Type Here to Get Search Results !

John 17 Bible Question And Answer in Tamil | யோவான் நற்செய்தி நூல் 17 வினா விடைகள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதிநேலாம் அதிகாரம்
The Gospel of JOHN 17
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவது __________ ?
A) சத்தியம்
B) நித்திய ஜீவன்
C) விசுவாசம்
Answer: B) நித்திய ஜீவன்
    (யோவான் 17:3)

02. பூமியிலே பிதாவின் கிரியைகளை செய்து முடித்தது யார்?
A) மனுஷகுமாரன்
B) அப்போஸ்தலர்கள்
C) தேற்றரவாளன்
Answer: A) மனுஷகுமாரன்
    (யோவான் 17:4)

03. உலகம் உண்டாகிறதற்கு முன்னே மனுஷகுமாரனுக்கு பிதாவிடம் உண்டாயிருந்தது எது?
A) அன்பு
B) மகிமை
C) பாசம்
Answer: B) மகிமை
    (யோவான் 17:5)

04. பிதா மனுஷகுமாரனை அனுப்பினார் என்று மக்கள் விசுவாசிக்க காரணம்?
A) வசனம்
B) வார்த்தை
C) சத்தியம்
Answer: B) வார்த்தை
    (யோவான் 17:8)

05. மனுஷகுமாரன் நம்மை எதினாலே காத்துக்கொண்டார்?
A) வசனம்
B) பிதாவின் நாமம்
C) சத்தியம்
Answer: B) பிதாவின் நாமம்
    (யோவான் 17:12)


06. கேட்டின் மகன் என்பது யாரை குறிக்கிறது?
A) சீமோன் பேதுரு
B) யூதாஸ் காரியோத்து
C) அந்திரேயா
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 17:12)

07. வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப்போனது யார்?
A) பேதுரு
B) யூதாஸ் காரியோத்து
C) அந்திரேயா
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 17:12)

08. நம்மை தீமையினின்று காக்கும்படிக்கு பிதாவிடம் வேண்டிக் கொண்டது யார்?
A) மனுஷகுமாரன்
B) அப்போஸ்தலர்கள்
C) தேற்றரவாளன்
Answer: A) மனுஷகுமாரன்
    (யோவான் 17:15)

09. நம்மை பரிசுத்தமாக்குவது எது?
A) வசனம்
B) கற்பனை
C) சத்தியம்
Answer: C) சத்தியம்
    (யோவான் 17:17)

10. உம்முடைய வசனமே __________ .
A) ஜெயம்
B) நித்திய ஜீவன்
C) சத்தியம்
Answer: C) சத்தியம்
    (யோவான் 17:17)


11. பிதா மனுஷகுமாரனை உலகத்திற்கு அனுப்பியது போல நம்மை உலகத்திற்கு அனுப்பியது யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) தேற்றரவாளன் 
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 17:18)

12. நாம் பரிசுத்தமாயிருக்கும்படி தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக் கொண்டது யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) தேற்றரவாளன்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 17:19)

13. நாம் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதற்காக பிதாவிடம் வேண்டிக் கொண்டது யார்?
A) மனுஷகுமாரன்
B) அப்போஸ்தலர்கள்
C) தேற்றரவாளன்
Answer: A) மனுஷகுமாரன்
    (யோவான் 17:21)

14. உலக தோற்றத்துக்கு முன் பிதா மனுஷகுமாரனிடம் வைத்ததுஎன்ன?
A) அன்பு
B) மகிமை
C) பாசம்
Answer: A) அன்பு
    (யோவான் 17:24)

15. யோவான் 17-ல் மனுஷகுமாரன் பிதாவை எப்படி அழைக்கிறார்?
A) பரிசுத்த பிதா
B) ஜீவனுள்ள பிதா
C) நீதியுள்ள பிதா
Answer: A) பரிசுத்த பிதா, C) நீதியுள்ள பிதா
    (யோவான் 17:11,25)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.