Type Here to Get Search Results !

John 13 Bible Quiz in Tamil | யோவான் நற்செய்தி நூல் 13 கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதின்மூன்றாம் அதிகாரம்
The Gospel of JOHN 13
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. எந்த பண்டிகைக்கு முன் இயேசு இவ்வுலகத்தை விட்டு பிதானிவிடம் போகும்படியான வேலை வந்ததென்று அறிந்தார்?
A) பஸ்கா பண்டிகைக்கு முன்பு
B) பிரதிஷ்டை பண்டிகைக்கு முன்பு
C) கூடார பண்டிகைக்கு முன்பு
Answer: A) பஸ்கா பண்டிகைக்கு முன்பு
    (யோவான் 13:1)

02. இயேசுவை காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டிவிட்டான்?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 13:2)

03. சீஷர்களின் கால்களை தண்ணீரினால் கழுவி, சீலையினால் துடைத்தது யார்?
A) லேவியன்
B) மனுஷகுமாரன்
C) ஆசாரியன்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 13:5)

04. ஆண்டவரே என் கால்களை மாத்திரம் அல்ல என் கைகளையும் தலையையும் கூட கழுவ வேண்டும் என்றது யார்?
A) யோவான்
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
    (யோவான் 13:9)

05. இயேசு கிறிஸ்துவை சீஷர்கள் எப்படி அழைத்தார்கள்?
A) மேசியா என்றும், கிறிஸ்து என்றும் அழைத்தார்கள்
B) ஆண்டவர் என்றும், போதகர் என்றும் அழைத்தார்கள்
C) ரபீ என்றும், குரு என்றும் அழைத்தார்கள்
Answer: B) ஆண்டவர் என்றும், போதகர் என்றும் அழைத்தார்கள்
    (யோவான் 13:13)


06. ஊழியக்காரன் யாரைவிட பெரியவன் அல்ல?
A) எஜமானிலும் பெரியவன் அல்ல
B) அனுப்பினவனிலும் பெரியவன் அல்ல
C) தலைவனிலும் பெரியவன் அல்ல
Answer: A) எஜமானிலும் பெரியவன் அல்ல
    (யோவான் 13:16)

07. என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என் மேல் தன் _________ தூக்கினான்.
A) காலை தூக்கினான்
B) குதிகாலை தூக்கினான்
C) தலையை தூக்கினான்
Answer: B) குதிகாலை தூக்கினான்
    (யோவான் 13:18)

08. இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த சீஷன் பெயர் என்ன?
A) யோவான்
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: A) யோவான்
    (யோவான் 13:23)

09. இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீஷனோடு சைகையின் மூலம் பேசிய சீஷன் பெயர் என்ன?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
    (யோவான் 13:24)

10. யூதாஸ் காரியோத்து தன்னை காட்டிகொடுப்பான் என்பதற்கு அடையாளமாக இயேசு அவனுக்கு என்ன கொடுத்தார்?
A) பணத்தைக் கொடுத்தார்
B) வெள்ளி காசைக் கொடுத்தார்
C) துணிக்கையைக் கொடுத்தார்
Answer: C) துணிக்கையைக் கொடுத்தார்
    (யோவான் 13:26)


11. யூதாஸ் காரியோத்து துணிக்கையை வாங்கின பின்பு அவனுக்குள் புகுந்தது யார்?
A) பிசாசு
B) சோதனைகாரன்
C) சாத்தான்
Answer: C) சாத்தான்
    (யோவான் 13:27)

12. 'நீ செய்கிறதை சீக்கிரமாய் செய்' யார் யாரிடம் சொன்னது?
A) இயேசு - யூதாஸ் காரியோத்திடம் சொன்னது
B) பிரதான ஆசாரியன் - யூதாஸ் காரியோத்திடம் சொன்னது
C) சீஷர்கள் - யூதாஸ் காரியோத்திடம் சொன்னது
Answer: A) இயேசு - யூதாஸ் காரியோத்திடம் சொன்னது
    (யோவான் 13:27)

13. இயேசு சீஷர்களின் கால்களை கழுவிய நேரம் எந்த நேரம்?
A) அதிகாலை
B) மத்தியானம்
C) இராக்காலம்
Answer: C) இராக்காலம்
    (யோவான் 13:30)

14. உமக்காக (இயேசுவுக்காக) என் ஜீவனையும் கொடுப்பேன் என்றது யார்?
A) யோவான்
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
    (யோவான் 13:37)

15. சேவல் கூவுகிறதற்கு முன்னே இயேசுவை மூன்று தரம் மறுதலித்தது யார்?
A) அந்திரேயா
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: C) சீமோன் பேதுரு
    (யோவான் 13:38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.