=============
Book of Genesis Chapter Seven (7)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் ஏழாம் (7) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. கர்த்தர் நோவாவை நோக்கி: இந்த __________ உன்னை எனக்கு நீதிமானாகக் கண்டேன் என்றார். A) பூமியில்
B) சந்ததியில்
C) தேசத்தில்
விடை: B) சந்ததியில்
(ஆதியாகமம் 7:1)
02. தேவன் சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?
A) ஒன்று
B) இரண்டு
C) ஏழு
விடை: C) ஏழு
(ஆதியாகமம் 7:2)
03. தேவன் சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?
A) ஒன்று
B) இரண்டு
C) ஏழு
விடை: A) ஒன்று
(ஆதியாகமம் 7:2)
04. தேவன் ஆகாயத்து பறவைகளில் சேவலும் பேடுமாக எத்தனை ஜோடு எடுக்க சொன்னார்?
A) ஒன்று
B) இரண்டு
C) ஏழு
விடை: C) ஏழு
(ஆதியாகமம் 7:3)
05. எத்தனை நாள் இரவும் பகலும் மழை பெய்தது?
A) முப்பது
B) நாற்பது
C) ஐம்பது
விடை: B) நாற்பது
(ஆதியாகமம் 7:4,12,17)
06. ஜலப்பிரளயம் பூமியில் உண்டான போது நோவாவின் வயது?
A) அறுநூறு
B) எழுநூறு
C) எண்ணூறு
விடை: A) அறுநூறு
(ஆதியாகமம் 7:6)
07. எத்தனை நாள் சென்ற பின்பு பூமியில் ஜலப்பிரளயம் உண்டாயிற்று?
A) ஐந்து
B) ஏழு
C) ஒன்பது
விடை: B) ஏழு
(ஆதியாகமம் 7:4,10)
08. மழை பெய்ய ஆரம்பித்த மாதம் மற்றும் தேதி?
A) 2 மாதம், 17 தேதி
B) 10 மாதம், 2 தேதி
C) 12 மாதம், 2 தேதி
விடை: A) 2 மாதம், 17 தேதி
(ஆதியாகமம் 7:11)
09. மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் __________ திறவுண்டன.
A) மதகுகள்
B) ஊற்றுக்கண்கள்
C) தாழ்ப்பாள்கள்
விடை: A) மதகுகள்
(ஆதியாகமம் 7:11)
10. பேழையில் இருந்த ஆண்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) மூன்று
C) நான்கு
விடை: C) நான்கு
(ஆதியாகமம் 7:13)
11. பேழையில் இருந்த பெண்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) மூன்று
C) நான்கு
விடை: C) நான்கு
(ஆதியாகமம் 7:13)
12. பேழையின் கதவை பூட்டியது யார்?
A) கர்த்தர்
B) தேவ தூதன்
C) நோவா
விடை: A) கர்த்தர்
(ஆதியாகமம் 7:16)
13. ஜலம் மழைகளுக்கு மேலாக எத்தனை முழம் இருந்தது?
A) பனிரெண்டு
B) பதினைந்து
C) பதினேழு
விடை: B) பதினைந்து
(ஆதியாகமம் 7:20)
14. நாசியிலே __________ உள்ள எல்லாம் மாண்டுபோயின.
A) ஜீவன்
B) ஜீவசுவாசம்
C) சுவாசம்
விடை: B) ஜீவசுவாசம்
(ஆதியாகமம் 7:22)
15. ஜலம் எத்தனை நாள் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்ததது?
A) ஐம்பது
B) நூறு
C) நூற்றைம்பது
விடை: C) நூற்றைம்பது
(ஆதியாகமம் 7:24)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.