Type Here to Get Search Results !

MARK 7 | மாற்கு பைபிள் கேள்வி பதில்கள் | Mark bible quiz question and answer in tamil | Jesus Sam

================

மாற்கு - அதிகாரம் 7
பைபிள் கேள்வி - பதில்கள்
================
MARK CHAPTER SEVEN (7)
BIBLE QUESTION AND ANSWER IN TAMIL
================

01. இயேசுவிடம் வினவும்படி பரிசேயரும் வேதபாரகரும் எங்கிருந்து வந்தார்கள்?
A) எருசலேம்
B) தேவாலயம்
C) கலிலேயா
Answer: A) எருசலேம்
     (மாற்கு 7: 1)
 
02. கை கழுவாத அசுத்த கைகளாலே சாப்பிட்டது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
     (மாற்கு 7: 2)
 
03. அடிக்கடி கைகழுவ வேண்டும் என்பது?
A) கட்டளை
B) பாரம்பரியம்
C) சட்டம்
Answer: B) பாரம்பரியம்
     (மாற்கு 7: 3)
 
04. யூதர்கள் கடைக்கு சென்று வந்து என்ன செய்வார்கள்?
A) கை கழுவுவர்
B) ஸ்நானம் பண்ணுவர்
C) கால்களை கழுவுவர்
Answer: B) ஸ்நானம் பண்ணுவர்
     (மாற்கு 7: 4)
 
05. உம்முடைய சீஷர்கள் ஏன் கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டது யார்?
A) சதுசேயர்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: B) வேதபாரகர், C) பரிசேயர்
     (மாற்கு 7: 5)
 

06. பாரம்பரியம் யாரால் உண்டானது?
A) மோசே
B) மனுஷன்
C) தேவன்
Answer: B) மனுஷன்
     (மாற்கு 7: 8)
 
07. தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றது யார்?
A) மோசே
B) பிரதான ஆசாரியர்
C) தேவன்
Answer: A) மோசே
     (மாற்கு 7: 10)
 
08. தகப்பன் தாய்க்கு உதவி செய்யாமலிருக்க செலுத்தும் காணிக்கையின் பெயர் என்ன?
A) கொர்பான்
B) கெர்பான்
C) கொர்பன்
Answer: A) கொர்பான்
     (மாற்கு 7: 11)
 
09. மனுஷனுடைய இருதயத்திலிருந்து தோன்றி மனுஷனை தீட்டுப்படுத்தும் செயல்கள் மொத்தம் எத்தனை?
A) பத்து
B) பதின்மூன்று
C) பதினைந்து
Answer: B) பதின்மூன்று
     (மாற்கு 7: 21, 22)
 
10. எந்த பட்டணத்திலிருந்த வீட்டில் இயேசு பிரவேசித்து அதை ஒருவரும் அறியாதிருக்க விரும்பினார்?
A) நாசரேத்
B) தீரு, சீதோன்
C) கலிலேயா
Answer: B) தீரு, சீதோன்
     (மாற்கு 7: 24)
 

11. இயேசுவின் பாதத்தில் விழுந்து  தன் மகளுக்கு பிடித்திருந்த பிசாசை துரத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்ட ஸ்திரீ எத்தேசத்தாள்?
A) தெக்கபோலி
B) சீரோபேனிக்கியா
C) பாலஸ்தீனம்
Answer: B) சீரோபேனிக்கியா
     (மாற்கு 7: 26)
 
12. இயேசு பிள்ளைகளின் அப்பத்தை எதற்கு போடுகிறது நல்லதல்ல என்றார்?
A) பன்றிகள்
B) நாய்க்குட்டி
C) ஆடு, மாடு
Answer: B) நாய்க்குட்டி
     (மாற்கு 7: 27)
 
13. இயேசு தீரு, சீதோனிலிருந்து கலிலேயாவிற்கு எதன் வழியாக சென்றார்?
A) கப்பர்நகூம்
B) சீரோபேனிக்கியா
C) தெக்கபோலி
Answer: C) தெக்கபோலி
     (மாற்கு 7: 31)
 
14. கொன்னைவாயுடையவன் ஒரு -------- ?
A) செவிடன்
B) குருடன்
C) சப்பாணி
Answer: A) செவிடன்
     (மாற்கு 7: 32)
 
15. எப்பத்தா என்பதன் அர்த்தம்?
A) திறக்கப்பட்டது
B) திறக்கப்படுவாயாக
C) திறக்கப்படும்
Answer: B) திறக்கப்படுவாயாக
     (மாற்கு 7: 34)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.