய வேந்தர் என்றே
கிரீடம் கூட்டும் நற்பொன்னையே
வைத்தேன் உம் பாதமே)

சாஸ்திரி (2): நான் தூபவர்க்கம் கொண்டு வந்தேன்.
(தூப வர்க்கம் நான் ஈவேன்
தெய்வம் என்று தெரிவிப்பேன்
ஜெபதூபம் ஏறெடுப்பேன்
உம் பாதம் பணிவேன்)

சாஸ்திரி (3): சர்வலோகத்தையும் மீட்க தம்மை தியாக பலியாக ஒப்புக்கொடுப்பதை குறிக்கும்படியாக, நான் வெள்ளைப்போலம் கொண்டு வந்தேன்.
(வெள்ளைப் போளம் நான் ஈவேன்
கொண்டு வந்தேன் காட்டவுமே
துக்க பாவ பாரம் தாங்கி
மரிப்பார் இவரே

ஓ..ஓ.. ராவின் ஜோதி நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
நித்தம் வழிகாட்டிச் செல்லும்
உந்தன் மங்கா வெளிச்சம்)

பின் இசை: அன்பார்ந்தவர்களே, நம்மை இரட்சிக்க வந்த இந்த பாலகன், இன்று நமது உள்ளங்களில் பிறக்க விரும்புகிறார். வாரும் இயேசுவே என்று நமது உள்ளத்தில் அவருக்கு இடமளித்து நம்மையே அவருக்கு காணிக்கையாக அர்ப்பணிப்போமா? அதுவே அவர் விரும்பும் காணிக்கை.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.