Type Here to Get Search Results !

மூளைக்கு வேலை | விவிலியத்தில் நீங்கள் அறியாத 100 கேள்வி பதில்கள் | Bible 100 Quiz Question & Answer in Tamil | Jesus Sam

=====================
லெந்துகால வினா விடை போட்டி
================
1. இயேசு பெத்சகேமில் பிறப்பார் என்று கூறிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யார்?
Answer: மீகா
    (மீகா 5:2)

2. கர்த்தருடைய மகிமை ஆலயத்துக்குள் எப்படிப் பிரவேசித்தது?
Answer: கீழ்திசைக்கு எதிரான வாசல் வழியாய் பிரவேசித்தது
    (எசேக்கியேல் 43:4)

3. தேவனுடைய கூடாரமும், வாசஸ்தலமும் எங்குள்ளது?
Answer: சாலேம் அவருடைய கூடாரம், சீயோன் அவருடைய வாசஸ்தலம்
    (சங்கீதம் 76:2)

4. தேவன் எந்தநாளை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்தினார்?
Answer: ஏழாம் நாள்
    (ஆதியாகமம் 2:3)
Answer: ஓய்வு நாள்
    (யாத்திராகமம் 20:11)

5. இயேசுவுக்குள் அடங்கிய பொக்கிஷங்கள் எவை?
Answer: ஞானம் அறிவு
    (கொலோசெயர் 2:3)

6. யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார் என்றது யார்?
Answer: பிலேயாம்
    (எண்ணாகம்ம 24:19)

7. பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரித்தவள் யார்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட கர்ப்பவதி யார்?
Answer: பரிசுத் ஆவியினா கர்ப்பந்தரித்தவள் – மரியாள்
    (லூக்கா 1:30,35)
Answer: பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட கர்ப்பவதி – எலிசபெத்
    (லூக்கா 1:41)

8. கர்த்தருடைய தூதன் என்று அழைக்கப்பட்ட தீர்க்கன் யார்?
Answer: ஆகாய்
    (ஆகாய் 1:13)

9. நீ தேவனுடைய தூதனைப்போல் என் பார்வைக்கு பிரியமானவன் என்று யார் யாரிடம் கூறியது?
Answer: ஆகீஸ் - தாவீதிடம்
    (1 சாமுவேல் 29:9)

10. கிறிஸ்து எந்த முறைமையின்படி பிரதான ஆசாரியராக எதற்குள் பிரவேசித்தார்?
Answer: மெல்கிசேதேக்கின் முறைப்படி தேவாலயத்திற்குள் பிரவேசித்தார்
    (எபிரெயர் 6:20)



11. கர்த்தர் யாரோடு பண்ணின உடன்படிக்கை ஜீவனும், சமாதானமுமாய் இருந்தது?
Answer: லேவியரோடு
    (மல்கியா 2:4,5)

12. எந்தத் தகப்பனின் ஜீவன் தன் குமாரனின் ஜீவனோடு ஒன்றாய் இணைந்துள்ளது?
Answer: யாக்கோபின் ஜீவன் பென்யமீனின் ஜீவனோடு ஒன்றாய் இணைந்துள்ளது
    (ஆதியாகமம் 44:30)

13. இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்? அவன் மேல் எது இருந்தது?
Answer: காத்திருந்தவன் சிமியோன்
    அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தது
    (லூக்கா 2:25)

14. எதைத்தேடினால் ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்?
Answer: கர்த்தரைத் தேடுங்கள், அவருடைய நீதியையும், மனத்தாழ்மையையும் தேடுங்கள்
    (செப்பனியா 2:3)

15. இஸ்ரவேலிலே எதை ஸ்தாபித்து, தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி கட்டளையிட்டார்?
Answer: தேவத்தை ஸ்தாபித்து
    (சங்கீதம் 78:5)

16. எவைகளை உங்கள் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதிக்க வேண்டும்?
Answer: ஆண்டவர் கட்டளையிடுகிற வார்த்தைகளை
    (உபாகமம் 6:5,6,7)

17. நம் தேவனின் ஆண்டவரிடத்தில் எவை உண்டு?
Answer: இரக்கங்களும், மன்னிப்புகளும்
    (தானியேல் 9:10)

18. தேவன் நம்மேல் வைத்த அன்பை எப்படி விளங்கப்பண்ணினார்?
Answer: நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்
    (ரோமர் 5:8)

19. எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன் என்று கூறிய தீர்க்கன் யார்?
Answer: ஓசியா
    (ஓசியா 11:1)

20. நசரேயனாகிய இயேசுவை தேவன் எவற்றால் அபிஷேகம் செய்தார்?
Answer: பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும்
    (அப்போஸ்தலர் 10:38)

21. சேஷ்ட புத்திரபாகத்தை விற்றவன் யார்? இழந்தவன் யார்?
Answer: விற்றவன் – ஏசா
    (ஆதியாகமம் 25:33)
    (எபிரெயர் 12:16)
Answer: இழந்தவன் – ரூபன்
    (1 நாளாகமம் 5:1)

22. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று ஏசாயா தீர்க்கனால் சொல்லப்பட்டவன் யார்?
Answer: யோவான்ஸ்நானன்
    (மத்தேயு 3:3)

23. இயேசுவின் எருசலேம் பவணியைக்குறித்து முன்னறிவித்த தீர்க்கன் யார்?
Answer: சகரியா
    (சகரியா 9:9)

24. பார்வோனின் தேவனாயிருந்தவன் யார்? தகப்பனாயிருந்தவன் யார்?
Answer: தேவனாயிருந்தது - மோசே
    (யாத்திராகமம் 7:1)

25. இயேசு பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை யாருக்குத்தருவதாக கூறினார்?
Answer: பேதுரு
    (மத்தேயு 16:18,19)

26. அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டவர்கள் யார்?
Answer: நியாயசாஸ்திரிகள்
    (லூக்கா 11:52)

27. மரணத்துக்கும் பாதாளத்துக்கும் உரிய திறவுகோலை உடையவர் யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    (வெளிப்படுத்தல் 1:18)

28. இயேசுவின் போதகத்தை குறித்து ஆச்சரியப்பட்டவர்கள் யார்? ஏன்?
Answer: இயேசு கிறிஸ்து வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுள்ளவராய் போதித்தபடியினால் ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்
    (மத்தேயு 7:29)

29. யார் ஜெபித்தபோது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று?
Answer: சாலொமோன்
    (2 நாளாகமம் 7:1)

30. யார் ஜெபம் பண்ணியபோது வானம் திறக்கப்பட்டது?
Answer: இயேசு கிறிஸ்து
    (மத்தேயு 3:16)

31. தேவன் தம்முடைய பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு எவைகளை அளிக்கிறார்?
Answer: ஞானம், அறிவு, இன்பம்
    (பிரசங்கி 2:26)

32. கர்த்தர் யாருடைய மகிமையை திரும்பவரப்பிண்ணுவார்?
Answer: யாக்கோபு
    (நாகூம் 2:2)

33. பொருத்தனை செய்து குமாரனைப் பெற்றவள் யார்? குமாரன் யார்?
Answer: பொருத்தனை செய்தது - அன்னாள்
    குமாரன் - சாமுவேல்
    (1 சாமுவேல் 1:11,20)

34. பொருத்தனையின் புத்திரனே என்று தன் குமாரனை அழைத்த தாய் யார்?
Answer: லேமுவேலின் தாய்
    (நியாயாதிபதிகள் 31:1,2)

35. தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்தவன் யார்?
Answer: தாவீது
    (அப்போஸ்தலர் 13:36)

36. கர்த்தர் எதை உன்னிடத்தில் அறிவித்து, எதை உன்னிடத்தில் கேட்கிறார்?
Answer: கர்த்தர் நன்மையை அறிவித்து, நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, அவருக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதையே உன்னிடத்தில் கேட்கிறார்
    (மீகா 6:8)

37. தண்ணீரின்றி முளைப்பது எது? சேறின்றி வளருவது எது?
Answer: தண்ணீரின்றி முறைப்பது – கோரைப் புல்
    சேறின்றி வளருவது – நாணல்
    (யோபு 8:11)

38. கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்று கூறியது யார்?
Answer: ஆகாஸ்
    (ஏசாயா 7:12)

39. உயிர்பிழைக்க ஆலயத்தில் பதுங்க மாட்டேன் என்று கூறிய தீர்க்கன் யார்?
Answer: நெகேமியா
    (நெகேமியா 6:11)

40. குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறவர்கள் யார்?
Answer: சீயோன் குமாரர்
    (புலம்பல் 4:2)

41. எனக்கு ஓர் ஆசீர்வாதம் தரவேண்டும் என்று தகப்பனிடம் கேட்ட மகள் யார்?
Answer: அக்சாள்
    (யோசுவா 15:17-19)

42. என்னையும் ஆசீர்வதியும் என்று தகப்பனிடம் கேட்ட மகன் யார்?
Answer: ஏசா
    (ஆதியாகமம் 27:34,38)

43. கர்த்தர் உண்டாக்கிய தோட்டம் எது? அவர் நாட்டின மரம் எது?
Answer: கர்த்தர் உண்டாக்கின தோட்டம் – ஏதேன் தோட்டம்
    (ஆதியாகமம் 2:8)
Answer: கர்த்தர் நாட்டின மரம் – சந்தன மரம்
    (எண்ணாகமம் 24:6)

44. கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் எது? அவர் மனமகிழ்ச்சியின் நாற்று எது?
Answer: கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் - இஸ்ரவேல் வம்சம்
    (ஏசாயா 5:7)
Answer: கர்த்தருடைய மகமகிழ்ச்சியின் நாற்று – யூதா மனுஷர்
    (ஏசாயா 5:7)

45. இயேசு யாருடன் எப்போது போஜனம் பண்ணுவேன் என்கிறார்?
Answer: இயேசுவின் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால்
    (வெளிப்படுத்தல் 3:20)

46. மனுஷ பாஷையை பேசிய மிருகம் எது? யாருடன் பேசியது?
Answer: மனுஷ பாஷையை பேசிய மிருகம் – கழுதை
    பிலேயாமிடம் பேசியது
    (எண்ணாகமம் 22:28)

47. ஆண்டவரே நான் பாவியான மனுஷன் என்று கூறியவன் யார்?
Answer: சீமோன் பேதுரு
    (லூக்கா 5:8)

48. பாவம் செய்யாத மனுஷன் இல்லையே என்று ஜெபித்தவன் யார்?
Answer: சாலொமோன்
    (2 நாளாகமம் 6:36,1)

49. ஏன் உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் கூற வேண்டும்?
Answer: ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படாதபடிக்கு
    (யாக்கோபு 5:12)

50. தன் வேலையில் அசதியாய் இருப்பவன் யாருக்கு சகோதரன்?
Answer: அழிம்பனுக்குச் சகோதரன்
    (நீதிமொழிகள் 18:9)

51. புலவர்களிலும் சிலர் தங்களை யாருடைய சந்ததியார் என்று கூறுகிறார்கள்?
Answer: கர்த்தருடைய சந்ததி
    (அப்போஸ்தலர் 17:28)

52. தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் எதற்கு ஏற்றதாய்ச் சொல்லக்கடவன்?
Answer: விசுவாசப்பிரமாணத்திற்கு ஏற்றதாக சொல்லக்கடவன்
    (ரோமர் 12:6)

53. இந்த ஆலயம் உங்கள் பார்வைக்கு, கள்ளர் குகையாயிற்றோ என்று கேட்டது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    (மத்தேயு 21:13)
    (லூக்கா 19:46)

54. நீங்களோ என் வீட்டை கள்ளர் குகையாக ஆக்கினீர்களே என்று கூறியது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    (மாற்கு 11:17)

55. உள்ளங்கால் தொடங்கி, உச்சந்தலை மட்டும் ஒரு பழுதும் இல்லாதவன் யார்?
Answer: அப்சலோம்
    (2 சாமுவேல் 14:25)

56. உள்ளங்கால் தொடங்கி, உச்சந்தலை மட்டும் சுகமே இல்லாதவர்கள் யார்?
Answer: இஸ்ரவேல் ஜனங்கள்
    (உபாகமம் 28:35)
    (உபாகமம் 27:1)

57. சிறு வயது முதல் வேத எழுத்துக்களை கற்று நிச்சயித்துக்கொண்டவன் யார்?
Answer: தீமோத்தேயு
    (2 தீமோத்தேயு 3:14)

58. மோசேயின் நியாயப் பிரமாணத்தில் தேறின வேதபாரகன் யார்?
Answer: எஸ்றா
    (எஸ்றா 7:6)

59. கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தது யார்? பூட்டியது யார்?
Answer: கர்த்தருடைய ஆலயத்தைத் திறந்தது – எசேக்கியா
    (2 நாளாகமம் 29:3)
Answer: கர்த்தருடைய ஆலயத்தைப் பூட்டியது – ஆகாஸ்
    (2 நாளாகமம் 28:24)

60. கர்த்தர் எலியா தீர்க்கனை எதற்கு முன்னே அனுப்புவார்?
Answer: பெரிதும் பயங்கரமுமான நாள் வரும்முன்னே அனுப்புவார்
    (மல்கியா 4:5)

61. கிறிஸ்துவின் அச்சடையாளங்களைத் தன் சரீரத்தில் தரித்துக் கொண்டிருந்தவன் யார்?
Answer: பவுல்
    (கலாத்தியர் 6:17)

62. ஒன்றுமில்லாத ஏழைகளுக்கு, திராட்சைத்தோட்டமும் நிலங்களும் கொடுத்தவன் யார்?
Answer: நேபுசராதான்
    (எரேமியா 39:10)

63. யாருடைய வருகை பொய்யான அற்புதங்களோடு இருக்கும்?
Answer: அக்கிரமக்காரன் (அந்திக்கிறிஸ்து), சாத்தான்
    (2 தெசலோனிக்கேயர் 2:9)

64. நான் தேவன், தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று கூறுபவன் யார்?
Answer: தீருவின் அதிபதி
    (எசேக்கியேல் 28:2)

65. மனுஷனுக்குரியவைகளையும் தேவனுக்குரியவைகளையும் யார், யார் அறிவார்கள்?
Answer: மனுஷனுக்குறியவைகளை மனுஷன் அறிவான்
    தேவனுக்குரியவைகளை தேவன் அறிவார்
    (1 கொரிந்தியர் 2:11)

66. எதைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களுக்கு, கர்த்தர் எவைகளைக் கொடுப்பார்?
Answer: ஓய்வு நாளை ஆசரித்து, கர்த்தருக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களுக்கு கர்த்தர் அவருடைய ஆலயத்திலும் அவருடைய மதில்களுக்குள்ளும் குமாரரும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும் பார்க்கிலும் உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பார்.
    (ஏசாயா 56:4,5)

67. ராஜாவைக் கொன்ற தீர்க்கன் யார்? தீர்க்கனைக் கொன்ற ராஜா யார்?
Answer: ராஜாவைக் கொன்ற தீர்க்கன் – சாமுவேல் (ஆகாக் ராஜாவைக் கொன்றார்)
    (1 சாமுவேல் 15:33)
Answer: தீர்க்கனைக் கொன்ற ராஜா – ஏரோது
    (மத்தேயு 14:5-10)

68. தேவகுமாரனுக்கு ஒப்பானவனாய் என்றும் ஆசாரியனாக நிலைத்திருப்பவன் யார்?
Answer: மெல்கிசேதேக்
    (எபிரெயர் 7:1-3)

69. இயேசு யாருக்குக் கீழ்ப்படிந்தார்? எவைகளிலெல்லாம் விருத்தியடைந்தார்?
Answer: இயேசு தாய் தகப்பனுக்கு கீழ்ப்படிந்திருந்தார். ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்
    (லூக்கா 2:51,52)

70. தங்கள் படுக்கையின்மேல் கெம்பீரிப்பவர்கள் யார்? இளைப்பாறுகிறவர்கள் யார்?
Answer: தங்கள் படுக்கையின்மேல் கெம்பீரிப்பவர்கள் – பரிசுத்தவான்கள்
    (சங்கீதம் 149:5)
Answer: தங்கள் படுக்கையின் மேல் இளைப்பாறுகிறவர்கள் – நேர்மையாய் நடப்பவர்கள்
    (ஏசாயா 57:2)

71. தன் சொந்தக் கண்களோடே உடன்படிக்கை பண்ணிக்கொண்ட சன்மார்க்கன் யார்?
Answer: யோபு
    (யோபு 31:1)

72. தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்றது யார்? தேவனோடு போராடியவன் யார்?
Answer: தேவனை முகமுகமாய்க் கண்டது - யாக்கோபு
    (ஆதியாகமம் 32:30)
Answer: தேவனோடு போராடியது - யாக்கோபு
    (ஆதியாகமம் 32:28)

73. சேனைகளின் கர்த்தர் எவைகளுக்காக மகா வைராக்கியம் கொண்டுள்ளார்?
Answer: எருசலேமுக்காகவும், சீயோனுக்காகவும்
    (சகரியா 1:14)

74. கர்த்தர் யாருக்கு எதை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்?
Answer: கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய தமது ஊழியக்காரருக்கு இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்
    (ஆமோஸ் 3:7)

75. முதன் முதலில் தசமபாகம் யாருக்கு யார் கொடுத்தது?
Answer: மெல்கிசேதேக்குக்கு – ஆபிரகாம்
    (ஆதியாகமம் 14:20)

76. தசமபாகத்தில் தசமபாகம் செலுத்தும்படி கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?
Answer: லேவியருக்கு
    (எண்ணாகமம் 18:26)

77. யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் யாருடைய வீட்டை ஆசீர்வதித்தார்?
Answer: எகிப்தியன் வீட்டை (போத்திபார்)
    (ஆதியாகமம் 39:5)

78. தம்மிடம் அடையாளம் கேட்ட வேதபாரகர், பரிசேயர்களுக்கு இயேசு கொடுத்த அடைளாளம் என்ன?
Answer: யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
    (மத்தேயு 12:38,39)
    (மத்தேயு 16:4)

79. கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார் என்று கேட்டவன் யார்?
Answer: பார்வோன்
    (யாத்திராகமம் 5:2)

80. எசேக்கியா வெண்கல சர்ப்பத்திற்கு என்ன பெயரிட்டான்?
Answer: நிகுஸ்தான்
    (2 இராஜாக்கள் 18:4)

81. தண்ணீரின்மேல் நடந்தவர் யார்? உட்கார்ந்திருந்தவள் யார்?
Answer: தண்ணீரின் மேல் நடந்தவர் – இயேசு கிறிஸ்து
    (மத்தேயு 14:25-29)
Answer: தண்ணீரின் மேல் உட்கார்ந்திருந்தவள் – வேசி
    (வெளிப்படுத்தல் 17:15,1)

82. யூதாஸ்காரியோத்தைக்குறித்து சங்கீதக்காரன் என்ன எழுதினான்?
Answer: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது. ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக.
    (சங்கீதம் 69:25)
    (அப்போஸ்தலர் 1:20)

83. மாம்சத்தின் உயிர் எதிலிருக்கிறது? அது எதற்குச் சமானம்?
Answer: மாம்சத்தின் உயிர் இரத்தத்திலிருக்கிறது. அது ஜீவனுக்குச் சமானம்
    (லேவியராகமம் 17:11,14)

84. கர்த்தருடைய வழிகள் எப்படிப்பட்டது? அதில் நடப்பவர்கள் யார்? இடறுபவர்கள் யார்?
Answer: கர்த்தருடைய வழி – செம்மையானது
    நடப்பவர்கள் – நீதிமான்கள்
    இடறுபவர்கள் – பாதகர்கள்
    (ஓசியா 14:9)

85. இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாத பாவம் எது?
Answer: பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசுவது
    (மத்தேயு 12:32)

86. பரிசுத்த பிள்ளை யார்? அழகான பிள்ளை யார்? செல்லப்பிள்ளை யார்?
Answer: பரிசுத்த பிள்ளை – இயேசு
    (அப்போஸ்தலர் 4:,28,30)
Answer: அழகான பிள்ளை – மோசே
    (யாத்திராகமம் 2:2)
Answer: செல்லப் பிள்ளை – சாலொமோன்
    (நீதிமொழிகள் 8:30)

87. எதனைப்பார்க்க, தன் கண்களைத் திறக்கும்படி சங்கீதக்காரன் ஜெபிக்கிறான்?
Answer: கர்த்தருடைய வேதத்தில் உள்ள அதிசயங்களைப் பார்க்கும்படி
    (சங்கீதம் 119:18)

88. நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனானவன் என்று கூறியது யார்?
Answer: சிம்சோன்
    (நியாயாதிபதிகள் 16:17)

89. கர்த்தர் யாருக்கு உதவி செய்கிறது லேசான காரியம்?
Answer: பலமுள்ளவனுக்காகிலும், பலனற்றவனுக்காகிலும்
    (2 நாளாகமம் 14:11)

90. பிறக்கும் முன் தேவனால் பெயரிடப்பட்ட ஆறு பேர் யாவர்?
Answer: 1. இஸ்மவேல்
    (ஆதியாகமம் 16:11)
Answer: 2. இயேசு
    (மத்தேயு 1:21)
Answer: 3. யோவான்
    (லூக்கா 1:13)
Answer: 4. மகேர்-சாலால்-அஸ்-பாஸ்
    (ஏசாயா 8:3)
Answer: 5. ஈசாக்கு
    (ஆதியாகமம் 17:19)
Answer: 6. இம்மானுவேல்
    (மத்தேயு 1:23)

91. பிறக்கும் ஆண் பிள்ளைகளை கொன்றுவிடும்படி கட்டளையிட்ட அரசர்கள் இருவர் யார்?
Answer: பார்வோன், ஏரோது
    (யாத்திராகமம் 1:22)
    (மத்தேயு 2:16)

92. இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட இருவர் யார்?
Answer: பிலாத்துவின் மனைவி, நூற்றுக்கு அதிபதி
    (மத்தேயு 27:19)
    (லூக்கா 23:47)

93. ஒரு மனுஷனுக்கு அவன் சத்துரு வீட்டாரே என்று கூறிய இருவர் யார்?
Answer: இயேசு கிறிஸ்து, மீகா
    (மத்தேயு 10:36)
    (மீகா 7:6)

94. முப்பது வெள்ளிக்காசை ஆலயத்தில் எறிந்த இருவர் யார்?
Answer: சகரியா, யூதாஸ்காரியோத்து
    (சகரியா 11:13)
    (மத்தேயு 27:3-5)

95. உவமைகளால் ஜனங்களோடு பேசிய மூவர் யார்?
Answer: இயேசு கிறிஸ்து, ஓசியா, எசேக்கியேல்
    (மத்தேயு 13:3)
    (ஓசியா 12:10)
    (எசேக்கியேல் 20:49)

96. கடுங்காற்றின்போது கப்பலில் அயர்ந்து நித்திரை செய்த இருவர் யார்?
Answer: யோனா, இயேசு கிறிஸ்து
    (யோனா 1:5)
    (மாற்கு 4:38)

97. இயேசுவின் மகிமையில் அவருக்கு இருபக்கமும் அமர விரும்பிய சீஷர்கள் இருவர் யார்?
Answer: யாக்கோபு, யோவான்
    (மாற்கு 10:35-41)

98. இயேசுவின் நாமத்துக்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக் கொடுக்கத் துணிந்த இருவர் யார்?
Answer: பவுல், பர்னபா
    (அப்போஸ்தலர் 15:25)

99. மறுரூப மலையில் இயேசுவோடு காணப்பட்ட இரண்டு தீர்க்கர்கள் யார்?
Answer: மோசே, எலியா
    (மாற்கு 9:2-4)

100. தேவனுக்குப்பிரியமானவன் என்று சாட்சி பெற்ற இருவர் யார்?
Answer: ஏனோக்கு
    (எபிரெயர் 11:5)
    தானியேல்
    (தானியேல் 9:23)

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.