Type Here to Get Search Results !

Luke 5 Bible Question With Answer in Tamil | லூக்கா சுவிசேஷம் பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

============================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
அதிகாரம் ஐந்து (5)
The Gospel Of LUKE Q&A - 5
Bible Quiz Question And Answer in Tamil
===============================

01. இயேசு கிறிஸ்து கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, எத்தனைப் படவுகளைக் கண்டார்?

பதில்: இரண்டு படவுகளைக் கண்டார்

     (லூக்கா 5: 1)

     இது கலிலேயா கடலுக்கு வழங்கப்பட்ட வேறொரு பெயர்.

     இது யோர்தான் நதிக்கு வடபகுதியில் உள்ள ஏரி எனப்படும்.

     இது 23 கி.மீ. நீளமும், 9 கி.மீ. அகலமும் உள்ளது.

     ரோமர்கள் இக்கடலை அவர்கள் தலைவரின் பெயரால் திபேரியா கடல் என்பர்.

 

02. இயேசு கிறிஸ்து உட்கார்ந்த படகின் சொந்தக்காரன் யார்?

பதில்: சீமோன்

     (லூக்கா 5: 3)

 

03. ”ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை” என்றது யார்?

பதில்: சீமோன்

     (லூக்கா 5: 5)

     சீமோன் இப்பெயரின் அர்த்தம் கேட்டல்.

 

04. இயேசுவின் பாதத்தில் விழுந்து, ஆண்டவரே நான் பாவியான மனுஷன் என்றது யார்?

பதில்: சீமோன் பேதுரு

     (லூக்கா 5: 8)

 

05. சீமோனின் கூட்டாலிகள் பெயர் என்ன?

பதில்: யோவான், யாக்கோபு.

     (லூக்கா 5: 10)

     யோவான் இப்பெயரின் அர்த்தம் தேவன் கிருபை உள்ளவர்.

      யாக்கோபு இப்பெயரின் அர்த்தம் குதிகாலைப் பிடிப்பவன்.

     யோவான், யாக்கோபு இவர்களின் தகப்பன் செபதேயு.

     இயேசு கிறிஸ்து இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயரிட்டார்இடிமுழக்க மக்கள் என்பது இதன் அர்த்தம்.

 


06. "சித்தமுண்டு சுத்தமாகு" யார்? யாரிடம்? கூறியது?

பதில்: இயேசு கிறிஸ்துகுஸ்டரோகியிடம் கூறியது

     (லூக்கா 5: 12,13)

 

07. சொஸ்தமாக்கப்பட்ட குஷ்டரோகியிடம் இயேசு கிறிஸ்து, யார் கட்டளையிட்ட படி பலிசெலுத்த கட்டளையிட்டார்?

பதில்: மோசே கட்டளையிட்டபடி பலி செலுத்த கட்டளையிட்டார்

     (லூக்கா 5: 14)

     சொஸ்தமான ஒருவர் ஆசாரியரால் பரிசோதிக்கப்பட்ட பின்பே யூத சமுதாயத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்

     பலி செலுத்த கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் ஆட்டுக்குட்டி, ஒலிவ எண்ணெய் கலந்த மாவு.

 


08. அதிசயமான காரியங்களை இன்று  கண்டோம் என்றது யார்?

பதில்: கலிலேயா, யூதேயா நாடுகளிலுள்ள  கிராம மக்கள்

     (லூக்கா 5: 17,26)

 

09. ”தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்” என்றது யார்?

பதில்: வேதபாரகரும், பரிசேயரும்

     (லூக்கா 5: 21)

 

10. பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரமுடையவர் யார்?

பதில்: மனுஷ குமாரன்

     (லூக்கா 5: 24)

 

11. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்?

பதில்:  லேவி

     (லூக்கா 4: 27)

     இவரை மத்தேயு என்றும் அழைப்பர். (மத்தேயு 9: 9-13)

     பெருவழிச் சாலைகளில் செல்லும் மக்கள் மற்றும் வணிகர்களிடம் வரி வசூலிப்பது இவரின் பணி.

     மத்தேயு இப்பெயரின் அர்த்தம் கர்த்தரின் தானம்.

     லேவி இப்பெயரின் அர்த்தம் சேருதல்.

 

12. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தது யார்?

பதில்: வேதபாரகர், பரிசேயர்

     (லூக்கா 5: 30)

 

13. அநேக தரம் உபவாசித்து ஜெபம் பண்ணியது யார்?

பதில்: யோவானுடைய சீஷர், பரிசேயருடைய சீஷர்

     (லூக்கா 5: 33)

     இங்கு யோவான் என்பது திருமுழுக்கு யோவானைக் குறிக்கிறது. (யோவான்ஸ்நானகன்)

 

14.மனவாளனுடைய தோழர்கள் எப்போது உபவாசிப்பார்கள்?

பதில்: மனவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாளில் உபவாசிப்பார்கள்

     (லூக்கா 5: 34,35)

     இங்கு மணவாளன் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. (மத்தேயு 9: 12), (மாற்கு 2: 19)

 

15. புது ரசத்தை விரும்பாதவன்?

பதில்: பழைய ரசத்தைக் குடித்தவன் புது ரசத்தை விரும்ப மாட்டான்

     (லூக்கா 5: 39)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.