Type Here to Get Search Results !

LUKE 3 Bible Quiz Question With Answer in Tamil | The Gospel of LUKE | லூக்கா நற்செய்தி நூல் மூன்றாம் அதிகாரத்தின் கேள்வி பதில்கள் | Jesus Sam

==========================

லூக்கா சுவிசேஷம் கேள்வி பதில்கள்
அதிகாரம் மூன்று (3)
The Gospel Of LUKE Chapter Three (3)
Bible Quiz Question And Answer in Tamil
==========================

 01. திபேரியு ராயனின் இயற்பெயர் என்ன?

விடை: திபேரியு கிலாடிஸ் சீசர்

(லூக்கா 3: 1)

இவர் கி.பி.14 - கி.பி. 37 வரை ரோமப் பேரரசர். 15 ஆண்டுகள் மட்டும் ஆண்டிருப்பாரானால் கி.பி. 26 அல்லது கி.பி. 27 ஆக இருக்கக் கூடும்.

 

02. பிலாத்து இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: ஈட்டியை அணிந்தவர் அல்லது உரிஞ்சிக் குடிப்பவர்

(லூக்கா 3: 1)

பொந்தியு பிலாத்துவை யூதேயாவில் ஆளுநராக நியமித்தது திபேரியு. பொந்தியு பிலாத்து கி.பி.26 - கி.பி.36 வரை ஆண்டார்.

 

03. ஏரோது இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: வீரனின் முகக்கலை

(லூக்கா 3: 1)

இவர் பெரிய ஏரோதின் மகன் ஏரோது அந்திபா ஆகும். இவர் கலிலேயாவை கி.பி.4 - கி.பி.39 வரை ஆண்டார்.

 

04. பிலிப்பு இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: குதிரைப் பிரியன்

(லூக்கா 3: 1)

ஏரோது அந்திபாவின் சகோதரன் பிலிப்பு. இவர் குறுநில மன்னராக இத்துரேயா, திரக்கோனியா பகுதிக்கு ரோமர்களால் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 

05. லிசானியா இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: துயரின் முடிவு

(லூக்கா 3: 1)

இவர் அபிலேன் பகுதியின் குறுநில மன்னர் ஆவார்.

 


06. யோவான் வனாந்தரத்தில் பிரசங்கித்த போது பிரதான ஆசாரியனாக இருந்தது யார்?

விடை: அன்னா, காய்பா

(லூக்கா 3: 2)

அன்னா கி.பி.6 - கி.பி.15 வரை பிரதான ஆசாரியராக இருந்தார். காய்பா கி.பி.18 - கி.பி.37 பிரதான ஆசாரியராக இருந்தார். அன்னாவின் மருமகன் காய்பா

 

07. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?

விடை: ஏசாயா தீர்க்கதரிசி

(லூக்கா 3: 3,4,5)

3. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,

4. பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்,

5. கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. (ஏசாயா 40: 3,4,5)

 

08. ”விரியன் பாம்பு குட்டிகளே” இந்த வார்த்தை யார்? யாரைப் பார்த்து சொன்னது?

விடை: யோவான் ஸ்நானன் – ஜனங்களைப் பார்த்து சொன்னது

(லூக்கா 3: 7)

 

09. கோடரியானது எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?

விடை: மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது

(லூக்கா 3: 9)

 

10. யோவான் ஸ்நானகனை போதகர் என்றது யார்?

விடை: ஆயக்காரர்

(லூக்கா 3: 12)

ரோமர்கள் யூதர்களிடம் வரிப்பணம் சேர்க்க யூதரில் ஒருவரையே நியமித்தனர். இவர்களே ஆயக்காரர்கள். வரி வசூலிப்போர் சமய சடங்குகளுக்கு தீட்டானவர் என்றும், நாட்டு துரோகிகள் என்றும் யூதர்கள் எண்ணினர். ஆயக்காரருக்கு ரோமர்கள் ஊதியம் வழங்க மாட்டார்கள். ரோமர்கள் விதிக்கும் பணத்தை விட அதிகமான பணத்தை மக்களிடம் வசூலித்து தங்கள் ஊதியமாக வைத்துக் கொண்டனர் ஆயக்காரர்கள்.

 


11. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றது யார்?

விடை:  ஜனங்கள் ஆயக்காரர் போர்ச்சேவகர்

(லூக்கா 3: 10-14)

 

12. பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பவர் யார்?

விடை:இயேசு கிறிஸ்து

(லூக்கா 3: 16)

 

13. யோவானால் கடிந்துகொள்ளப்பட்டது யார்?

விடை: ஏரோது

(லூக்கா 3: 19)

இவர் காற்பங்கு தேசாதிபதி. ஏரோதியாளை மனந்ததின் நிமித்தம் கடிந்து கொள்ளப்பட்டார். ஏரோதியாள் பெரிய ஏரோதுவின் சகோதரியின் மகளும், ஏரோதின் சகோதரன் பிலிப்புவின் மனைவியுமாவாள். (மத்தேயு 14: 3,4), (மாற்கு 6: 17,18)

 

14. லூக்கா சுவிசேஷத்தில் திரித்துவம் வெளிப்பட்ட இடம் எது?

விடை: லூக்கா 3: 21, 22

பிதா - வானத்திலிருந்து உண்டான சத்தம் குமாரன் - ஞானஸ்நானம் பெறுபவர் பரிசுத்த ஆவி - புறாவாக இறங்கி வந்தவர்

 

15. இயேசு ஞானஸ்நானம் பெற்ற வயது என்ன?

விடை:  மூப்பது

(லூக்கா 3: 21-23)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.