Type Here to Get Search Results !

John 19 Bible Question With Answer in Tamil | யோவான் நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பத்தொன்பதாம் அதிகாரம்
The Gospel of JOHN 19
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. இயேசுவுக்கு முள் முடியும் சிவப்பங்கியும் அணிவித்தது யார்?
A) பிலாத்து 
 B) பிரதான ஆசாரியர்
C) போர்ச்சேவகர்
Answer: C) போர்ச்சேவகர்
    (யோவான் 19:2)

02. தளவரிசைப்படுத்தின மேடை என்பதன் எபிரெய பாஷை என்ன?
A) கபத்தா
B) கொல்கொதா
C) கபாலஸ்தலம்
Answer: A) கபத்தா
    (யோவான் 19:13)

03. தளவரிசைப்படுத்தின மேடையின் நியாயாசனத்தின் மேல் உட்கார்ந்தது யார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியன்
C) இயேசு கிறிஸ்து
Answer: A) பிலாத்து
    (யோவான் 19:13)

04. பிலாத்து இயேசுவை வாரினால் அடிக்க கட்டளையிட்டது எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) பஸ்காவுக்கு ஆயத்த நாள்
C) பஸ்காவுக்கு அடுத்த நாள்
Answer: B) பஸ்காவுக்கு ஆயத்த நாள்
    (யோவான் 19:14)

05. இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) யூதர்கள்
Answer: B) பிரதான ஆசாரியர்
    (யோவான் 19:15)



06. கபாலஸ்தலம் என்பதன் எபிரேய பாஷை என்ன?
A) கபத்தா
B) கொல்கொதா
C) கெத்சமெனே
Answer: B) கொல்கொதா
    (யோவான் 19:17)

07. நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதி சிலுவையின் மேல் போடுவித்தது யார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியர்
C) போர்ச்சேவகர்
Answer: A) பிலாத்து
    (யோவான் 19:19)

08. நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எத்தனை மொழியில் எழுதப்பட்டிருந்தது?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
     (எபிரெயு, கிருக்கு, லத்தீன்)
    (யோவான் 19:20)

09. இயேசுவின் வஸ்திரத்தை எடுத்துக் கொண்டது யார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியர்
C) போர்ச்சேவகர்
Answer: C) போர்ச்சேவகர்
    (யோவான் 19:23)

10. யாருடைய அங்கி தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டிருக்கும்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியன்
C) இயேசு கிறிஸ்து 
Answer: C) இயேசு கிறிஸ்து 
     (யோவான் 19:23)


11. சிலுவையில் அறையப்பட்டவர்களின் காலெலும்புகளை முறிக்கும்படி பிலாத்துவிடம் உத்தரவு கேட்டது யார்?
A) யூதர்கள்
B) பிரதான ஆசாரியர்
C) போர்ச்சேவகர்கள்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 19:31)

12. யூதருக்கு பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாயிருந்தது யார்?
A) நூற்றுக்கு அதிபதி
B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
C) சிரேனே ஊரான் சீமோன்
Answer: B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
    (யோவான் 19:38)

13. இயேசுவின் சரீரத்தை எடுக்க பிலாத்துவிடம் உத்தரவு கேட்டது யார்?
A) நிக்கோதேமு
B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
C) சிரேனே ஊரான் சீமோன் 
Answer: B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
     (யோவான் 19:38)

14. ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்தவன்?
A) நிக்கோதேமு
B) நூற்றுக்கு அதிபதி
C) யோசேப்பு
Answer: A) நிக்கோதேமு
    (யோவான் 19:39)

15. இயேசுவை யூதர்கள் முறைப்படி அடக்கம் செய்ய வெள்ளைப்போலமும் கரியபோளமும் நூறு இராத்தல் கொண்டு வந்தது யார்?
A) நிக்கோதேமு
B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
C) நூற்றுக்கு அதிபதி
Answer: A) நிக்கோதேமு
    (யோவான் 19:39,40)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.