தலைப்பு: அழைப்பில் நிலைத்திருங்கள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்பதில் மிகவும் மகிழ்சியடைகிறேன். அழைப்பில் நிலைத்திருங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில், அழைப்பில் நிலைத்திருந்தவர்களைப் பற்றியும் அழைப்பில் நிலைத்திறாதவர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
அழைப்பு என்றால் என்ன?
நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஒரு நோக்கத்திற்காக
படைத்திருக்கிறார். அதை நாம் உணர்ந்தவர்களாக
செயல்பட வேண்டும். அழைப்பில் நாம் உண்மையுள்ளவர்களாக
இருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
விதமான அழைப்பு இருந்தாலும், நம்மை அனைவருக்குமான ஒரே அழைப்பு என்னவென்றால், கிறிஸ்தவர்களாக
அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் கிறிஸ்துவுக்காக சாட்சியாய் வாழ வேண்டும்.
இந்த உலகத்தில் எத்தனையோ கோடி ஜனங்கள் இருந்தாலும் ஆண்டவர் நம்மையே முன்குறித்து அழைத்திருக்கிறார். அவருடைய பிள்ளையாய் நம்மை மாற்றியிருக்கிறார். அந்த அழைப்பில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.
1 கொரிந்தியர் 7:24
சகோதரரே அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்.
சத்துருவாகிய பிசாசானவன் நாம் அழைப்பை விட்டு
வழி மாறி நடக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ சோதனைகளை தருவான். அவைகளிலிருந்து நாம் விலகி, அழைப்பில் நிலைத்திருக்கிறவர்களாக
வாழ வேண்டும்.
அழைப்பில்
நிலைத்திறாதவர்கள்:
1. சிம்சோன்:
சிம்சோனை ஆண்டவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக அழைத்தார். ஆனால் சிம்சோன் தன் அழைப்பை உணராதவனாக கண்களின் இச்சையில் விழுந்தான்.
சிம்சோனின் பலம்:
தனி நபராக இருந்து சிங்கத்தின் வாயை இரண்டாக
கிழித்தவர் சிம்சோன். (நியாயாதிபதிகள் 14:6)
முந்நூறு நரிகளைப் பிடித்து, வாலோடு வாழ்
சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒரு பந்தத்தை வைத்து கட்டிய மாவீரன் சிம்சோன்.
(நியாயாதிபதிகள் 15:4)
கழுதையின் பச்சைத் தாடை எழும்பைக் கொண்டு
ஆயிரம் பேரை கொன்றுபோட்ட ஒரு வீரன். (நியாயாதிபதிகள் 15:15)
காசா பட்டணத்து கதவைத் தாழ்ப்பாளோடு பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து சுமந்து சென்ற ஒரு வீரன். (நியாயாதிபதிக்ள 16:2,3)
இப்படிப்பட்ட ஒரு மாவீரனை ஆண்டவர் இஸ்ரவேலின்
நியாயாதிபதியாக ஏற்படுத்தினார். சிம்சோன் தன்
அழைப்பை உணராதவனாக, கண்களின் இச்சையினால் வேசியைத் தேடிச் சென்றான்.
நியாயாதிபதிகள் 16:1
பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு,
அவளிடத்தில் போனான்.
சிம்சோனை போன்று அநேக கிறிஸ்தவர்கள் கண்களின்
இச்சைக்குள்ளாக விழுந்து கிடக்கிறார்கள். சாத்தான்
வாலிப ஆண்/பெண் பிள்ளைகளிடம் இச்சை என்ற ஆசையை தூண்டி பாவத்தில் விழச்செய்கிறான்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இச்சையை
சாத்தான் கொடுத்து, நம்மை அழைப்பிலிருந்து பின்வாங்க வைக்கிறான். மண்ணின் மீது ஆசை, பொன்னின் மீது ஆசை, பெண்ணின்
மீது அசை, பொருளின் மீது ஆசை இப்படி எதாவது ஒரு ஆசையைக் காட்டி நம்மை இச்சை என்ற வலைக்குள்
விழ வைக்கிறான் சாத்தான்.
நாம் பிசாசின் தந்திரங்களை உணர்ந்தவர்களாக
விழிப்புடன் வாழ வேண்டும்.
சிம்சோனின் முடிவு:
சிம்சோன் கண்களின் இச்சையில் விழுந்ததால்,
கண்கள் இரண்டும் பிடுங்கப்பட்டவனாக பெலிஸ்தியர்களோடு மரித்துப்போனான்.
நியாயாதிபதிகள் 16:21
பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களை பிடுங்கி,…
நியாயாதிபதிகள் 16:30
என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச்
சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள் மேலும் எல்லா ஜனங்கள் மேலும் விழந்தது. இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்
பார்க்கிலும், இவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
சிம்சோனைப்போன்று அழைப்பை மறந்து, கண்களின்
இச்சைக்குள்ளாக நாம் விழுந்துகிடப்போம் என்றால், நம்முடைய முடிவும் சிம்சோனைப்போன்றதே.
அழைப்பை உணர்ந்தவர்களாக, அழைத்தவரின் வார்த்தைக்கு
கீழ்ப்படிந்து நடப்போம்.
2. சவுல் ராஜா:
சவுலை ஆண்டவர் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக
அழைத்தார். அழைப்பை அற்ப்பமாக எண்ணிய சவுல்,
அழைத்த ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய தவறினான்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானுக்கு
வரும் வழியில் இஸ்ரவேலர்களை அமலேக்கியர்கள் தடுத்தார்கள். எனவே, ஆண்டவர் அமலேக்கில் உள்ள அனைவரையும் கொலை
செய்யும்படி சவுலுக்கு கட்டளையிட்டார்.
1 சாமுவேல் 15:3
இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான
எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும்,
பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும்
கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அமலேக்கில் உள்ள மனிதர்கள், மிருகஜீவன்கள்
எல்லோரையும் அழிக்கும்படி ஆண்டவர் கட்டளையிட்டார். ஆனால் சவுல் ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவனாக
அமலேக்கின் ராஜாவையும், முதல் மற்றும் இரண்டாந்தரமான கால்கடைகளையும் அழிக்காமல் உயிரோடே
வைத்தான். சில மனிர்களையும் உயிரோடே வைத்தான்.
1 சாமுவேல் 15:9
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும்,
இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல்
தப்பவைத்து, அற்பமானவைகளும், உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
சவுல் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால்
ஆண்டவர் அவனுடைய ராஜ்யபாரத்தை அழித்துப்போட்டார்.
சவுலுக்கு பின் சவுலின் மகன் இஸ்ரவேலின் ராஜாவாக ஏற்படுத்தப்படவில்லை. தாவீது என்னும் ஈசாயின் மகனை ஆண்டவர் இஸ்ரவேலின்
ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
சவுல் பெலிஸ்தரோடு போர் புரிகையில் தோற்கடிக்கப்பட்டார். எனவே, சவுல் தற்கொலை செய்யத கொள்ள முயற்சித்து,
ஈட்டியை தரையில் ஊன்றி, அதின் மேல் படுத்தார்.
ஆனாலும் அவர் உயிர் அவரை விட்டு பிரியவில்லை.
2 சாமுவேல் 1:7-10
அப்பொழுது அமலேக்கியன் ஒருவன் அந்த வழியே வருகிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டபோது, அவன் நான் அமலேக்கியன் என்று சொன்னான். அப்பொழுது சவுல் என் உயிர் முழுவதும் பிரியாததால் நீ வந்து என்னைக் குத்திப்போடு என்றான். இப்படியாக அந்த அமலேக்கியனால் சவுல் கொலை செய்யப்பட்டான்.
அமலேக்கியர்களை கர்த்தர் அழிக்கச் சொன்னபோது, சவுல் கீழ்ப்படியாமல் அவர்களை உயிரோடே வைத்ததால், அந்த அமலேக்கியனாலேயே கொலை செய்யப்பட்டார்.
கற்பனை கதை:
ஒரு மனிதன் கடவுளே என்னால் புகையை ஊதாமல்
இருக்க முடியவில்லை, தயவு செய்து என்னை மன்னித்து பரலோக ராஜ்யத்தில் ஏற்றுக்கொள்ளும்
என்று கெஞ்சினான். ஆண்டவரும் அவன் மரித்ததும்
பரலோக ராஜ்யத்திற்கு எடுத்துக்கொண்டார். பரலோக
ராஜ்யத்திற்கு சென்ற அவன், தன் பையில் ஒரு பீடி இருப்பதை பார்த்தான். இதை எப்படியாவது புகைக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்க
வந்தது. உடனே நெருப்பை தேடி பரலோகம் முழுவதும்
அழைந்தான். தூரத்தில் நெருப்பு எரிவதை பார்த்தான். எப்படியாவது நெருப்பில் பீடியை பற்றவைக்க வேண்டும்
என்று நெருப்பண்டை ஓடினான். அந்த நெருப்பு
நரகம் என்பது அவனுக்கு தெரியாதிருந்தது. பீடியை
பற்றவைப்பதற்காக நெருப்பண்டையில் பீடியை காண்பித்தான். சரியாக பற்றவைக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கீழே இரங்கி பற்றவைக்க ஆசைப்பட்டான். அப்பொழுதும் நெருப்பு இவன் கைக்கு எட்டவில்லை. இன்னும் கொஞ்சம் கீழு இரங்கி பீடியில் நெருப்பை
பற்றவைக்க ஆசைப்பட்டான். அக்கினி கடலுக்குள்
விழுந்தான்.
நம்முடைய பாவங்களே அவர் நமக்கு செவிகொடாதபடிக்கு
அவருடைய முகத்தை நமக்கு மறைக்கிறது என்ற ஏசாயா 59:2-ல் வாசிக்கிறோம். பாவத்தை உணர்ந்தவர்களாக மனம்திரும்பி, அழைப்பில்
நிலைத்திருக்கும்போதே நாம் பரலோகராஜ்யத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
நாமும் கூட ஆண்டவருடைய கட்டளைகள் அனைத்திற்கும்
கீழ்ப்படிவோம். நாம் கீழ்ப்படியாமல் விட்ட
அந்த ஒரு தவறு நம்மை பாதாளத்திற்கு நேரே அழைத்துச்செல்லும்.
சவுல் ராஜா மிகவும் சிறப்பாய் ஆட்சி செய்தார்,
அவரிடம் காணப்பட்ட அந்த கீழ்ப்படியாமை என்ற குணத்தினால் ராஜ்யபாரத்தை இழந்தார். சவுல் ராஜாவின் கீழ்ப்படியாமையினால் அவர் நிச்சயம்
பரலோகம் சென்றிருக்க முடியாது.
நாம் எந்த இடத்தில் ஆண்டவரை விட்டு பின்வாங்கியிருக்கிறோம்
என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பின்மாற்றத்திலிருந்து
நாம் மனம்திரும்பி, அழைத்தவரின் பின்செல்லவேண்டும்.
அழைப்பில் நிலைத்திருந்தவர்கள்:
1. ஆபிரகாம்:
ஆதியாகமம் 12:4அ
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்.
பரிசுத்த பைபிள்
ஆதியாகமம் 12:4
ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, ஆரானை விட்டுப் போனான்.
கர்த்தர் ஆபிரகாமை எழுபத்து ஐந்து வயதில்
அழைத்தார். உன் சொந்த தேசத்தை விட்டு புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு
போ என்று கட்டளையிட்டார். நான் உன்னை பெரிய
ஜாதியாக்குவேன் என்ற ஆண்டவர் வாக்குப்பண்ணினார்.
ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவராக,
அழைப்பை உணர்ந்தவராக, ஆபிரகாம் தன் சொந்த தேசத்தையும், சொந்த இனத்தையும் விட்டு ஆண்டவர்
தனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு புறப்பட்டார்.
உன் சொந்த தேசத்தை விட்டு நீ வந்தால், உன்னை
பெரிய ஜாதியாக்குவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
ஆபிராம் புறப்பட்டு இருபத்து ஐந்து ஆண்டுகள் சென்ற பின்பே ஆண்டவர் ஒரு குமாரனைக்
கொடுத்தார்.
இந்த இருபத்து ஐந்து ஆண்டுகளும் ஆபிராம்
மிகவும் பொருமையோடு காத்திருந்தார். அழைப்பில்
நிழைத்திருந்தார். இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன்,
உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று சொன்னவர், என்னை மறந்துவிட்டார், எனக்கு குமாரனை
கொடுக்க வில்லை என்று மீண்டும் தன் சொந்த தேசத்திற்கு திரும்பி செல்லவில்லை.
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் நிச்சயம்
என் தேவையை சந்திப்பார், என்னை பெரிய ஜாதியாக்குவார் என்று விசுவாசித்து அழைப்பில்
கடைசிவரை நிலைத்திருந்தார்.
நாமும் கூட அழைப்பில் நிலைத்திருக்கும்போது,
அழைப்பில் நிலைத்திருந்த ஆபிரகாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
2. மோசே:
யாத்திராகமம் 3:4
முட்செடியின்
நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை
ஆண்டவர் கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும்படியாக மோசே என்ற தலைவனை ஆண்டவர் அழைத்தார்.
அழைப்பை உணர்ந்த மோசே கடைசிவரை உண்மையோடு
இருந்து அழைப்பை நிறைவேற்றினார். எத்தனையோ
சோர்வுகள், பெலவீனங்கள், கவலைகள், எதிர்ப்புகள் வந்தபோதும் மோசே தன் அழைப்பில் நிலைத்திருந்தார்.
மோசேயின் முடிவு:
உபாகமம் 34:7
மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான். அவன் கண் இருளடையவுமில்லை. அவன் பெலன் குறையவுமில்லை.
மோசே தன் அழைப்பில் நிலைத்திருந்ததால், தீர்க்க ஆயுசையும், நல்ல சரீர சுகத்தையும் பெற்றிருந்தார். மோசே மரிக்கும்போது அவன் கண் இருளடையவுமில்லை. அவன் பெலன் குறையவுமில்லை.
நாமும் ஆண்டவர் நம்மை அழைத்த நோக்கத்தில்
நிலைத்திருக்கும்போது, மோசே பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தை பெற்றக்கொள்ள முடியும்.
3. பவுலாக மாறிய சவுல்:
அப்போஸ்தலர் 9:15
அதற்கு கர்த்தர் நீ போ: அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும்
இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேலர்களுக்காக
மாத்திரமே மரித்தார். அவர்களுடைய பாவங்களை
மட்டுமே மன்னிப்பார் என்று அப்போஸ்தலர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
இஸ்ரவேலர்கள் மட்டும் பரலோகத்திற்கு பாத்திரவான்கள் அல்ல, புறஜாதிகளும் பரலோகத்திற்கு வரவேண்டும். அவர்களுக்காகவுமே நான் மரித்தேன், அவர்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும், அவர்களும் மீட்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஆண்டவர் பவுலை அழைத்தார்.
கடைசி அப்போஸ்தலனாகிய பவுல் தன் வாழ்நாள்
முடியும் மட்டும் ஆண்டவருடைய அழைப்பில் நிலைத்திருந்து, ஆண்டவர் தனக்கு கொடுத்த ஊழியத்தை
சரியாய், நேர்த்தியாய் செய்தார்.
கலாத்தியர் 2:20
இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 4:6,7
6. நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
7. இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே
அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல,
அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
பவுல் தன்னுடைய ஊழியத்தை சிறப்பாய் செய்ததால்,
நல்ல போராட்டத்தைப் போராடினேன் என்று மிகவும் தைரியமாய் சொல்லுகிறார். நான் மரிக்கும்போது நிச்சயம் பரலோகம் செல்வேன்,
எனக்காக நீதியின் கிரீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது என்று சொல்லுகிறார்.
பவுல் சொன்னது போல நல்லபோராட்டத்தைப் போராடினேன்
என்று நம்மால் சொல்ல முடியுமா? நம்முடைய வாழ்க்கை
அப்படிப்பட்டதாக இருக்கின்றதா? சற்று நம்மை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
அழைப்பு:
அழைப்பில் நிலைத்திருந்தவர்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தைப்
பற்றியும், அழைப்பில் நிலைத்திறாதவர்கள் அடைந்த ஆக்கினையைப் பற்றியும் அறிந்துகொண்டோம்.
நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் கிறிஸ்தவர்களாக
அழைத்திருக்கிறார். கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக
அழைக்கப்பட்ட நான் அந்த அழைப்பில் நிலைத்திருக்கிறேனா? கிறிஸ்துவுக்காக சாட்சியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ? என்னைக் காண்கிறவர்கள்
என் மூலமாக கிறிஸ்துவை கண்டுகொள்கிறார்களா?
உலகில் எத்தனை கோடி ஜனங்கள் வாழ்ந்தாலும்,
சிலரை மாத்திரமே ஆண்டவர் கிறிஸ்தவர்களாக அழைத்திருக்கிறார். அந்த கிறிஸ்துவின் அழைப்பை பெற்ற நான் அவருக்காக
சாட்சியாய் வாழ்கிறேனா?
அழைப்பை உணராதவர்களாக உலகத்தின் மீது ஆசை
வைத்தவர்களாக, இன்னும் பாவ வாழ்க்கையில் விழுந்து கிடப்போனால் இந்த நாளில் நம்மை பரிசுத்தப்படுத்திக்
கொள்வோம்.
ஆண்டவர் நமக்காக தனது சொந்த இரத்தத்தையே
சிந்தை நம்மை மீட்டிருக்கிறார். அவருடைய அழைப்பில்
நாம் நிலைத்திருந்து சாட்சியாய் வாழும்போது, இம்மையில் பரலோக ராஜ்யத்தையும், மறுமையில்
நித்திய வாழ்க்கையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.