Type Here to Get Search Results !

John 12 Bible Quiz Question Answer in Tamil | யோவான் சுவிசேஷம் கேள்வி பதில்கள் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பன்னிரண்டாம் அதிகாரம்
The Gospel of JOHN 12
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாளைக்கு முன்பு இயேசு எங்கு போனார்?
A) கலிலேயா
B) பெத்தானியா
C) தேவாலயம்
Answer: B) பெத்தானியா
    (யோவான் 12:1)

02. இயேசு இராவிருந்து பண்ணின லாசருவின் வீட்டில் பணிவிடை செய்தது யார்?
A) லாசரு
B) மார்த்தாள்
C) மரியாள்
Answer: B) மார்த்தாள்
    (யோவான் 12:2)

03. களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தின் ஒரு இராத்தலை கொண்டு வந்து இயேசுவின் பாதத்தில் பூசி, தன் தலைமயிரால் துடைத்தது யார்?
A) மரியாள்
B) விபச்சார ஸ்திரி
C) மார்த்தாள்
Answer: 
    (யோவான் 12:3)

04. இந்த தைலத்தை முன்னூறு பணத்துக்கு விற்று தரித்திரருக்கு கொடாமல் போனதென்ன என்றது யார்?
A) யோவான்
B) யூதாஸ் காரியோத்து
C) சீமோன் பேதுரு
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 12:4,5)

05. அப்போஸ்தலர்களில் பணப்பையை வைத்திருந்தது யார்?
A) பிலிப்பு
B) யூதாஸ் காரியோத்து
C) அந்திரேயா
Answer: B) யூதாஸ் காரியோத்து
    (யோவான் 12:6)

06. லாசரு நிமித்தமாக இயேசுவினிடம் விசுவாசம் வைத்தது யார்?
A) யூதர்கள்
B) பெத்தானியா கிராமத்தார்
C) கிரேக்கர்கள்
Answer: A) யூதர்கள்
    (யோவான் 12:10)

07. லாசருவை கொலை செய்ய வகை தேடியது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) அதிகாரிகள்
Answer: B) பிரதான ஆசாரியர்
    (யோவான் 12:11)

08. இதோ, உலகமே அவனுக்கு பின்சென்று போயிற்றே என்றது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) அதிகாரிகள்
Answer: A) பரிசேயர்
    (யோவான் 12:19)

09. கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரான் யார்?
A) பிலிப்பு
B) யூதாஸ் காரியோத்து
C) அந்திரேயா
Answer: A) பிலிப்பு
    (யோவான் 12:21)

10. கிரேக்கர் ஐயா இயேசுவை காண விரும்புகிறோம் என்று யாரிடம் சொன்னார்கள்?
A) பிலிப்பு
B) யூதாஸ் காரியோத்து
C) அந்திரேயா
Answer: A) பிலிப்பு
    (யோவான் 12:20,21)


11. கிரேக்கர் இயேசுவை காண விரும்பியதை இயேசுவுக்கு அறிவித்தது யார்? A) பேதுரு, யோவான்
B) யூதாஸ் காரியோத்து, தோமா
C) அந்திரேயா, பிலிப்பு
Answer: C) அந்திரேயா, பிலிப்பு
    (யோவான் 12:22)

12. மகிமைப்படுத்தினேன் இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்றது யார்?
A) பிதா
B) சீமோன் பேதுரு
C) மனுஷகுமாரன்
Answer: A) பிதா
    (யோவான் 12:28)

13. நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றது யார்?
A) பிசாசு
B) மனுஷகுமாரன்
C) சாத்தான்
Answer: B) மனுஷகுமாரன்
    (யோவான் 12:32)

14. கர்த்தாவே எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசிக்கிறவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
A) ஏசாயா
B) எசேக்கியா
C) எரேமியா
Answer: A) ஏசாயா
    (யோவான் 12:38)

15. தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை விரும்பியது யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) அதிகாரிகள்
Answer: A) பரிசேயர்
    (யோவான் 12:43)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.