Type Here to Get Search Results !

John 21 Bible Question & Answer in Tamil | யோவான் 21 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் இருபத்தொன்றாம் அதிகாரம்
The Gospel of JOHN 21
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களுக்கு தரிசனமான கடற்கரை எது?
A) திபேரியா கடற்கரை
B) கலிலேயா கடற்கரை
C) யோர்தான் நிதிக்கரை
Answer: A) திபேரியா கடற்கரை
    (யோவான் 21:1)

02. கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரான் யார்?
A) நிக்கோதேமு
B) சீமோன் பேதுரு
C) நாத்தான்வேல்
Answer: C) நாத்தான்வேல்
    (யோவான் 21:2)

03. மீன் பிடிக்க போகிறேன் என்றது யார்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 21:3)

04. பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உண்டா என்று கேட்டது யார்?
A) பரிசேயர்
B) இயேசு கிறிஸ்து
C) வேதபாரகர்
Answer: B) இயேசு கிறிஸ்து
    (யோவான் 21:5)

05. உயிர்த்த இயேசு சீஷர்களிடம் எங்கு வளை போட சொன்னார்?
A) ஆழத்தில்
B) படவுக்கு வலது புறம்
C) படவுக்கு இடது புறம்
Answer: B) படவுக்கு வலது புறம்
    (யோவான் 21:6)


06. வஸ்திரமில்லாமல் மீன் பிடித்தது யார்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 21:7)

07. தன் மேற்சட்டையை கட்டிக்கொண்டு கடலில் குதித்தது யார்?
A) தோமா
B) சீமோன் பேதுரு
C) யோவான்
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 21:7)

08. சீமோன் பேதுரு கடலில் குதித்த இடத்திலிருந்து கரைக்கு எவ்வளவு தூரம் இருந்தது?
A) என்பது முழம்
B) நூற்று இருபது முழம்
C) இருநூறு முழம்
Answer: C) இருநூறு முழம்
    (யோவான் 21:7,8)

09. சீமோன் பேதுரு இழுத்த வளையில் இருந்த மீன்கள் எத்தனை?
A) நூற்று மூன்று சிறிய மீன்கள்
B) நூற்று நாற்பத்து மூன்று பெரிய மீன்கள்
C) நூற்று ஐம்பத்து மூன்று பெரிய மீன்கள்
Answer: C) நூற்று ஐம்பத்து மூன்று பெரிய மீன்கள்
    (யோவான் 21:11)

10. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு சீஷருக்கு. மூன்றாவது தரிசனமான இடம் எது?
A) மலை
B) பூட்டிய அறை
C) கடற்கரை
Answer: C) கடற்கரை
    (யோவான் 21:1,14)


11. நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
A) தோமா
B) சீமோன் பேதுரு
C) யோவான்
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 21:15,16)

12. நீ என்னை நேசிக்கிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
A) யாக்கோபு
B) சீமோன் பேதுரு
C) யோவான்
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 21:17)

13. பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே இவன் காரியம் என்ன என்று யாரை குறித்து கேட்டான்?
A) தோமா
B) யோவான்
C) யாக்கோபு
Answer: B) யோவான்
    (யோவான் 21:21)

14. யார் மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று?
A) யோவான்
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: A) யோவான்
    (யோவான் 21:23)

15. இயேசு செய்த காரியங்களை எழுத புஸ்தகமும், உலகமும் கொள்ளாது என்றது யார்?
A) தோமா
B) சீமோன் பேதுரு
C) யோவான்
Answer: C) யோவான்
    (யோவான் 21:25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.