Type Here to Get Search Results !

MARK 6 | Bible quiz Question and answer Tamil | மாற்கு | வேதாகம கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
MARK CHAPTER - SIX (6)
Bible quiz Question and answer Tamil
=====================
மாற்கு அதிகாரம் - ஆறு (6)
வேதாகம கேள்வி பதில்கள்
==================
01. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் யார்?
A) இயேசு
B) அந்திரேயா
C) யோவான்
Answer: A) இயேசு
     (மாற்கு 6:3)
 
02. இயேசு சீஷர்களுக்கு அசுத்த ஆவியை துரத்தும் அதிகாரங்கொடுத்து எத்தனை எத்தனை பேராக அனுப்பினார்?
A) இரண்டு, இரண்டு
B) மூன்று, மூன்று
C) நான்கு, நான்கு
Answer: A) இரண்டு, இரண்டு
     (மாற்கு 6:7,11)
 
03. இயேசு சீஷர்களிடம் எதை எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்?
A) தடி
B) இரண்டு அங்கி
C) அப்பம்
Answer: A) தடி
     (மாற்கு 6:8)
 
04.  யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றது யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) சீஷர்கள்
Answer: A) ஏரோது
     (மாற்கு 6:14)
 
05. ஏரோதுவின் சகோதரன் பெயர் என்ன?
A) பிலாத்து
B) யோவான்
C) பிலிப்பு
Answer: C) பிலிப்பு
     (மாற்கு 6:17)
 
 
06. தன் சகோதரன் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டது யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: A) ஏரோது
     (மாற்கு 6:17)
 
07. யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவன் என்றது யார்?
A) ஏரோது
B) சீஷர்கள்
C) இயேசு
Answer: A) ஏரோது
     (மாற்கு 6:20)
 
08. பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் விருந்து பண்ணியது யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: A) ஏரோது
     (மாற்கு 6:21)
 
09. யோவான்ஸ்நானகனை அடக்கம் செய்தது யார்?
A) ஏரோது
B) யோவானின் சீஷர்கள்
C) இயேசுவின் சீஷர்கள்
Answer: B) யோவானின் சீஷர்கள்
     (மாற்கு 6:29)
 
10. சீஷர்கள் எத்தனை பணத்துக்கு அப்பங்கள் வாங்கி இவர்களுக்கு புசிக்கக் கொடுக்கக் கூடுமோ என்றார்கள்?
A) நூறு பணம்
B) இருநூறு பணம்
C) மூன்னூறு பணம்
Answer: B) இருநூறு பணம்
     (மாற்கு 6:37)
 

11. பசும் புல்லின் மேல் எத்தனை எத்தனை பேராக பந்தியிருந்தார்கள்?
A) முப்பது முப்பது பேராக
B) ஐம்பது ஐம்பது பேராக
C)நூறு நூறு பேராக
Answer: B) ஐம்பது ஐம்பது பேராக
     (மாற்கு 6:40)
 
12. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் எத்தனை கூடைகள் மீந்திருந்தது?
A) பதினொன்று
B) பனிரெண்டு
C) பதின்மூன்று
Answer: B) பனிரெண்டு
     (மாற்கு 6:43)
 
13. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: B) ஐயாயிரம் பேர்
     (மாற்கு 6:44)
 
14. இயேசு கடலில் நடந்த நேரம்?
A) மூன்றாம் ஜாமம்
B) நான்காம் ஜாமம்
C) ஏழாம் ஜாமம்
Answer: B) நான்காம் ஜாமம்
     (மாற்கு 6:48)
 
15. சீஷர்களின் இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினாலே எதைக் குறித்து உணராதிருந்தார்கள்?
A) பசி
B) அற்புதம்
C) அப்பம்
Answer: C) அப்பம்
     (மாற்கு 6:52)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.