Type Here to Get Search Results !

John 16 Bible Quiz | யோவான் 16 விவிலிய வினா விடைகள் தமிழில் | The Gospel of JOHN Bible Question Answer in Tamil | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதினாறாம் அதிகாரம்
The Gospel of JOHN 16
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. அவர்கள் உங்களை எதற்கு புறம்பாக்குவார்கள்?
A) எருசலேம்
B) ஜெப ஆலயம்
C) தேவாலயம்
Answer: B) ஜெப ஆலயம்
    (யோவான் 16:2)

02. உங்களை கொலை செய்கிறவன் யாருக்கு தொண்டு செய்கிறேன் என்பான்?
A) தேவன்
B) பிரதான ஆசாரியன்
C) சாத்தான்
Answer: A) தேவன்
    (யோவான் 16:2)

03. பாவம், நீதி, நியாயத்தை குறித்து உலகத்தை கண்டித்து உணர்த்துபவர் யார்?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) தேற்றரவாளன்
Answer: C) தேற்றரவாளன்
    (யோவான் 16:7,8)

04. மனுஷகுமாரனை விசுவாசியாதபடியினால் தேற்றரவாளன் எதை குறித்து கண்டித்து உணர்த்துவார்?
A) நீதி
B) நியாயத்தீர்ப்பு
C) பாவம்
Answer: C) பாவம்
    (யோவான் 16:9)

05. மனுஷகுமாரன் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால் தேற்றரவாளன் எதை குறித்து கண்டித்து உணர்த்துவார்?
A) நீதி
B) நியாயத்தீர்ப்பு
C) பாவம் 
Answer: A) நீதி
    (யோவான் 16:10)


06. உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினால் தேற்றரவாளன் எதை குறித்து கண்டித்து உணர்த்துவார்?
A) நீதி
B) நியாயத்தீர்ப்பு
C) பாவம்
Answer: B) நியாயத்தீர்ப்பு
    (யோவான் 16:11)

07. சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துபவர் யார்?
A) மனுஷகுமாரன்
B) சத்திய ஆவியானவர்
C) தேற்றரவாளன்
Answer: B) சத்திய ஆவியானவர்
    (யோவான் 16:13)

08. சத்திய ஆவியானவர் யாரை மகிமைப்படுத்துவார்?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) சாத்தான்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 16:13,14)

09. கொஞ்ச காலத்திலே என்னை காணாதிருப்பீர்கள் மறுபடியும் என்னை காண்பீர்கள் என்று இயேசு சொன்னதை குறித்து தங்களுக்குள்ளே பேசி கொண்டது யார்?
A) பரிசேயர்
B) ஆசாரியர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
    (யோவான் 16:17)

10. உங்கள் துக்கம் _____________ மாறும்.
A) சந்தோஷமாக
B) சந்தோஷமாய்
C) சந்தேகமாய்
Answer: A) சந்தோஷமாக
    (யோவான் 16:20)


11. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை என்றது யார்?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) தேற்றரவாளன்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 16:24)

12. மனுஷகுமாரன் காலம் வரும்போது யாரை குறித்து வெளிப்படையாய் அறிவிப்பார்?
A) பிதா
B) தேற்றரவாளன்
C) சாத்தான்
Answer: A) பிதா
    (யோவான் 16:25)

13. இதோ இப்பொழுது நீர் உவமையாய் பேசாமல் வெளிப்படையாய் பேசுகிறீர் என்றது யார்?
A) சீஷர்கள்
B) ஜனங்கள்
C) பரிசேயர்
Answer: A) சீஷர்கள்
    (யோவான் 16:29)

14. உலகத்தில் உங்களுக்கு _________ உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்.
A) துன்பம்
B) உபத்திரவம்
C) கவலை
Answer: B) உபத்திரவம்
    (யோவான் 16:33)

15. உலகத்தை ஜெயித்தது யார்?
A) பிசாசு
B) மனுஷகுமாரன்
C) சாத்தான்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 16:33)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.