Type Here to Get Search Results !

Luke 9 | லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் ஒன்பது பைபிள் வினா விடைகள் தமிழில் | The Gospel Of Luke Bible Question With Answer in Tamil | Jesus Sam

=================
லூக்கா சுவிசேஷம் அதிகாரம் ஒன்பது (9)
வேதாகம கேள்வி பதில்கள்
The Gospel Of LUKE Chapter Nine (9)
Bible Quiz Question And Answer in Tamil
=================

01. இயேசு சீஷர்களிடம் எத்தனை அங்கி கொண்டு போக வேண்டாம் என்றார்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
    (லூக்கா 9:3)

02. காற்பங்கு தேசாதிபதி யார்?
A) ஏரோது
B) பிலாத்து
C) பிலிப்பு
Answer: A) ஏரோது
    (லூக்கா 9:7)

03. யோவானை சிரைச்சேதம் பண்ணியவன் யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: A) ஏரோது
    (லூக்கா 9:7-9)

04. ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம்
B) ஐயாயிரம்
C) ஏழாயிரம்
Answer: B) ஐயாயிரம்
    (லூக்கா 9:14)

05. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் ஜனங்கள் எத்தனை எத்தனை பேராக பந்தியிருந்தார்கள்?
A) 30, 30
B) 50, 50
C) 100, 100
Answer: B) 50, 50
    (லூக்கா 9:14)

06. ஐந்து அப்பம், இரண்டு மீன்கள் அற்புதத்தில் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?
A) ஏழு
B) பனிரெண்டு
C) பதினைந்து
Answer: B) பனிரெண்டு
    (லூக்கா 9:17)

07. நீர் தேவனுடைய கிறிஸ்து என்றது யார்?
A) பேதுரு
B) சீஷர்கள்
C) பிசாசிகள்
Answer: A) பேதுரு
    (லூக்கா 9:20)

08. மனுஷகுமாரன் எத்தனையாவது நாளில் உயிர்த்தெழுவதாக சீஷர்களிடம் கூறினார்?
A) மூன்றாம் நாளில்
B) ஐந்தாம் நாளில்
C) ஏழாம் நாளில்
Answer: A) மூன்றாம் நாளில்
    (லூக்கா 9:22)

09. இயேசு ஜெபம் பண்ணும்படி மலைக்கு அழைத்துச் சென்ற சீஷர்கள் எத்தனை பேர்?
A) ஒன்று
B) மூன்று
C) பனிரெண்டு
Answer: B) மூன்று (பேதுரு, யோவான், யாக்கோபு)
    (லூக்கா 9:28)

10. இயேசு மலையில் ஜெபிக்கையில் எது வெண்மையாக பிரகாசித்தது?
A) முகரூபம்
B) மலை
C) வஸ்திரம்
Answer: C) வஸ்திரம்
    (லூக்கா 9:29)

11. மலையில் இயேசு மறுரூபமான போது அவரோடு சம்பாஷித்த இருவர் யார்?
A) மோசே, எலியா
B) எலியா, எலிசா
C) ஏனோக்கு, எலியா
Answer: A) மோசே, எலியா
    (லூக்கா 9:30)

12. நாம் இங்கே இருக்கிறது நல்லது, இங்கே மூன்று கூடாரங்கள் போடுவோம் என்றது யார்?
A) இயேசு
B) பேதுரு
C) யோவான்
Answer: B) பேதுரு
    (லூக்கா 9:33)

13. இவர் என்னுடைய நேச குமாரன் இவருக்கு செவிகொடுங்கள் என்ற சத்தம் எங்கிருந்து வந்தது?
A) மேகம்
B) வானம்
C) பரலோகம்
Answer: A) மேகம்
    (லூக்கா 9:35)

14. ஆண்டவரே, எலியா செய்தது போல, வானத்திலிருந்து அக்கினி இறக்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு சித்தமா என்றது யார்?
A) பேதுரு, யோவான்
B) யோவான், பிலிப்பு
C) யாக்கோபு, யோவான்
Answer: C) யாக்கோபு, யோவான்
    (லூக்கா 9:54)

15. கலப்பையின் மேல் தன் கைவைத்து பின்னிட்டு பார்க்கிறவன் எதற்கு தகுதியுள்ளவன் அல்ல என்று இயேசு சொன்னார்?
A) ஊழியம்
B) பரலோகம்
C) தேவனுடைய ராஜ்யம்
Answer: C) தேவனுடைய ராஜ்யம்
    (லூக்கா 9:62)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.