தலைப்பு: நீ எங்கே இருக்கிறாய்?
===========================
இந்த குறிப்பின் மூலமாக நாம் எங்கே இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க கடவுள் நம்மை அழைக்கின்றார்.
1. சொன்ன இடத்தில் இரு: அடங்கியிரு
ஆதியாகமம் 26:
2, 3
ஈசாக்கு
தேசத்தில் பஞ்சம் வந்தபோது எல்லோரும் வேறுவேறு
இடங்களுக்கு செல்ல ஆரம்பித்திருப்பார்கள்.
ஈசாக்கின் தொழில் ஆடுமேய்ப்பதும், விவசாயமும்
மட்டுமே. இவை இரண்டிற்க்கும் தண்ணீர் மிக மிக
அவசியம். எனவே ஈசாக்கு தண்ணீரைத் தேடி வேறு
இடம் செல்ல நினைத்தார். அதுதான் ஈசாக்கின்
விரும்பமாயிருந்தது. ஆனால் ஆண்டவரின் விருப்பம்
அதுவல்ல.
அதே இடத்தில் இருந்து ஈசாக்கை ஆசீர்வதிக்க
கடவுள் நினைத்தார். ஈசாக்கு ஆண்டவரின் வார்த்தைக்கு
கீழ்ப்படிந்ததால், பஞ்ச காலத்திலும் நூறு மடங்கு ஆசீர்வாதம் பெற்றார்.
ஆதியாகமம் 26:
12
நாமும் சூழ்நிலைகளைக் கண்டு தவறாக முடிவெடுத்துவிடாமல்
ஆண்டவரின் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.
நம் ஒவ்வொருவரைக் குறித்தும் ஆண்டவர் ஒரு
திட்டத்தை வைத்திருக்கிறார். அதை நாம் அறிந்துகொள்ள
வேண்டும். எல்லாரும் செய்கிறார்கள் என்பதற்காக
நாமும் செய்ய விடக்கூடாது.
ஈசாக்கு பஞ்சத்தினால் எல்லோரும் வேறு இடம் செல்கிறார்கள்
என்றே அவனும் செல்ல நினைத்தான். ஆனால் ஆண்டவரின் திட்டம் அது அல்ல.
அநேக நேரங்களில் படிப்பின் காரியங்களில்
என் உறவினர் அந்த படிப்பு படித்தார்கள், இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார். எனவே, நானும் அந்த படிப்பு படிக்கபோகிறேன் என்று
நாம் முடிவெடுப்பதுண்டு. நாம் அப்படிச் செய்யாமல்,
ஆண்டவர் என்னைக் குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நாம் ஆராய வேண்டும்.
திருமணக் காரியங்களில் என் மனதிற்கு சரி
என்று தோன்றும் காரியங்களை நான் செய்யாமல்,
கடவுளுடைய சித்தம் இதில் வெளிப்படுமா? என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.
நம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவின்
போதும், ஒவ்வொரு தீர்மானத்தின் போதும் நாம் கர்த்தர் சொன்ன இடத்தில் இருக்கும்போது
ஈசாக்கைபோல நாமும் நூறு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.
2. சொல்லும் வரை இரு: காத்திருக்க
வேண்டும்
கடவுளுடைய திட்டம் எப்படிப்பட்டது என்றால்,
எப்போது எதை செய்வேன் என்று சொல்லமாட்டார்.
எல்லாவற்றையும் மறைமுகமாகவே வைத்திருப்பார்.
ஒரு கல்லூரியில் நாம் சேரும்போதே நமக்கு நன்றாக தெரியும் அடுத்த மூன்று-நான்கு-ஐந்து
வருடங்களில் நான் இந்த படிப்பை முடிப்பேன் என்று.
2017-ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு நன்றாகவே தெரியும் நான் ஒழுங்காக படித்தேன்
என்றால் என்னால் 2020-ல் அந்த படிப்பை முடித்துவிட முடியும் என்று, இதுதான் உலகத்தின்
கணக்கு.
ஆண்டவருடைய
கணக்கு அப்படிப்பட்டது அல்ல, எதை எப்போது, எப்படி செய்வார் என்று
யாருக்கும் தெரியாது. ஆனால் ஏற்ற நேரம் வரும்போது
செய்வார். அந்த ஏற்ற நேரம் வரும் வரை நாம்
பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
யோசேப்பு
- கர்த்தர் சொன்ன நாள் வரைக்கும் காத்திருந்தான்.
மத்தேயு 2:
13
நாம்முடைய ஆண்டவர் எப்பொழுதுமே இந்த நேரத்தில் இது நடக்கும்,
இந்த நேரத்தில் நீ இதை செய்து முடிப்பாய் என்று எதையும் சொல்லமாட்டார்.
இயேசுவின் தகப்பன் யோசேப்பு – ஆண்டவர் தனக்கு சொன்ன நாள் வைர
காத்திருந்தார். இவர் ஒரு தச்சர். குடிமதிப்பு
எழுதவேண்டும் என்று பெத்லகேமிற்கு சென்றார்.
போய் திரும்பும் அளவுக்கு தேவையான பணத்தை மட்டுமே எடுத்துச் சென்றிருப்பார். ஆனால் ஆண்டவர் நான் உனக்குச் சொல்லும் வரை எகிப்தில்
இரு என்று சொன்னார். இரண்டு ஆண்டுகள இரு என்று சொல்லவில்லை. யோசேப்பும் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து ஆண்டவர் சொல்லும்
வரை எகிப்திலே குடியிருந்தார்.
இல்லை ஆண்டவரே எகிப்தில் நான் என்ன வேலை செய்வது, எப்படி என்
குடும்பத்தை நடத்துவது, அங்கு யார் எனக்கு வேலை தருவார்கள், நான் என் சொந்த ஊருக்கே
போய்விடுகிறேன். நீர் எப்படியாவது எங்களை காப்பாற்றும்
என்று சொல்லவில்லை.
எலியா -காத்திருந்தார்
1 இராஜாக்கள் 17: 3
பஞ்சகாலத்தில் கேரீத் ஆற்றண்டைக்கு போ, அங்கே நான் உன்னை போஷிப்பேன் என்று சொன்ன ஆண்டவர் எத்தனை நாட்கள் அங்கே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இருந்தபோதிலும், ஏலியா ஆண்டவர் சொல்லும் வரை அங்கேயே காத்திருந்தான்.
சவுல்:
- காத்திருக்கவில்லை
1 சாமுவேல் 13: 8, 9
சாமுவேல் தீர்க்கதரிசி எனக்காக ஏழு நாள் காத்திரு என்று சவுல்
ராஜாவிடம் சொன்னார். ஏழு நாள் காத்திருந்த
சவுலுக்கு ஏழாம் நாள் முடியும் வரை காத்திருக்க முடியவில்லை. ஏழாம் நாளில் சாமுவேல் தீர்க்கதரிசி வராததைக் கண்டு,
தானாகவே சர்வாங்க தகனபலியை செலுத்த துவங்குகிறான். அவன் பலிசெலுத்தி முடித்த உடனே சாமுவேல் தீர்க்கதரிசி
வந்துவிட்டார். ஏழாம் நாள் முழுமையாக அவன்
காத்திருந்திருப்பானானா இஸ்ரவேலின் ராஜ்யபாரம் அவனைவிட்டு நீங்கியிருக்காது. காத்திருந்தான், ஆனால் இத்தனை நாள் தான் காத்திருக்க வேண்டும் என்று தெரிந்திருந்தும், அவன்
முழுமையாக காத்திருக்காததால் ராஜ்யபாரத்தை இழந்தான்.
நாம் எப்படி இருக்கிறோம்,
கர்த்தருக்காக முழுமையாக, அவர் சொல்லும் வரை நாம் காத்திருக்கும்போது அவருடைய
ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஏசாயா 40:
31
பறவைகளின் ராஜா – கழுகு
கழுகு
பத்தாயிரம் (1000) அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது.
5
கிலோமீட்டர் தூரம் வரை தன் இழக்கை குறிவைக்கும் திறன் கொண்டது.
இறந்தை
விலக்கு, பறவைகளை சாப்பிடாது. வேட்டையாடி தான் உண்ணும்.
கழுகின்
ஆயுட்காலம் 70 வருஷம்.
40
வயதில் முதிர்ச்சியடைந்துவிடும். அதன் இறகு, நகம், அழகு எல்லாம் பெரியதாக வளர்ந்து
பெலன் குன்றி காணப்படும்.
தன் அழகை தானே உடைத்து, இறகுகளை கில்லி
எரிந்து, நகத்தை பாறையில் அடித்து உடைத்து, 150 நாட்களுக்கு பின் புதிய அழகு, புதிய
சிறகு, புதிய நகத்துடன் பறக்க துவங்கம்.
கழுகு 150 நாட்கள் தன்னை காயப்படுத்திக்கொண்டு
பொறுமையாக காத்திருந்ததால், ஆடுத்த முப்பது ஆண்டுகள் புதுபெலனைப் பெற்றுக்கொண்டு பறக்கிறது. நாமும் கூட கழுகைப்போல நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற
அவமானங்கள், தோல்விகள், காயங்கள், வலிகளை பொறுமையாய் தாங்கி, ஆண்டவருடைய சித்தத்திற்காக
காத்திருக்கும்போது புதுபெலனை பெற்று, இப்புவியில் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற முடியும்.
3. சொன்னவரோடு இரு: நிலைத்திருக்க
வேண்டும்
அசரியா
தீர்க்கதரிசி – ஆசா ராஜாவிடமும் யூதா, பென்யமீன் கோத்திரத்து மனுஷரிடம் சொன்ன
கர்த்தருடைய வார்த்தை:
2 நாளாகமம் 15: 2
நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழப்படிந்து, அவருக்காக வாழும்போது,
அவர் நம்மை வழிநடத்துவார், நாம் அவரை மறந்து, நமது மனவிருப்பத்தின்படி வாழ்ந்தோமானால்,
அவரும் நமை மறந்துவிடுவார்.
யோசேப்போடு
கர்த்தர் இருந்தார்.
காரணம் யோசேப்பு கர்த்தரோடு இருந்தார்.
ஆதியாகமம் 39: 2அ
1. அண்ணன்மார்களால் பகைக்கப்பட்டவன்.
2. அடிமையாக இருந்தவன்
3. சிறை சாலைக்கு தள்ளப்பட்டவன்
கஷ்டம், தோல்வி, அவமானம், வேதனை, துன்பம், கவலை எந்த சூழ்நிலையானாலும்
யோசேப்பு கர்த்தரோடு இருந்தார். எனவே கர்த்தர் யோசேப்போடே இருந்தார்.
ராஜாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்டார்.
நம்முடைய வாழ்விழும் வேதனை வரும்போது, சோதனை வரும்போது நாம்
யாரோடு நிற்கிறோம். கர்த்தரோடு நிற்கின்றோமா?
சிந்திப்போம்.
பேதுருவும்
யோவானும்
அப்போஸ்தலர் 4: 13
பேதுருவும் யோவானும் இயேசு கிறிஸ்துவோடு நிலைத்திருந்ததால் அதிகாரிகள் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு கிறிஸ்து அவர்களோடு இருந்ததால் அவர்களுடைய பேச்சிலே, நடக்கையிலே வித்தியாசம் தெரிந்தது. நாமும் இயேசுவோடு இருந்தால் நம்முடைய வாழ்க்கையையும் ஆண்டவர் மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.
நிலைத்திருந்தால்
கனிகொடுப்பீர்கள்
யோவான் 15: 4
கொடியாகிய நாம் திராட்சைச் செடியாகிய இயேசுவோடு நிலைத்திருக்கும்போது
மிகுந்த கனிகளை தர முடியும். தொடர்ந்த நாம்
சொன்னவரோடு பயணிக்கும்போது, அவர் தரும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த குறிப்பில் நீ எங்கே இருக்கிறாய்? என்ற தலைப்பின் அடிப்படையில்,
1. சொன்ன
இடத்தில் இரு
2. சொல்லும்
வரை இரு
3. சொன்னவரோடு
இரு
என்ற
மூன்று குறிப்புகளை மையமாக வைத்து, ஆண்டவருடைய வார்த்தையை தியானித்தோம். ஆண்டவர் நமக்கென்று குறித்திருக்கிற இடத்திலே, ஆண்டவர்
நம்மை நடத்தும் வரையிலும், அவரோடு இணைந்து நாம் நடக்கும்போது ஆண்டவர் நம்மை உயர்ந்த
இடத்தில் அமர வைப்பார்.
ஆண்டவர்
தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.