Type Here to Get Search Results !

MATTHEW 28 Bible Quiz Question With Answer in Tamil | மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் 28 கேள்வி பதில்கள் | Jesus Sam

===============================
மத்தேயு அதிகாரம் இருபத்து எட்டு (28)
பைபிள் கேள்வி பதில்கள் தமிழில்
The Gospel Of MATTHEW Chapter - 28
Bible Quiz Question & Answer in Tamil
==================================

01. வாரத்தின் முதல் நாள் கல்லறையை பார்க்க வந்தது யார்?

A) பேதுருவும், யோவானும்

B) மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்

C) பரிசேயரும், சதுசேயரும்

Answer: B) மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்

     (மத்தேயு 28: 1)

 

02. இயேசு உயிர்த்தெழுந்த நாள் எந்த நாள்?

A) ஓய்வு நாள்

B) வாரத்தின் முதல் நாள்

C) ஆயத்த நாள்

Answer: B) வாரத்தின் முதல் நாள்

     (மத்தேயு 28: 1)

 

03. கர்த்தருடைய தூதன் வந்த போது எது மிகவும் அதிர்ந்தது?

A) பூமி

B) கல்லறை

C) வானம்

Answer: A) பூமி

     (மத்தேயு 28: 2)

 

04. கல்லறையின் வாசலிலிருந்த கல்லின்மேல் உட்கார்ந்தது யார்?

A) மரியாள்

B) கர்த்தருடைய தூதன்

C) காவலர்கள்

Answer: B) கர்த்தருடைய தூதன்

     (மத்தேயு 28: 2)

 

05. கர்த்தருடைய தூதனின் ரூபம் எப்படி இருந்தது?

A) மின்னல்

B) உறைந்த மழை

C) சூரியன்

Answer: A) மின்னல்

     (மத்தேயு 28: 3)

 


06. கர்த்தருடைய தூதனின் வஸ்திரம் எப்படி இருந்தது?

A) மின்னல்

B) உறைந்த மழை

C) சூரியன்

Answer: B) உறைந்த மழை

     (மத்தேயு 28: 3)

 

07. கர்த்தருடைய தூதனைப் பார்த்து பயந்து திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனது யார்?

A) மரியாள்

B) தோட்டக்காரர்

C) காவலாளர்

Answer: C) காவலாளர்

     (மத்தேயு 28: 4)

 

08. கல்லறைக்கு வந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள் என்று சொன்னது யார்?

A) தூதன்

B) சீஷர்கள்

C) இயேசு

Answer: A) தூதன்

     (மத்தேயு 28: 5)

 

09. “கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்“ என்றது யார்?

A) தூதன்

B) சேவகர்கள்

C) ஸ்திரிகள்

Answer: A) தூதன்

     (மத்தேயு 28: 6)

 

10. கல்லறைக்கு வந்த ஸ்திரீகளை நோக்கி: வாழ்க என்றது யார்?

A) தூதன்

B) சீஷர்கள்

C) இயேசு

Answer: C) இயேசு

     (மத்தேயு 28: 9)

 


11. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?

A) கலிலேயா

B) ஒலிவ மலை

C) நாசரேத்

Answer: A) கலிலேயா

     (மத்தேயு 28: 10)

 

12. இயேசு உயிர்த்தெழுந்ததை பிரதான ஆசாரியருக்கு அறிவித்தது யார்?

A) ஸ்திரிகள்

B) காவல் சேவகர்கள்

C) சீஷர்கள்

Answer: B) காவல் சேவகர்கள்

     (மத்தேயு 28: 11)

 

13. சேவகருக்கு வேண்டிய பணத்தை கொடுத்து பொய் சொல்ல சொன்னது யார்?

A) மூப்பர்

B) பிரதான ஆசாரியர்

C) வேதபாரகர்

Answer: B) பிரதான ஆசாரியர் (மூப்பரோடு ஆலோசனை பண்ணி இதை பொய் சொல்ல சொன்னார்கள்)

     (மத்தேயு 28: 12, 13)

 

14. பிரதான ஆசாரியர் இயேசுவின் சரீரத்தை யார் களவாய் கொண்டு போனதாக சொல்லச் சொன்னார்கள்?

A) சீஷர்கள்

B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு

C) சிரேனே ஊரான் சீமோன்

Answer: A) சீஷர்கள்

     (மத்தேயு 28: 13)

 

15. இயேசு தங்களுக்கு குறித்த மலைக்கு போன சீஷர்கள் எத்தனை பேர்?

A) பத்து பேர்

B) பதினோரு பேர்

C) பனிரெண்டு பேர்

Answer: B) பதினோரு பேர்

     (மத்தேயு 28: 16)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.