Type Here to Get Search Results !

23 MATTHEW | Bible Quiz Question And Answer Tamil | மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

=======================================
மத்தேயு நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
அதிகாரம் இருபத்து மூன்று (23)
The Gospel Of MATTHEW Bible Quiz Tamil 
=======================================


01. வேதபாரகரும் பரிசேயரும் யாருடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்?

A) மோசே

B) தேவன்

C) பிரதான ஆசாரியர்

Answer: A) மோசே

     (மத்தேயு 23: 2)

 

02. மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதை விரும்புகிறது யார்?

A) பரிசேயர், சதுசேயர்

B) சதுசேயர், வேதபாரகர்

C) வேதபாரகர், பரிசேயர்

Answer: C) வேதபாரகர், பரிசேயர்

     (மத்தேயு 23: 2, 7)

 

03. ரபீ, குரு என்று யாரை அழைக்க வேண்டும்?

A) மோசே

B) எலியா

C) கிறிஸ்து

Answer: C) கிறிஸ்து

     (மத்தேயு 23: 8, 10)

 

04. பெரியவனாயிருக்கிறவன் _______ இருக்கக் கடவன்.

A) வேலைக்காரனாய்

B) ஊழியக்காரனாய்

C) பணிவிடைக்காரனாய்

Answer: B) ஊழியக்காரனாய்

     (மத்தேயு 23: 11)

 

05. வேதபாரகர், பரிசேயரை இயேசு எப்படி அழைத்தார்?

A) குருடர்

B) பொய்யர்

C) மாயக்காரர்

Answer: C) மாயக்காரர்

     (மத்தேயு 23: 13, 14, 15, 25, 27, 29)

 


06. மனுஷர் பிரசேவியாதபடி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறது யார்?

A) பிரதான ஆசாரியர்

B) வேதபாரகர், பரிசேயர்

C) ஜனத்தின் அதிகாரிகள்

Answer: B) வேதபாரகர், பரிசேயர்

 (மத்தேயு 23: 13)

 

07. வேதபாரகரும், பரிசேயரும் யாருடைய வீட்டை பட்சிக்கிறார்கள்?

A) ஏழைகளின் வீடு

B) விதவைகளின் வீடு

C) தரித்திரரின் வீடு

Answer: B) விதவைகளின் வீடு

     (மத்தேயு 23: 14)

 

08. ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்கும்படிக்கு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித்திரிகிறது யார்?

A) ஏரோதியர்கள்

B) வேதபாரகர், பரிசேயர்

C) இயேசுவின் சீஷர்கள்

Answer: B) வேதபாரகர், பரிசேயர்

            (மத்தேயு 23: 15)

 

09. பொன்னை பரிசுத்தமாக்குகிறது ------------------ .

A) தேவன்

B) பலிபீடம்

C) தேவாலயம்

Answer: C) தேவாலயம்

     (மத்தேயு 23: 17)

 

10. காணிக்கையை பரிசுத்தமாக்குகிறது ------------------ .

A) தேவன்

B) பலிபீடம்

C) தேவாலயம்

Answer: B) பலிபீடம்

     (மத்தேயு 23: 19)

 


11. கொசு இல்லாதபடி வடிகட்டி _______ விழுங்குகிறவர்களாய் இருக்கிறீர்கள்.

A) தேனியை

B) ஒட்டகத்தை

C) மனிதனை

Answer: B) ஒட்டகத்தை

     (மத்தேயு 23: 24)

 

12. இயேசு குருடன் என்று யாரை அழைத்தார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 23: 26)

 

13. நீதிமானாய் இரத்தம் சிந்தியவர்களில் முதல் நபர் யார்?

A) ஆதாம்

B) காயின்

C) ஆபேல்

Answer: C) ஆபேல்

     (மத்தேயு 23: 35)

 

14. தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவர் யார்?

A) ஆபேல்

B) பரகியா

C) சகரியா

Answer: C) சகரியா

     (மத்தேயு 23: 35)

 

15. பரகியாவின் குமாரன் பெயர் என்ன?

A) மோசே

B) ஆபேல்

C) சகரியா

Answer: C) சகரியா

     (மத்தேயு 23: 35)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.