Type Here to Get Search Results !

MARK 5 | Holy bible quiz question and answer in tamil | மாற்கு சுவிசேஷம் வினா விடைகள் தமிழில் | Jesus Sam

==================
MARK Chapter - Five (5)
bible Question & Answer
=========================
மாற்கு - ஐந்தாம் (5) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
=====================
01. கடலுக்கு அக்கரையிலுள்ள எந்த நாட்டிற்கு போனார்கள்?
Answer: கதரேனர்
    (மாற்கு 5:1)
    கதரேனர் நாடு யோர்தான் நதிக்கு கிழக்கேயும், கலிலேயா கடலுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

02. அசுத்த ஆவியுள்ள மனுஷன் சங்கிலிகளை "_______________".
Answer: முறித்துப் போட்டான்
    (மாற்கு 5:4)

03. அசுத்த ஆவியுள்ள மனுஷன் விலங்குகளை "_______________".
Answer: தகர்த்துப் போட்டான்
    (மாற்கு 5:4)

04. லேகியோன் என்பதன் அர்த்தம் என்ன?
Answer: ஓரினக் கூட்டாளிகள்
    (மாற்கு 5:9)
    லேகியோன் என்பது ரோமப் படையின் 6,000 போர் வீரர்களைக் கொண்ட பெரும் பிரிவாகும்.

05. கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மாண்டது எது? எத்தனை?
Answer: பன்றிகள்
    இரண்டாயிரம்
    (மாற்கு 5:13)
    பன்றிகள் அசுத்தமான விலங்கு என்று யூதர்கள் நம்பினர். கதரேனர் பன்றிகளை வளர்த்து வந்தனர்.

06. ”நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி” இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கர்த்தர் என்ற சொல்லின் கிரேக்க பதம்?
Answer: குரியோஸ்
    இதன் அர்த்தம் அதிகாரி அல்லது ஐயா
    மாற்கு 5:19
    இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.

07. இயேசு செய்த அற்புதத்தை அசுத்த ஆவியுள்ள மனுஷன் எங்கு பிரசித்தம் பண்ணினான்?
Answer: தெக்கப்போலி
    (மாற்கு 5:20)

08. ஜெப ஆலயத் தலைவன் பெயர் என்ன?
Answer: யவீரு
    (மாற்கு 5:22)

09. யவீரு என்பதன் அர்த்தம் என்ன?
Answer: அவர் ஒளிவீசுவார்
    (மாற்கு 5:22)

10. ஸ்திரீ எத்தனை வருடம் பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?
Answer: பன்னிரெண்டு வருஷம்
    (மாற்கு 5:25)



11. பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு யார்? யாரிடம் கூறியது?
Answer: இயேசு கிறிஸ்து யவீருவிடம் சொன்னது
    (மாற்கு 5:36)

12. யவீருவின் வீட்டிற்குள் சென்ற சீஷர்கள் யார்?
Answer: பேதுரு, யோவான், யாக்கோபு
    (மாற்கு 5:37)

13. யவீருவின் வீட்டில் இருந்தது யார்?
Answer: புலம்பல்காரர்கள்
    (மாற்கு 5:38)
    இறந்தவர்கள் வீட்டில் அழுது புலம்பும் புலம்பல்காரர்களை கூலிக்கு அமர்த்துவது யூதர்களின் மரபு.
    யூதர்கள் வழக்கப்படி ஒருவர் இறந்த அதே நாளில் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

14. தலீத்தாகூமி என்பதன் அர்த்தம் என்ன?
Answer: சிறு பெண்ணே எழுந்திரு
    (மாற்கு 5:41)
    இச்சொல் பாலஸ்தீனாவில் பேசப்பட்ட ஒரு அரமேயச் சொல்.

15. யவீருவின் மகள் வயது என்ன?
Answer: பன்னிரெண்டு
    (மாற்கு 5:42)

16. யவீருவின் மகளுக்கு இயேசு என்ன கொடுக்க சொன்னார்?
Answer: ஆகாரம்
    (மாற்கு 5:43)
    ஆவிகள்(பேய்) சாப்பிடாது என்பது யூதர்கள் நம்பிக்கை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.