Type Here to Get Search Results !

John 20 Bible Question With Answer in Tamil | யோவான் 20 விவிலிய வினா விடைகள் தமிழில் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் இருபதாம் அதிகாரம்
The Gospel of JOHN 20
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) பஸ்கா நாள்
Answer: B) வாரத்தின் முதல் நாள்
    (யோவான் 20:1)

02. கல்லரையிலிருந்த கல் எடுக்கப்பட்டிருந்ததை கண்ட மரியாள் அதை யாருக்கு அறிவித்தாள்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) அந்திரேயா
Answer: B) சீமோன் பேதுரு
    (யோவான் 20:2)

03. இயேசுவை வைத்த கல்லறைகுள் பிரவேசித்த முதல் நபர் யார்?
A) சீமோன் பேதுரு
B) மகதலேனாள் மரியாள்
C) யோவான்
Answer: A) சீமோன் பேதுரு
    (யோவான் 20:6)

04. வெள்ளுடை தரித்த இரண்டு தூதர்கள் யாருக்கு காணப்பட்டார்கள்?
A) சீஷர்கள்
B) மகதலேனா மரியாள்
C) இயேசு கிறிஸ்து
Answer: B) மகதலேனா மரியாள்
    (யோவான் 20:12)

05. ஸ்திரியே ஏன் அழுகிறாய் என்றது யார்?
A) தூதர்கள்
B) இயேசு கிறிஸ்து
C) சீஷர்கள்
Answer: A) தூதர்கள்
    (யோவான் 20:13)



06. உயிர்த்தெழுந்த இயேசு முதலில் யாருக்கு காட்சிகொடுத்தார்?
A) தோமா
B) மகதலேனா மரியாள்
C) சீஷர்கள்
Answer: B) மகதலேனா மரியாள்
    (யோவான் 20:14)

07. ஸ்திரியே ஏன் அழுகிறாய்? யாரை தேடுகிறாய் என்றது யார்?
A) தூதர்கள்
B) இயேசு
C) சீஷர்கள்
Answer: B) இயேசு கிறிஸ்து
    (யோவான் 20:15)

08. இயேசு கிறிஸ்துவை தோட்டக்காரர் என்று எண்ணியது யார்?
A) சீமோன் பேதுரு
B) மகதலேனா மரியாள்
C) போர்ச்சேவகர்
Answer: B) மகதலேனா மரியாள்
    (யோவான் 20:15)

09. "ரபூனி" என்பதன் அர்த்தம் என்ன?
A) தலைவர்
B) ஆண்டவர்
C) போதகர்
Answer: C) போதகர்
    (யோவான் 20:16)

10. இயேசு கிறிஸ்து முதலாவது சீஷர்களை சந்தித்த நேரம் என்ன?
A) காலை
B) அதிகாலை
C) சாயங்காலம்
Answer: C) சாயங்காலம்
    (யோவான் 20:19)


11. யாருக்கு பயந்ததினால் சீஷர்கள் பூட்டிய அறையில் இருந்தார்கள்?
A) பிலாத்து
B) போர்ச்சேவகர்
C) யூதர்கள்
Answer: C) யூதர்கள்
    (யோவான் 20:19)

12. சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தது யார்?
A) பிதா
B) இயேசு கிறிஸ்து
C) தேற்றரவாளன்
Answer: B) இயேசு கிறிஸ்து
    (யோவான் 20:22)

13. தோமாவை சந்திக்கும்படி எத்தனை நாளுக்கு பின் இயேசு சீஷர்களிடம் வந்தார்?
A) மூன்று
B) ஐந்து
C) எட்டு
Answer: C) எட்டு
    (யோவான் 20:26)

14. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்று இயேசு யாரிடம் சொன்னார்?
A) தோமா
B) சீமோன் பேதுரு
C) யோவான்
Answer: A) தோமா
    (யோவான் 20:27)

15. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் _________ ?
A) விசுவாசிகள்
B) பாக்கியவான்கள்
C) நீதிமான்கள்
Answer: B) பாக்கியவான்கள்
    (யோவான் 20:29)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.