Type Here to Get Search Results !

JC VBS 2024 | எண்ணுகிறேன் | வேதாகமத் தேர்வு | Bible Exam Question & Answer | Jesus Sam

இயேசுவை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2 கொரிந்தியர் 2:14)
தென்னிந்திய திருச்சபை 
மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்

விடுமுறை வேதாகமப் பள்ளி (JC VBS - 2024)
வேதாகமத் தேர்வு
தலைப்பு: எண்ணுகிறேன் (பிலிப்பியர் 3:11)

மதிப்பெண்: 50
நேரம்: 50 நிமிடம்

 
1. ஸ்தேவானைக் கொலை செய்ய சம்மதித்தது யார்?
அ) சவுல்
ஆ) பேதுரு
இ) கமாலியேல்
ஈ) பரிசேயர்கள்
விடை: அ) சவுல்
    அப்போஸ்தலர் 8:1

2. சவுல் தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களை யாரிடம் கேட்டு வாங்கினார்?
அ) சதுசேயர்
ஆ) பரிசேயர்
இ) பிரதான ஆசாரியர்
ஈ) ஆலோசனை சங்கம்
விடை: இ) பிரதான ஆசாரியர்
    அப்போஸ்தலர் 9:1

3. சவுல் எந்த பாஷையில் பேசியபோது, ஜனங்கள் அமைதலாயிருந்தார்கள்?
அ) அராமியம்
ஆ) கிரேக்கம்
இ) இலத்தின்
ஈ) எபிரெயு
விடை: ஈ) எபிரெயு
    அப்போஸ்தலர் 22:2

4. வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன், சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவன் யார்?
அ) சவுல்
ஆ) அனனியா
இ) நிக்கொதேமு
ஈ) பேதுரு
விடை: ஆ) அனனியா
    அப்போஸ்தலர் 22:12

5. பவுல் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்?
அ) மனாசே
ஆ) எப்பிராயீம்
இ) பென்யமீன்
ஈ) யூதா
விடை: இ) பென்யமீன்
    பிலிப்பியர் 3:5

6. சகேயு எந்த பகுதியைச் சார்ந்தவர்?
அ) எரிகோ
ஆ) சமாரியா
இ) கப்பர்நகூம்
ஈ) எகிப்து
விடை: அ) எரிகோ
    லூக்கா 19:1

7. சகேயு என்ன பணி செய்து வந்தார்?
அ) ஆயக்காரன்
ஆ) ஆயக்காரருக்குத் தலைவன்
இ) பரிசேயன்
ஈ) சதுசேயன்
விடை: ஆ) ஆயக்காரருக்குத் தலைவன்
    லூக்கா 19:2

8. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடியது யார்?
அ) யவீரு
ஆ) பேதுரு
இ) பவுல்
ஈ) சகேயு
விடை: ஈ) சகேயு
    லூக்கா 19:3

9. சகேயு இயேசுவைப் பார்க்கும்படி எந்த மரத்தில் ஏறினான்?
அ) அத்திமரம்
ஆ) காட்டத்திமரம்
இ) ஒலிவ மரம்
ஈ) கேதுரு மரம்
விடை: ஆ) காட்டத்திமரம்
    லூக்கா 19:4

10. இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ------------------ குமாரனாயிருக்கிறானே.
அ) தேவனுக்கு
ஆ) ஆபிரகாமுக்கு
இ) மோசேக்கு
ஈ) தாவீதுக்கு
விடை: ஆ) ஆபிரகாமுக்கு
    லூக்கா 19:9

11. யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்?
அ) சகேயு
ஆ) யோசேப்பு
இ) சவுல்
ஈ) நிக்கொதேமு
விடை: ஈ) நிக்கொதேமு
    யோவான் 3:1

12. இவைகள் எப்படி ஆகும் என்றது யார்?
அ) மரியாள்
ஆ) மார்த்தாள்
இ) மோசே
ஈ) நிக்கொதேமு
விடை: ஈ) நிக்கொதேமு
    யோவான் 3:9

13. சர்ப்பம் வனாந்தரத்தில் யாரால் உயர்த்தப்பட்டது?
அ) மோசே
ஆ) சவுல்
இ) சகேயு
ஈ) பேதுரு
விடை: அ) மோசே
    யோவான் 3:14

14. அரிமத்தியா ஊரான், இயேசுவின் அந்தரங்க சீஷன் யார்?
அ) நிக்கொதேமு
ஆ) அனனியா
இ) யோசேப்பு
ஈ) சகேயு
விடை: இ) யோசேப்பு
    யோவான் 19:38

15. நிக்கொதேமு வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து எத்தனை இராத்தல் கொண்டு வந்தார்?
அ) பத்து இராத்தல்
ஆ) ஐம்பது இராத்தல்
இ) நூறு இராத்தல்
ஈ) இருநூறு இராத்தல்
விடை: இ) நூறு இராத்தல்
    யோவான் 19:39

16. இயேசு: சீமோனிடம் மூன்றாவது முறை கேட்ட கேள்வி என்ன?
அ) நீ என்னிடத்தில் அன்பாய் இருக்கிறாயா?
ஆ) நீ என்னை நேசிக்கிறாயா?
இ) இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?
விடை: ஆ) நீ என்னை நேசிக்கிறாயா?
    யோவான் 21:17

17. யாரை கொலைசெய்தீர்கள் என்று பேதுரு கூறுகிறார்?
அ) ஜீவாதிபதியை
ஆ) பரிசுத்தமும், நீதியுமுள்ளவரை
இ) கொலைபாதகனை
விடை: அ) ஜீவாதிபதியை
    அப்போஸ்தலர் 3:15

18. உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார் என்றது யார்?
அ) சீமோன் பேதுரு
ஆ) மோசே
இ) இயேசு கிறிஸ்து
ஈ) ஆபிரகாம்
விடை: ஆ) மோசே
    அப்போஸ்தலர் 3:22

19. செசரியா பட்டணத்திலிருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன?
அ) நிக்கொதேமு
ஆ) ஒநேசிமு
இ) கொர்நேலியு
ஈ) சகேயு
விடை: இ) கொர்நேலியு
    அப்போஸ்தலர் 10:1

20. கொர்நேலியு பேதுருவினிடத்திற்கு தேவபக்தியுள்ள எத்தனை மனிதரை அனுப்பினார்?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை: அ) ஒன்று
    அப்போஸ்தலர் 10:7

21. சேஷ்டபுத்திரபாகத்தை அலட்சியம் பண்ணியது யார்?
அ) ஆபிரகாம்
ஆ) ஈசாக்கு
இ) யாக்கோபு
ஈ) ஏசா
விடை: ஈ) ஏசா
    ஆதியாகமம் 25:34

22. என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று ஏசா எத்தனை முறை சொன்னார்?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை: ஆ) இரண்டு
    ஆதியாகமம் 27:34,38

23. நீ என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றது யார்?
அ) சகேயு 
ஆ) பேதுரு
இ) யாக்கோபு
ஈ) தாவீது
விடை: இ) யாக்கோபு
    ஆதியாகமம் 32:26

24. யாக்கோபு என்ற பெயரை ஆண்டவர் எப்படி மாற்றினார்?
அ) யாப்போக்கு
ஆ) ஏதோம்
இ) பெனியேல்\
ஈ) இஸ்ரவேல்
விடை: ஈ) இஸ்ரவேல்
    ஆதியாகமம் 32:28

25. ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டது?
அ) ஆபிரகாம்
ஆ) ஏசா
இ) யோபு
ஈ) யாக்கோபு
விடை: ஈ) யாக்கோபு
    ஆதியாகமம் 33:20

26. இயேசுவை தன் வீட்டிலே ஏற்றுக்கொண்ட ஸ்திரீ யார்?
அ) மரியாள்
ஆ) மார்த்தாள்
இ) கானானிய ஸ்திரீ
ஈ) லாசரு
விடை: ஆ) மார்த்தாள்
    லூக்கா 10:38

27. மார்த்தாளின் சகோதரி பெயர் என்ன?
அ) மரியாள்
ஆ) அன்னாள்
இ) லேயாள்
ஈ) பிரிஸ்கில்லாள்
விடை: அ) மரியாள்
    லூக்கா 10:39

28. இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது யார்?
அ) சகேயு
ஆ) பேதுரு
இ) மரியாள்
ஈ) நிக்கொதேமு
விடை: இ) மரியாள்
    லூக்கா 10:39

29. அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்கியது யார்?
அ) மரியாள்
ஆ) மார்த்தாள்
இ) லாசரு
ஈ) இயேசு கிறிஸ்து
விடை: ஆ) மார்த்தாள்
    லூக்கா 10:41

30. தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டது யார்?
அ) மார்த்தாள்
ஆ) மரியாள்
இ) லாசரு
ஈ) பேதுரு
விடை: ஆ) மரியாள்
    லூக்கா 10:42

31. ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்றது யார்?
அ) இரண்டு குருடர்
ஆ) கானானிய ஸ்திரீ
இ) சகேயு
ஈ) பேதுரு
விடை: ஆ) கானானிய ஸ்திரீ
    மத்தேயு 15:22

32. கானாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றபடியல்ல என்றது யார்?
அ) இயேசு
ஆ) பேதுரு
இ) பவுல்
ஈ) நிக்கொதேமு
விடை: அ) இயேசு
    மத்தேயு 15:24

33. ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும் என்று இயேசுவைப் பணிந்து கொண்டது யார்?
அ) சகேயு
ஆ) பவுல்
இ) கானானிய ஸ்திரீ
ஈ) நூற்றுக்கு அதிபதி
விடை: இ) கானானிய ஸ்திரீ
    மத்தேயு 15:25

34. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றது யார்?
அ) இயேசு கிறிஸ்து
ஆ) சீஷர்கள்
இ) சீமோன் பேதுரு
ஈ) பரிசேயர்கள்
விடை: அ) இயேசு கிறிஸ்து
    மாற்கு 7:27

35. கானானிய ஸ்திரீயின் மகள் பிசாசு பிடியிலிருந்து விடுதலை பெற்று எங்கு படுத்திருந்தாள்?
அ) மேல்வீட்டில்
ஆ) கட்டிலில்
இ) வீட்டில்
ஈ) மெத்தையில்
விடை: ஆ) கட்டிலில்
    மாற்கு 7:30

36. கர்த்தர் உங்களுக்கு தயை செய்வாராக என்றது யார்?
அ) நகோமி
ஆ) ஓர்பாள்
இ) ரூத்
ஈ) போவாஸ்
விடை: அ) நகோமி
    ரூத் 1:8

37. தன் மாமியை முத்தமிட்டுச் சென்றது யார்?
அ) ரூத்
ஆ) ஓர்பாள்
இ) பேதுரு
ஈ) போவாஸ்
விடை: ஆ) ஓர்பாள்
    ரூத் 1:14

38. நகோமி தன் மருமகள் ரூத்தோடு எங்கிருந்து எங்கு வந்தாள்?
அ) மோவாப் – பெத்லகேம்
ஆ) பெத்லகேம் – மோவாப்
இ) எகிப்து – இஸ்ரவேல்
விடை: அ) மோவாப் – பெத்லகேம்
    ரூத் 1:22

39. அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன் என்றது யார்?
அ) நகோமி
ஆ) ரூத்
இ) போவாஸ்
ஈ) ஸ்திரீகள்
விடை: ஈ) ஸ்திரீகள்
    ரூத் 4:15

40. அயல்வீட்டுக்காரிகள் யாருக்கு ஆண் பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தினார்கள்?
அ) ரூத்
ஆ) போவாஸ்
இ) நகோமி
ஈ) எலிமெலேக்கு
விடை: இ) நகோமி
    ரூத் 4:17

41. சாலொமோனை விட்டு எகிப்துக்கு ஓடிப்போன நேபாத்தின் குமாரன் யார்?
அ) ரெகொபெயாம்
ஆ) யெரொபெயாம்
இ) எரொபெயாம்
ஈ) ரெகொபோத்
விடை: ஆ) யெரொபெயாம்
    2 நாளாகமம் 10:2

42. என் -------------- என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
அ) கட்டைவிரல்
ஆ) மோதிரவிரல்
இ) சுண்டுவிரல்
ஈ) நடுவிரல்
விடை: இ) சுண்டுவிரல்
    2 நாளாகமம் 10:10

43. ரெகொபெயாம் அரணான பட்டணங்களை எங்கு கட்டினான்?
அ) யூதா
ஆ) எருசலேம்
இ) பெத்லகேம்
ஈ) யூதேயா
விடை: அ) யூதா
    2 நாளாகமம் 11:5

44. ரெகொபெயாம் தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே எத்தனை வருஷம் நடந்தான்?
அ) இரண்டு வருஷம்
ஆ) மூன்று வருஷம்
இ) ஐந்து வருஷடம்
ஈ) எட்டு வருஷம்
விடை: ஆ) மூன்று வருஷம்
    2 நாளாகமம் 11:17

45.ரெகொபெயாமின் எத்தனையாவது வருஷத்தில் எகிப்தின் ராஜா யூதாவின் அரணான பட்டணங்களைப் பிடித்தான்.
அ) மூன்று வருஷம்
ஆ) ஐந்து வருஷம்
இ) பத்து வருஷம்
ஈ) பதினைந்து வருஷம்
விடை: ஆ) ஐந்து வருஷம்
    2 நாளாகமம் 12:2

46. ஜெப ஆலயத்தலைவன் பெயர் என்ன?
அ) யவீரு
ஆ) சகேயு
இ) நிக்கொதெமு
ஈ) பேதுரு
விடை: அ) யவீரு
    லூக்கா 8:41

47. யவீருவின் மகள் வயது என்ன?
அ) பத்து வயது
ஆ) பன்னிரண்டு
இ) பதினைந்து
ஈ) இருபது
விடை: ஆ) பன்னிரண்டு
    லூக்கா 8:41

48. உம்முடைய குமாரத்தி மரித்துப்போனால், ---------- வருத்தப்படுத்த வேண்டாம்.
அ) இயேசுவை
ஆ) போதகரை
இ) ஆண்டவரை
ஈ) கர்த்தரை
விடை: ஆ) போதகரை
    லூக்கா 8:49

49. “பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு” - யார் யாரிடம் சொன்னது?
அ) இயேசு – பேதுரு
ஆ) பேதுரு – இயேசு
இ) இயேசு – யவீரு
ஈ) பேதுரு – யவீரு
விடை: இயேசு - யவீரு
    லூக்கா 8:50

50. யவீருவின் வீட்டிற்குள் சென்ற சீஷர்கள் யார்?
அ) பேதுரு, யோவான்
ஆ) பேதுரு, பிலிப்பு
இ) பேதுரு, யோவான்,யாக்கோபு
ஈ) பேதுரு, யோவான், யூதா
விடை: இ) பேதுரு, யோவான், யாக்கோபு
    லூக்கா 8:51

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.