மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள்
அதிகாரம் இருபத்து நான்கு (24)
The Gospel Of MATTHEW - 24
Bible Quiz Question With Answer Tamil
================================
01. எது ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டுப் போகும்?
A) தேவாலயம்
B) எருசலேம்
C) ஒலிவமலை
Answer: A) தேவாலயம்
(மத்தேயு 24: 1,2)
02. இயேசு கிறிஸ்துவிடம் வந்து: உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்று சீஷர்கள் கேட்ட இடம் எது?
A) தேவாலயம்
B) வனாந்தரம்
C) ஒலிவமலை
Answer: C) ஒலிவமலை
(மத்தேயு 24: 3)
03. அநேகரை வஞ்சிப்பது யார்?
A) சாத்தான்
B) கள்ளக்கிறிஸ்து
C) கள்ளத்தீர்க்கதரிசி
Answer: C) கள்ளத்தீர்க்கதரிசி
(மத்தேயு 24: 11)
04. அக்கிரமம் மிகுதியாவதினால் எது தனிந்துபோம்?
A) அநேகருடைய அன்பு
B) அநேகருடைய இரக்கம்
C) அநேகருடைய சந்தோஷம்
Answer: A) அநேகருடைய அன்பு
(மத்தேயு 24: 12)
05. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே
---------------?
A) காப்பாற்றப்படுவான்
B) இரட்சிக்கப்படுவான்
C) விடுவிக்கப்படுவான்
Answer: B) இரட்சிக்கப்படுவான்
(மத்தேயு 24: 13)
06. பாழாக்குகிற அருவருப்பை குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?
A) ஏசாயா
B) எசேக்கியா
C) தானியேல்
Answer: C) தானியேல்
(மத்தேயு 24: 15)
07. மத்தேயு 24-ம் அதிகாரத்தில் யாருக்கு ஐயோ என்று
இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்?
A) கைவிடப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும்
B) கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும்
C) வேதபாரகருக்கும், பரிசேயருக்கும்
Answer: B) கர்ப்பவதிகளுக்கும், பால்கொடுக்கிறவர்களுக்கும்
(மத்தேயு 24: 19)
08. பிணம் எங்கேயோ அங்கே ________ வந்து கூடும்.
A) கழுகுகள்
B) ஓநாய்கள்
C) புலிகள்
Answer: A) கழுகுகள்
(மத்தேயு 24: 28)
09. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது அந்தகாரப்படும்?
A) சூரியன்
B) சந்திரன்
C) நட்சத்திரங்கள்
Answer: A) சூரியன்
(மத்தேயு 24: 29)
10. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது ஒலியை கொடாதிருக்கும்?
A) சூரியன்
B) சந்திரன்
C) நட்சத்திரங்கள்
Answer: B) சந்திரன்
(மத்தேயு 24: 29)
11. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது வானத்திலிருந்து விழும்?
A) சூரியன்
B) சந்திரன்
C) நட்சத்திரங்கள்
Answer: C) நட்சத்திரங்கள்
(மத்தேயு 24: 29)
12. மனுஷகுமாரனுடைய அடையாளம் எங்கு காணப்படும்?
A) வானம்
B) பூமி
C) சமுத்திரம்
Answer: A) வானம்
(மத்தேயு 24: 30)
13. அத்திமரத்திலே இளங்கிளை தோன்றி துளிர்விட்டால் எந்தக் காலம் சமீபமாயிற்று?
A) மாரிகாலம்
B) வசந்தகாலம்
C) குளிர்காலம்
Answer: B) வசந்தகாலம்
(மத்தேயு 24: 32)
14. வானமும் பூமியும் ஒலிந்துபோம், எது ஒலிந்துபோவதில்லை?
A) வசனம்
B) வார்த்தை
C) அன்பு
Answer: B) வார்த்தை
(மத்தேயு 24: 35)
15. யாருடைய காலத்தில் நடந்தது போல மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்?
A) நோவா
B) மோசே
C) தாவீது
Answer: A) நோவா
(மத்தேயு 24: 37)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.