Type Here to Get Search Results !

தாவீது | King David | வாலிபர்களுக்கான அருளுரை | Youth Message | Jesus Sam

சந்தியா அருளுரை


சந்தியா என்றால் என்ன?
பகலும், இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரத்தைத் தான் நாம் சந்தியா என்று அழைக்கிறோம். மாலையில் சூரியன் மறையும்பொது பகலும், இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றது.

பகலும், இரவும் சந்திக்கின்ற இந்த மாலை நேரம் என்பது மிகவும் அமைதியான, அழகான ஒரு நேரமாக பார்க்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் மாலை நேரத்தில் தான் பிள்ளைகள் மரத்தடியில் விளையாடுவார்கள், பெரியவர்கள் மரத்தடியில் நாற்காலியின் அமர்ந்து மாலை நேரத்தை ரசிப்பார்கள். மாலை நேரம் என்பது மிகவும் அருமையான, அழகான, அனைவருக்கும் இன்பமான ஒரு நேரம் ஆகும்.

திருமறையிலுகடவுள் மனிதர்களோடு பேசும்படியாக மாலை நேரத்தைத் தான் தெரிவு செய்தார்.

1. லோத்து
ஆதியாகமம் 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
இங்கே லோத்துவை தேவ தூதர்கள் சாயங்கால நேரத்திலே சந்தித்தாக வருகிறார்கள்.

2. ஈசாக்கு
ஆதியாகமம் 24:63அ
ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து.....
ஈசாக்கும் சாயங்கால நேரத்தில் ஜெபிக்க சென்றார் என்று வாசிக்கிறோம்.

3. எலியா
1 இராஜாக்கள் 17:6
காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது.
காகங்கள் கொடுத்து வாழும் பறவைகள் அல்ல. திருடும் குணம் கொண்டது. அப்படிப்பட்ட காகங்கள், சாயங்கால நேரத்தில் எலியாவிற்கு வந்து உணவு கொடுத்தது. காகங்கள் எலியாவிற்கு உணவு கொடுக்க ஆண்டவர் ஏற்படுத்திய நேரம் சாயங்காலம். அதாவது பகலும் இரவு சந்திக்கின்ற நேரம்.

இந்த சந்தியா நேரத்தில், ஆண்டவர் நம்மையும் சந்திக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். அவருடைய வார்த்தையை கவனமாக தியானிக்கும்போது, அவர் நம்மோடு இடைபட்டு, நிச்சயம் நம்மோடு பேசுவார்.

தாவீது
திருமறையில் தாவீது என்ற ஒருவரைக் குறித்து பார்க்கிறோம்.
தாவீது யார்?
  • ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்.
  • அதிகபடியான பாடல்கள் எழுதியவர்
  • இஸ்ரவேலின் இரண்டாவது அரசர்.
தாவீதுக்குக் கிடைத்த இரண்டு விதமான ஆசீர்வாதங்களைக் குறித்து தியானிப்போம். அந்த ஆசீர்வாதங்கள் இன்று எனக்கும் கிடைத்திருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்ப்போம்.

1. உலகப்பிரகாரமான ஆசீர்வாதம்
2. ஆவிக்குறிய ஆசீர்வாதம்

1. உலகப் பிரகாரமான ஆசீர்வாதம்
தாவீது மிகப் பெரிய செல்வந்தர். தாவீதின் தகப்பன் பெயர் ஈசாய். ஈசாய்க்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். அவர்களில் தாவீது எட்டாவது மகன்.
ஈசாயின் தகப்பன் பெயர் ஓபேத். ஓபேத்தின் தகப்பன் பெயர் போவாஸ்.

போவாஸ் பெத்லகேமிலே மிகப்பெரிய பணக்காரர் என்று ரூத் புத்தகத்தில் வாசிக்கிறோம். போவாஸ் ரூத்தை திருமணம் செய்யும் முன்பு, பெரிய பணக்காரர். போவாஸ் ரூத்தை திருமணம் செய்யும்போது, நகோமியின் நிலத்தையும் வாங்குகிறார். எலிமெலேக்கு, மக்லோன், கிலியோன் என்பவர்களுடைய நிலத்தையும் போவாஸ் வாங்குகிறார். அப்படியானால், அவர் எவ்வளவு பெரிய ஐசுவரியவானாக இருந்திருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட போவாசின் பேரனை நாம் ஏனோ, ஏழையாக மாற்றிவிட்டோம்.

தாவீது ஆடு மேய்த்தல்
தாவீதிற்கு ஆடு மேய்ப்பது ஒரு தொழில் அல்ல. அதை அவர் பொழுதுபோக்காகவே செய்தார்.

தாய், தகப்பனுடைய கட்டளையின் படி அவர் ஆடு மேய்க்கவில்லை, தன் சொந்த விருப்பத்தின்படி, மிகவும் ஆசையாய் தாவீது ஆடுகளை மேய்த்து வந்தார்.

தாவீது எத்தனை ஆடுகளை மேய்த்தார்?
1 சாமுவேல் 17:29
அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின் மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்த என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்சம் ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்?.....
இந்த வசனத்தில் தாவீது கொஞ்சம் ஆடுகளை மேய்த்தார் என்றே வாசிக்கிறோம். அவர் அந்த ஆடுகளை மேய்க்கவில்லை என்றாலும், ஈசாக்கினிடத்திலே அதை மேய்ப்பதற்கு வேலையாட்கள் இருந்தார்கள்.

தாவீது மேய்த்தது சாதாரண ஆடுகள் அல்ல, அதி உயர் ரக (Hight Quality) ஆடுகள். இந்த வகையான ஆடுகள் முழு இஸ்ரவேல் தேசத்திலும் பெத்லகேமில் மாத்திரமே இருந்தது. அருகாமையில் உள்ள தெக்கோவா என்ற பகுதியில் சில ஆடுகள் இது போன்ற ஆடுகள் இருந்தன. ஆனால் அதிகபடியான ஆடுகள், பெத்லகேமில் மாத்திரமே இருந்தது.

தாவீது வளர்த்த ஆடு னொக்கோட் வகையைச் சார்ந்தது. ஒரு சாதாரண ஆட்டின் விலை 100 அல்லது 200 வைத்துக்கொண்டால். இந்த ஆட்டின் விலை 1000 ரூபாயாக இருக்கும். ஆனால், இந்த னொக்கோட் வகை ஆடுகள் ஒரு லட்சம் வரை இருக்கும்.

நானே நல்ல மேய்ப்பன் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். அவர் எந்த ஆடுகளின் மேய்ப்பன் என்றால், இந்த னொக்கோட் வகை ஆடுகளின் மேய்ப்பன். எனவே, அந்த னொக்கோட் வகை ஆடுகள் இருக்கின்ற அந்த பெத்லகேம் என்ற ஊரில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார்.

பெத்லகேம் என்பதன் அர்த்தம் அப்பத்தின் வீடு. பெத்லகேம் என்பது உண்மையான் பெயர் அல்ல. எப்பிராத்தா என்பதுதான் உண்மையான் பெயர். எப்பிராத்தாவில் அதி உயர் ரக அப்பம் கிடைப்பதால், அதை அப்பத்தின் வீடு என்று அழைப்பார்கள். எனவே தான், அதற்கு பெத்லகேம் என்ற பட்டப்பெயர் வந்தது.

இயேசு கிறிஸ்து ஜீவ அப்பமாக வந்தபடியினால், அதி உயர் ரக அப்பம் விலையக்கூடிய பெத்லகேமிலே பிறந்தார்.

தாவீதின் சகோதரர்கள்:
தாவீதின் மூன்று சகோதரர்கள் சவுலின் இராணுவத்தில் பணிசெய்துகொண்டிருந்தார்கள் என்று திருமறையில் படிக்கிறோம். இவர்கள் அரசரின் கட்டளைப்படி அல்ல, தன்னார்வமாக இராணுவத்தில் பணிபுரிய தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்.

உலகத்தில் எந்த ஒரு இராணுவ வீரனுக்கும், அவர்கள் குடும்பத்தினர் அவர் பணித்தளத்திற்கு சென்று, உணவு கொடுக்க முடியாது. ஆனால் தாவீது இராணுவத்தில் பணிபுரிந்த தன் சகோதரர்களுக்கு உணவு கொண்டு செல்கிறார். அப்படியானால், தாவீதின் குடும்பம் எந்த அளவிற்கு மக்களால் மதிக்கப்பட்ட குடும்பம் என்று நாம் யோசிக்க வேண்டும்.

தாவீது ஏதோ கட்டைப்பையில் தன் சகோதரர்களுக்கு உணவு கொண்டு செல்லவில்லை. இந்த காலத்து கணக்குப்படி பார்த்தால், சுமார் 6 வண்டிகள் நிறைய தாவீது உணவு கொண்டு சென்றிருக்கிறார். தாவீது தன் அண்ணன்மார்களுக்கு மாத்திரம் அல்ல, அவர்களோடு பணிசெய்யும் அனைருக்கும் உணவு கொண்டு சென்றார்.

1 சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீது: தான் கொண்டு வந்தவைகளை இறங்கி, ரஸ்துகுகளைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுமகாயிருக்கிறீர்களா என்று கேட்டான்


ஈசாய் தாவீதை நேசிக்கவில்லை
ஈசாய் தாவீதை நேசிக்கவில்லை என்று நாம் நினைக்கிறோம். எனவே தான், சாமுவேல் தீர்க்கதரிசி தன் வீட்டிற்கு வந்த போதும் கூட ஈசாக்கு தாவீதை அழைக்கவில்லை என்று நாம் யோசிக்கிறோம். அது உண்மை அல்ல.

தாவீதிற்கு இன்னும் முப்பது வயது ஆகவில்லை. இஸ்ரவேலர்கள் முப்பது வயது நிரம்பியவரையே ஒரு ஆண் மகனாக கருதினார்கள். எனவே தாவீதை ஈசாய் அழைக்கவில்லை.

தாவீது எவ்வளவு பெரிய ஐசுவரியவான். ஆண்டவர் அவருக்கு உலகப்பிரகாரமான எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைக் கொடுத்திருந்தார் என்று அறிந்து கொண்டோம். 

தாவீதை உலகப்பிரகாரமாக ஆசீர்வதித்த தேவன் நம்மையும் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

மருத்துவமனை
ஆண்டவர் என்னை ஆசீர்வதிக்கவில்லை, ஆண்டவர் எனக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். அங்கு ஒவ்வொரு வியாதியஸ்தரும் எவ்வளவு வேதனையோடு, கண்ணீரோடு, கவலையோடு இருக்கிறார்கள் என்று பாருங்கள். ஆண்டவர் அவர்களை விட நம்மை எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

சிறைச்சாலை
சிறைச்சாலைக்குச் சென்ற, அங்கே இருக்கின்ற ஒவ்வொரு கைதிகயோடும் பேசிப்பாருங்கள். வாழ்க்கையின் அருமை உங்களுக்கு பரியும்.

சிறைச்சாலையில் இருப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. நிரபராதிகள் எத்தனையோ பேர், பொய் குற்றம் சாட்டப்பட்டு, தங்கள் குடும்பங்களையும், பிள்ளைகளையும் எப்போது பார்ப்பேனோ, எனக்கு எப்போது விடுதலை கிடைக்குமோ என்று ஏங்குகிறவர்களை நாம் பார்த்தால், அவர்களைவிட ஆண்டவர் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று நமக்கு புரியும்.

உணவு
22 கோடி மக்கள் உணவு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 40 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கனக்கான மக்கள் தங்குவதற்கு வீடு வசதி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களோடு நம்முடைய வாழ்வை ஒப்பிடும்போது, ஆண்டவர் நம்மை எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார்.

ஆவிக்குறிய ஆசீர்வாதம்
சாமுவேல் ஈசாயின் வீட்டிற்கு வந்தபோது, தாவீதின் மற்ற சகோதரர்கள் தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள்.

தாவீதோ தன்னை பரிசுத்தம்பண்ணிக்கொள்ளவில்லை. அவன் முன்னபே பரிசுத்தமாக்கப்பட்டிருந்தான்.

1 சாமுவேல் 16:12
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்: சிவந்த மேனியும், அழகிய கண்களும், அவன் நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான். அப்பொழுது கர்த்தர்: இவன் தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார்.

ஆண்டவர் தாவீதை பரிசுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லவில்லை. அவன் வந்த உடனேயே, இவனை அபிஷேகம் பண்ணு என்று தான் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படியானால், ஆவிக்குறிய காரியத்திலேயும், தாவீது பரிசுத்தமுள்ளவராகவே இருந்தார்.

நம்மையும் ஆண்டவர் பரிசுதப்படுத்தி தான் இருக்கிறார். நம்மை ஆண்டவர் தாவீதைப்போல தெரிந்தெடுத்திருக்கிறார். குறிப்பாய் இந்த சந்தியா நேரத்திற்கு வந்திருக்கிற நம்மை ஆண்டவர் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.

நாம் வாழக்கூடிய இந்த பகுதியில் எத்தனையோ வாலிபர்கள் இருந்தாலும் ஆண்டவர் நம்மை அழைத்ததின் நிமித்தமாவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

தாவீது செய்த தவறு
சாத்தான் - பெலவீனத்தை அறிந்து தாக்குவான். 
1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

போருக்கு செல்ல வேண்டியவன் மேல் வீட்டில் உலாவிக்கொண்டிருக்கிறான். அங்கே நீராடிக்கொண்டிருந்த பத்சேபாளைப் பார்க்கிறான். பின்பு, பத்சேபாளோடு தவறு செய்கிறான்.

பத்சேபாள்
அதுல்லாம் குகை 400 வீரர்கள் (1சாமுவேல்22:1,2) தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகித்தோப்பேல். அகித்தோப்பேல் பின் நாட்களில் தாவீதின் அலோசனைக் காரராக மாறுகிறார். இவருடைய மகன் தான் எலியாம். எலியாமின் மகள் தான் பத்சேபாள்.

உரியா தாவீதுடைய படைகளில் மிகச் சிறந்த வீரன். தாவீதின் ஆலோசனைப்படி, அகித்தோப்பேல், பேத்தியை உரியாவிற்கு மனைவியாகக் கொடுக்கிறான். இந்த திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தவர் தாவீது.

இந்த தாவீது பத்சேபாளுடன் இணைந்து தவறு செய்கிறார். இவர் செய்த ஒரு தவறு, பல தவறுகளுக்கு வழி வகுத்தது.

1. பேரில் இருந்த உரியாவை அழைத்து அனுப்புகிறான்
2. உரியா - வீட்டிற்கு அனுப்புகிறான்
3. மதுவை - வீட்டிற்கு அனுப்புகிறான்
4. யோவாபுக்கு கடிதம் உரியா கொலை செய்யப்படுதல் (அம்மோனியர்கள் உரியாவை கொலை செய்கிறார்கள்)
5. பத்சேபளை மனந்தான்.

மத்தேயு 1:6
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.

வேதம் பத்சேபாளை தாவீதின் மனைவி என்று சொல்லவில்லை. உரியாவின் மனைவி என்று தான் சொல்லுகிறது.

கர்த்தருடைய கண்
2 நாளாகமம் 16:9
கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.

சங்கீதம் 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் பாதாளத்திலே படுக்கை போட்டாலும் நீர் அங்குயும் இருக்கிறீர்.

ஆண்டவர் - தாவீதின் சாட்சி
அப்போஸ்தலர் 13:22
பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்.

1. மன்னிப்பு கேட்டான் (2 சாமுவேல் 12)
நான் செய்த தவறு யாருக்கும் தெரியாது என்று நினைத்து தாவீது வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் நாத்தான் என்ற தீர்க்கதரிசி, அரன்மனைக்கு வருக்கிறார். தாவீதிடம் ஒரு கதை சொல்லுகிறார்.

ஒரு நகரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடத்தில் எராளமான ஆடு, மாடுகள் இருந்தது. அவன் வீட்டிற்கு அருகில் ஏழை ஒருவன் இருந்தான். அவனிடம் ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டுமே இருந்தது. அதை அவன் தன் மகளைப் போல, நேசித்து வந்தான். அந்த ஆடு அந்த ஏழையின் பாத்திரத்தில் உண்டு, ஏழையின் தண்ணீரைக் கடித்து வந்தது.

ஒரு நாள் செல்வந்தனின் வீட்டிற்கு வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவனுக்கு உணவு சமைக்கும்படியா, இந்த செல்வந்தன், ஏழையின் ஆட்டை பிடித்து சமைத்துவிட்டான் என்று நாத்தான் கூறினார்.

தாவீது உக்கிர கோபம் கொண்டு, இப்படிப்பட்ட கொடுமையான செயலை செய்தது யார்? அவன் நிச்சயமாய் கொலை செய்யப்பட வேண்டும் என்றார். அதற்கு நாத்தான், நீயே அந்த மனுஷன் என்று சொல்லுகிறார்?

இப்பொழுது தாவீது என்ன செய்திருப்பார்?
தாவீது இஸ்ரவேலின் அரசன். அவரை எதிர்த்து யாரும் பேச முடியாது. தாவீது நினைத்திருந்தால், தன் தவறை மறைப்பதற்காக நாத்தான்வேலை அங்கேயே கொலை செய்திருக்க முடியும். ஆனால் தாவீது அப்படிச் செய்யவில்லை. தன் தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்கிறார். மனம் கசந்து அழுகிறார். தன் பாவம் மன்னிக்கப்படும்படியாக மன்றாடி சங்கீதம் 51-ஐ தாவீது எழுதுகிறார்.

நாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும், அந்த தவறை மறைப்பதற்கான வழியைத் தேடாமல், கடவுளிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டால், நம்முடைய பாவம் எவ்வளவு கொடிய பாவமாக இருந்தாலும், கடவுள் நம்மை மன்னித்து, நம்மை பரிசுத்தப்படுத்த, தூய்மைப்படுத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.


2. தாழ்மை
1 சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்மை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்.

சவுல் - 18 முறை கொலை செய்ய பார்த்தார் தாவீது பொறுமையாக இருந்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.