Type Here to Get Search Results !

LUKE 1 | Bible Quiz Question And Answer Tamil | லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் ஒன்று கேள்வி பதில்கள் | Jesus Sam

===============================
லூக்கா பைபிள் கேள்வி பதில்கள்
லூக்கா ஒன்றாம் அதிகாரம் (1)
The Gospel Of Luke Chapter - 1
Bible Quiz Question & Answer
====================

01. தேயோப்பிலுவே இதன் அர்த்தம் என்ன?

விடை: தேவனின் நண்பன்

(லூக்கா 1: 1)

தேவனின் நண்பன் என்பது கிரேக்க மொழி அர்த்தம். தேயோப்பிலு என்பவர் இயேசு கிறிஸ்துவின் சீடராக இருக்கலாம் அல்லது லூக்கா நற்செய்தி நூல் எழுத பண உதவி செய்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

02. சகரியா இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: கர்த்தர் நினைவுகூறுகிறார்

(லூக்கா 1: 5)

சகரியா ஆசாரியக் குடும்பத்தை சார்ந்தவன். வேதத்தில் முதல் பிரதான ஆசாரியன் ஆரோன். ஆரோனுடைய வம்சத்தை தாவீது 24 பிரிவுகளாக பிரிக்கிறார். அதில் எட்டாவது பிரிவின் தலைவன் அபியா. அபியாவின் ஆசாரிய வகுப்பில் சகரியா வருகிறார். ஒரு வருடத்தை 24 முறையாக பிரித்து அவரவர் முறைப்படி ஆசாரிய ஊழியம் செய்து வந்தனர்

 

03. எலிசபெத் இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: தேவன் சத்தியமானர்

(லூக்கா 1: 5)

 

04. ஆரோனின் குமாரத்திகளில் ஒருத்தி யார்?

விடை: எலிசபெத்

(லூக்கா 1: 5)

 

05. யோவான் இப்பெயரின் அர்த்தம் என்ன?

விடை: கர்த்தர் கிருபையுள்ளவர்

(லூக்கா 1: 13)

 


06. எலியாவின் ஆவியும், பலமும் உடையவன் யார்?

              யோவான் 

     (லூக்கா 1: 17)

 

07. எலியா இப்பெயரின் அர்த்தம் என்ன?

              கர்த்தர் என் தேவன்

     (லூக்கா 1: 17)

     இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு எலியா இஸ்ரவேலின் தீர்க்கதரிசிநியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கும்படி எலியா மீண்டும் வருவார் என தீர்க்கர்கள் கூறினர்.  (மல்கியா 3: 1-4), (மல்கியா 4: 5,6).  எனவே யோவான் ஸ்நானகனை எலியா என்று எண்ணினர்.

 

08. காபிரியேல் இப்பெயரின் அர்த்தம் என்ன?

               கர்த்தரின் பலம் மிக்க மனிதன்

     (லூக்கா 1: 19)

     இந்த தூதன் தானியேலுக்கும் தரிசனமானார்.  

     (தானியேல் 8: 16), (தானியேல் 9: 21)

  

09. காபிரியேல் தூதன் மரியாளிடம் பேசிய இடம் எது?

               கலிலேயாவிலுள்ள நாசரேத்

     (லூக்கா 1: 26,27)

     இச்சிற்றூர் பழைய ஏற்பாட்டில் ஒரு முறை கூட இடம்பெறவில்லைகி.மு 63-ல் இச்சிற்றூரை ரோமர்கள் கைப்பற்றினர்.


10. யோசேப்பு இப்பெயரின் அர்த்தம் என்ன?

               தேவன் பெருகப்பண்ணுகிறார்

     (லூக்கா 1: 27)


 

11. மரியாள் இப்பெயரின் அர்த்தம் என்ன?

               உயர்ந்த

     (லூக்கா 1: 27)

 

12. இயேசு இப்பெயரின் அர்த்தம் என்ன?

               கர்த்தர் மீட்பர்

     (லூக்கா 1: 31)

 

 13. சகரியா எங்கு வசித்து வந்தான்?

               மலைநாட்டில் யூதேயாவிலுள்ள ஒரு பட்டணத்தில்

     (லூக்கா 1: 39,40)

 

14. யூத ஆண் பிள்ளைகள் எத்தனையாவது நாளில் விருத்தசேதனம் பண்ண வேண்டும்?

               எட்டு

     (லூக்கா 1: 59)

     யூத ஆண் பிள்ளைகள் எல்லோரும் நான் ஆண்டவருக்கு சொந்தம் என்று காண்பிக்கும் பொருட்டு எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ண வேண்டும்.

     (ஆதியாகமம் 17: 9-14), (லேவியராகமம் 12: 3)

 

15. யோவான் வளர்ந்த இடம் எது?

               பாலைவனம்

     (லூக்கா 1: 80)

     எருசலேமிற்கும், சவக்கடலுக்கும் நடுவில் உள்ள யூதேயாவின் பாலைவனத்தில் தங்கியிருக்கலாம்.

     யோவான் வனாந்தரத்தில் அருளுரைப் பணி தொடங்கிய போது (இஸ்ரவேலுக்கு தன்னை காண்பித்த போது) அவருடைய வயது 30 ஆக இருக்கலாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.