==================
லூக்கா நற்செய்தி நூல் வினா விடைகள்
லூக்கா இருபத்து ஒன்றாம் அதிகாரம் (21)
the gospel of luke question answer
Luke Chapter - 21
==================
01. ஏழை விதவை காணிக்கை பெட்டியில் எத்தனை காசு போட்டாள்?A) ஒன்று காசு
B) இரண்டு காசு
C) மூன்று காசு
Answer: B) இரண்டு காசு
(லூக்கா 21:2)
02. எது ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு இடிக்கப்படும்?
A) எருசலேம்
B) ஒலிவமலை
C) தேவாலயம்
Answer: C) தேவாலயம்
(லூக்கா 21:6)
03. பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் எங்கு உண்டாகும்?
A) மலை
B) சமுத்திரம்
C) வானம்
Answer: C) வானம்
(லூக்கா 21:11)
04. பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் -------------- .
A) கைவிடப்படுவீர்கள்
B) காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்
C) வெறுக்கப்படுவீர்கள்
Answer: B) காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்
(லூக்கா 21:16)
05. என் நாமத்தின் நிமித்தம் எல்லாராலும் __________ .
A) பகைக்கப்படுவீர்கள்
B) ஆசீர்வதிக்கப்படுவீர்கள்
C) சிநேகிக்கப்படுவீர்கள்
Answer: A) பகைக்கப்படுவீர்கள்
(லூக்கா 21:17)
06. எதினால் ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டும்?
A) பொறுமை
B) மனகடினம்
C) தாழ்மை
Answer: A) பொறுமை
(லூக்கா 21:19)
07. எருசலேம் எதினால் சூழுப்பட்டிருக்கும் போது அதன் அழிவு சமீபமாகும்?
A) அக்கினி
B) ராஜாக்கள்
C) சேனைகள்
Answer: C) சேனைகள்
(லூக்கா 21:20)
08. யூதேயாவிலிருக்கிறவர்கள் எங்கு ஓடிப்போக வேண்டும்?
A) எருசலேம்
B) கலிலேயா
C) மலைகள்
Answer: C) மலைகள்
(லூக்கா 21:21)
09. அந்நாளில் யாருக்கு ஐயோ?
A) விதவைகள்
B) பால் கொடுக்கிறவர்கள்
C) கர்ப்பவதிகள்
Answer: C) கர்ப்பவதிகள், B) பால் கொடுக்கிறவர்கள்
(லூக்கா 21:23)
10. புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப்படும்?
A) தேவன்
B) புறஜாதியார்
C) ராஜாக்கள்
Answer: B) புறஜாதியார்
(லூக்கா 21:24)
11. சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் என்ன தோன்றும்?
A) அதிசயங்கள் தோன்றும்
B) அடையாளங்கள் தோன்றும்
C) அற்புதங்கள் தோன்றும்
Answer: B) அடையாளங்கள் தோன்றும்
(லூக்கா 21:25)
12. எது அசைக்கப்படும்?
A) சூரியன்
B) வானத்தின் சத்துவங்கள்
C) நட்சத்திரம்
Answer: B) வானத்தின் சத்துவங்கள்
(லூக்கா 21:26)
13. மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் மேகத்தின்மேல் வருவது யார்?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) தேவ தூதர்கள்
Answer: B) மனுஷகுமாரன்
(லூக்கா 21:27)
14. எந்த காலம் சமீபமாகும்போது அத்திமரம் தளிர்க்கும்?
A) மாரி காலம்
B) வசந்த காலம்
C) பனி காலம்
Answer: B) வசந்த காலம்
(லூக்கா 21:29,30)
15. வானமும் பூமியும் ஒலிந்துபோம், எது ஒழிந்து போவதில்லை?
A) வசனம்
B) வார்த்தை
C) சத்தியம்
Answer: B) வார்த்தை
(லூக்கா 21:33)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.