Type Here to Get Search Results !

06 Matthew quiz | மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள் | Jesus Sam

===============
MATTHEW - 6 (Q & A) Question & Answer
===============
மத்தேயு - 6 கேள்வி - பதில்கள்
===============

01. ஆலயங்களிலும், வீதிகளிலும் தர்மம் செய்தது?

A) பரிசேயர்

B) மாயக்காரர்

C) அஞ்ஞானிகள்

Answer: B) மாயக்காரர்

     (மத்தேயு 6: 2)

 

02. எதை வலது கை செய்தால் இடது கை அறியாதிருக்க வேண்டும்?

A) தர்மம்

B) நியாயம்

C) காணிக்கை

Answer: A) தர்மம்

     (மத்தேயு 6: 3)

 

 

03. ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும், சந்திகளிலும் ஜெபிக்க விரும்பியது?

A) மாயக்காரர்

B) வேதபாரகர்

C) அஞ்ஞானிகள்

Answer: A) மாயக்காரர்

     (மத்தேயு 6: 5)

 


04. ஜெபத்திலே வீண்  வார்த்தைகளை அலப்புவது?

A) சதுசேயர்

B) மாயக்காரர்

C) அஞ்ஞானிகள்

Answer: C) அஞ்ஞானிகள்

     (மத்தேயு 6: 7)

 

05. எது பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்?

A) பிதாவின் தர்மம்

B) பிதாவின் சித்தம்

C) பிதாவின் நியாயம்

Answer: B) பிதாவின் சித்தம்

     (மத்தேயு 6: 10)

 




06. உபவாசத்தின் போது முகவாடலாயிருப்பது யார்?

A) ஏரோதியர்

B) மாயக்காரர்

C) அஞ்ஞானிகள்

Answer: B) மாயக்காரர்

     (மத்தேயு 6: 16)

 

 

07. உபவாசத்தின் போது எங்கு எண்ணைய் பூச வேண்டும்?

A) தலை

B) கை

C) கால்

Answer: A) தலை

     (மத்தேயு 6: 17)

 

08. உபவாசத்தின் போது எதைக் கழுவ வேண்டும்?

A) முகம்

B) கை

C) கால்

Answer: A) முகம்

     (மத்தேயு 6: 17)

 

09. பூமியிலுள்ள பொக்கிஷங்களை எது கெடுக்கும்?

A) புழு, பூச்சி

B) பூச்சி, துரு

C) பூச்சி, எரும்பு

Answer: B) பூச்சி, துரு

     (மத்தேயு 6: 19)

 

10. பொக்கிஷங்களை எங்கு சேர்த்து வைக்க வேண்டும்?

A) வீடு

B) பூமி

C) பரலோகம்

Answer: C) பரலோகம்

     (மத்தேயு 6: 20)


11) பொக்கிஷம் இருக்கும் இடத்தில் எது இருக்கும்?

A) பெறுமை

B) இருதயம்

C) நினைவுகள்

Answer: B) இருதயம்

     (மத்தேயு 6: 21)

 


12) நம்முடைய சரீரத்தின் விளக்கு எது?

A) கண்

B) காது

C) வாய்

Answer: A) கண்

     (மத்தேயு 6: 22)

 

13) உடையைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?

A) சரீரம்

B) ஜீவன்

C) ஆகாரம்

Answer: A) சரீரம்

     (மத்தேயு 6: 25)


14. கவலைப் படுவதால் எதைக் கூட்ட முடியாது?

A) கால் அளவு

B) சரீர அளவு

C) முகத்தின் அளவு

Answer: B) சரீர அளவு

     (மத்தேயு 6: 27)

 

15) எது உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை?

A) காட்டு புல்

B) காட்டு மிருகம்

C) காட்டு புஷ்பம்

Answer: C) காட்டு புஷ்பம்

     (மத்தேயு 6: 28)

 

16) இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது?

A) காட்டு புல்

B) காட்டு புஷ்பம்

C) காட்டு மிருகம்

Answer: A) காட்டு புல்

     (மத்தேயு 6: 30)



👇👇 உங்கள் பயிற்சிக்காக 👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.