Type Here to Get Search Results !

HMS Home Missionary Society | அருட்பணி கருப்பொருள் பாடல்கள் | Missionary Festival Theme Songs | Jesus Sam

====================
தென்னிந்திய திருச்சபை
மதுரை முகவை பேராயம்
பேராய அருட்பணி இயக்கம்
======================
அருட்பணியைக் குறித்த தரிசனப் பாடல்கள்

பாடல் ஆசிரியர்: அருள்திரு. J. பொன் பிரபாகரன் (HMS இயக்குநர்)

63-ம் ஆண்டு தரிச பாடல் (2023)
பாடல் வரிகள்:
ரம்பம்ப ரம்பபம்ப - 3
ரம்பம்பபம் (2)

மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)

மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்

சரணம் 1
இறையறிவாம் அமுதையூட்டியே
இறையன்புநீரில் நீராட்டியே (2)
மறையொளியில் நடை பழக்கியே - நாளும்
நிறைவை நோக்கி நடக்கப்பண்ணுவோம் (2)

மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்

லாலலா லாலலாலலா...


சரணம் 2
ஆத்துமாக்கள் களத்தில் சேருமே
உத்தமமாய் முயன்று விதைப்பதால் (2)
நற்பலன்கள் நாளும் பெருகவே – நாங்கள்
பற்றுடனே உம்மில் வாழுவோம் (2)

மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்

ரம்பம்ப ரம்பபம்ப -3
ரம்பபம்பபம் (2)


சரணம் 3
அருட்பணியின் மகிழ்ச்சி பெருகுமே
அருட்கொடைகள் வாழ்வில் நிலைப்பதால் (2)
நிறுவனங்கள் சபைகள் இணைவதால் – என்றும்
நறுமணமாய் மீட்பு கமழுமே (2)

மீன்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)

லாலலா லாலலாலலா



62-ம் ஆண்டு தரிச பாடல் (2022)
பாடல் வரிகள்:
பட்டி தொட்டி பட்டணங்கள் ஒன்றையும்
விட்டு வைக்க மாட்டோமே!
வலியோர் எளியோர் செல்வந்தர் எவரையும்
விலக்கிவிட மாட்டோமே! (2)

வெட்ட வெயிலினிலும்
கொட்டும் பனி ராவினிலும்
கட்டு விடும் மேனியிலும்
தட்டு தடு மாறிடினும்
நற்செய்தி கொண்டு செல்வோமே! -2
செல்வோமே! செல்வோமே! - 2

சரணம் 1
வார்த்தையிலே சொல்வதோடு
வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டும்
சாதனைகள் செய்வோமே (2)
வேதனைகள் வந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும் (2)
தேவனையே சார்ந்து நிற்போம்
     – பட்டி

சரணம் 2
அடைக்கப்பட்ட வாசல்களை
நடைபாதை ஆக்கிக் கொண்டு
சடைப்பின்றி முன் செல்வோமே (2)
தடைகள் நேர்ந்தாலும்
படைகள் சூழ்ந்தாலும்
அடைக்கலம் ஆண்டவரே
      – பட்டி

சரணம் 3
திருச்சபைகள் நிறுவனங்கள்
இருகரம் கோர்த்துக்கொண்டு
திருப்பணியை தாங்குவதால்
அர்ப்பனிப்பில் நிலைத்திருந்து
நற்கனிகள் நல்குவதால்
நற்செய்தி கொண்டு செல்வோமே 
     - பட்டி 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.