Type Here to Get Search Results !

JC VBS 2012 | துதியின் உடை | Vbs Song Lyrics | Christian Kids Song Lyrics | Sunday School Song Lyrics | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி

JC VBS – 2012
தலைப்பு: துதியின் உடை (ஏசாயா 61:3)

பாடல் 1
சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்
துயரத்திற்கு பதிலாய் ஆனந்தம்
ஒடுங்கின ஆவிக்கு அது துதியின் உடை - 2
அவர் அனுப்பினார் - 2
அவர் இயேசுவை அனுப்பினார் (2)

இயேசு ராஜா மன்னில் வந்தார்
சிலுவையில் அன்று பாவத்தை வென்றார்
இயேசுவின் இரத்தத்தால் மக்களை மீட்டு
துதியின் உடையை நமக்குத் தந்தார்
    - அவர் அனுப்பினார்


பாடல் 2
துயருற்ற மக்களை சீர் படுத்தி
சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தை
ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக - இயேசு
துதியின் உடையை கொடுக்கின்றார் (2) - 2

பாடல் 3
Color Color ஆ வஸ்திரம் / கலக்கலான வஸ்திரம்
ஜொலி ஜொலிக்கும் மோதிரம்
அழகான பாதரட்சை (2)
மனந்திருப்பின மைந்தனுக்கு
மனதில் மகிழ்ச்சியை தந்திட்டதே (2)

இரட்சிப்பு என்னும் வஸ்திரம்
முத்திரை என்னும் மோதிரம்
ஆயத்தம் என்னும் பாதரட்சை (2)
மனந்திரும்பும் எல்லாருக்கும்
மனதில் மகிழ்ச்சியைத் தந்திடுவார் (2)

பாடல் 4
பழைய ஆடை கலைந்திடுவோம்
துதியின் ஆடை அணிந்திடுவோம்
மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்
பாவ வாழ்வைத் துரந்திடுவோம்
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடுவோம்
இயேசுவை ஏற்றுக்கொள்வோம் (2)  -2 
லல.. லல.. லாலா.  லலா..

பாடல் 5
துக்கம் எல்லாம் மாறி சந்தோஷமானேன்
பாவம் எல்லாம் நீங்கி பரிசுத்தமானேன் (2)
என் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டேன்
என் பாவங்களை இயேசு எனக்கு மன்னித்தாரே (2)
எனக்கு சந்தோஷம் இயேசு தந்தாரே
எனக்கு ஆனந்தம் இயேசு தந்தாரே (2)

பாடல் 6
பாவம் என்னும் அழுக்கின் உடையாம்
சோகம் என்றும் வாழ்வில் நிலையாய்
ஆட்டிப் படைத்திடும்
ஆழுகை செய்திடும்
மிகவும் கொடுமையாய் (2)

இயேசுவிடம் மனதில் உள்ள
பாவத்தை அறிக்கையிட்டேன்
துதியின் உடையாம் மகிழ்ச்சியை 
தந்து மீட்டுக்கொண்டார் (2)


பாடல் 7
Cycle வாங்கி ஊர சுத்துனேன்
Bike வாங்கி பந்தா பண்ணுனேன் (2)
சந்தோஷம் கிடைக்கலையே - எனக்கு
சந்தோஷம் நிலைக்கலையே (2)

இயேசுவின் அழைப்பை ஏற்று - என்
இதயத்தைக் கொடுத்துவிட்டேனே (2)
இயேசு எனக்குள் வந்திட்டாரே
எனக்கு சந்தோஷம் சந்தோஷமே
என் பாவத்தை மன்னித்தாரே
எனக்கு ஆனந்தம் ஆனந்தமே
லாலாலலலலா....
ஆஅஆஅஅஅ....
ஓஓஓஓஓ...
ம்ம்ம்ம்.......

பாடல் 8
எனக்காய் மரித்தவர் இயேசு
எனக்காய் உயிர்த்தவர் இயேசு
பாவக் கவலையில் வாழ்ந்த - எந்தன்
கண்ணீரைத் துடைத்தவர் இயேசு (2)

பாவம் போக்கினார் இயேசு
பரிசுத்தம் நல்கினார் இயேசு
மகிழ்வுடனே நானும் வாழ
மகிழ்ச்சியாள் நிரைத்தார் இயேசு (2) - 2

பாடல் 9
தகுதியே இல்லாத மேவிபோசேத்
தாவீது ராஜாவின் அரண்மனையில் 
ராஜகுமாரன் உடை அணிந்து
இராப்பகல் வாழும் தகுதி பெற்றான் (2)
மேவி போசேத் செய்த செயலால் அல்ல
தாவீது செய்த மகா தயவு (2)

தகுதியே இல்லாத தம்பி தங்கை
இயேசு ராஜாவின் மடியினிலே
நீதி என்னும் உடை அணிந்து
என்றென்றும் வாழும் தகுதி பெற்றோம் (2)
நாம செய்த செயல்களால் அல்ல
இயேசு ராஜாவின் இலவச கிருபை (2)

பாடல் 10
Bye 2 Get 1 Free - 4 (ஆகா / ஓகோ)
இரண்டு Dress வாங்கினால்
ஒரு Dress எனக்கு இலவசம் (2)

படிச்சி வாங்கி பட்டம் பெற்றேன்
பழகி வாங்கி License பெற்றேன்
இயேசுவின் பிள்ளை என்ற அதிகாரம்
அவரின் கிருபையால் நான் பெற்றேனே
ஆனந்தம் - 4 ஆனந்தமே - ஓகோ

பாடல் 11
Fashion ஆ Fashion ஆ
இது தான் Fashion ஆ (2)
ஏழு எட்டு Pocket 
Jeans Long hair
Tite Dress Facial
Cutting Coloring A

இது தான் Fashion ஆ - அட
இது தான் Fashion ஆ
இல்லை இல்லையே 
இது Fashion இல்லையே

சாந்தம் அன்பு கீழ்ப்படிதல்
தாழ்மை பொறுமை நற்குணம் (2)

இவைதான் உன் வாழ்வில்
மெய்யான Fashion
இதையே அணிந்திடு
இதிலே மகிழ்ந்திடு (2)

பாடல் 12
Comfort Fabric Conditioner 
போட்டால் கிடைக்கும் நருமணம் (2)
கிடைக்காது தம்பி 
நீடித்து நிற்காது தங்கை (2)

சாந்தம் என்னும் நற்குணம்
அமை என்னும் நற்குணம் (2)
இந்த நற்குணங்கள் நல்ல நறுமணத்தை
நமக்குத் தந்திடுமே (2)

இது நல்ல அலங்காரம்
விலையேறப்பெற்ற அலங்காரம் (2)

பாடல் 13
தானியேலைப் போல ஜெபவீரனாக
தரணியில் வளம் வருவேன் 
நீர்கால்கள் ஓரம் நடப்பட்ட மரம் போல்
தப்பாமல் கனி கொடுப்பேன் (2)

இரவும் பகலும் வேதத்தை தியானிப்பேன்
இயேசுவின் வழியில் நடந்திடுவேன் (2)
வளர்வேன் நானும் செழிப்பாக
வாய்க்குமே எந்தன் செயல்களெல்லாம் (2)

பாடல் 14
தானியேல் தாத்தா தவறாமல் ஜெபித்தார்
தடை வந்த போதும் தளராமல் ஜெபித்தார் (2)
தளராமல் நானும் தினமும் ஜெபித்திடுவேன்
தவறாமல் நானும் என்றும் ஜெயம் பெறுவேன் (2)
இயேசு ஜெபத்தைக் கேட்டிடுவார்
இகமதில் ஜெயமதைத் தந்திடுவார் - நம் (2)

பாடல் 15
ஆலயம் செல்வோம் நாம் ஆலயம் செல்வோம் - 2
அளவில்லா மகிழ்ச்சியைப் பெற்றிடவே - கர்த்தருடைய
ஆலயம் செல்வோம் நாம் ஆலயம் செல்வோம் - 2

ஆண்டவர் வார்த்தையைக் கேட்டிடவே
ஆவலாய் தினமும் கூடனரே (2)
பெரோயா பட்டணத்தார் கூடினரே
பெருமகிழ்ச்சி அன்று பெற்றனரே (2)
     - ஆலயம் செல்வோம் 

நாமும் ஆலயம் சென்றிடுவோம்
ஆர்வமாய் வேதத்தைப் படித்திடுவோம் (2)
ஆண்டவர் வழியில் நடந்திடுவோம்
அளவில்லா மகிழ்ச்சியை பெற்றிடுவோம் (2)
     - ஆலயம் செல்வோம் 

பாடல் 16
Sunday Sunday Holiday
Church-க்கு போகும் Holly Day (2)

வாரம் தோறும் ஆலயம் செல்வேன்
இயேசுவின் வசனத்தை
வாஞ்சையாய்க் கேட்பேன் 
கேட்பதோடு விட்டுவிடாமல்
ஏற்றுக்கொண்டு கடைபிடித்து
என்றென்றும் வாழ்வேன் (2)

பாடல் 17
Positive ஆ யோசி Positive ஆ பேசு
பார்த்துக் கொள்வார் கர்த்தர் இயேசு
பலன் அழிப்பார் உன் செயல்களுக்கு (2)

பார்த்து பேசின பத்து பேர போல் இல்ல
காலேப் யோசுவா போல வாழு (2)
கர்த்தரின் துணையோடு கருத்தாக சிந்திக்க
கிறிஸ்துவின் தேவை உனக்கு (2)
    - Positive ஆ

பாடல் 18
மாற வேண்டுமே நம்
மனசு மாற வேண்டுமே (2)
புதிய சிந்தை புதிய நோக்கம்
நமக்கு வேண்டுமே 
உலகத்தின் கண்ணோட்டம் 
ஒளிய வேண்டுமே (2)

இயேசுவின் உதவியோடு மேலானவைகளை 
நோக்க வேண்டுமே - நம் (2)

பாடல் 19
அண்ணன் தம்பி 12 பேரு
யோசேப்பு அதுல ஒருத்தரு (2)
எல்லாருமே யோசேப்பு துரோகம் பண்ணினாங்க
பழிவாங்காமல் அவர் அன்பு காட்டினார்
சுயநலம் வேண்டாம் அன்பு தம்பியே
சுயநலம் வேண்டாம் அன்பு தங்கையே
 யோசேப்பைப் போல் பிறரிடம்
அன்பு காட்டிடு நீ உதவி செய்திடு - 2

பாடல் 20
நன்மைகளைப் பெற்றேன்
நல்லவர் இயேசுவிடம் (2)
என்னிடம் உள்ளதை தருவேன்
தேவனுக்கும் பிறருக்கும் (2)

என் இயேசு எனக்கு கொடுத்தாரே
என் தாலந்துகள் என் உடமைகள் (2)
அதை பகிர்ந்திடுவேன் சுயநலமின்றி 
தேவனுக்கும் பிறருக்கும் (2)

பாடல் 21
தங்க நாற்கர சாலையில் 
தடையில்லாமல் சென்றிடலாம் (2)
Traffic இல்லை Signal இல்லை
தடையில்லாமல் சேர்ந்திடலாம் (2)

தங்க மோட்ச பட்டணத்தில் 
தடையில்லாமல் சேர்ந்திடவே (2)
Sin இல்லாமல் Satan இல்லாமல்
Jesus இருந்தால் சேர்ந்திடலாம் (2)

பாடல் 22
குருவி சிட்டு குருவி 
இயேசு ராஜா சீக்கிரம் வர போராரு
அருவி கொட்டும் அருவி
மன்னன் இயேசு மேகமீதில் வருவாரு

பரலோகம் கூட்டிட்டு போவாரு
நித்திய ஜீவனைத் தருவாரு (2)
துதியின் ஆடை அணிந்தே நான்
தூதர்களோடு துதிப்பாடுவேன் (2)
    - குருவி சிட்டு 

பாடல் 23
இரங்கும் இயேசுவே
இரட்சிப்பு தாருமே (2)
என் மீறுதலை நீக்கி
என் அக்கிரமம் போக்கி
உம் இரத்தத்தால் கழுவி சுத்திகரியும் (2)
    - இரங்கும் இயேசுவே...

சிவப்பான பாவம் வென்மையாக மாறும்
சுத்த இருதயம் தந்து சுடரொளியாக்கும் (2)
    - இரங்கும் இயேசுவே

பாடல் 24
Court Shoot மாட்டிக்கிட்டு
Jeans Pant போட்டுக்கிட்டு 
ஒய்யாரமா நடந்திடலாம்
பட்சு சேல பட்டு யலா
சுடிதார் மசக்கழி
போட்டுகிட்டு கலக்கிடலாம் (2)

ஆனால் இதைவிட மேலானது
இயேசு தரும் உடைதானே (2)
இரட்சிப்பென்னும் அழங்கார உடைதானே
அதுதான் என்றென்றும் அழகானதே
இரட்சிப்பென்னும் அழங்கார உடைதானே
அதுதான் என்றென்றும் அழகே அழகு

பாடல் 25
தம்பிகளே தங்கைகளே கேளுங்க
தரிசன வசனங்களை கவனியுங்க
கேட்டு நீங்க பரிசுத்தமாய் வாழ்ந்திடுங்க
இயேசு வந்த நோக்கம் அதை அறிந்து வாழுங்க - 2 (2)

துயரத்தை மாற்றி சீர்படுத்த
சாம்பலுக்கு சிங்காரம் கொடுத்திட
ஒடுங்கின ஆவிக்கு பதிலாக
துதி உடை தர இயேசு உலகில் வந்தார் (2)


பாடல் 26
ஆசிரியர் பாடல்
உயிர்த்திட்ட இராஜனாம் உன்னதர் இயேசுவுக்கு
ஊழியம் செய்திடுவேன் நான் ஊழியம் செய்திடுவேன் (2)

1. உழையான சேற்றினின்றே என்னை
உயிர்ப்பித்த செயலதனை
உயிருள்ள நாளெல்லாம்
சாட்சியாய் உழைத்திடுவேன் (2)
    - உயிர்த்திட்ட இராஜனாம்

2. இயேசுவை அறிந்திடாத
எந்தன் மக்களின் இதயந்தனை
இயேசுவுக்கு நேராக
என்றும் நடத்திடுவேன் (2)
    - உயிர்த்திட்ட இராஜனாம்

3. துதியின் உடை அணிந்த
எந்த திருச்சபை பிள்ளைகளை
மேன்மையான உடையைப்பெற
இயேசுவுக்குள் வளர்த்திடுவேன் (2)
    - உயிர்த்திட்ட இராஜனாம்

பாடல் 27
துதியின் உடை அணிந்து தூய்மைதனை நினைத்து
தூயருக்காய் வாழ்ந்திடுவேன் (2)
இயேசுவின் பிள்ளையாய் சாட்சியாய் வாழ்வேன்
இகமதில் அனுதினமே - 2 (2)
    - துதியின் உடை அணிந்து

1. ஒடுங்கின என் ஆவியை உயிர்ப்பித்தாரே
புலம்பலை கழிப்பாக மாற்றினாரே (2)
கன்மலையின் மேலே நிறுத்தினாரே - 2 - என்னை
கிருபையால் நீதிமான் ஆ்க்கினாரே
விசேஷித்தவனாக உயர்த்தினாரே - என்னை
விசேஷித்தவளாக உயர்த்தினாரே 
    - துதியின் உடை அணிந்து

2. வேதத்தை தியானிக்க கொடுத்தாரே
வசனத்தில் வாஞ்சையை அருளினாரே (2)
மேலான காரியத்தை நோக்கத் செய்தாரே - 2 - எனக்கு
உதவிடும் உள்ளமதை அருளினாரே
நித்திய வாழ்வதனை கொடுப்பாரே - 2 எனக்கு
    - துதியின் உடை அணிந்து

எங்களுக்காக ஜெபியுங்கள்
Rev. A. டேவிட் ஜெபராஜ் – இயக்குநர்
திரு. S. ஜான்
திரு. T. டேனியல்
திருமதி. S. கலா டேனியல்
திரு. A. ஜோசப் பால்சிங்
திருமதி. P. ரோஸி சந்திரலேகா ஜோசப்
திரு. M. ஈசாக்கு
திரு. R. இம்மானுவேல்
திரு. M. ஜேக்கப்
திரு. N. சர்மா பிரபு
திரு. S. ஓசன்னா

தொடர்புக்கு:
இயக்குநர்,
இளையோர் திருச்சபை
1/1, இரட்சண்யபுரம்,
மூன்றுமாவடி,
கோ.புதூர்,
மதுரை. 625 007

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.