மத்தேயு நற்செய்தி நூல் அதிகாரம் 25
பைபிள் கேள்வி பதில்கள்
MATTHEW CHAPTER 25
Bible Quiz Question And Answer in Tamil
================================
01. மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட கன்னிகைகள் எத்தனை பேர்?
A) ஐந்து கன்னிகைகள்
B) பத்து கன்னிகைகள்
C) பதினைந்து கன்னிகைகள்
Answer: B) பத்து கன்னிகைகள்
(மத்தேயு 25: 1)
02. புத்தியுள்ள கன்னிகைகள் எத்தனை பேர்?
A) ஐந்து பேர்
B) பத்து பேர்
C) பதினைந்து பேர்
Answer: A) ஐந்து பேர்
(மத்தேயு 25: 2)
03. தீவெட்டிகளோடு சேர்த்து எண்ணை கொண்டு வராதவர்கள் எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) ஐந்து பேர்
C) ஏழு பேர்
Answer: B) ஐந்து பேர்
(மத்தேயு 25: 3)
04. மணவாளன் வந்த நேரம் எது?
A) நடுராத்திரி
B) அதிகாலை
C) சாயங்காலம்
Answer: A) நடுராத்திரி
(மத்தேயு 25: 6)
05. எஜமான் தன் ஊழியக்காரரின் திறமைக்குத் தக்கதாக கொடுத்தது என்ன?
A) பணம்
B) தாலந்து
C) தங்கம்
Answer: B) தாலந்து
(மத்தேயு 25: 15)
06. ஐந்து தாலந்து வாங்கினவன் எத்தனை தாலந்து சம்பாதித்தான்?
A) இரண்டு
B) ஐந்து
C) புதைத்து வைத்தான்
Answer: B) ஐந்து
(மத்தேயு 25: 16)
07. இரண்டு தாலந்து வாங்கினவன் எத்தனை தாலந்து சம்பாதித்தான்?
A) இரண்டு
B) ஐந்து
C) புதைத்து வைத்தான்
Answer: A) இரண்டு
(மத்தேயு 25: 17)
08. ஒரு தாலந்து வாங்கினவன் எத்தனை தாலந்து சம்பாதித்தான்?
A) இரண்டு
B) ஐந்து
C) புதைத்து வைத்தான்
Answer: C) புதைத்து வைத்தான்
(மத்தேயு 25: 18)
09. நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்றது?
A) ஒரு தாலந்து வாங்கினவன்
B) இரண்டு தாலந்து வாங்கினவன்
C) ஐந்து தாலந்து வாங்கினவன்
Answer: A) ஒரு தாலந்து வாங்கினவன்
(மத்தேயு 25: 24)
10. எங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்?
A) நரகம்
B) அக்கினி
C) புறம்பான இருள்
Answer: C) புறம்பான இருள்
(மத்தேயு 25: 30)
11. மேய்ப்பன் வலப்பக்கத்தில் நிறுத்திய ஆடுகள் என்ன?
A) வெள்ளாடு
B) செம்மறியாடு
C) கரவல் ஆடு
Answer: B) செம்மறியாடு
(மத்தேயு 25: 32, 33)
12. மேய்ப்பன் இடப்பக்கத்தில் நிறுத்திய ஆடுகள்?
A) வெள்ளாடு
B) செம்மறியாடு
C) கரவல் ஆடு
Answer: A) வெள்ளாடு
(மத்தேயு 25: 32, 33)
13. பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நின்ற இடம் எது?
A) வலது பக்கம்
B) இடது பக்கம்
C) முன்புறம்
Answer: A) வலது பக்கம்
(மத்தேயு 25: 34)
14. பிசாசுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டது எது?
A) இருள்
B) நரகம்
C) நித்திய அக்கினி
Answer: C) நித்திய அக்கினி
(மத்தேயு 25: 41)
15. நித்திய ஜீவனை அடைவது யார்?
A) நீதிமான்கள்
B) துன்மார்க்கர்
C) சபிக்கப்பட்டவர்
Answer: A) நீதிமான்கள்
(மத்தேயு 25: 46)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.