Type Here to Get Search Results !

JC VBS 2013 Song Lyrics | விடுமுறை வேதாகம பள்ளி பாடல் வரிகள் | Christian Sunday School Songs Lyrics | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி

JC VBS – 2013
தலைப்பு: ஜீவனுள்ள கற்கள் (1 பேதுரு 2:5)


பாடல் 1
கருப்பொருள் பாடல்:
C/130/6/8
ஜீவனுள்ள கற்கள் நாம் – 2ஃ
இயேசு ராஜாவின் மாளிகை கட்டுவோம் (2)

கருங்கல்லாலும் அல்ல செங்கல்லாலும் அல்ல
பளிங்குகல்லால் அல்ல பவளத்தாலும் அல்ல (2)

ஜீவனுள்ள கற்களாய்
இணைந்து நாம் கட்டுவோம் (2)
    - ஜீவனுள்ள கற்கள் நாம்

பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்



பாடல் 2
F/137/4/4
வா வா தம்பி தங்கை வா வா – 2
இயேசு நம்மை அழைக்கிறார்
நம்மைக் கொண்டு செயல்பட (2)

ஜீவனுள்ள கற்களாய், உறுதியுள்ள கற்களாய்
வாழ்ந்திட நம்மை அழைக்கிறார் (2)
    - வா வா …….

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்



பாடல் 3
அழைச்சிட்டு வந்தாரு அந்திரேயா
பேதுரு மாமாவ இயேசுவிடம்

அழைப்பை உணர்ந்து அடிபணிந்தார்
ஆண்டர் ராஜ்ஜியம் கட்டிடவே (2)

என்னையும் இயேசு அழைக்கின்றார்
என்பதை நானும் உணர்ந்திட்டேன்
இயேசுவின் ராஜ்ஜியம் கட்டிடவே
என்னையும் நானும் அர்ப்பணிதேன் (2)
எல்லா….. லாலா…. லல்லாலா

பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்



பாடல் 4
Em/127/4/4
பணம் கொடுத்து வாங்கும் கற்களெல்லாம்
உயிருள்ள கற்கள் அல்லவே (2)
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாமோ
ஜீவனுள்ள கற்கள் தானே (2)
நாம் அவருக்குள்ளே கட்டப்பட
இராஜ்ஜியத்தைக் கட்டிடவே
விரைந்து செயல்படுவோம் – 2 (2)

பாடல் ஆசிரியர்: திரு. A. சாமுவேல்ராஜ்


பாடல் 5
G/125/6/8
ஏலேலோ…. ஐலசா… ஏலேலோ – 4
நானு மீன்பிடிக்கும் தொழிலாளிங்க – நாங்க
நாலு பேரும் கூட்டாளிங்க
ஒருநாள் இயேசு வந்தாருங்க – ஆழத்திலே
வலைய போட சொன்னாருங்க
Night full-ஆ Try பண்ணினோம்
Nothing னு சொன்னேனுங்க
ஆனாலும் கீழ்ப்படிஞ்சோங்க
வலைகிழிய மீன் பிடிச்சோங்க
பயந்து தான் போனேனுங்க
பாவி நான் என்றேனுங்க
மனுஷர பிடிப்பவராய் மாத்துனாருங்க – என்னை (2)
ஏலேலோ…. ஐலசா…. ஏலேலோ – 4

பாடல் ஆசிரியர்: திரு. S. பிரபுதாஸ்


பாடல் 6
Em/130/4/4
பளபளப்பாய் (2) பளிச்சிடும் பளிங்குகற்கள்
பார்ப்பதற்கு அழகாமே
பரிசுத்தர் இயேசுவின் பாதத்தில் தந்திட்ட
ஜீவகற்கள் நாம் தாமே
ஆஹா பாடிடுவோம் நடனம் ஆடுவோம்
அவர் பின்னே ஆனந்தமாய் சென்றிடுவோம்
ஆஹா பாடிடுவோம் நடனம் ஆடுவோம்
விலையேறப்பெற்ற கற்களாய் ஜொலித்திடுவோம்

பாடல் ஆசிரியர்: திரு. T. டேனியல்


பாடல் 7
Em/130/4/4
ஒன்றுக்கும் உதவாத கற்களாய்
கரடான கற்களாய் நாம் இருந்தோம் (2)
இயேசு நமக்காய் ஜீவன் தந்தார்
முற்றிலும் வடிவம் நமக்குத் தந்தார் (2)
ஜீவனுள்ள கற்களாய் மாற்றி விட்டார் – நம்மை (2)

பாடல் ஆசிரியர்: திரு. P. ஜெயக்குமார்


பாடல் 8
Gm/120/4/4
பேதுரு மாமா – 4
அலைமேல அலை வந்தப - 2
அலைஞ்சி அலைஞ்சி மீன்பிடிச்ச நீங்க
கடல்மீது நடந்தததான் விளக்கிச் சொல்லுங்க (2)
தம்பி / தங்க இயேசுவை நோக்கி பார்த்து நானு
நடந்தேனே பயமில்லாமல் (2)
Wow…. அப்புறம் என்னாச்சு மாமா
திடீரென்று காற்று பலமாய் வீச பார்த்து
கலங்கி நானும் பயந்திட்டேன்
கடல் அலையில் அமிழ்ந்திட்டேன்

அச்சச்சோ அப்புறம் என்னாச்சு மாமா

அமிழ்ந்து போகையில் ஆண்டவரை கூப்பிட்டேன்
அன்பான கர்த்தர் கரம் நீட்டி தூக்கினார் (2)

தம்பி தங்கை முழுமையாய் விசுவாசம் வைக்கனும்
அலையையும் கடந்து வாழ வல்லமை தருவார் – இயேசுவே (2)

இயேசு எவ்வளவு நல்லவர்.

நல்லது மாமா ஆலோசனை நல்லது மாமா – 2

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 9
Fm/136/4/4
Spider Man Bat Man
Super Man Iron Man (2)
இவர்கள் உலகில் Model
இவர்கள் உலகில் Hero
இவர்களைப் பார்த்து நடந்தால் வீழ்வது உறுதி (2)
உறுதியாய் நிற்கும் Model இயேசுவே
உயர்ந்து அவரை நோக்கிப் பார்ப்பேன்
விழாது காப்பார் மீட்பர் இயேசுவே
விசுவாச வீரனாய் வாழ்வேன் என்றுமே (2)

பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்


பாடல் 10
A/105/4/4
பாவத்தால் இயேசுவை விட்டு பிரிந்திருப்போரை – 2
பெவிகால் கொண்டு இணைக்க முடியாது
பெவிகுயிக் கொண்டு ஒட்ட முடியாது (2)
இயேசுவின் அன்பால் மட்டும் இணைக்க / ஒட்ட முடியுமே – 2
பாவத்தால் கறைபடிந்த மக்களையே
இயேசுவின் ராஜ்ஜியத்தில் சேர்த்திடவே

இன்றே நாமும் இணைவோம்
இயேசுவின் அன்பை பகிர்வோம் (2)
பல்லே பல்லே பல்லே …. ஓஹோ
பல்லே பல்லே பல்லே… ஆஹே (4)

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 11
Em/84/4/4
மாறாத அன்பு இயேசுவின் அன்பு
மறையாத அன்பு நேசரின் அன்பு
மானிடர் நம்மைக் கடவுளின் பிள்ளையாய்
மாற்றியது நம் இயேசுவின் அன்பு (2)
மாசுள்ள உலகன்பு மாறும்
மாசற்ற அவரன்பு மாறாதது (2)
அவர் அன்பினிலே நாமொன்றாய் இணைந்திடுவோம்
அவர் பணியினையே அன்பாய்ச் செய்திடுவோம் (2)

பாடல் ஆசிரியர்: திரு. A. ஜோசப் பால்சிங்


பாடல் 12
E/128/4/4
Delete (3) பண்ணிட்டேன் – 2
பொய், வஞ்சகம், பொறாமை, விரோதம்
Delete பண்ணிட்டேன் (2)
Insert (3) பண்ணிட்டேன் (2)
உண்மை, அன்பு, நற்குணம், பொறுமை
Insert பண்ணிட்டேன்
இயேசு கிறிஸ்துவால் Rebuild பண்ணப்பட்டேன் – 2

பாடல் ஆசிரியர்: திரு. ரோஸி சந்திரலேகா ஜோசப்


பாடல் 13
G/116/2/4
இயேசு விரும்பும் பிள்ளையாய்
உண்மையே நான் பேசுவேனே
தீய பழக்கங்களை விட்டுவிடுவேனே – நான் (2)

இயேசு நம்மை காண்கிறாரே
நம்மை கண்கானிக்கிறாரே
அறியாத ரகசியம் ஒன்றுமில்லையே – அவர் (2)

பாடல் ஆசிரியர்: திரு. தயாநிதி பேசிங்கர்


பாடல் 14
C/170/4/4
டிக் டிக் டிக் டிக் – 2
கடிகாரம் காட்டுது நேரத்தை
காலங்கள் வேகமாய் ஓடுது (2)
பள்ளிக்கூடம் செல்வதும், பாடங்களைப் படிப்பதும்
விளையாட்டு நேரமும் சாப்பிடச் செல்வதும்
சரியான நேரத்தில் செய்கின்றோமோ டிக் டிக்….

ஆலயம் செல்வதும், வேதத்தைப் படிப்பதும்,
ஜெபிக்கும் நேரமும் சாட்சியாக வாழ்வதும்
சரியாக இருந்தால் கிறிஸ்துவின்
மாளிகையாய் மாறிடுவோம் (2)
நாம் மாறிடுவோம்

பாடல் ஆசிரியர்: திரு. G.P. ராஜா


பாடல் 15
Em/128/4/4
பறக்குது – 2 பட்டாம் பூச்சி தான்
மினுக்குது – 2 மின்மினி பூச்சி தான்
குக்கு குக்குனு கேட்குது குயிலு பாடும் சத்தம் தான் (2)
இயேசுவின் சத்தம் கேட்கத்தான்
உள் உள்ளத்தில் ஆசை இருக்குதா (2)
இயேசுவிடம் ஓடிவா இன்றே நீ ஓடிவா – 2

கர்த்தருடைய வேதத்தில்
இரவும் பகலும் தியானித்தால் (2)

இயேசுவின் சத்தம் கேட்கலாம்
இயேசுவோடு வாழலாம் (2)

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 16
G/130/6/8
கொக்கரக்கோ கோ கோ கொக்கரக்கோ (2)
சண்டை சேவல் போல – நான்
சண்டை போட மாட்டேன்
ஜல்லிக்கட்டு காளை போல
மல்லுக்கட்ட மாட்டேன் (2)

இயேசுவின் பிள்ளையாய்
நறுமணம் வீசுவேன்
தபீத்தாள் போல
நற்செயல்கள் செய்திடுவேனே (2)
    - கொக்கரக்கோ

பாடல் ஆசிரியர்: திரு. A. சாமுவேல்ராஜ்


பாடல் 17
என் கைகளை ஆட்கொள்ளும்
அது உம்மை துதிக்கட்டும்
என் கண்களை ஆட்கொள்ளும்
அது உம்மை காணட்டும் (2)

என் சிந்தையை ஆட்கொள்ளும்
அது உம்மை நினைக்கட்டும் (2)

பாடல் ஆசிரியர்: திரு. M. ஈசாக்கு


பாடல் 18
Em/108/4/4
ஏ…. தானானனா… எஏ….
மாட்டுவண்டியில் ஏறி நானும் பயணம் போகிறேன்
என் நண்பரோடு ரொம்ப ஜாலியா பயணம் போகிறேன்
கொண்டாட்டம் தான் ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான்
இயேசு எங்ககூட வாரார் சந்தோஷம் தான் (2)
போறோம் போறோம் போறோம் நாங்க வெகுதூரம்
சொல்லத்தான் போறோமே சுவிசேஷம் (2)
அறிவிப்போம் நற்செய்தியை பிறருக்கும்
அகமகிழ்வோம் எந்நாளுமே இயேசுவுக்குள் (2)

பாடல் ஆசிரியர்: திரு. N. சர்மா பிரபு



பாடல் 19
G/168/4/4
தம்பி தங்கை சொல்லாமல் விடாதே
தம்பி தங்கை செல்லாமல் இருக்காதே (2)
இயேசு உனக்குச் செய்திட்ட
நன்மைகளை பிறருக்குச் சொல்லிடு
இயேசு உனக்கு காண்பிக்கும்
இடத்திற்கு உடனே சென்றிடு – தம்பி

பாடல் ஆசிரியர்: திரு. R. இம்மானுவேல்


பாடல் 20
G/130/6/8
பரம எருசலேம் வாசலிலே
ஜீவனுள்ள கற்களாய் ஜொலித்திடுவேன் (2)
பாரு வச்சிரக்கல், இந்திரநீலம்
ஜோரு சந்திரகாந்தம், மரகதம்
ஓகோ கோமேதகம், பதுமராகம்
ஆகா சுவர்ணரத்தினம், படிகபச்சை
லாலா புஷ்பராகம், வைடூரியம்
ஆஆ சுநீரம், சுகந்தி எல்லாம்
விதவிதமாய் ஜொலிக்குது
கண்களத்தான் பறிக்குது (2)
அதுபோல ஜீவனுள்ள கற்களாய் நானும்
சேர்ந்து மகிமையிலே ஜொலித்திடுவேன் (2)

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்


பாடல் 21
ஆஹோ… ஆனந்தம் ஓஹோ…. பேரின்பம் – 2
நித்திய சந்தோஷம் இயேசுவோடு என்றென்றும்
ஜீவனுள்ள கற்களாய் ஜீவித்திடும் எனக்கு – ஆஹோ
உலக வாழ்வில் உண்மையாக வாழ்ந்திடு எனக்கு
இயேசுவின் பிள்ளைகளாய் வாழ்ந்திடும் நமக்கும்
    - ஆஹோ

பாடல் ஆசிரியர்: திரு. J. ஓசன்னா அரசு


பாடல் 22
Bm/85/4/4
உம் இரத்தத்தால் என்னை மீட்டீரே
உம் காயத்தால் சுகம் பெற்றேனே
எனக்காய் உலகில் வந்து
எனக்காய் சாபம் ஆகி
சிலுவையில் ஜீவன் தந்தீரே – நீர் (2)
நான் பாவி என்று அறிக்கை செய்தேன்
இந்த கல்லுக்கும் ஜீவன் தந்தீரே (2)

பாடல் ஆசிரியர்: திரு. P. சார்லஸ் பென்னி


பாடல் 23
உப்புக்கல் போல நான் சுவையை தந்திடுவேனே
நம்மையான கல் போல சாட்சியாய் வாழ்ந்திடுவேனே (2)
ஏழை மக்கள் உயர நான் உண்மையாக உழைத்திடுவேன்
தேவையுள்ள யாவருக்கும் சேவை செய்து மகிழ்ந்திடுவேன்
நானே சாட்சி இயேசுவுக்கு சாட்சி
நல்ல சாட்சி இயேசுவுக்கு சாட்சி (2)

பாடல் ஆசிரியர்: திரு. G.P. ராஜா



பாடல் 24
ஆசிரியர் பாடல்:
கட்டிடம் கட்டிடும் சிற்பிகள் நாங்கள் -2
மூலைக்கல் கிறிஸ்து இயேசுவே (2)

1. தேவராஜ்ஜியம் கட்டிட கிறிஸ்து இயேசுவால்
தெரிந்துகொண்ட ஜீவனுள்ள கற்கள் – நாங்களே (2)
விலையேறப்பெற்ற தேவமீட்பைப் பெறவே
விசுவாசத்தால் உறுதிப்பட்ட கற்கள் நாங்களே (2)
    - கட்டிடம் கட்டிடும்

2. தேவஅன்பால் இணைக்கப்பட்டு நற்செயல் செய்ய
உருவான ஜீவனுள்ள கற்கள் – நாங்களே (2)
திருச்சபையினிலே நற்கிரியை செய்து
சாட்சியாக வாழ்ந்திடும் கற்கள் நாங்களே (2)
    - கட்டிடம் கட்டிடும்

பாடல் ஆசிரியர்: திரு. ரோஸி சந்திரலேகா ஜோசப்


பாடல் 25
C/132/4/4
நாட்டியப் பாடல்

கர்த்தரின் இராஜ்ஜியம் கட்டிடவே
கற்களின் தேவை பல உண்டே (2)
பரிசுத்தர் இயேசுவின் பிள்ளைகளாக – அதில்
பயன்படுவோம் என்றும் பலனடைவோம் (2)
    - கர்த்தரின்……

1. ஜீவனுள்ள கற்களாய் இணைந்திடுவோம்
விலையேறப்பெற்ற நல் மீட்பைப்பெறுவோம் (2)
தெரிந்தெடுத்த கற்களாய் புரிந்து நடப்போம் – 2
உறுதியான கற்களாய் நம்பிக்கை கொள்வோம்
அன்பினால் இணைக்கப்பட்ட கற்களாய் பணிபுரிவோம் (2)
    - கர்த்தரின்

2. உருபெற்ற கற்களாய் செயல்படுவோம்
மாளிகைக் கற்களாய் ஜெபத்தில் வளர்வோம் (2)
நன்மையான கற்களாய் நன்மைகள் செய்வோம் – 2
அறிவிக்கின்ற கற்களாய் இயேசுவை சொல்வோம்
விண்ணில் மகிமையான கற்களாய் ஜொலித்திடுவோம் (2)
    - கர்த்தரின்

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்



எங்களுக்காக ஜெபியுங்கள்
Rev. A. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்
திரு. S. ஜான்
திரு. T. டேனியல்
திருமதி. S. கலா டேனியல்
திரு. A. ஜோசப் பால்சிங்
திருமதி. P. ரோஸி சந்திரலேகா ஜோசப்
திரு. M. ஈசாக்கு
திரு. R. இம்மானுவேல்
திரு. M. ஜேக்கப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா


தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

E-mail: csidmrjcm@gmail.com 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.