Type Here to Get Search Results !

LUKE 2 லூக்கா சுவிசேஷம் அதிகாரம் இரண்டு கேள்வி பதில்கள் தமிழில் | Gospel of Luke Bible Quiz Question Answer Tamil | Jesus Sam

============================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி - பதில்கள்
இரண்டாம் அதிகாரம் (2)
The Gospel Of LUKE Question & Answer in Tamil
Chapter Two (2)
============================

01. அகஸ்துராயன் இவரின் இயற்பெயர் என்ன?

விடை: ஆக்டேவியன்

     (லூக்கா 2: 1)

     இயேசு கிறிஸ்துவின் காலத்தில் ரோம பேரரசராக இருந்தது இந்த அகஸ்துராயன்இவருக்கு அகஸ்து சீசர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

 

02. சீரியா நாட்டின் தேசாதிபதியின் பெயர் என்ன?

விடை: சிரேனியு

     (லூக்கா 2: 2)

     இவர் கி.பி. 6-ல் தேசாதிபதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

 

03. குடிமதிப்பு எழுத வேண்டும் என்று கட்டளையிட்டது யார்?

விடை: அகஸ்துராயன்

     (லூக்கா 2: 2)

     சீரியா நாட்டில் சிரேனியு தேசாதிபதியாக இருந்த காலத்தில் இந்த முதலாம் குடிமதிப்பு உண்டானது.

 

04. யோசேப்பு குடிமதிப்பு எழுத எங்கு இருந்து எங்கு சென்றான்?

விடை: நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றான்

     (லூக்கா 2: 5)

     கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத்திலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்கு சென்றான்.


05. பெத்லகேம் என்பதன் அர்த்தம் என்ன?

விடை: அப்பத்தின் வீடு

     (லூக்கா 2: 5)

     அப்பத்தின் வீடு என்பது எபிரேய அர்த்தம்பெத்லகேம் ஆனது எருசலேமிற்கு தெற்கே கடல் மட்டத்திலிருந்து சுமார் 850 மீட்டர் உயரத்தில் உள்ளது.



06. சத்திரத்தில் இடம் இல்லாததால் பிள்ளை (இயேசு) எங்கு இருந்தது?

விடை: முன்னணை

     (லூக்கா 2: 7)

     முன்னணை என்பது விலங்குகளின் தீவன தொட்டி இருக்கும் இடம்.

 

07. சுத்திகரிப்பின் நாட்கள் என்பது எத்தனை நாட்கள்?

விடை: முப்பத்து மூன்று

     (லூக்கா 2: 22)

     பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு யூத பெண்ணும் தீட்டுப்படுகிறாள்அந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.  33 நாட்கள் முடிந்த பிறகு தீட்டைக் கலைவதற்காக எருசலேமிற்கு சென்று பலி செலுத்த வேண்டும்அதன் பின் அவள் தூய்மையாகி சமுதாயத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவாள்.

 

08. இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருந்தவன் யார்? அவன் பெயர் என்ன?

விடை: சிமியோன்

     (லூக்கா 2: 25)

 

09. சிமியோன் இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: தேவன் கேட்கிறார்

     (லூக்கா 2: 25)

 

10. சிமியோன் இயேசுவைக் குறித்து எந்த மொழியில் பாடல் பாடினார்?

விடை: இலத்தீன் 

     (லூக்கா 2: 29-32)

      29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

     30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,

     31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.

     32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

 


11. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் யார்? யாரிடம் கூறியது?

விடை: சிமியோன்மரியாளிடம் சொன்னது

     (லூக்கா 2: 35)

 

12. குழந்தை இயேசுவை சந்தித்த பெண் தீர்க்கதரிசியின் பெயர் என்ன?

விடை: அன்னாள்

     (லூக்கா 2: 36)

     இவரது தந்தை பானுவேல், இவருடைய வயது 84.

 

13. பானுவேல் இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: தேவனின் முகம்

     (லூக்கா 2: 36)

 

14. அன்னாள் இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: தேவனின் ஈவு

     (லூக்கா 2: 36)

 

15. தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்து போதகர்களை வினாவியது யார்?

விடை: இயேசு கிறிஸ்து

     (லூக்கா 2: 46)

     அப்போது இயேசு கிறிஸ்துவின் வயது 12.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.