Type Here to Get Search Results !

நியாயாதிபதிகள் – ரூத் கேள்வி பதில்கள் | Judges & Ruth Bible Quiz in Tamil | Jesus Sam

====================
நியாயாதிபதிகள் – ரூத்
===================
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
1. கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ணும்படி எந்த கோத்திரம் முதன்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கர்த்தர் சொன்னார்.
    அ) சிமியோன் கோத்திரம்
    ஆ) பென்யமீன் கோத்திரம்
    இ) லேவி கோத்திரம்
    ஈ) யூதா கோத்திரம்

2. போவாஸ் மூப்பரானவர்களில் எத்தனை பேரை பட்டண வாசலில் உட்காரும்படி அழைத்தான்.
    அ) பத்து
    ஆ) பன்னிரெண்டு
    இ) முப்பது
    ஈ) நாற்பது

3. ஈசாயின் தகப்பன் யார்?
    அ) தாவீது
    ஆ) போவாஸ்
    இ) ஓபோத்
    ஈ) சால்மன்

4. இஸ்ரவேலர் மீதியானியர் நிமித்தம் முறையிட்டபோது கர்த்தர் யாரை அனுப்பினார்?
    அ) தீர்க்கதரிசி
    ஆ) தேவ ஊழியன்
    இ) நியாயாதிபதி
    ஈ) தூதுவர்
    
5. தேவர்களுக்கும் மனுஷர்களுக்கும் புகழ் சேர்ப்பது.
    அ) ஒலிவு
    ஆ) அத்தி
    இ) திராட்சை
    ஈ) கேதுரு

6. யார் இல்லாததால் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்துவந்தான்.
    அ) தீர்க்கதரிசி
    ஆ) நியாயாதிபதி
    இ) ராஜா
    ஈ) தேவனுடைய வார்த்தை

7. கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று சொன்னவள் யார்?
    அ) ரூத்
    ஆ) ஓர்பாள்
    இ) நகோமி
    ஈ) தெபோராள்

8. கர்த்தருடைய தூதனானவரின் நாமம் என்னவென்று மனோவாவிற்குச் சொல்லப்பட்டது.
    அ) கிருபையுள்ளவர்
    ஆ) அற்புதம்
    இ) அதிசயம்
    ஈ) ஆரோக்கியம்

9. இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேர் யார்?
    அ) தெபோராளும் யாயேலும்    
    ஆ) நகோமியும் ரூத்தும்
    இ) ராகேலும் லேயாளும்
    ஈ) சாராளும் ஆகாரும்

10. தன் சகோதரனை விட்டு ஓடிப்போனபின் வீணரான மனுஷரைக் கூட்டிக்கொண்டு பலத்த பராக்கிரமசாலியானவன் யார்?
    அ) கிதியோன்
    ஆ) யோதாம்
    இ) அபிமெலேக்கு 
    ஈ) யெப்தா



II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. இஸ்ரவேலர் முறையிட்டபோது கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்க ------------ எழுப்பினார்.

2. ஓத்னியேலின் மேல் ----------------- வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து யுத்தம் பண்ணப் புறப்பட்டான்.

3. ------------------ பேரீச்சமரத்தின் கீழ் நியாயம் விசாரித்தாள்.

4. சிம்சோன் நித்திரை விட்டு விழித்து --------------- தன்னை விட்டு விலகினதை அறியாதிருந்தான்.

5. அந்நாட்களில் இஸ்ரவேலில் ---------------- இல்லை அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்துவந்தான்.

6. ரூத் களத்திற்குப்போய், தன் ------------------ தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.

7. நீ ----------------- என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள் என்று போவாஸ் ரூத்திடம் சொன்னான்.

8. ரூத் பெற்ற ஆண் பிள்ளைக்கு --------------- என்று பேரிட்டார்கள்.

9. ராஜாவாகிய -------------- மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான்.

10. அந்த --------------- கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயில்லை.



III. ரூத் புத்தகத்தில் வரும் பெயர்களில் எவையேனும் ஐந்து எழுதுக.

1.

2.

3.

4.

5.



IV. யார் யாரிடம் கூறியது
1. பாகால் தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் அது தானே தனக்காக வழக்காடட்டும்.

2. இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், பலப்படுத்தும்.

3. மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயை செய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.

4. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக.

5. நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

6. நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, எங்களுக்குக் கற்பிப்பாராக.

7. கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்.

8. இப்பொழுதும் நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் விழவேண்டுமோ?

9. நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது. அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும்?

10. பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது.



V. நியாயாதிபதிகளின் பெயர்களை எழுதுக

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.



VI. மனன வசனம்
1. மேலே வானத்திலும் ------------------------------------------------------------------------------------- நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

2. ஆறுநாளும் நீ வேலைசெய்து ------------------------------------------------------------------------- ஓய்வு நாள்

3. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற ----------------------------------------------------------------- கனம்பண்ணுவாயாக.

4. பிறனுக்கு -------------------------------------------------------------------------------------------------- சொல்லாதிருப்பாயாக.

5. பிறனுடைய மனைவியையும் ------------------------------------------------------------------------ யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.



======================
நியாயாதிபதிகள் & ரூத்
=====================
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகையில், இஸ்ரவேல் ஜனங்கள் அழுது அவ்விடத்திற்கு இந்த பெயரிட்டார்கள்.
    அ) கில்கால்
    ஆ) போகீம்
    இ) பெத்தேல்
    ஈ) எபிரோன்

2. எப்பிராயீம் மலையிலிருந்து இறங்கி புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்த இவர்களை வெட்டினார்கள்.
    அ) இஸ்ரவேலர்
    ஆ) அம்மோனியர்
    இ) மோவாபியர்
    ஈ) மீதியானியர்

3. இவை தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணி.
    அ) போர்வீரர்கள்
    ஆ) இஸ்ரவேலர்
    இ) இரும்பு ரதங்கள்
    ஈ) நட்சத்திரங்கள்

4. கர்த்தருடைய நாமம் என்ன என்று தூதனானவர் மனோவாவிடம் சொன்னது
    அ) அனுக்கிரகம்
    ஆ) அற்புதம்
    இ) அதிசயம்
    ஈ) ஆரோக்கியம்

5. கிபியாவின் குடிகளில் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்கும் கவண்கல் எறிவர்கள்
    அ) 500 பேர்
    ஆ) 600 பேர்
    இ) 700 பேர்
    ஈ) 800 பேர்

6. மோவாபிலே எலிமெலேக்கின் குடும்பம் இத்தனை வருஷம் வாசம்பண்ணினபின்பு அவர் இரண்டு குமாரரும் இறந்துபோனார்கள்
    அ) ஏழு
    ஆ) ஒன்பது
    இ) பத்து
    ஈ) பன்னிரெண்டு

7. இவன் பேரீச்சமரங்களின் பட்டணத்தைப் பிடித்தான்.
    அ) எபிரோன்
    ஆ) நகசோன்
    இ) சல்மோன்
    ஈ) பேரேஸ்

8. இவன் போவாசைப் பெற்றான்
    அ) எஸ்ரோன்
    ஆ) நகசோன்
    இ) சல்மோன்
    ஈ) பேரேஸ்

9. தொழுவங்களின் நடுவே இருந்து விட்டது யார்?
    அ) யூதா
    ஆ) பாராக்
    இ) சிசெரா
    ஈ) ரூபன்

10. தங்கள் உயிரையும் எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.
    அ) யூதா, சிமியோன்
    ஆ) ஆசேர், மனுஷர்
    இ) தெபோராள், யாகேல்
    ஈ) செபுலோன், நப்தலி

11. இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்தது இவர்கள் இரண்டுபேர்
    அ) தெபோராள், யாகேல்
    ஆ) நகோமி, ரூத்
    இ) ராகேல், லேயாள்
    ஈ) சாராள், ஆகார்

12. தன் சகோதரரை விட்டு ஓடிப்போனபின்பு, வீணரான மனுஷர் பராக்கிரமசாலியான இவனோடே கூடிக்கொண்டார்கள்.
    அ) கிதியோன்
    ஆ) யோதாம்
    இ) அபிமெலேக்கு
    ஈ) யெப்தா
    
13. கப்பல்களில் தங்கியிருந்தவர்கள்
    அ) ரூபன்
    ஆ) ஆசேர்
    இ) தாண்
    ஈ) நம்தலி

14. தேவர்களுக்கும் மனுஷருக்கும் புகழ் சேர்ப்பது
    அ) ஒலிவமரம்
    ஆ) அத்தி
    இ) கேதுரு
    ஈ) திராட்சை

15. கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் முந்தி போகவேண்டும் என்று தேவன் சொன்னார்?
    அ) சிமியோன்
    ஆ) பென்யமீன்
    இ) லேவி
    ஈ) யூதா



II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ----------------- பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

2. ---------------------- பெலிஸ்தியரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்.

3. புறஜாதிகளுடைய பட்டணமாகிய ஆரோசேத்திலே குடியிருந்த ராஜாவினுடைய சேனாபதிக்கு --------------- என்று பேர்.

4. -------------- பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி என்று பாடினார்கள்.

5. ---------------- துவக்கத்திலே, கிதியோனும் அவனோடிருந்தவர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்தார்கள்.

6. ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் சேனாபதியாக வைத்தபின்பு --------------- தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தரிடம் சொன்னான்.

7. சிமியோன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்திரம் உண்டாகும்படி இது --------------- செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்.

8. முந்தினதைப்பார்க்கிலும் உன் பிந்தின ----------- உத்தமமாயிருக்கிறது என்று போவாஸ் ரூத்திடம் சொன்னான்.

9. உன் வீடு தாமார் யூதாவுக்கு்ப் பெற்ற ----------- வீட்டைப்போல ஆகக்கடவது என்று போவாஸிடம் மூப்பர்கள் சொன்னார்கள்.

10. யோசுவா மரித்தபின் கர்த்தர் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்த முதல் பட்டணத்தின் பெயர் -----------------

11. ------------- இஸ்ரவேலரிடம், அவர்கள் தேவனின் சொல் கேளாதேபோனார்கள் என்று சொன்னதை நியாயாதிபதிகள் புஸ்தகத்தின் துவக்கத்திலே பார்க்கிறோம்

12. ---------------- உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்று எச்சரிப்பு இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.

13. கர்த்தரின் அன்பு கூருகிறவர்களோ வல்லமையோடே உதிக்கிற ----------- இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள்.

14. ----------- சீலோவிலே இருந்தது.

15. -----------வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தார்கள்.



III. யார் யாரிடம் கூறியது
1. உன் இருதயம் என்னோடே இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்.

2. இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்.

3. இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள்.

4. நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன்.

5. நாம் கானானியரோடே யுத்தம் பண்ண நீ என் சுதந்தரப் பங்கு வீதத்தில் என்னோடே வா. உன்னுடையதில் நானும் வருவேன்.

6. உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு.

7. உள்ளே வாரும். கூடாரத்தின் உள்ளே வாரும். பயப்படாதேயுங்கள்.

8. உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு ரட்சிப்பாய்.

9. உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம்.

10. என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.

11. உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக.

12. எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல் நிலத்தின் பங்கை அவள் விற்கப்போகிறாள்.

13. பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி கிலேயாத் மலைகளிலிருந்து ஓடிப்போகக்கடவன்.

14. நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே. ஒவ்வொருவனும் ராஜகுமாரனைப்போலிருந்தான்.

15. அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள். அவளையே கொள்ள வேண்டும்.

16. கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா?

17. அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்வேன்.

18. என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய்.

19. சமாதானத்தோடே போங்கள், உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு எற்றது.

20. நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்.


IV. நான் யார்? என்னைக் கண்டுபிடியுங்கள்
1. நான் என்படி செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார்.

2. இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும் கிராமங்கள் பாழாய்போயின.

3. உன்னோடே கூட வரலாம் என்ற நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் என்னோடே கூட வரக்கடவன்.

4. நான் உங்களை ஆளமாட்டேன், என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்.

5. நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன். கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்.



V. இடம் பெயர்களை சரியாக பொருத்துக
1. எபிரோன் - அ. ஓப்ரா

2. தெபீர் - ஆ. லூஸ்

3. பெத்தேல் - இ. கீரியாத் அர்பா

4. யெகோவா ஷாலோம் - ஈ. ஓர்மா

5. சேப்பாத் - கீரியாத் செப்பேர்



VI. நாங்கள் இருவர் – எங்களைக் கண்டுபிடியுங்கள்
1. நாங்கள் கணவன் – மனைவி, என் மனைவி தன் தகப்பனிடத்தில் நீர்பாய்ச்சலான நிலங்கலை கேட்டு பெற்றுக்கொண்டாள்.

2. எங்கள் இருவரோடு தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த அதிபதிகளுக்கும் ஜனங்களுக்கும் கர்த்தர் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார்.

3. நாங்கள் இருவரும் நன்றாய் தூங்கினவர்கள். ஒருவர் பால்குடித்து தூங்கினபோது கொல்லப்பட்டார். மற்றவர் நித்திரையில் சிறுமைப்படுத்தப்பட்டபோது, அவர் பலம் நீங்கிற்று.

4. நான் செய்வதைப் பார்த்து என்னைப்போல் செய்யுங்கள் என்று சொன்ன இரு நியாயாதிபதிகள் யார்.

5. நாங்கள் இருவரும் ஸ்திரீயினால் கொல்லப்பட்டவர்கள்.



VII. சரியான விடையளி
1. 3000 பேரைக் கொண்டு தோற்கடிக்கப்பட்டவர்கள்.

2. தெபீரின் மறுபெயர்

3. தெபோராளின் கோத்திரம்

4. இரண்டாவது நியாயாதிபதி

5. இஸ்ரவேலர் 20 ஆண்டுகள் இவர் கையின் கீழ் அடிமைகளாயிருந்தனர்.

6. மெசொப்பொத்தாமியாவின் ராஜா

7. கீலேயாத்தின் பலத்த பராக்கிரமசாலி

8. எப்பிராயீம் மனுஷரை அறிந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட வார்த்தை

9. ஏலோனின் கோத்திரம்

10. எலிமெலேக்கின் ஊர்


VII. பின் வருபவற்றை சரியாக பொருத்துக
1. அபிமெலேக்கு - அ. தன் தலைமயிர் போய்விட்டதும் பலத்தை இழந்தான்

2. தெபோராள் - ஆ. ஒரு பட்டணத்தை வென்று மனையாட்டியைப் பெற்றுக்கொண்டான்

3. சம்கார் - இ. ஒரு பெண்ணால் வீசப்பட்ட இயந்திரக்கல் இவன் தலையில் பட்டது

4. ஏகூத் - ஈ. பொருத்தனையின் நிமித்தம் தன் மகனை இழக்க வேண்டியிருந்தது

5. ஓத்னியேல் - உ. ஒரு தாற்றுக்கோளால் 600 பேரை முறியடித்தான்.

6. கிதியோன் - ஊ. இடது கை பழக்கமுடையவன்

7. யெப்தா - எ. கர்த்தரை தோலினால் சோதித்தான்

8. சிமியோன் - ஏ. குடியிருப்பு பேரீச்சமரத்தின் கீழ் இருந்தது

9. மனோவா - ஐ. தன் வீட்டிற்கு வந்த பெண்ணின் சுக வாழ்வை தேடினாள்

10. நகோமி - ஒ. பிள்ளை வளர்ப்புக்கு வேண்டிய வழி நடத்துதல் கிடைக்கும்படி ஜெபித்தார்.



VIII. மனன வசனம்
1. காற்றைக் கவனிக்கிறவன் ------------------------------------------------------------------------------------------------------------- செயல்களையும் நீ அறியாய்

2. வெள்ளிக்கயிறு கட்டிவிட்டு ---------------------------------------------------------------------------------------------------------------- வாலிபப்பிராயத்திலே நினை

3. உன் செய்கைகளைக் ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

4. கிருபையினாலும் சத்தியத்தினாலும் ---------------------------------------------------------------------------------------------------------------------- சமாதானமாகும்படி செய்வார்.

5. பேலியாளின் மகன் -------------------------------------------------------------------------------------- பிரித்துவிடுகிறான்.

6. மனுஷனுடைய வழிகளெல்லாம் -------------------------------------------------------------------------- நிறுத்துப்பார்க்கிறார்.

7. மனமேட்டிமையுள்ளவனெவனும் ------------------------------------------------------------------------------------ தண்டனைக்குத் தப்பான்.

8. அநியாயமாய் வந்த அதிக ------------------------------------------------------------------------------------------------------- உத்தமம்

9. பொன்னைச் சம்பாதிப்பதிலும் ------------------------------------------------------------------------------------------------------------------- மேன்மை

10. புத்தி தன் ---------------------------------------------------------------------------------------------------------------------------- மதியீனமே



IX. பொதுவான கேள்வி
1. இஸ்ரவேலர் கர்த்தர் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானானை முற்றிலுமாய் சுதந்தரிக்க அவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது? அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்ளை எவ்வாறு சந்தித்தார்கள்.





====================
நியாயாதிபதிகள் & ரூத்
===================
I. சுருக்கமான விடையளி
1. நியாயாதிபதிகளின் காலத்தில் ஏற்பட்ட தூதரின் சந்திப்புகளைப் பட்டியலிட்டு, அவை மனித வாழ்வில் தேவனின் நெருக்கமான ஈடுபாட்டை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை விளக்கவும்.

2. இஸ்ரவேல் ஜனத்தின் காரியங்கள் தங்களைச் சுற்றியிருந்த ஜனத்திலிருந்து எப்படி வேறுபட்டிருக்கவில்லை? அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடிச் செய்து வந்தான் என்று படிக்கிறோமே!

3. மீதியானியர் மீது வெற்றிகொண்ட வரையிலான கிதியோனின் ஆரம்ப வருடங்களுக்கும், அதன்பின் அவனது மரணம் வரையிலான பிந்தய வாழ்விற்கும் இருந்த வேறுபாடு என்ன?

4. யோசுவா மரித்து பின் வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும் இனி அவர்களுக்கு முன்பாக துரத்துவியாதிருப்பேன் என்று தேவன் சொன்னதற்கு என்ன காரணம் தந்தார்?

5. நகோமியின் நற்பண்புகள் எவற்றையெல்லாம், குடும்பங்களிலுள்ள வயது முதிர்ந்த பெண்கள் தங்கள் வாழ்வில் வளர்த்துக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும்.

6. போவாஸின் வாழ்வில் அவனது நீதியை சித்தரிக்கும் அம்சங்கள் யாவை?

7. இயேசுவின் மனித வம்சாவழியில் மோவாபிய பெண் ஒருவரை அவரது மூதாதையராக தேவன் சேர்ந்திருப்பது, அவரது இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்து நமக்கு என்ன வெளிப்படுத்துகிறது?


II. விரிவான விடையளி
1. தலைமைத்துவக் காரியத்தில், தெபோராளிடமிருந்து கற்றுக்கொண்ட குடும்பத்திலும் சபையிலும் பெண்கள் வெளிப்படுத்தவேண்டிய குணங்களோ
(அல்லது)
சிம்சோனின் வாழ்விலிருந்து ஆண்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையக்கூடியவைகளாக அறிகிற காரியங்களோ எவை?

2. குடும்பத்தின் எல்லா ஆண்களையும் இழந்து இஸ்ரவேல் தேசத்திற்கு வெறுமையாக திரும்பும் ஒருவரின் வாழ்வு மீண்டும் கட்டியெழுப்பப் படுவதை ரூத் புத்தகம் வர்ணிக்கிறது. தேவனின் கட்டளைகளை தனி வாழ்விலும் சமுதாயத்திலும் பின்பற்றுவது எப்படி இத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டு வருவது நகோமியின் வாழ்வில் பார்க்கிறோம்?


III. மனன வசனம்
1. தீமையை விட்டு விலகுவதே -------------------------------------------------------------------------------------------- ஆத்துமாவைக் காக்கிறான்.

2. அகங்காரிகளோடே ------------------------------------------------------------------------ மனத்தாழ்மையாயிருப்பதே நலம்.

3. இருதயத்தில் ஞானமுள்ளவன் -------------------------------------------------------------------------------- கல்வியைப் பெருகப்பண்ணும்

4. ஞானியின் இருதயம் ---------------------------------------------------------------------------------------------- கல்வியைக் கொடுக்கும்.

5. இனிய சொற்கள் ---------------------------------------------------------------------------- எறும்புகளுக்கு ஔஷதமுமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.