Type Here to Get Search Results !

Genesis 15 Question Answer | Bible Quiz in Tamil | ஆதியாகமம் 15 கேள்வி பதில்கள் | வேதாகம வினா விடைகள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Fifteen (15)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினைந்தாம் (15) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. கர்த்தர் ஆபிராமிடம்: நான் உனக்கு ______ ,உனக்கு மகா பெரிய பெலனுமாயிருக்கிறேன் என்றார்?
A) கேடகமும்
B) அடைக்கலமும்
C) கோட்டையும்
Answer: A) கேடகமும்
    (ஆதியாகமம் 15:1)

02. கர்த்தராகிய ஆண்டவரே அடியேனுக்கு என்ன தருவீர்? என்று கேட்டது யார்?
A) லோத்து
B) எலியேசர்
C) ஆபிராம்
Answer: C) ஆபிராம்
    (ஆதியாகமம் 15:2)

03. ஆபிராமின் வீட்டு விசாரணைக்கர்த்தன் யார்?
A) மம்ரே
B) எலியேசர்
C) லோத்து
Answer: B) எலியேசர்
    (ஆதியாகமம் 15:2)

04. எலியேசர் எந்த இடத்தைச் சார்ந்தவன்?
A) சேயீர்
B) தமஸ்கு
C) சாலேம்
Answer: B) தமஸ்கு
    (ஆதியாகமம் 15:2)

05. ஆபிராம் தனக்கு சுதந்தரவாளி என்று யாரை நினைத்தான்?
A) மம்ரே
B) எலிரேசர்
C) லோத்து
Answer: B) எலியேசர்
    (ஆதியாகமம் 15:3)

 

06. கர்த்தர் ஆபிராமுக்கு வானத்தில் எதை காண்பித்தார்?
A) சூரியன்
B) நட்சத்திரம்
C) சந்திரன்
Answer: B) நட்சத்திரம்
    (ஆதியாகமம் 15:5)

07. ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு _______ எண்ணினார்.
A) நீதியாக
B) உண்மையாக
C) கேடகமாக
Answer: A) நீதியாக
    (ஆதியாகமம் 15:6)

08. கர்த்தர் ஆபிராமிடம் எத்தனை வயதுள்ள கிடாரியையும், வெள்ளாட்டையும், ஆட்டுக்கடாவையும் கொண்டுவர சொன்னார்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (ஆதியாகமம் 15:9)

09. யார் நித்திரை பண்ணுகிறபோதே, திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது?
A) லோத்து
B) எலியேசர்
C) ஆபிராம்
Answer: C) ஆபிராம்
    (ஆதியாகமம் 15:12)

10. ஆபிராமின் சந்ததியை எத்தனை வருஷம் உபத்திரவப் படுத்துவார்கள் என்று கர்த்தர் சொன்னார்?
A) இருநூறு
B) முன்னூறு
C) நானூறு
Answer: C) நானூறு
    (ஆதியாகமம் 15:13)

 

11. ஆபிராமின் சந்ததியார் எத்தனையாவது தலைமுறையில் சொந்த இடத்துக்கு திரும்புவார்கள்?
A) நான்கு
B) ஆறு
C) எட்டு
Answer: A) நான்கு
    (ஆதியாகமம் 15:16)

12. கர்த்தர் யாருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாக வில்லை என்றார்?
A) கேனியர்
B) எமோரியர்
C) ஏத்தியர்
Answer: B) எமோரியர்
    (ஆதியாகமம் 15:16)

13. கர்த்தர் எந்த நதி முதல் எந்த நதி வரை ஆபிராமுக்கு கொடுப்பேன் என்றார்?
A) எகிப்து - ஐபிராத்து
B) யோர்தான் - ஐபிராத்து
C) எகிப்து - யோர்தான்
Answer: A) எகிப்து - ஐபிராத்து
    (ஆதியாகமம் 15:18)

14. பெரிய நதி எது?
A) எகிப்து
B) யோர்தான்
C) ஐபிராத்து
Answer: C) ஐபிராத்து
    (ஆதியாகமம் 15:18)

15. கர்த்தர் எத்தனை இனத்தாருடைய தேசத்தை ஆபிராமுக்கு கொடுப்பேன் என்றார்?
A) ஐந்து
B) பத்து
C) பதினைந்து
Answer: B) பத்து
    (ஆதியாகமம் 15:19,20,21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.