Type Here to Get Search Results !

Luke 6 Bible Quiz Question And Answer in Tamil | லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் ஆறு கேள்வி பதில்கள் | Jesus Sam

================
லூக்கா சுவிசேஷம் வினா விடைகள்
ஆறாம் அதிகாரம் (6)
The Gospel Of LUKE Chapter (6)
Bible Quiz Question With Answer in Tamil
================

01. இயேசு கிறிஸ்து எந்த நாளில் பயிர் வழியே நடந்து சென்றார்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: C) ஆயத்த நாள்
    (லூக்கா 6:1)

02. கதிர்களை கொய்து, கைகளினால் நிமிட்டி தின்றது யார்?
A) இயேசு
B) இயேசுவின் சீஷர்கள்
C) பரிசேயர்
Answer: B) இயேசுவின் சீஷர்கள்
    (லூக்கா 6:1)

03. ஓய்வு நாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டது யார்?
A) இயேசு
B) வேதபாரகரில் சிலர்
C) பரிசேயரில் சிலர்
Answer: C) பரிசேயரில் சிலர்
    (லூக்கா 6:2)

04. ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களை புசித்தது யார்?
A) மோசேயும் அவனோடிருந்தவர்களும்
B) எலியாவும் அவனோடிருந்தவர்களும்
C) தாவீதும் அவனோடிருந்தவர்களும்
Answer: C) தாவீதும் அவனோடிருந்தவர்களும்
    (லூக்கா 6:3)

05. சூம்பின வலதுகையையுடைய மனுஷன் இருந்த இடம் எது?
A) தேவாலயம்
B) ஜெப ஆலயம்
C) பெதஸ்தா குளம்
Answer: B) ஜெப ஆலயம்
    (லூக்கா 6:6)

06. இயேசு பனிரெண்டு பேரை தெரிந்துகொண்டு அவர்களுக்கு என்ன பேரிட்டார்?
A) சீஷர்கள்
B) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
C) அப்போஸ்தலர்
Answer: C) அப்போஸ்தலர்
    (லூக்கா 6:13)

07. பேதுருவின் சகோதரன் பெயர் என்ன?
A) யோவான்
B) யாக்கோபு
C) அந்திரேயா
Answer: C) அந்திரேயா
    (லூக்கா 6:14)

08. அல்பேயுவின் குமாரன் பெயர் என்ன?
A) யோவான்
B) யாக்கோபு
C) அந்திரேயா
Answer: B) யாக்கோபு
    (லூக்கா 6:15)

09. உங்கள் சத்துருக்களை __________.
A) சிநேகியுங்கள்
B) நன்மை செய்யுங்கள்
C) ஆசீர்வதியுங்கள்
Answer: A) சிநேகியுங்கள்
    (லூக்கா 6:27)

10. உங்களை சபிக்கிறவர்களை __________.
A) சிநேகியுங்கள்
B) நன்மை செய்யுங்கள்
C) ஆசீர்வதியுங்கள்
Answer: C) ஆசீர்வதியுங்கள்
    (லூக்கா 6:28)

11. உன் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு எதை எடுத்துக்கொள்ள தடை பண்ணாதே?
A) பணம்
B) வஸ்திரம்
C) கச்சை
Answer: B) வஸ்திரம்
    (லூக்கா 6:29)

12. யார் குருவுக்கு மேற்பட்டவன் அல்ல?
A) சீஷன்
B) வேலையாள்
C) தேறினவன்
Answer: A) சீஷன்
    (லூக்கா 6:40)

13. முட்செடியில் எந்த பழங்களை பறிப்பதில்லை?
A) அத்திப்பழம்
B) திராட்சைப்பழம்
C) நெருஞ்சிப்பழம்
Answer: A) அத்திப்பழம்
    (லூக்கா 6:44)

14. நெருஞ்சிச் செடியில் எந்த பழங்களை பறிக்கிறதில்லை?
A) அத்திப்பழம்
B) திராட்சைப்பழம்
C) நெருஞ்சிப்பழம்
Answer: B) திராட்சைப்பழம்
    (லூக்கா 6:44)

15. இருதயத்தின் நிறைவினால் _________ .
A) வாய் பேசும்
B) ஞானம் விளங்கும்
C) செவிகள் திறக்கும்
Answer: A) வாய் பேசும்
    (லூக்கா 6:45)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.