தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
பேராய அருட்பணி இயக்கம் (HMS)
”நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்“ (மத்தேயு 28:19)
ஆண்டவரின் கட்டளைக்கிணங்க அமெரிக்க ஐக்கிய நாட்டில் துவங்கப்பட்ட Americen Board of Commissioners for Foreign Missions 1834-ம் ஆண்டு மதுரையை மையமாகக் கொண்டு அருட்பணியைத் துவங்கியது. முதல் அருட்பணியாளராக அருள்திரு. வில்லியம் டாட் மற்றும் அவரது துணைவியர் திருமதி. டிரேசி ஆகிய இருவரும் 1834-ம் ஆண்டு ஜீலை 16-ம் தேதி யாழ்பாணத்திலிருந்து மதுரையை அடைந்து தங்கள் அருட்பணியைத் துவங்கினர். அமெரிக்கன் – மதுரா அருட்பணி என்று (American-Madura Mission) மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி பகுதிகளில் செயல்பட்டு வந்த இயக்கமானது வளர்ச்சியடைந்தபோது உள்நாட்டு மக்களே இப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கோடு 1856-ல் கூதேச அருட்பணி சங்கம் என்று பொருள்படும்படி Home Missionary Society-யாக உருப்பெற்றது. பின்நாட்களில் அருட்திருவாளர்கள் உவெப், வாஷ்பர்ன், ஜம்புரோ, லார்பீர் ஆகியோர் கல்விப்பணி, மருத்துவப்பணி போன்ற சமூகப்பணிகளோடு ஒருங்கிணைந்த நற்செய்திப் பணியை செய்துவந்தனர்.
திருமண்டில இயக்கமாக...
1947 செப்படம்பர் 27 தென்னிந்திய திருச்சபை உருவானதிலிருந்து மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலமாக இத்தொடர்பணிகளை நமது ஊழியர்களைக் கொண்டு தரிசனம் மாறாமல் செய்து வருகிறோம். 1947 - 1958 காலகட்டத்தில் கிராம அருட்பணியின் அவசியத்தை உணர்ந்து Mission in Christ way என்ற நோக்கத்துடன் கிராமங்களில் பணியாற்ற கிராம சபை ஆயர்கள் நியமிக்கப்பட்டனர். ஊழிய பாரத்தை சபையோருக்கு ஏற்படுத்தவும், இயக்கத்தின் தேவைகளை சந்திப்பதற்கும், 1961-ல் Board of Mission சார்பில் விற்பனை விழாவானது ஏற்படுத்தப்பட்டது.
இயக்கத்தின் மைல் கற்கள்...
அருட்பணியின் எல்லைகள் விரிவடைந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் காணப்படும் பாப்புவாவில் நடைபெறும் அருட்பணியை அறிந்த இயக்கமானது அங்கு பணி செய்யும் அருட்பணியாளர்களை தாங்க முன் வந்தது. மேலும், அருட்பணியின் அவசியத்தை உணர்ந்த இயக்கமானது, அருட்பணியாயரை அனுப்பி தன் கடல் கடந்த, கலாச்சாரம் கடந்த அருட்பணி பயணத்தை தொடங்கியது.
மதுரை நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைப்பிரதி வினியோகத்தின் மூலம் பணியை தொடர்ந்தது இயக்கம். நமது திருமண்டில எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் 1369 கிராமகளை நற்செய்தியால் சந்திக்க வேண்டுமென்ற அர்ப்பணிப்போடு 1986-ல் கம்பம் பகுதியில் பணியைத் துவங்கியது. கம்பம் பள்ளத்தாக்கு அருட்பணி மூலம் சபைகள் இல்லாத 30 கிராமங்களில் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அநேக ஆராதனைக் குழுக்கள் அப்பள்ளத்தாக்கு பகுதியில் பரவின. இதனைத் தொடர்ந்து தனது கலாச்சாரம் கடந்த அருட்பணியை 1988-ல் அந்திராவிலும், 1998-ல் ஒடிஷாவிலும், 2013-ல் மியன்மார் (பர்மா) பகுதியிலும் விரிவுபடுத்தியது.
கம்பம் பள்ளத்தாக்கினை போன்று கொடைக்கானல் பழனி மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஆண்டவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தரிசனத்துடன் 2013-ல் மத்திய கேரளா திருமண்டிலத்துடன் இணைந்து பள்ளங்கியை மையமாகக் கொண்டு நற்செய்தி பணியை துவங்கியது. பள்ளங்கியை சுற்றி காணப்படும் 10 கிராமங்களில் வாழும் 1700 இல்லாங்களை சந்திக்க அருட்பணியாளர்களை அனுப்பியது.
இதன் விளைவாக புலையர், பளியர் மற்றும் இருளர் இனத்தைச் சார்ந்த சுமார் 50 குடும்பங்கள் ஆண்டவரின் அன்பை ருசித்தனர். 14 இடங்களில் ஆராதனை குழுக்கள் உருவாக்கப்பட்டன.
சமூக பணியுடன்...
கொடைக்கானல் பெருமாள்மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு CSI துவக்கப்பள்ளி அருகில் விடுதி அமைக்கப்பட்டு கல்வி வளர்ச்சிப் பணியிலும் நமது இயக்கமானது ஈடுபட்டு வருகிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலன் காணப்படும் மேகமலைப் பகுதியில் ஏழு மலை கிராமங்களிலும், கரந்தமலைப் பகுதியிலுள்ள பல கிராமங்களில் சமூக சேவைகள் வழியாக நற்செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி – தஞ்சாவூர் சாலையிலுள்ள தேவராயனேரி பகுதியில் வாழ்ந்து வரும் நாடோடி இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு வளர்ப்பு, தையல் இயந்திரம், பெட்டி கடை போன்ற நலத்திட்டங்களுடன் அந்த இனத்தைச் சார்ந்த அருட்பணியாளர்கள் மூலம் சமூக பணியூடாக நற்செய்திப் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மற்ற பணித்தளங்களில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மூன்று தையல் பயிற்ச்சி மையங்கள் செயல்படுகிறது.
சிப்பிப்பாரை பணித்தளத்தின் அருகில் உள்ள கோவில்பட்டி நகர் பகுதியில் காணப்படும் தெருவோர அனாதைகள், குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு மூன்று வேலை உணவளித்தும், உடல் நலம் பேணியும் அருட்பணியாளர் மூலம் பராமரித்து வருகிறோம். இவ்விதமாய், அருட்பணியை சமூகப்பணியோடு இணைத்து ஆண்டவரின் அருட்செய்தியை பறைசாற்றியதின் விலைவாக அநேக ஆராதனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டது.
இந்நாட்களில், கொரியா தேசத்து திருச்சபையோடு இணைந்து Korind Mission மூலம் 26 இடங்களில் ஆலயங்களும், 14 இடங்களில் பள்ளிகளும் கட்டப்பட்டு ஆண்டவரின் இறையாட்சி மாட்சியோடு பரவ நமது இயக்கத்தின் 36 அருட்பணியாளர்கள் மற்றும் 2 கிராம ஆயர்கள் தீவிரமாய் செயலாற்றி வருகின்றனர்.
எதிர்கால தரிசனங்கள்
கலாச்சாரம் கடந்த அருட்பணியின் விரிவாக்கத்தின் அங்கமாக கோவா பகுதியில் வசித்து வரும் கொங்கனி இன மக்கள் மத்தியில் பணி செய்ய ஆயத்தமாகி வருகிறோம். மேலும், கீழ்க்காணும் சமூக மேம்பாட்டு திட்டங்களுடன் ஆண்டவரின் அருளரசு பரவ முயல்கிறோம்.
- இலவச மருத்துவ முகாம்கள், மேற்ச்சிகிச்சைகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள்
- கல்வி கற்றலில் குறையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு மாலை நேர வகுப்புகள்
- ஆதரவற்ற, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு விடுதிகள் மூலம் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்
- ஆங்கிலம் மொழி புலமை உட்பட்ட, ஆளுமை திறன் வளர்ச்சி மையங்கள் மூலம் இளைஞர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள்
- தையல் பயிற்ச்சி மற்றும் கணிணி பயிற்ச்சி மையங்கள் மூலம் மனித வள மேம்பாட்டுத் திட்டங்கள்
- ஆதரவற்ற தெரிவோர முதியோர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல்
“வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை, எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது“ என்ற இறைவாக்கை சிந்தையில் கொண்டவர்களாய் இறையரசை விரிவுபடுத்தும்பணியில் எங்களோடு இணைந்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.
ஆண்டவருக்கே மாட்சி உரித்தாகுக!
Rt.Rev.Dr. D. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன். M.A., B.D., P.G.D.TH., Ph.D.,
பேராயர் – தலைவர் HMS
மதுரை – இராமநாதபுரம் திருமண்டிலம்
திருமதி. P. மேரி ஜெயசிங் M.A., B.Ed.,
பேராயரம்மா, தலைவி – பெண்கள் ஐக்கிய சங்கம். செயலர் – HMS
தொடர்புக்கு,
இயக்குநர், பேராய அருட்பணி இயக்கம்
162, கிழக்கு வெளி வீதி. மதுரை – 625 001.
எனது தீர்மானம்
- HMS இயக்கத்திற்காக தினமும் ஜெபிக்கிறேன்
- HMS ழுமு நேர அருட்பணியாளராக என்னை அர்ப்பணிக்கிறேன்
- மாதந்தோம் ரூபாய் ----------- கொடுத்து இயக்கத்தை தாங்க விரும்புகிறேன்.
- ரூ.5000/- செலுத்தி எங்கள் குடும்பத்தின் சார்பாக ஒரு அருட்பணியாளரை தாங்குகிறோம்.
- மலைவாழ் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு எனது பங்காக மாதந்தோறும் ரூ.1000/- செலுத்த தீர்மானிக்கிறேன்.
- ஒரு மருத்துவ முகாமிற்கான அடிப்படை தேவைக்கான ரூ.4000 கொடுத்து உதவ முன் வருகிறேன்.
- HMS ஆயுள் சந்தாதாரராக ரூ.10,000/- செலுத்த தீர்மானிக்கிறேன்.
- HMS ஒருங்கிணைப்பாளராக எனது சபையில் செயல்பட முன்வருகிறேன்.
பெயர்:
அலைபேசி எண்:
ஆலயத்தின் பெயர்:
ஆயர் வட்டம்:
விலாசம்:
கையொப்பம்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.