MATTHEW CHAPTER ONE (1)
மத்தேயு அதிகாரம் ஒன்று (1)
01. ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?
42
ஆபிரகாம் - தாவீது (14)
தாவீது - பாபிலோன் சிறையிருப்பு (14)
பாபிலோன் சிறையிருப்பு - இயேசு கிறிஸ்து (14)
(மத்தேயு 1: 17)
02. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் பெயர்கள் என்ன?
தாமார் (1: 3)
ரூத் (1: 5)
ராகாப் (1: 5)
உரியாவின் மனைவி (1: 6)
(இவர்கள் நாள்வரும் யூதப் பெண்மணிகள் அல்ல)
03. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இரட்டையர்களைப் பெற்ற பெண்மணி யார்?
தாமார்
(மத்தேயு 1: 3)
04. பத்சேபாள் என்ற பெயர் பழைய ஏற்பாட்டில் எத்தனை முறை வருகிறது?
12
05. இம்மானுவேல் என்பதன் அர்த்தம் என்ன?
தேவன் நம்மோடிருக்கிறார்
(மத்தேயு 1: 23)
06. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்ற பெண்கள் எந்த இனத்தவர்கள்?
தாமார் - கானானிய பெண்
ராகாப் - கானானிய பெண்
ரூத் - மோவாபிய பெண்
பத்சேபாள் - ஏத்திய பெண்
07. இஸ்ரவேலர் பாபிலோனில் சிறைப்பட்டிருந்த ஆண்டு எது?
கி.மு.586 - கி.மு.538
(மத்தேயு 1: 11)
08. கிறிஸ்து (அ) மேசியா என்பதன் அர்த்தம்?
அபிஷேகம் பண்ணப்பட்டவர்
(மத்தேயு 1: 17)
09. இயேசு என்பதன் அர்த்தம்?
இரட்சகர்
(மத்தேயு 1: 21)
10. மத்தேயு 1: 22,23 இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
ஏசாயா 7: 14
11. ஓபேத்தின் தாய் பெயர்?
அ) ரூத்
ஆ) தாமார்
இ) ராகாப்
(மத்தேயு 1: 5)
விடை: ரூத்
12. மனாசேயின் தகப்பன் பெயர்?
அ) ஆகாஸ்
ஆ) ஆமோன்
இ) எசேக்கியா
(மத்தேயு 1: 10)
விடை: எசேக்கியா
13. யோசேப்பின் தகப்பன் பெயர்?
அ) ஆகீம்
ஆ) யோவான்
இ) யாக்கோபு
(மத்தேயு 1: 16)
விடை: யாக்கோபு
14. யோசேப்பு ஒரு __________ .
அ) நீதிமான்
ஆ) உத்தமன்
இ) தேவனுக்கு பயந்தவன்
(மத்தேயு 1: 19)
விடை: நீதிமான்
15. யோசேப்பின் சொப்பணத்தில் பேசியது?
அ) கர்த்தர்
ஆ) காபிரியேல் தூதன்
இ) கர்த்தருடைய தூதன்
(மத்தேயு 1: 20)
விடை: கர்த்தருடைய தூதன்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.