மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள்
அதிகாரம் இருபத்து ஏழு (27)
The Gospel Of MATTHEW (Chapter -27)
Bible Quiz Question With Answer in Tamil
====================================
01. பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் இயேசு
கிறிஸ்துவை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணி, அவரை ஒப்புக்கொடுத்த தேசாதிபதியின்
பெயர் என்ன?
A) காய்பா
B) பொந்தியுபிலாத்து
C) அண்ணா
Answer: B) பொந்தியுபிலாத்து
(மத்தேயு 27: 2)
02. யூதாஸ் காரியோத்தின் முப்பது வெள்ளியை வைத்து வாங்கிய நிலத்தின் பெயர்?
A) சிவப்பு நிலம்
B) சாபிக்கப்பட்ட நிலம்
C) இரத்த நிலம்
Answer: C) இரத்த நிலம்
(மத்தேயு 27: 3, 7, 8)
03. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்கு கிரயமாகிய முப்பது வெள்ளியை குயவனுடைய நிலத்திற்காக கொடுத்தார்கள் என்று சொன்ன தீர்க்கதரிசி?
A) ஏசாயா
B) எசேக்கியா
C) எரேமியா
Answer: C) எரேமியா
(மத்தேயு 27: 10)
04. இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடு பட்டது?
A) பிலாத்து
B) பிலாத்துவின் மனைவி
C) நூற்றுக்கு அதிபதி
Answer: B) பிலாத்துவின் மனைவி
(மத்தேயு 27: 19)
05. இவனுடைய இரத்தபழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்றது?
A) மூப்பர்
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
(மத்தேயு 27: 25)
06. இயேசுவை வாரினால் அடித்தது?
A) தேசாதிபதியின் சேவகர்
B) பிரதான ஆசாரியரின் சேவகர்
C) ஏரோதின் சேவகர்
Answer: A) தேசாதிபதியின் சேவகர்
(மத்தேயு 27: 27)
07. இயேசுவின் சிலுவையை சுமந்த சீமோன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
A) சிரேன்
B) பெத்தானியா
C) கலிலேயா
Answer: A) சிரேன்
(மத்தேயு 27: 32)
08. கொல்கொதா என்பதன் அர்த்தம் என்ன?
A) கபாலஸ்தலம்
B) கெத்செமனே
C) கெனேசரேத்
Answer: A) கபாலஸ்தலம்
(மத்தேயு 27: 33)
09. எந்த மணி நேரத்தில் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?
A) மூன்றாம் மணி நேரம் முதல் ஒன்பதம் மணி நேரம் வரை
B) மூன்றாம் மணி நேரம் முதல் ஆறாம் மணி நேரம் வரை
C) ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை
Answer: C) ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை
(மத்தேயு 27: 45)
10. இயேசு ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று கூப்பிட்ட நேரம் எது?
A) மூன்றாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஒன்பதாம் மணி நேரம்
(மத்தேயு 27: 46)
11. மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றது யார்?
A) பிலாத்து
B) நூற்றுக்கு அதிபதி
C) பிலாத்து மனைவி
Answer: B) நூற்றுக்கு அதிபதி
(மத்தேயு 27: 54)
12. இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கையில்,
அவருக்கு ஊழியம் செய்யும்படி எங்கிருந்து வந்த ஸ்திரீகள் தூரத்திலே நின்று அவரை பார்த்துக்கொண்டிருந்தார்கள்?
A) கலிலேயா
B) எருசலேம்
C) நாசரேத்
Answer: A) கலிலேயா
(மத்தேயு 27: 55)
13. அரிமத்தியா ஊரில் இருந்த இயேசுவின் சீஷன் பெயர் என்ன?
A) சீமோன்
B) யோசேப்பு
C) மத்தேயு
Answer: B) யோசேப்பு
(மத்தேயு 27: 57)
14. பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கியது யார்?
A) சிரேனே ஊரானாகிய சீமோன்
B) அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு
C) கலிலேயனாகிய யாக்கோபு
Answer: B) அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு
(மத்தேயு 27: 58)
15. பிலாத்துவினிடத்திற்கு போய், இயேசு கிறிஸ்துவை எத்தன் என்றது யார்?
A) பரிசேயர், சதுசுயர்
B) பிரதான ஆசாரியர், பரிசேயர்
C) வேதபாரகர், பரிசேயர்
Answer: B) பிரதான ஆசாரியர், பரிசேயர்
(மத்தேயு 27: 63)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.