திடப்படுத்தல் ஆராதனை ஒழுங்கு (C.S.I)
ஆரம்ப ஜெபம்:
ஆரம்ப பாடல்:
நின்றபடியே ஜெபம் செய்வோம்
நாம் நின்றபடியே கடவுளைத் தொழுவோம், திருவிருந்து ஆராதனை முறைமையைப் பின்பற்றுவோம்.
குரு: எல்லா இருதயங்களையும் எல்லா விருப்பங்களையும், எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளே, நாங்கள் ஆண்வரிடத்தில் பரிபூரணமாய் அன்பு கூரவும், உமது பரிசுத்த நாமத்தை உத்தமமாய் மகிமைப்படுத்தவும் உமது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எங்கள் இருதயத்தின் சிந்தனைகளைச் சுத்தம் பண்ணியருள எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாக வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
யாவரும் சேர்ந்து பாட அல்லது சொல்ல வேண்டியது
உன்னதத்திலிருகு்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்மேல் பிரியமும் உண்டாவதாக. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய தேவனே, உம்மைத் துதிக்கிறோம். உம்மைப் புகழுகிறோம். உம்மை வணங்குகிறோம். உம்மை மகிமைப்படுத்துகிறோம். உமது சிறந்த மகிமையினிமித்தம் உமக்குத் தோத்திரம் செலுத்துகிறோம்.
கர்த்தராயிருக்கிற ஒரே பேரான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே, கர்த்தராகிய பராபரனே, பிதாவின் சுதனே, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறவரே, எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும். தேவானாகிய பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவரே எங்களுக்கு இரங்கும்.
நீரே பரிசுத்தர், நீரே கர்த்தர், இயேசுகிறிஸ்துவே, தேவரீர் ஒருவரே, பரிசுத்த ஆவியோடே தேவனாகிய பிதாவின் மகிமையிலே உன்னதமானவராயிருக்கிறீர். ஆமென்.
குரு: நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நமது ஆண்டவர் தொகுத்து அருளியது:
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னதாவது: இஸ்ரவேலே கேள்: உன் கடவுளாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் கடவுளாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல பிறரிடத்திலும் அன்புகூவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்தே. (மாற்கு 12, மத்துயு 22)
சபை: கர்த்தாவே எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும்.
குரு: கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நாம் இப்பொழுது கடவுளுடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும் ஆண்டவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் பெற்றுக்கொள்ளவும், இங்கே கூடி வந்திருக்கிறோம். உத்தம மனஸ்தாபத்தோடும், உண்மையான விசுவாசத்தோடும் ஆண்டவரிடத்தில் கிட்டிச் சேருவதற்காக கடவுளுடைய கிருபையைத் தேடி முழங்காற்படியிட்டு, மௌனமாக நம்மை நாமே சோதித்து அறிவோமாக.
(எல்லோரும் முழங்காற்படியிட்டு சற்றுநேரம் அமைதியாயிருந்தபின் குரு சொல்வது)
குரு: நமது பாவங்களினிமித்தம் முழு இருதயத்தோடே உண்மையாய் மனஸ்தாபப்பட்டு, பிறரிடத்தில் அன்பும் சிநேகமுமாயிருந்து, இனி கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, புதிதாக்கப்பட்டவர்களாய், அவருடைய பரிசுத்த மார்க்கத்தில் நடப்போம் என்று தீர்மானித்திருக்கிற நாம், நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சர்வவல்லமையுள்ள கடவுளோடு ஒப்புரவாகும்படி, மறுபடியும் நமது பாவங்களை மனத்தாழ்மையாய் அறிக்கையிடுவோம்.
பின்வரும் கவியை பாடலாம்:
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே
தூய ஆவியே –கன நேய மேவியே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே
கீர்த்தனை-121
(அல்லது)
நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன் வந்தேன்
பாமாலை-292
பாவ அறிக்கை:
(எல்லோரும் சேர்ந்து சொல்வது)
பரமபிதாவே, உமக்கு விரோதமாகவும், எங்கள் அயலாருக்கு விரோதமாகவும், பாவஞ்செய்தோமென்று அறிக்கையிடுகிறோம். ஒளியில் நடவாமல், இருளில் நடந்துவந்தோம், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லியும் தீமையை விட்டு விலகவில்லை. எங்களுக்கு இரங்க வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம். இயேசுகிறிஸ்துவினிமித்தம், எங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னியும். உமது பரிசுத்த ஆவியினால் எங்களை சுத்திகரித்து எங்கள் மனச்சாட்சியை உயிர்ப்பித்தருளும். உமது பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி நாங்கள் இனிப் புது ஜீவனுள்ளவர்களாய் உமக்கு ஊழியம் செய்யத்தக்கதாக மற்றவர்களுக்கு மன்னிக்க எங்களுக்கு உதவிபுரியும். ஆமென்.
பாவ மன்னிப்பு:
அத்தியட்சர் (பேராயர்) எழுந்து நின்று சொல்வது:
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்த் தம்மிடத்தில் உண்மையாய் மனந்திரும்புகிற யாவருக்கும் அருளப்படுகிற கிருபை நிறைந்த அருள்வார்த்தையைக் கேளுங்கள்:
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)
கடவுள் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தைத உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. (1 தீமோத்தேயு 1:15)
ஒருவன் பாவஞ்செய்வானானால், நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே. (1 யோவான் 2:1,2)
சற்றுநேரம் அமைதியாய் இருந்தபின் அத்தியட்சர் (பேராயர்) சொல்வது:
நம்முடைய பரம பிதாவிகிய சர்வவல்லமையுள்ள கடவுள், உத்தம மனஸ்தாபத்தோடும் உண்மையான விசுவாசத்தோடும் தம்மிடத்திற்கு மனந்திரும்பி, தங்கள் சகோதர, சகோதரிகளின் குற்றங்களை மன்னிக்கிற யாவருக்கும் பாவமன்னிப்பை அருளிச் செய்வோம் என்று மிகுந்த இரக்கமாய் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் உங்களுக்கு இரங்கி, உங்ககள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, அவைகளினின்று உங்களை விடுதலையாக்கி, சகல நன்மையிலும் உங்களை உறுதிப்படுத்தி, நிலைநிறுத்தி, உங்களை நித்திய ஜீவக்கரையில் சேர்ப்பாராக.
சபை:ஆமென். தேவரீருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக.
திடப்படுத்தல் பெறுவோரை முன் நிறுத்துதல்
திடப்படுத்தல் ஆயத்தம்
பேராயர்:
ஆண்டவருக்குள் பிரியமானவர்களே, உங்கள் ஞானஸ்நானத்தில் நீங்கள் கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்; தேவனுடைய குடும்பத்தாரும் வீட்டாருமாக முத்திரையிடப்பட்டீர்கள்.
அப்பொழுது செய்யப்பட்ட பயபக்தியான உடன்படிக்கையை உறுதி செய்யவும் ஆண்டவராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசம் வைக்கிறதை அறிக்கையிடவும், அவருக்காக உங்களை அர்ப்பணிக்கவும், அவர் உங்களுக்கு அருளக் காத்திருக்கும் ஈவுகளைப் பெறவும், இப்பொழுது நீங்கள் சுயமாய் வந்திருக்கிறீர்கள்.
அப்போஸ்தலரின் வழக்கப்படியே அத்தியரட்சர் உங்கள்மேல் தமது கைகளை வைத்து தூய ஆவியானவர் உங்களை எல்லா நற்செயலிலும் பலப்படுத்த ஜெபிக்கவும் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
கிறிஸ்துவின் திருக்கூட்டத்தாராகிய அவருடைய மக்களின் நிறைவான ஐக்கியத்திற்குள் இத்திருச்சபையார் உங்களை வரவேற்கவும், நாம் எல்லோரும் சேர்ந்து நம் வாழ்நாள் எல்லாம் அரை ஆராதித்துச் சேவிக்கவும், நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆதலால், பரிசுத்த ஆவியானவரின் ஈவைப்பற்றி திருமறையில் அடங்கியுள்ள திருவசனங்களை வாசிக்கக் கேளுங்கள்.
(திடப்படுத்தல் பெறவிரும்புவோர் உட்காருவர். பின்வரும் திருமறை பகுதிகள் வாசிக்கப்படும்)
பின்பு எல்லோரும் எழுந்து நின்று, நிசேயா விசுாசப் பிரமாணத்தைச் சொல்ல அல்லது பாட வேண்டும்:
வானத்தையும் பூமியையும், காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற, சர் வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேனை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர். தெய்வத்தில் தெய்வமானவர் ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியினாலே, கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார். நமக்காகப் பொந்தியு பிலாத்துவின் காலத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டார். வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க, மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத் தொழுது ஸ்தோத்திரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்-தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்தப் பொதுவான அப்போஸ்தலத் திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நான் அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குறிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
திருமறைப் பகுதி 1
எசேக்கியேல் 36:26-28
உங்களுக்குப் புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிய ஆவியை வைத்து, கல்லான இருதயத்தை உங்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளங்களில் என் ஆவியை வைத்து, நீங்கள் என் நியமங்களில் நடந்து, என் தீர்ப்புகளைக் கைக்கொண்டு அவைகளில் நடக்கும்படி செய்வேன். உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
திருமறைப் பகுதி 2
ரோமர் 8:12-17
உரோமாபுரித் திருச்சபையினருக்கு அப்போஸ்தலர் பவுல் எழுதிய நிருபத்தில் அடங்கிய திருவசனங்களையும் கேளுங்கள்.
சகோதரரே, நாம் கடனாளிகள், மாம்சத்துக்கேற்றபடி நடப்பதற்கு மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல, மாம்சத்துக்கேற்றபடி நடந்தால் நீங்கள் சாவது நிச்சயம்: சரீரத்தின் செய்கைகளை ஆவியினால் அழித்தாலோ பிழைப்பீர்கள். தேவ ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் எவர்களோ அவர்கள் தேவ புத்திரர். திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். அந்த ஆவியினாலே நாம் ”அப்பா பிதாவே“ என்று கூப்பிடுகிறோம். நாம் தேவனின் பிள்ளைகளென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியோடு கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; அவரோடு கூட நாம் மகிமை அடைவதற்கு அவரோடு கூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
திருமறைப்பகுதி 3
யோவான் 14:15-17
அப்போஸ்தல் 1:8
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறிய திருவசனங்களையும் கேளுங்கள்:
நீங்கள் என்னில் அன்புகூர்ந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்வீர்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடிருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு சகாயரை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. அது அவரைக் காண்பதுமில்லை. நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வசிக்கிறார். உங்களுக்குள்ளும் இருப்பார்.
பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, நீங்கள் பலமடைந்து, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
விசுவாசப் பிரமாணம்
(யாவரும் நின்றவண்ணமாக விசுவாசப் பிரமாணத்தை அறிக்கை செய்வோம்)
வானத்யும், பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளை விசுவாசிக்கறேன். அவருடைய ஒரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னி-மரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார். மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார். பரமண்டலத்துக்கேறி, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய கடவுளுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந் தீர்க்க வருார்.
பரிசுத்த ஆவியையும் விசுாசிக்கிறேன். பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவ மன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.
அருளுரை:
பாடல்:
பிரதிக்கினைகள்
(திடப்படுத்தல் பெறவிரும்புவோர் நின்று செய்யும் பிர்திக்கிளை)
அத்தியட்சர்: தேவனுடைய சமூகத்திலும், இந்தச் சபையாருக்கு முன்பாகவும், நான் இப்பொழுது உங்களைக் கேட்கிறதாவது:
கிறிஸ்துவின் வல்லமையினால் நீ, இவ்வுலகத்தின் பெருமையையும், வீண் ஆடம்பரத்தையும், பாவமான மாம்ச இச்சைகளையும், பிசாசின் எல்லாச் செயல்களையும் வெறுத்துவிடுகிறாயா?
மறுமொழி: வெறுத்துவிடுகிறேன்.
அத்தியட்சர்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறாயா?
மறுமொழி: விசுவாசிக்கிறேன்.
அத்தியட்சர்: ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உன் மீட்பராகவும், உலக மீட்பராகவும் ஏற்றுக்கொள்கிறாயா?
மறுமொழி: ஏற்றுக்கொள்கிறேன்
அத்தியட்சர்: தேவனுடைய திருச்சித்தத்தையும், கற்பனைகளையும் கைக்கொண்டு உன் வாழ்நாளெல்லாம் அவைகளின்படி நடந்து கொள்வாயா?
மறுமொழி: தேவ ஒத்தாசையினால் அப்படியே நடந்துகொள்வேன்.
அத்தியட்சர்: ஆண்டவருடைய நாளின் ஆராதனையிலும், சிறப்பாகத் திருவிருந்திலும் உடன் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து பங்குபெற வாக்குக் கொடுக்கிறாயா?
மறுமொழி: வாக்குக் கொடுக்கிறேன்.
அத்தியட்சர்: ஜெபிப்பதிலும், திருமறையை வாசிப்பதிலும், கேட்பதிலும் உண்மையாயிருக்க வாக்குக் கொடுக்கிறாயா?
மறுமொழி: வாக்குக் கொடுக்கிறேன்.
அத்தியட்சர்: உன் நிலைமைக்கு ஏற்பத் திருப்பணிக்கெனக் கொடுக்க வாக்குக் கொடுக்கிறாயா?
மறுமொழி: வாக்குக் கொடுக்கிறேன்.
அத்தியட்சர்: சிலுவையில் அறையுண்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பற்றும் விசுவாச்தை அறிக்கையிடுவதும், உன் வாழ்நாளெல்லாம் அவருடைய ஊழியத்தில், உண்மையாய் நிலைத்திருந்து, சொல்லிலும், செயலிலும் அவருக்குச் சாட்சியாயிருப்பதும் உன் கடமையென்று ஒப்புக்கொள்ளுகிறாயா?
மறுமொழி: ஒப்புக்கொடுக்கிறேன்.
அத்தியட்சர் சொல்வது:
பிரியமானவர்களே, நம்முடைய ஒரே இரட்சகரான கிறிஸ்துவின் மூலமாய் தேவனில் உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு, அவருக்குக் கீழ்ப்படியவும் அவருடைய மக்களோடு ஐக்கியமாய் வாழவும் உங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் வாக்குக் கொடுத்தவைகளை உண்மையாய் நிறைவேற்றுவதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பலப்படுத்தும்படி முழங்காற்படியிட்டு ஜெபியுங்கள்.
(யாவரும் முழங்காலில் நின்று அமைதியாய்ஜெபிக்கவும்)
அத்தியட்சர் சொல்ல, திடப்படுத்தல் பெறுபவர் பின்சொல்வது:
கர்த்தாவே, உன் இறைவனே, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவே, நான் எனக்குச் சொந்தமல்ல, உமக்கே சொந்தம். உமது பேரருளைச் சார்ந்து, உம்முடைய பிள்ளையாக என் வாழ்நாளெல்லாம் உம்மை உண்மையோடு நேசிக்கவும், சேவிக்கவும் நான் என்னையே உமக்கு மிகுந்த தாழ்மையோடு அர்ப்பணஞ்செய்கிறேன். ஆமென்.
(சபையார் யாரும் முழங்காலில் நின்று திடப்படுத்தல் பெறுவோருக்காக அமைதியாய் ஜெபிக்கவும்)
சற்று நேரம் அமைதி
பாடல்: (ஆவியானவரின் அருட்கொடை வேண்டி முழங்காலில் நின்றவண்ணம் பாடுவோம்)
ஜெபம்
அத்தியட்சர்:
எல்லாம் வல்ல கடவுளே, என் பரம பிதாவே, பரிசுத்த ஞானஸ்நானத்தில் ந்த உமது பிள்ளைகளை உமது குடும்பத்தில் ஏற்றுக்கொண்டீரே, உமது பரிசுத்த ஆவியால் இவர்களை விசுவாசத்தில் நிலைநிறுத்தியருளும். ஞானம், உணர்வு, ஆலோசனை, வல்லமை, அறிவு, ஆண்டவருக்குப் பயப்படும் பயம் ஆகிய ஆவியின் பற்பல பேரருள் வரங்களை நாள்தோறும் இவர்களில் பெருகச்செய்யும். நித்திய ஜீவனுக்கென்று இவர்களை உமது இரக்கத்தால் பாதுகாத்தருளும். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.