தென்னிந்திய திருச்சபை
மதுரை முகவைப் பேராயம்
========================
ஒப்படைத்தலின் ஆண்டு - 2024
நம் வழிகளை ஆண்டவரிடம்
ஒப்புக் கொடுத்திடுவோம்
அவர் மேலே நம்பிக்கை வைப்போம்
நம் சார்பில் செயலாற்றுவார்
ஒப்புக்கொடுத்திடுவோம் அவரையே நம்பிடுவோம்
நம்பிக்கை வீணாகாது - நம்
மற்கப்படுவதில்லை
1) உன்னதரோடு உறவு கொண்டு நன்மைகள் செய்திடுவோம்
நீதியின் வாழ்வுக்கு ஏற்றபடி நம் செயல்களை மாற்றிடுவோம்
மெய் வாழ்வு அடைந்திடவும் உயர்வுகள் பெற்றிடவும்
அவர் கரத்தினுள் அடங்கிடுவோம்
2) அனைவருடன் ஒப்புரவுடன் அருட்பணி செய்திடுவோம்
ஒருமனப்பாட்டுடன் ஐக்கியமாய் சிறந்ததை அர்ப்பணிப்போம்
நிலையான வாழ்வு பெற இறை சித்தம் நிறை வேற்றிட
உண்மையாய் (முழுமையாய்) ஒப்படைப்போம்
நிலைத்திருத்தலின் ஆண்டு - 2023
நீங்கள் என்னிலும்
என் வார்த்தைகள் உங்களிலும்
நிலைத்திருந்தால் கேட்பதெல்லாம் நடக்கும் என்றார் இயேசு
இயேசுவில் நிலைத்திருப்போம்
இறை வார்த்தையில் நிலைத்திருப்போம்
அனைவர்க்கும் அனைத்தும் கிடைத்திட
அனுதினம் அவரில் நிலைத்திருப்போம்
1) ஆண்டவரின் உடன்படிக்கையில் உறுதியாவோம்
அழைக்கப்பட்ட அழைப்பிலே நிலைத்திருப்போம்
இறைவேண்டலில் தரித்திருப்போம்
இறைவனின் இனிய சீடராவோம்
- இயேசுவில்
2) கர்த்தருடன் உறவில் இன்னும் நெருங்கிடுவோம்
கற்றுக்கொண்ட சத்தியத்தில் நிலைத்திருப்போம்
நம்பிக்கையில் வேர்கொள்ளுவோம்
நற்செய்தி பாரெங்கும் பறைசாற்றுவோம்
- இயேசுவில்
3) திருச்சபையின் ஐக்கியம் வலுப்பெறுவோம்
தினம் தினம் ஈகையில் நாம் வளர்ந்திடுவோம்
அன்பாய் இணைந்து வேற்றுமைகளைவோம்
அழியாத அவர் வார்த்தை நிறைவேற்றுவோம்
- நீங்கள் என்னிலும்
வளர்ச்சியின் ஆண்டு – 2022
இதிலும் பெரிதானவற்றை இதிலும் உயர்வானவற்றை
இதிலும் சிறப்பானவற்றை
காண்பீர் வாருங்கள் – என்று
கர்த்தர் அழைக்கிறார்
நம்மை ஆசீர்வதிப்பார்
நம்மை உயரச் செய்வார்
அவர்க்காய் வாழச்செய்வார்
உயருவோம்… கடவுள் விரும்பும் கனி கொடுப்போம்
வசனத்தில் வேறூன்றி நற்கனி தந்திடும்
நல்மரமாக வளர்ந்திடுவோம்
செடியாய் அவரோடு என்றுமே நிலைப்போம்
புதுவாழ்வில் மலர பழையன களைவோம்
நன்மைகள் செய்யவே அனுதினம் வளருவோம்
- வளருவோம்
திட விசுவாசத்தில் கட்டப்படுவோம்
திருப்பணி செய்வதில் தீவிரம் கொள்வோம்
ஒருமனப்பாட்டில் ஓங்கியே வளர்வோம்
- வளருவோம்
அற்றவர் மீது கரிசனை கொள்வோம்
சீடர்களாக அனைத்தையும் பகிர்வோம்
சீரான வளர்ச்சி நிச்சயம் பெருவோம்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.