Type Here to Get Search Results !

05 Matthew | மத்தேயு பைபிள் கேள்வி - பதில்கள் | Bible Quiz Question Answer in Tamil | Jesus Sam

===================
MATTHEW - 5 (Q & A)
===================
மத்தேயு ஐந்தாம் (5) அதிகராம்
கேள்வி - பதில்கள்
=================== 


1. "பாக்கியவான்கள்" என்ற பதம் எத்தனை முறை வருகிறது?

A) ஐந்து

B) ஏழு

C) ஒன்பது

Answer: C) ஒன்பது 

            (மத்தேயு 5: 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11)

 

2. நீங்கள் பூமிக்கு ________________ .

A) உப்பாயிருக்கிறீர்கள்

B) வெளிச்சமாயிருக்கிறீர்கள்

C) ஒளியாயிருக்கிறீர்கள்

Answer: A) உப்பாயிருக்கிறீர்கள்

     (மத்தேயு 5: 13)

 

3. நீங்கள் உலகத்திற்கு _______________ .

A) உப்பாயிருக்கிறீர்கள்

B) வெளிச்சமாயிருக்கிறீர்கள்

C) ஒளியாயிருக்கிறீர்கள்

Answer: B) வெளிச்சமாயிருக்கிறீர்கள்

     (மத்தேயு 5: 14)

 

4. நியாயப்பிரமாணம் என்பது எதைக் குறிக்கிறது?

A) ஐந்து ஆகமங்களைக் குறிக்கிறது

B) பழைய ஏற்பாட்டைக் குறிக்கிறது

C) தீர்க்கதரிசன புத்தகத்தைக் குறிக்கிறது

Answer:  A) ஐந்து ஆகமங்களைக் குறிக்கிறது

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

     (மத்தேயு 5: 17)

 

5. யாருடைய நீதியை விட நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?

A)  தேவபாரகர், பரிசேயர்

B) ஏரோதியர், நியாயசாஸ்திரிகள்

C) சதுசேயர், ஆசாரியர்

Answer: A) வேதபாரகர், பரிசேயர்

     (மத்தேயு 5: 20)



 

6. சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் _______________ .

A) எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்

B) ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

C) நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

Answer: C) நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

     (மத்தேயு 5: 22)

 

7. சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் _______________.

A) எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்

B) ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

C) நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

Answer: B) ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

     (மத்தேயு 5: 22)

 

8. மூடனென்று சொல்லுகிறவன் _______________ .

A) எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்

B) ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

C) நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்

Answer: A) எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்

     (மத்தேயு 5: 22)


 


9. "நரகம்" இதன் கிரேக்க பதம்?

A) கேபேர்

B) கெகன்னா

C) சீனகாக்

Answer: B) கெகன்னா

     (மத்தேயு 5: 22)

 

10. இடறலுண்டாக்கினால் பிடுங்கி எறிந்துபோட வேண்டியது எது?

A) வலது கை

B) வலது கண்

C) வலது காது

Answer: B) வலது கண்

     (மத்தேயு 5: 29)

 

11. இடறலுண்டாக்கினால் தரித்து எரிந்து போட வேண்டடியது எது?

A) வலது கை

B) வலது கண்

C) வலது காது

Answer: A) வலது கை

     (மத்தேயு 5: 30)

 

12. வானம் ______________ .

A) தேவனுடைய பாதபடி

B) தேவனுடைய சிங்காசனம்

C) மகா ராஜாவின் நகரம்

Answer: B) தேவனுடைய சிங்காசனம்

     (மத்தேயு 5: 34)

 

13. பூமி _______________ .

A) தேவனுடைய பாதபடி

B) தேவனுடைய சிங்காசனம்

C) மகா ராஜாவின் நகரம்

Answer:  A) தேவனுடைய பாதம்

     (மத்தேயு 5: 35)

 

14. எருசலேம் _______________ .

A) தேவனுடைய பாதபடி

B) தேவனுடைய சிங்காசனம்

C) மகா ராஜாவின் நகரம்

Answer: C) மகா ராஜாவின் நகரம்

     (மத்தேயு 5: 35)

 

15. "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

A) யாத்திராகமம் 19: 21

B) யாத்திராகமம் 21: 24

C) உபாகமம் 19: 21

Answer:  B) யாத்திராகமம் 21: 24, C) உபாகமம் 19: 21

            (மத்தேயு 5: 38)


16. யாரை சிநேகிக்க வேண்டும்?

A) சத்துருக்களை

B) பகைக்கிறவர்களை

C) சபிக்கிறவர்களை

Answer: A) சத்துருக்களை

     (மத்தேயு 5: 44)

 


17. யாரை ஆசீர்வதிக்க வேண்டும்?

A) சத்துருக்களை

B) நிந்திக்கிறவர்களை

C) சபிக்கிறவர்களை

Answer: C) சபிக்கிறவர்களை

     (மத்தேயு 5: 44)

 

18. யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?

A) சபிக்கிறவர்களுக்கு

B) துன்பப்படுத்துகிறவர்களுக்கு

C) பகைக்கிறவர்களுக்கு

Answer: C) பகைக்கிறவர்களுக்கு

     (மத்தேயு 5: 44)

 

19. யாருக்காக ஜெபம் பண்ண வேண்டும்?

A) சத்துருக்களுக்காக

B) நிந்திக்கிறவர்களுக்காக

C) துன்பப்படுத்துகிறவர்களுக்காக

Answer:  B) நிந்திக்கிறவர்களுக்காக, C) துன்பப்படுத்துகிறவர்களுக்காக

     (மத்தேயு 5: 44)

 

20. பிதாவானவர் யாருக்கு சூரியனை உதிக்கப்பண்ணுகிறார்?

A) தீயோர் மேலும், நல்லோர் மேலும்

B) நீதியுள்ளவர் மேலும், அநீதியுள்ளவர் மேலும்

C) பாவிகள் மேலும், நீதிமான்கள் மேலும்

Answer:  A) தீயோர் மேலும், நல்லோர் மேலும்

     (மத்தேயு 5: 45) 


21. பிதாவானவர் யாருக்கு மழையை பெய்யப்பண்ணுகிறார்?

A) தீயோர் மேலும், நல்லோர் மேலும்

B) நீதியுள்ளவர் மேலும், அநீதியுள்ளவர் மேலும்

C) பாவிகள் மேலும், நீதிமான்கள் மேலும்

Answer: B) நீதியுள்ளவர் மேலும், அநீதியுள்ளவர் மேலும்

     (மத்தேயு 5: 45)



👇👇 உங்கள் பயிற்சிக்காக 👇👇

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.