Type Here to Get Search Results !

02 MATTHEW QUIZ | bible question and answer tamil | மத்தேயு பைபிள் வினா - விடைகள் | Jesus Sam

MATTHEW -2 (Q & A)
மத்தேயு இரண்டாம் (2) அதிகராம்
===================

கேள்வி - பதில்கள்

=============

01. "பெத்லகேம்" என்பதன் அர்த்தம்?

               அப்பத்தின் வீடு

     (மத்தேயு 2: 1)

 

02. பெத்லகேம் அமைந்துள்ள இடம்?

     கடல் மட்டத்திலிருந்து 850 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது

     (மத்தேயு 2: 1)

 

03. "சாஸ்திரிகள்" இதற்கு இணையான கிரேக்க வார்த்தை என்ன?

               மேஜாய்

    (மத்தேயு 2: 1)

04. "சாஸ்திரிகள்இதற்கு இணையான அரேபிய வார்த்தை என்ன?

               மக்காய் 

 (மத்தேயு 2: 1)


 

05. ஏரோது எந்த இனத்தை சேர்ந்தவன்?

              எதுமேயம்

     (மத்தேயு 2: 1)

 


06. கிழக்கில் இருந்து வந்த சாஸ்திரிகள் எத்தனை பேர்?

               ஏறக்குறைய 300

     (மத்தேயு 2: 1)

மத்தேயு 2: 3

    ஏரோதுராஜாவும் எருசலேம் நகரத்தாரும் கலங்க காரணம் அத்தைனை திரளான சாஸ்திரிகள் வந்திருந்தார்கள்


07. இயேசு கிறிஸ்துவை "யூதருக்கு ராஜா" என்று சொன்ன இருவர் யார்?

          சாஸ்திரிகள் (மத்தேயு 2: 2)

          பிலாத்து (மத்தேயு 27: 37)

 

08. "யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல.  என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

               மீகா 5: 2

 

09. சாஸ்திரிகள் கொண்டு வந்த ”பொன்” எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?

           ஆசியா 

     (மத்தேயு 2: 11)

          

10. சாஸ்திரிகள் கொண்டு வந்த ”தூபவர்க்கம்”  எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
            ஆப்ரிக்கா

     (மத்தேயு 2: 11)

          

11. சாஸ்திரிகள் கொண்டு வந்த ”வெள்ளைப்போளம்” எங்கிருந்து கொண்டுவரப்பட்டது?

                ரஷ்யா 

     (மத்தேயு 2: 11)




12. சாஸ்திரிகள் கொண்டுவந்த ”பொன்” எதைக் குறிக்கிறது?

        இயேசு கிறிஸ்து ராஜா என்பதை குறிக்கிறது.

     (மத்தேயு 2: 11)


13. சாஸ்திரிகள் கொண்டுவந்த ”தூபவர்க்கம்” எதைக் குறிக்கிறது?

     மணமுள்ள அவருடைய வாழ்க்கையை குறிக்கிறது.

     (மத்தேயு 2: 11)


14. சாஸ்திரிகள் கொண்டுவந்த ”வெள்ளைப்போளம்” எதைக் குறிக்கிறது?

      இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறிக்கிறது.

     (மத்தேயு 2: 11)

 

15. தேவனால் எச்சரிக்கப்பட்ட இருவர் யார்?

          சாஸ்திரிகள் (மத்தேயு 2: 12)

          யோசேப்பு (மத்தேயு 2: 22)

 

16. "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

               ஓசியா 11: 1

        (மத்தேயு 2: 12)


17. "புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாலிலே கேட்கப்பட்டது, ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதல8டயாதிருக்கிறாள்" இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?

               எரேமியா 31: 15

 

18. ஏரோது ராஜா மரணம் அடைந்த ஆண்டு?

               கி.பி. 4

     (மத்தேயு 2: 19)

 

19. ஏரோதுவின் மகன் பெயர்?

                அர்கெலாயு

     (மத்தேயு 2: 22)


20. இயேசு கிறிஸ்து நசரேயன் என்பதை எடுத்துரைக்கும் வசனம் என்ன?

               ஏசாயா 11: 1

               ஏசாயா 53: 2,3

     இயேசு கிறிஸ்து நாசரேத்தில் வாழ்ந்ததன் காரணமாகவும் அவர் நசரேயன் என்று அழைக்கப்பட்டார்.

     (மத்தேயு 2: 23)

 

21. யோசேப்பு எத்தனை முறை சொப்பனம் கண்டான்?

               நான்கு

          மரியாளை சேர்த்துக்கொள் (மத்தேயு 1: 20)

          எகிப்துக்கு போ (மத்தேயு 2: 13)

          எகிப்திலிருந்து வா (மத்தேயு 2: 19)

          நாசரேத்துக்கு போ (மத்தேயு 2: 22)

     இங்கு மூன்று முறை சொப்பனத்தில் கர்த்தருடைய தூதன் வருகிறார்ஒரு முறை தேவன் வருகிறார்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.