Type Here to Get Search Results !

Daily Bible Quiz Question And Answer in Tamil | தினம் ஒரு வேதாகம கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

========================
பைபிள் கேள்விகளும் பதில்களும்
விவிலிய வினா விடைகள்
Bible Question & Answer
=======================

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியரகாமம், எண்ணாகமம், உபாகமம் இந்த ஐந்து புத்தகங்களையும் எழுதியது யார்?
A) ஆபிரகாம்
B) மோசே
C) சாமுவேல்
Answer: B) மோசே

மூன்றெழுத்து கொண்டவள் நான்.  எல்லாருக்கும் தாய் நான்.  கடை இரண்டில் ஆயுதம் கொண்டவள் நான் யார்?
Answer: ஏவாள்
    (ஆதியாகமம் 3:20)

நோவாவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: லாமேக்கு 
     ஆதியாகமம் 5:30 

நோவா எத்தனை வயதானபோது சேம், காம், யாப்பேத்தைப் பெற்றான்?
Answer: ஐந்நூறு வயது
    (ஆதியாகமம் 5:32)

யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது?
A) நோவா 
B) யோசேப்பு
C) தாவீது
D) பவுல்
Answer: A) நோவா 
     (ஆதியாகமம் 6:8)

ஆபிரகாமின் தகப்பன் பெயர் என்ன?
Answer: தேராகு 
     ஆதியாதமம் 11:26

வேதத்தில் முதன் முதலில் தசமபாகம் கொடுத்தவன் யார்?
A) காயீன்
B) ஆபெல்
C) நோவா
D) ஆபிரகாம்
Answer: D) ஆபிரகாம்
     ஆதியாகமம் 14:18-20

வில் வித்தையில் வல்லவன் யார்?
A) ஏசா
B) இஸ்மவேல்
C) சிம்சோன்
D) தாவீது
Answer: B) இஸ்மவேல்
      ஆதியாகமம் 21:20

முதன்முதலில் தேவனால் சோதிக்கப்பட்ட மனிதன் யார்?
Answer: ஆபிரகாம்
    (ஆதியாகமம் 22:1)

11. வேட்டையில் வல்லவன் யார்?
A) ஏசா
B) ஈசாக்கு
C) ஆபிரகாம்
D) இஸ்மவேல்
Answer: A) ஏசா 
     (ஆதியாகமம் 25:27)

பென்யமீனிற்கு அவன் தாய் என்ன பெயரிட்டாள்?
Answer: பெனொனி
    (ஆதியாகமம் 35:18)

ஈசாக்கு மரித்தபோது அவனது வயது என்ன?
ஈசாக்கு எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?
ஈசாக்கின் ஆயுசு நாட்கள் எத்தனை வருஷம்?
Answer: நூற்று எண்பது
    (ஆதியாகமம் 35:28,29)
   
யோசேப்பு எந்த தேசத்தின் அதிபதியாய் இருந்தான்?
A) கானான் தேசம்
B) இஸ்ரவேல் தேசம்
C) எகிப்து தேசம்
Answer: C) எகிப்து தேசம்
    (ஆதியாகமம் 41:41)

யாக்கோபு எகிப்தில் எத்தனை வருஷம் இருந்தான்? 
A) பதினைந்து வருஷம்
B) பதினேழு வருஷம்
C) பதினெட்டு வருஷம்
D) இருபது வருஷம்
விடை: B) பதினேழு வருஷம்
     (ஆதியாகமம் 47:28)

மூன்றெழுத்து கொண்டவன் நான், சேஷ்ட புத்திரன் நான்.  கடை இரண்டு உணவு ஒன்றின் பெயராம். நான் யார்?
Answer: ரூபன்
    (ஆதியாகமம் 49:3)

எபிரெய மருத்துவச்சிகளின் பெயர் என்ன?
A) சிப்பிராள், பூவாள்
B) அனனியா, சப்பிராள்
C) அன்னாள், பெனினாள்
Answer: A) சிப்பிராள், பூவாள்
    (யாத்திராகமம் 1:15)

மீதியான் தேசத்தில் இருந்த ஆசாரியன் பெயர் என்ன?
A) சகரியா
B) மெல்கிசேதேக்கு
C) ரெகுவேல்
Answer: C) ரெகுவேல்
    (யாத்திராகமம் 2:16,18)

கசப்பான கீரை சாப்பிட வேண்டிய பண்டிகை எது?
A) பஸ்கா பண்டிகை
B) கூடாரப் பண்டிகை
C) எக்காளப் பண்டிகை 
D) முதற்கனி பண்டிகை 
Answer: A) பஸ்கா பண்டிகை
    (யாத்திராகமம் 12:8-11)

இஸ்ரவேலர் எந்த மாதத்தில் சுதந்திரம் பெற்றார்கள்?
A) யூபிலி மாதம் 
B) ஆபிப் மாதம்
C) எலூல் மாதம்
D) ஆதார் மாதம்
Answer: B) ஆபிப் மாதம் 
     (யாத்திராகமம் 13:4)

பிள்ளைகள் இல்லாமல் மரித்துப்போன ஆசாரியர்கள் யார்?
Answer: நாதாப், அபியூ
    (எண்ணாகமம் 3:4)

உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகி யார்?
A) மிரியாம்
B) கேயாசி
C) யோபு 
D) சீமோன் 
Answer: A) மிரியாம்
     (எண்ணாகமம் 12:10)

கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி நான் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார் என்றார்?
Answer: அபாரீம் மலை
    (எண்ணாகமம் 27:12)

சிறுமையின் அப்பம் எது?
Answer: புளிப்பில்லாத அப்பம் 
     உபாகமம் 16:3 

காலேப்பின் மகள் பெயர் என்ன?
A) அக்சாள்
B) ஆஸ்நாத்
C) அகோலிபாமாள்
D) அத்தாலியாள்
Answer: A) அக்சாள்
    யோசுவா 15:16

தன் மகள் கேட்ட ஆசீர்வாதத்தை மறுக்காமல் அவளுக்குக் கொடுத்த தகப்பன் யார்?
A) யோபு
B) யெப்தா 
C) காலேப்
D) யோசுவா 
Answer: C) காலேப்
    நியாயாதிபதிகள் 1:15

சிம்சோனின் தகப்பன் பெயர் என்ன?
Answer: மனோவா 
     நியாயாதிபதிகள் 13:21,24

நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: போவாஸ் ரூத்திடம் சொன்னது
    (ரூத் 3:12)

சாமுவேலின் தகப்பன் பெயர் என்?
A) ஏலி
B) எல்க்கானா
C) ஈசாய்
Answer: B) எல்க்கானா 
    (1 சாமுவேல் 1:1,2,20)

சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே ஒரு கல்லை நிறுத்தி அதற்கு என்ன பெயரிட்டான்?
Answer: எபெனேசர்
    (1 சாமுவேல் 7:12)

சவுலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: கீஸ்
     1 சாமுவேல் 9:3

துணிந்து சர்வாங்க தகனபலி செலுத்திய ராஜா யார்?
Answer: சவுல் ராஜா
    (1 சாமுவேல் 13:11,12)

தேவன் சாப்பிட்டு கண் தெளிவடைந்த வாலிபன் யார்?
A) சிம்சோன்
B) யோனத்தான்
C) அப்சலோம்
D) தாவீது
Answer: B) யோனத்தான்
    (1 சாமுவேல் 14:27-29)

தீர்க்கதரிசியால் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாக் ராஜா.  சாமுவேல் தீர்க்கதரிசியால் கொலை செய்யப்பட்டார்.
    (1 சாமுவேல் 15:33)

ஈசாயின் குமாரர் எத்தனை பேர்?
A) இரண்டு
B) ஆறு
C) எட்டு
D) பன்னிரண்டு
Answer: C) எட்டு
     (1 சாமுவேல் 16:10,11)

தாவீதின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஈசாய் 
     1 சாமுவேல் 17:12 

ஒரு ராஜாவுக்கு பயந்து பயித்தியக்காரன் போல நடித்த ராஜா யார்?
🅐 தாவீது
🅑 ஆகாப்
🅒 யெரொபெயாம்
🅓 எசேக்கியா
Answer: A) தாவீது
     (1 சாமுவேல் 21:12-15)

தாவீது எபரோனிலும் எருசலேமிலும் அரசாண்ட வருஷங்கள் எத்தனை?
தாவீது எப்ரோனிலும் எருசலேமிலும் எத்தைனை வருஷம் அரசாண்டான்?
Answer: தாவீது எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் மூப்பது மூன்று வருஷமும் அரசாண்டான்
    (2 சாமுவேல் 5:5)

தாவீதின் நகரம் எது?
Answer: சீயோன் கோட்டை
    (2 சாமுவேல் 5:7)

தாவீதின் இராணுவத் தலைவன் பெயர் என்ன?
Answer: யோவான்
    (2 சாமுவேல் 8:16)

நாத்தான் தீர்க்கதரிசி சாலொமோனுக்கு என்ன பெயரிட்டான்?
A) ஆசா
B) அப்சலோம்
C) யோசியா
D) யெதிதியா
Answer: D) யெதிதியா 
     (2 சாமுவேல் 12:24,25)

கர்த்தருக்கு சர்வாங்கன தகனபலியிட நான் இலவசமாய் வாங்கமாட்டேன் என்றது யார்?
Answer: தாவீது
    (2 சாமுவேல் 24:24)

இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் தேடி அழகான பெண் என தெரிவுசெய்யப்பட்ட பெண் யார்?
Answer: சூனேம் ஊராளாகிய அபிஷாக்
    (1 இராஜாக்கள் 1:3)

தாவீது எபரோனிலும் எருசலேமிலும் அரசாண்ட வருஷங்கள் எத்தனை?
தாவீது எப்ரோனிலும் எருசலேமிலும் எத்தைனை வருஷம் அரசாண்டான்?
Answer: தாவீது எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் மூப்பது மூன்று வருஷமும் அரசாண்டான்
    (1 இராஜாக்கள் 2:11)

ஒரு மலையை வாங்கி, ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு சமாரியா என்று பெயரிட்டு அதைத் தலைநகரமாக்கிய ராஜா யார்?
A) உம்ரி
B) உசியா
C) ஆகாப்
D) யோதாம்
Answer: A) உம்ரி 
     (1 இராஜாக்கள் 16:24,25)

இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா? என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: ஆகாப் ராஜா எலியா தீர்க்கதரிசியிடம் சொன்னது
    (1 இராஜாக்கள் 18:17)

நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றது யார்?
A) மோசே
B) எலியா
C) தாவீது
D) எரேமியா
Answer: B) எலியா
    (1 இராஜாக்கள் 19:10)

அடைக்கலப்பட்டணம் ஒன்றில் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாப் ராஜா
     அடைக்கலப்பட்டணத்தின் பெயர் கீலேயாத்திலுள்ள ராமோத்ஸ்
    (1 இராஜாக்கள் 22:20-35) (யோசுவா 20:8)

கப்பல்களை செய்த ராஜா யார்?
A) தாவீது
B) யோசபாத்
C) உசியா
Answer: B) யோசபாத்
    (1 இராஜாக்கள் 22:48)

அடைக்கலப்பட்டணம் ஒன்றில் கொலைசெய்யப்பட்ட ராஜா யார்?
Answer: ஆகாப் ராஜா
     அடைக்கலப்பட்டணத்தின் பெயர் கீலேயாத்திலுள்ள ராமோத்ஸ்
    (1 நாளாகமம் 18:18-34) (யோசுவா 20:8)

இராஜாக்கள் கல்லரையில் அடக்கம்பண்ணப்பட்ட ஆசாரியன் யார்?
Answer: யோய்தா
    (1 நாளாகமம் 24:15,16)

துணிந்து தூபம் காட்ட ஆலயத்திற்குள் பிரவேசித்த ராஜா யார்?
Answer: உசியா
    (2 நாளாகமம் 26:16)

எஸ்தரின் மறுபெயர் என்ன?
A) அத்சாள்
B) அக்சாள்
C) எருசாள்
Answer: A) அத்சாள்
    (எஸ்தர் 2:7)

எந்த மிருகம் தும்மினால் ஒளிவீசும்,
Answer: லிவியாதான்
    (யோபு 41:1,18)

தூதர்களின் அப்பம் எது? 
Answer: மன்னா 
     சங்கீதம் 78:25

அருணோதயம்போல் உதிப்பவள் யார்?
A) ரூத் 
B) சூலமித்தியாள்
C) எஸ்தர்
D) அபிகாயில்
Answer: B) சூலமித்தியாள்
     உன்னதப்பாட்டு 6:10,13

எருசலேமிற்கு அதிகமான வருஷங்கள் தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
A) எலியா
B) ஏசாயா
C) எரேமியா 
D) எசேக்கியல்
Answer: C) எரேமியா 
      இருபத்து மூன்று வருஷம் 
     (எரேமியா 25:2,3)

எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசி பட்டயத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  அவர் யார்?
Answer: உரியா
    (எரேமியா 26:20-23)

வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறவர்கள் யார்?
A) ராஜாக்கள்
B) ஆசாரியர்கள்
C) தீர்க்கதரிசிகள்
D) பிரபுக்கள் 
Answer: C) தீர்க்கதரிசிகள்
     (எசேக்கியேல் 13:4)

அகோலாள், அகோலிபாள் என்பதன் அர்த்தம் என்ன?
Answer:
    ஆகோலாள் என்றால் சமாரியா என்று அர்த்தம்
    அகோலிபாள் என்றால் எருசலேம் என்று அர்த்தம்
    (எசேக்கியேல் 23:4)

திருப்பிப் போடாத அப்பம் யார்?
Answer: எப்பிராயீம்
      (ஓசியா 7:8)

எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன் என்று கூறிய தீர்க்கன் யார்? 
A) ஏசாயா 
B) ஓசியா 
C) மீகா
D) சகரியா
Answer: B) ஓசியா 
     (ஓசியா 11:1)

நீ எழுந்து போரடி என்று சொல்லப்பட்ட குமாரத்தி யார்?
A) சீயோன் குமாரத்தி 
B) எருசலேம் குமாரத்தி 
C) யெப்தாவின் குமாரத்தி 
D) சாலேமின் குமாரத்தி 
Answer: A) சீயோன் குமாரத்தி 
    (மீகா 04:13)

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்? 
A) ஏசாயா 
B) ஓசியா
C) மீகா
D) சகரியா 
Answer: C) மீகா 
     மீகா 5:2

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் எத்தனை பேர்?
A) ஏழு பேர்
B) பத்து பேர்
C) பன்னிரண்டு பேர் 
Answer: C) பன்னிரண்டு பேர்
    (மத்தேயு 10:2-4)

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) ஆயக்காரர்
B) பரிசேயர்
C) சதுசேயர்
D) வேதபாரகர்
Answer: C) சதுசேயர்
    (மத்தேயு 22:23)

ஆயக்காரருக்கு தலைவனும், ஐசுவரியவானுமாய் இருந்தது யார்?
A) சகேயு
B) மத்தேயு
C) கொர்நேலியு
Answer: A) சகேயு
    (லூக்கா 19:2)

முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த இருவர், இயேசு கிறிஸ்துவின் மூலம் சிநேகிதரானார்கள்?
Answer: பிலாத்து, ஏரோது
    (லூக்கா 23:12)

பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தது யார்?
A) பரிசேயன்
B) ஆயக்காரன்
C) லேவியன்
Answer: B) ஆயக்காரன்
    (லூக்கா 28:13)

மரத்துக்குக் கீழே நன்மையைத் தேடினான் பரிசுத்தன் எனும் பட்டத்தை வாங்கினான் - அவன் யார்?
Answer: நாத்தான்வேல் 
    யோவான் 1:46-51

பெதஸ்தா குளத்திற்கு எத்தனை மண்டபம் இருந்தது?
A) மூன்று மண்டபம்
B) ஐந்து மண்டபம்
C) ஏழு மண்டம்
Answer: B) ஐந்து மண்டபம்
    (யோவான் 5:2)

கமாலியேல் ஒரு __________ .
A) பரிசேயன்
B) சதுசேயன்
C) தீர்க்கதரிசி
C) நியாயசாதூரியன்
Answer: A) பரிசேயன்
     (அப்போஸ்தலர் 5:34)

பெந்தேகோஸ்தே பண்டிகை நாளில் எருசலேமிற்கு இருக்க ஆசைப்பட்டது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) பவுல்
Answer: C) பவுல்
    (அப்போஸ்தலர் 20:16)

பவுல் எந்த தீவில் இருக்கும்போது விரியன் பாம்பு அரைக் கவ்விக்கொண்டது?
Answer: மெலித்தா தீவு
    (அப்போஸ்தலர் 2:81,3)

விசுவாசத்தில் வல்லவன் யார் ?
A) ஆபிரகாம் 
B) ஈசாக்கு 
C) யாக்கோபு
D) யோசேப்பு
Answer: A) ஆபிரகாம் 
     (ரோமர் 4:21)

எந்த வரத்தை விசேஷமாக விரும்புங்கள் என்று பவுல் கூறுகிறார்?
A) ஞான வரம்
B) தீர்க்கதரிசன வரம் 
C) குணமாக்கும் வரம்
D) அந்நிய பாஷை
Answer: B) தீர்க்கதரிசன வரம்
     (1 கொரிந்தியர் 14:1)

கைத்தடியின் மீது கை வைத்து கர்த்தரைத் தொழுது கொண்டது யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
D) யோசேப்பு 
Answer: C) யாக்கோபு
    (எபிரெயர் 11:21)

தாங்கள் பெறாத குமாரரை குமாரர் என்று அழைத்த இரு அப்போஸ்தலர்கள் யார்?
Answer: பவுல், பேதுரு
பவுல் - தீமோத்தேயுவை தன் குமாரன் என்று அழைத்தார்
பேதுரு - மாற்குவை தன் குமாரன் என்று அழைத்தார்
    (2 தீமோத்தேயு 1:1,2)
    (1 பேதுரு 5:13)

பேய்களுடைய குடியிருப்பு என்னு அழைக்கப்பட்டது எது?
A) எகிப்து
B) மகா பாபிலோன்
C) இஸ்ரவேல்
Answer: B) மகா பாபிலோன்
    (வெளிப்படுத்தல் 18:2)
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.