Type Here to Get Search Results !

MATTHEW 26 | The Gospel of Matthew Bible Quiz Question & Answer in Tamil | மத்தேயு சுவிசேஷம் பைபிள் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

===========================
மத்தேயு நற்செய்தி நுல் அதிகாரம் இருபத்து ஆறு (26)
வேதாகம வினா விடைகள் தமிழில்
The Gospel Of MATTHEW (Chapter - 26)
Bible Quiz Question Answer in Tamil
===============================


01. எந்த பண்டிகையின் போது மனுஷகுமாரன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்படுவார்?

A) பஸ்கா பண்டிகை

B) கூடாரப்பண்டிகை

C) அப்பப்பண்டிகை

Answer: A) பஸ்கா பண்டிகை

     (மத்தேயு 26: 2)

 

02. இயேசுவை தந்திரமாய் பிடித்துக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணின பிரதான ஆசாரியன் பெயர் என்ன?

A) பரபாஸ்

B) அண்ணா

C) காய்பா

Answer: C) காய்பா

     (மத்தேயு 26: 3, 57)

 

03. பெத்தானியாவில் குஷ்டரோகியாய் இருந்தது யார்?

A) லாசரு

B) சீமோன்

C) மாற்கு

Answer: B) சீமோன்

     (மத்தேயு 26: 6)

 

04. இயேசு பெத்தானியாவில் யாருடைய வீட்டில் தங்கியிருந்தார்?

A) லாசரு

B) மாற்கு

C) சீமோன்

Answer: C) சீமோன்

     (மத்தேயு 26: 6)

 

05. யூதாஸ்காரியோத்து: நான் இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன் என்று யாரிடம் சொன்னான்?

A) வேதபாரகர்

B) பிரதான ஆசாரியர்

C) ஐனத்தின் மூப்பர்

Answer: B) பிரதான ஆசாரியர்

     (மத்தேயு 26: 14, 15)



06. இயேசுவும், சீஷர்களும் ஸ்தோத்திரப்பாட்டை பாடிய பின்பு சென்ற இடம் எது?

A) ஒலிவ மலை

B) சீனாய் மலை

C) கெத்செமனே

Answer: A) ஒலிவ மலை

     (மத்தேயு 26: 30)

 

07. சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்று தரம் மறுதலித்தது யார்?

A) பேதுரு

B) அந்திரேயா

C) யோவான்

Answer: A) பேதுரு

     (மத்தேயு 26: 34, 75)

 

08. கெத்செமனே என்னும் இடத்தில் : இயேசு ஜெபிக்கும்படி தன்னோடு கூட்டிச் சென்ற சீஷர்கள் எத்தனை பேர்?

A) இரண்டு பேர்

B) மூன்று பேர்

C) நான்கு பேர்

Answer: B) மூன்று பேர் (பேதுரு, யோவான், யாக்கோபு)

     (மத்தேயு 26: 37)

 

09. இயேசு துக்கப்பட்டு வியாகுலத்தோடு ஜெபித்த இடம்?

A) எருசலேம்

B) ஜெப ஆலயம்

C) கெத்செமனே

Answer: C) கெத்செமனே

     (மத்தேயு 26: 36, 37)

 

10. கெத்செமனேவில் இயேசு வியாகுலத்தோடு ஜெபித்தது எத்தனை முறை?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: C) மூன்று

     (மத்தேயு 26: 44)

 


11. “இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்” என்று யார் யாரிடம் சொன்னது?

A) இயேசு கிறிஸ்து – ஜனத்தின் மூப்பர்களிடம் சொன்னது

B) இயேசு கிறிஸ்து – சீஷர்களிடம் சொன்னது

C) இயேசு கிறிஸ்து – ஜனங்களிடம் சொன்னது

Answer: B) இயேசு கிறிஸ்து – சீஷர்களிடம் சொன்னது

     (மத்தேயு 26: 47)

 

12. யூதாஸ் காரியோத்து எந்த வார்த்தையைச் சொல்லி இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்ததாக மத்தேயு நற்செய்தியாளர் கூறுகிறார்?

A) ரபீ

B) ரபீ வாழ்க

C) போதகரே

Answer: B) ரபீ வாழ்க

     (மத்தேயு 26: 49)

 

13. இயேசுவின் முடிவைப் பார்க்கும்படி பேதுரு யாரோடு உட்கார்ந்திருந்தது?

A) சேவகர்

B) வேலைக்காரர்

C) ஸ்திரிகள்

Answer: A) சேவகர்

     (மத்தேயு 26: 58)

 

14. இயேசு கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டது யார்?

A) வேதபாரகர்

B) பிரதான ஆசாரியன்

C) ஜனத்தின் மூப்பர்

Answer: B) பிரதான ஆசாரியன்

     (மத்தேயு 26: 65)

 

15. பேதுருவிடம் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றது யார்?

A) சேவகன்

B) வேலைக்காரி

C) வாயிற்காவலன்

Answer: B) வேலைக்காரி

     (மத்தேயு 26: 69)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.