Type Here to Get Search Results !

Luke 4 Bible Question And Answer in Tamil | லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள் | Jesus Sam

================
லூக்கா சுவிசேம் கேள்வி பதில்கள்
அதிகாரம் - நான்கு (4)
The Gospel of Luke Chapter - 4
Bible Quiz Question With Answer in Tamil
=====================

01. இயேசு கிறிஸ்து பிசாசினால் எத்தனை நாள் சோதிக்கப்பட்டார்?

பதில்: நாற்பது நாள்

     (லூக்கா 4: 2)

     வேதாகமத்தில் 40 என்பது மிக முக்கிய எண் ஆகும்.

அநேக முறை நாற்பது என்ற எண் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

     1. நோவா காலத்து ஜலப்பிரளயம் 40 நாட்கள்.

(ஆதியாகமம் 7: 17)

     2. இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணின வருடம் 40.

(உபாகமம் 2: 7)

     3. குற்றம் செய்தவனை 40 அடிகள் அடிக்கலாம்.

(உபாகமம் 25: 3)

     4. கோலியாத் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட நாட்கள் 40.

(I சாமுவேல் 17: 16)

     5. எலியா நடந்து சென்ற (ஓரேப் பர்வதம்) நாட்கள் 40.

(I இராஜாக்கள் 19: 8)


02. மனுஷன் எதினால் பிழைப்பான் என்று இயேசு கிறிஸ்து பிசாசிடம் சொன்னார்?

பதில்: தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினால் பிழைப்பான் என்று சொன்னார்

     (லூக்கா 4: 4)

     சாத்தானின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் இயேசு கிறிஸ்து வேத வசனத்தின் மூலமாகவே பதில் அளிக்கிறார்.

     (உபாகமம் 8: 3)


03. பணிந்து கொண்டு, ஆராதனை செய்வதற்கு உரியவர் யார்?

பதில்: தேவனாகிய கர்த்தர்

     (லூக்கா 4: 8)

     இயேசு கிறிஸ்து கூறிய பதில் வசனம் I சாமுவேல் 7: 3.


04. பிசாசானவன் யாரை சோதிக்க நினைத்தான்?

பதில்: தேவனாகிய கர்த்தரை

     (லூக்கா 4: 12)

     இயேசு கிறிஸ்து கூறிய பதில் வசனம் சங்கீதம் 78: 41,56.

 

05. இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்பட்ட பின்பு சென்ற இடம் எது?

பதில்: கலிலேயா

     (லூக்கா 4: 14)

     இயேசு கிறிஸ்து பெரும்பாலும் பணியாற்றிய இடம் கலிலேயாபெத்லகேமில் பிறந்தாலும், நாசரேத்தில் வளர்க்கப்பட்டாலும், கலிலேயாவில் உள்ள கப்பர்நகூம் என்ற இடத்தையே தலைமையிடமாகக் கொண்டு ஊழியத்தை நிறைவேற்றினார். 


06. இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் வாசித்த புத்தகம் எது?

பதில்: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்

     (லூக்கா 4: 17)

     ஏசாயா இப்பெயரின் அர்த்தம் கர்த்தர் இரட்சிக்கிறார்.

     ஏசாயா கி.மு. 740 - கி.மு. 701 வரை யூதாவில் தீர்க்கதரிசியாக இருந்தார்.

     ஓய்வு நாள் என்பது வாரத்தின் கடைசி நாள்அந்த நாளில் இயேசு கிறிஸ்து தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் உள்ள ஆலயத்திற்கு செல்கிறார்.


07. இயேசு கிறிஸ்து பயன்படுத்திய பழமொழி எது?

பதில்: வைத்தியனே உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

     (லூக்கா 4: 23)

  

08. எவன் தன் ஊரில் அங்கிகரிக்கப்பட மாட்டான்?

பதில்: தீர்க்கதரிசி 

     (லூக்கா 4: 24)

  

09. எலியாவின் காலத்தில் பஞ்சம் எத்தனை நாள் ஏற்பட்டது?

பதில்: மூன்று வருஷமுமு் ஆறு மாதமும்

     (லூக்கா 4: 25)

     எலியா இப்பெயரின் அர்த்தம் கர்த்தர் என் தேவன்

  

10. எலியா பஞ்ச காலத்தில் யாரிடம் அனுப்பப்பட்டார்?

பதில்: விதவையிடம்

     (லூக்கா 4: 26)

     சீதோன் நாட்டில், சரெப்தா ஊரில் இருந்த விதவையிடம்

     இஸ்ரவேலர் நாட்டில் எத்தனையோ விதவைகள் இருந்தபோதும் எலியா அந்திய ஸ்திரியாகிய சீதோன் நாட்டைச் சேர்ந்த விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டார் என்று இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.

     (I இராஜாக்கள் 17: 1-15)


11. எலிசா சொஸ்தமாக்கிய குஷ்டரோகியின் பெயர் என்ன?

பதில்: நாகமான்

     (லூக்கா 4: 27)

     எலிசா இப்பெயரின் அர்த்தம் தேவன் அவர் இரட்சிக்கிறார்.

     நாகமான் இப்பெயரின் அர்த்தம் ஆற்றுகிறவர்.

     இவர் சீரியா நாட்டு படைத்தளபதிஇவரும் ஒரு புறஜாதியர்எலியாவின் நாட்களில் எத்தனையோ குஷ்டரோகிகள் இஸ்ரவேல் நாட்டில் இருக்க இவர் ஒருவர் மட்டுமே சுகமடைந்ததை இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.

      (II இராஜாக்கள் 5: 1-14)

  

12. இயேசு கிறிஸ்துவை எங்கிருந்து தள்ளிவிட நினைத்தனர்?

பதில்: செங்குத்தான மலை சிகரம்

     (லூக்கா 4: 29)

     இந்த இடத்தில் இயேசு கிறிஸ்து ஆவியானவரால் கடந்து போகவில்லைஇயேசு கிறிஸ்துவுக்கு 12 சீஷர்கள் தவிர மற்ற அநேக மறைமுக சீஷர்களும் உண்டுஅவர்கள் உதவியுடன் இங்கிருந்து கடந்து செல்லுகிறார்.

  

13. இயேசு கிறிஸ்து அசுத்த ஆவிகளுக்கு எப்படி கட்டளை கொடுத்தார்?

பதில்: அதிகாரத்தோடும், வல்லமையோடும்

     (லூக்கா 4: 36)

  

14. யாருக்கு ஜுரம் இருந்தது?

பதில்: சீமோனின் மாமி

     (லூக்கா 4: 38)

     சீமோன் இப்பெயரின் அர்த்தம் கேட்டல்.

     இவர் பேதுரு என்றும் அழைக்கப்பட்டார்இயேசு கிறிஸ்துவாள் தெரிந்து கொள்ளப்பட்ட முதல் சீஷர் இவர்.

 

15. நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றது யார்?

பதில்: அசுத்த ஆவி பிடித்த மனுஷன்

     (லூக்கா 4: 41)

 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.