Type Here to Get Search Results !

MARK 8 | holy bible quiz question and answer in tamil | மாற்கு 8 கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

=================

MARK CHAPTER EIGHT (8)
BIBLE QUIZ QUESTION AND ANSWER
=================
மாற்கு எட்டாம் (8) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
=================

01. ஜனங்கள் எத்தனை நாளாய் சாப்பிடாததைக் கண்டு இயேசு பரிதபித்தார்?
A) இரண்டு
B) மூன்று
C) ஐந்து
Answer: B) மூன்று
     (மாற்கு 8:2)
 
02. ஜனங்கள் பந்தியிருந்த இடம் எது?
A) தரை
B) பசும்புல்
C) மலை
Answer: A) தரை
     (மாற்கு 8:6)
 
03. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகள் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பத்து
C) பனிரெண்டு
Answer: A) ஏழு
     (மாற்கு 8:8)
 
04. ஏழு அப்பம் சில சிறு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்டவர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: A) நாலாயிரம் பேர்
     (மாற்கு 8:9)
 
05. இயேசுவிடம் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை கேட்டது யார்?
A) சீஷர்கள்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
     (மாற்கு 8:11)

 

06. அப்பங்களை கொண்டு வர மறந்து போனது யார்?
A) பரிசேயர்
B) ஜனங்கள்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
     (மாற்கு 8:14)
 
07. படவில் ஏறி தல்மனூத்தாவுக்கு செல்லும் போது சீஷர்களிடம் எத்தனை அப்பங்கள் இருந்தது?
A) ஒன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: A) ஒன்று
     (மாற்கு 8:10,14)
 
08. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
A) ஏரோது
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
     (மாற்கு 8:15)
 
09. இயேசு குருடனுடைய கண்களில் உமிழ்ந்து பார்வை கிடைக்கச் செய்த இடம்?
A) செசரியா
B) தல்மனூத்தா
C) பெத்சாயிதா
Answer: C) பெத்சாயிதா
     (மாற்கு 8:22)
 
10. நடக்கிற மனுஷரை மரங்களைப் போல கண்டது யார்?
A) எரிகோ குருடன்
B) பெத்சாயிதா குருடன்
C)  பர்திமேயு குருடன் 
Answer: B) பெத்சாயிதா குருடன்
     (மாற்கு 8:24)
 


11. இயேசுவிடம் நீர் கிறிஸ்து என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பிலிப்பு
Answer: A) பேதுரு
     (மாற்கு 8:29)
 
12. மனுஷ குமாரன் எத்தனை நாளுக்கு பின்பு உயிர்த்தெழுவார்?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
Answer: A) மூன்று
     (மாற்கு 8:31)
 
13. இயேசுவை கடிந்து கொண்ட சீஷன் யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
     (மாற்கு 8:32)
 
14. தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளை சிந்தித்தது யார்?
A) பேதுரு
B) அந்திரேயா
C) மத்தேயு
Answer: A) பேதுரு
     (மாற்கு 8:33)
 
15. கிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிறவன் எதை எடுத்துக்கொண்டு பின்பற்றக்கடவன்?
A) பாடுகள்
B) வேதம்
C) சிலுவை
Answer: C) சிலுவை
     (மாற்கு 8:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.