Type Here to Get Search Results !

ஸ்தோத்திர பலிகள் | தடைகளை தகர்ப்போம் | 100 Praise And Worship | Blessed My Childs Prayer | Jesus Sam

===============
தடைகளை தகர்ப்போம்
ஸ்தோத்திர பலிகள்
=================
பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கான ஸ்தோத்திர பலிகள்
=================

1. அன்பின் தகப்பனே ஸ்தோத்திரம்.

2. ஆதியில் ஏதேனில் குடும்பத்தை உருவாக்கினவரே ஸ்தோத்திரம்.

3. கர்த்தர் ஈவாய் எங்களுக்குக் கொடுத்த பிள்ளைகளுக்காக ஸ்தோத்திரம்.

4. என் பிள்ளைகள் கர்த்தரே தந்த சுதந்திரம் ஸ்தோத்திரம்.

5. என் கர்ப்பத்தின் கனி(கள்) உம்மால் கிடைத்த பலன் என்பதற்காக ஸ்தோத்திரம்.

6. என் பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியிலே நடத்தும் அறிவைத் தருகிறீர் ஸ்தோத்திரம்.

7. எங்கள் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

8. பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களாகிய நாங்களே ஸ்தோத்திரம்.

9. என் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்படுகிறபடியால் ஸ்தோத்திரம்.

10. என் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்ற சந்தோஷத்தைத் தருகிறபடியால் ஸ்தோத்திரம்.

11. என் பிள்ளைகள் என் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருக்கிறபடியால் ஸ்தோத்திரம்.

12. என் பிள்ளைகளை உம்மைப் போல் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் விருத்தியடையச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

13. என் பிள்ளைகளைத் தாவீது போல் துதிக்கிறவர்களாய் மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

14. என் பிள்ளைகளை யோசேப்பைப் போல் பரிசுத்தமாய் வாழச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

15. என் பிள்ளைகளை தாவீதைப் போல் தங்கள் செய்கைகளில் புத்திமானாய் நடக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

16. என் பிள்ளைகளை தானியேலைப் போல் தீர்மானம் எடுக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

17. என் பிள்ளைகளை சாமுவேலைப் போல் வளர்ந்து கர்த்தருக்கும், மனுஷருக்கும் பிரியமாய் நடந்து கொள்ளச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

18. எஸ்றாவைப் போல் வேதத்தில் தேறினவர்களாய் என் பிள்ளைகளை மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

19. அன்னாள், யாக்கோபு போன்று ஜெப வீரர்களாய் என் பிள்ளைகளை மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

20. தாவீதைப்போல் என் பிள்ளைகளை இருதயத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

21. மோசேயைப் போல் என் பிள்ளைகள் எங்கும் உண்மையாயிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

22. உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு உமது வார்த்தையை என் பிள்ளைகளின் இருதயத்தில் வைக்கிறீர் ஸ்தோத்திரம்.

23. வாலிப நாட்களில் பாவ இச்சைகளில் விழுந்து விடாதபடி சிருஷ்டிகராகிய உம்மை நினைக்கச் செய்வதற்காக ஸ்தோத்திரம்.

24. மாம்ச இச்சைகளில் விழுந்து விடாதபடி எங்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்கிறீர் ஸ்தோத்திரம்.

25. கிறிஸ்துவின் சிந்தை எங்கள் பிள்ளைகளில் விளங்குவதற்காக ஸ்தோத்திரம்.

26. கிறிஸ்துவின் அன்பு எங்கள் பிள்ளைகளின் இருதயங்களில் ஊற்றப்படுவதற்காக ஸ்தோத்திரம்.

27. என் பிள்ளைகளை வேதத்தில் பிரியமுள்ளவர்களாகவும், தியானிக்கிறவர்களாகவும் மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

28. என் பிள்ளைகள் இன்பமான வசனங்களை வசனிப்பதற்காக ஸ்தோத்திரம்.

29. இரட்சிப்பின் சந்தோஷத்தை எங்கள் பிள்ளைகளுக்குத் தந்து உற்சாகமான ஆவியினால் தாங்குகிறீர் ஸ்தோத்திரம்.

30. என் பிள்ளைகள் தாழ்மையிலிருந்து உம்முடைய கிருபைகளைப் பெற்றுக்கொள்ளச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

31. என் பிள்ளைகளை ஆவியின் கனிகளைக் கொடுக்கிற பிள்ளைகளாய் மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

32. என் பிள்ளைகள் போகிற இடங்களிலெல்லாம் சோதனைகளினின்றும், பாவங்களிலிருந்தும் காப்பாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

33. என் பிள்ளைகள் உம்முடைய ஆலயமாயிருக்கும்படி பரிசுத்தமாக்குகிறீர் ஸ்தோத்திரம்.

34. கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஜனமாக என் பிள்ளைகளை நிலைப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்.

35. கர்த்தர் என் பிள்ளைகளுக்குப் போதித்து அவர்கள் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகிறதற்காக ஸ்தோத்திரம்.

36. என் பிள்ளைகள் மேல் கண்ணை வைத்து அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறதற்காக ஸ்தோத்திரம்.

37. என் பிள்ளைகளுக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளுகிற ஆவியைக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

38. வன்கண் பார்வைகளிலிருந்து என் பிள்ளைகளைக் காத்துக் கொள்வதற்காக ஸ்தோத்திரம்.

39. என் பிள்ளைகள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதபடி காத்துக் கொள்வதற்காக ஸ்தோத்திரம்.

40. என் பிள்ளைகளுக்கு சோதனைகளைத் தாங்க பெலன் தருகிறீர் ஸ்தோத்திரம்.

41. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய என் பிள்ளைகளுக்கு பெலன் கொடுக்கிறீர் ஸ்தோத்திரம்.

42. என் பிள்ளைகளுக்கு எவ்விதத்திலும் தவறான ஆலோசனை கிடைக்காதபடி பாதுகாப்பதற்காக ஸ்தோத்திரம்.

43. என் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களைக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

44. என் பிள்ளைகளுக்கு மற்றவர் மீது பொறாமை கொள்ளாத இருதயத்தைக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

45. என் பிள்ளைகளை கீழ்ப்படியும் நல்ல குணத்தை கொண்டவர்களாக மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

46. என் பிள்ளைகளுக்கு பெற்றோரையும், மற்றவர்களையும் நேசிக்கும் பண்பைக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

47. என் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் பண்பைக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

48. என் பிள்ளைகளை ஐசுவரியவான்களாக்கி வர வர விருத்தியடைந்து மகா பெரியவர்களாக்குகிறீர் ஸ்தோத்திரம்.

49. சகோதர சகோதரிகளோடு விட்டுக்கொடுக்கும் பண்பை என் பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

50. வீட்டிலும் சமுதாயத்திலும் எல்லோரிடத்திலும் விட்டுக் கொடுக்கும் பண்பை என் பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காக ஸ்தோத்திரம்.

51. என் பிள்ளைகளை எல்லா இடங்களிலும் சாட்சியாய் நிறுத்துகிறீர் ஸ்தோத்திரம்.

52. என் பிள்ளைகளை நற்குணசாலிகளாய் இருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

53. என் பிள்ளைகளின் படிப்பிலே நல்ல ஞானத்தை தருகிறீர் ஸ்தோத்திரம்.

54. தேர்வு நேரங்களில் சோர்வுகளோ, வியாதியோ வராதபடி பாதுகாத்துக் கொள்கிறீர் ஸ்தோத்திரம்.

55. என் பிள்ளைகளை எல்லா காரியத்திலும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறீர் ஸ்தோத்திரம்.

56. என் பிள்ளைகளிடத்தில் காணப்படும் பயங்களை எடுத்துப் போடுகிறபடியால் ஸ்தோத்திரம்.

57. வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களையெல்லாம் என் பிள்ளைகளுக்கு சுதந்தரமாகத் தருகிறீர் ஸ்தோத்திரம்.

58. வசனத்தை கேட்கும்போது என் பிள்ளைகளின் இருதயம் திறக்கப்படுகிறதற்காக ஸ்தோத்திரம்.

59. கொடிய நோய்களுக்கும், பாழாக்கும் சங்காரத்திற்கும் என் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தோத்திரம்.

60. என் பிள்ளைகள் செல்லும் வழிகளிலெல்லாம் அவர்களைக் காக்கும்படிக்கு தூதர்களைக் கட்டளையிடுவதற்காக ஸ்தோத்திரம்.

61. உங்க இரத்தக்கோட்டைக்குள் என் பிள்ளைகளை வைத்துக் கொண்டதற்காய் ஸ்தோத்திரம்.

62. என் பிள்ளைகளைக் குறித்த கவலைகளையெல்லாம் நீங்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

63. என் பிள்ளைகளை உள்ளங்கையில் வரைந்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.

64. என் பிள்ளைகளுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதங்களையும் வாய்க்காதே போகச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

65. என் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உண்டாக்கும்படி செய்வதற்காய் ஸ்தோத்திரம்.

66. என் பிள்ளைகளுக்கு சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு வேண்டிய ஞானத்தையும் புத்தியையும் அருளுகிறீர் ஸ்தோத்திரம்.

67. என் பிள்ளைகள் எங்கள் ஆத்துமாவிற்கு ஆனந்தத்தை உண்டாக்குவதற்காக ஸ்தோத்திரம்.

68. கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளை அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் வைக்கிறீர் ஸ்தோத்திரம்.

69. என் பிள்ளைகளுக்குக் குறித்திருக்கிறதை நீர் நிறைவேற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.

70. காண்டாமிருகத்துக் கொத்த பெலனை என் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறீர் ஸ்தோத்திரம்.

71. என் பிள்ளைகளுக்கு விரோதமான குறி சொல்லுதலுமில்லை மந்திரமுமில்லை ஸ்தோத்திரம்.

72. என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் ஸ்தோத்திரம்.

73. உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும தேவரீர் என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.

74. என் பிள்ளைகளின் ஆகாரம் கொழுமையாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்.

75. என் பிள்ளைகளை நீர் ஊற்றண்டையிலுள்ள கனி தரும் செடிகளாக்குகிறீர் ஸ்தோத்திரம்

76. என் பிள்ளைகளை புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும் மகிமையிலும் சிறந்திருக்கும்படிச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

77. பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் என் பிள்ளைகளை மேன்மையாக வைக்கிறீர் ஸ்தோத்திரம்.

78. என் பிள்ளைகளைப் பட்டணத்திலும் வெளியிலும் ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.

79. வருகையிலும், போகையிலும் கர்த்தர் என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.

80. என் பிள்ளைகளுக்கு விரோதமாய் எழும்பும் சத்துருக்களைக் கர்த்தர் முறியடிக்கும்படி ஒப்புக்கொடுக்கிறீர் ஸ்தோத்திரம்.

81. என் பிள்ளைகள் கையிடும் எல்லா வேலைகளிலும் ஆசீர்வாதம் கட்டளையிடுகிறீர் ஸ்தோத்திரம்.

82. கர்த்தர் என் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தேசத்திலே அவர்களை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.

83. என் பிள்ளைகளை அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்கள் கடன் வாங்காதிருக்கவும் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

84. தேவரீர் என் பிள்ளைகளை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்பதற்காக ஸ்தோத்திரம்.

85. என் பிள்ளைகள் போகும் இடமெல்லாம் புத்திமான்களாய் நடந்து கொள்வதற்காக ஸ்தோத்திரம்.

86. என் பிள்ளைகளுக்கு பொல்லாப்பு நேராமலும் வாதை அவர்கள் கூடாரத்தை அணுகாமலும் காக்கிறீர் ஸ்தோத்திரம்.

87. நன்மையினால் பிள்ளைகளின் வாயைத் திருப்தியாக்குகிறீர் ஸ்தோத்திரம்.

88. கழுகுக்குச் சமானமாய் அவர்கள் வயதை வாலவயது போலாக்குகிறீர் ஸ்தோத்திரம்.

89. என் வாலவயது குமாரரை பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.

90. என் பிள்ளைகள் வேர் பற்றி, பூத்துக் காய்த்து உலகத்தை பலனால் நிரப்புகிறதற்காக ஸ்தோத்திரம்.

91. நித்திய மகிமை எங்கள் பிள்ளைகளின் தலையின் மேல் இருப்பதற்காக ஸ்தோத்திரம்.

92. சஞ்சலமும் தவிப்பும் எங்கள் பிள்ளைகளின் தலையின் மேல் இருப்பதற்காக ஸ்தோத்திரம்.

93. என் சந்ததியின் மேல் உம்முடைய ஆவியையும் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தையும் ஊற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.

94. தேவரீர் என் பிள்ளைகளுக்கு முன்சென்று கோணலானவைகளைச் செவ்வையாக்குகிறதற்காக ஸ்தோத்திரம்.

95. அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் என் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறீர் ஸ்தோத்திரம்.

96. என் சந்ததியார் வலதுபுறத்திலும், இடது புறத்திலும் இடம் கொண்டு பெருகுகிறதற்காக ஸ்தோத்திரம்.

97. என் குமாரரும், குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் என்பதற்காக ஸ்தோத்திரம்.

98. என் பிள்ளைகள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பார்கள் ஸ்தோத்திரம்.

99. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் பிள்ளகைளின் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குகிறீர் ஸ்தோத்திரம்.

100. என் பிள்ளைகளின் பிள்ளைகளையும் இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காணும்படி செய்கிறீர் ஸ்தோத்திரம்.


ஆசிரியரிடமிருந்து…..
    கர்த்தரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
    இவ்வுலகத்தின் அதிபதி தனக்கு கொஞ்ச காலமே உண்டென்பதை அறிந்து தன்னுடைய ராஜ்யத்தை வலுப்படுத்த அநேக உபாயத் தந்திரங்கள் மூலம் யாரை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். குடும்பங்களைக் கலைத்தால் முழு உலகமே சீர்குலையும் என்பதை அறிந்து அவன் கணவன் மனைவிக்கிடையே, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே சமாதானம், சந்தோஷம், ஐக்கியம் இவகைளை சீர்குலைத்து வருகிறான். முக்கியமாக கிறிஸ்தவ குடும்பங்களிடையேயும் ஊழியம் செய்பவர்களின் குடும்பங்களிலேயும் ஐக்கியத்தைக் கெடுத்து சாட்சியும், ஊழியமும் குறைந்து போகப் பண்ணுகிறான்.
    அவனுடைய அஸ்திரங்களை வீழ்த்த வேண்டும். கிறிஸ்துவை உயர்த்த வேண்டும் என்று என் மனதில் ஏவப்ப்டேன். துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் என்பதால் குடும்ப சமாதானங்களுக்காக நம் பிள்ளைகளின் பரிசுத்த வாழ்வுக்காக மற்றும் ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திர பலி ஏறெடுத்து தேவனை மகிமைப்படுத்த எண்ணினேன். ஜெபத்துடன் எழுதப்பட்ட இந்த ஸ்தோத்திர பலியை அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் தனியாகவோ, குடும்பமாகவோ, குழுவாகவோ கூடி ஏறெடுத்துப் பாருங்கள். கர்த்தர் தம் குடும்பங்களில் அற்புதம் செய்வார். நாம் ஒருமித்து அவருடைய சாமத்தை உயர்த்துவோமாக!

கிறிஸ்துவின் பணியில்,
    திருமதி. ரோஸி ரூபன்

தொடர்புக்கு:
    87, அசோக் நகர், டக்கரம்மாள்புரம், திருநெல்வேலி. 627007

செல்: 9942458075
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.