Type Here to Get Search Results !

20 MATTHEW | மத்தேயு நற்செய்தி நூல் 20-ம் அதிகாரம் வினா விடைகள் | The Gospel Of Matthew Bible Quiz Tamil | Jesus Sam

==================
மத்தேயு நற்செய்தி நூல் இருபதாம் அதிகாரம் (20)
வேதாகம வினா விடைகள்
===============
THE GOSPEL OF MATTHEW CHAPTER - 20
BIBLE QUIZ QUESTION & ANSWER TAMIL
==================

01. வீ்ட்டெஜமான் திராட்சைத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த புறப்பட்ட நேரம் என்ன?

A) காலை

B) அதிகாலை

C) மூன்றாம்மணி

Answer: B) அதிகாலை

     (மத்தேயு 20: 1)

 

02. வீட்டெஜமான் வேலையாட்களிடம் நாளொன்றுக்கு கூலி பேசிய தொகை எவ்வளவு?

A) ஒரு பணம்

B) இரண்டு பணம்

C) மூன்று பணம்

Answer: A) ஒரு பணம்

     (மத்தேயு 20: 2)

 

03. வீட்டெஜமான் கடைத்தெருவிலுள்ளவர்களை வேலைக்கு அழைத்த நேரம் என்ன?

A) மூன்றாம் மணி

B) ஆறாம் மணி

C) ஒன்பதாம் மணி

Answer: A) மூன்றாம் மணி

     (மத்தேயு 20: 3)

 

04. வீட்டெஜமான் வேலையாட்களுக்கு கூலி கொடுக்கும்படி யாரிடம் சொன்னான்?

A) மகன்

B) காரியக்காரன்

C) உடன் வேலையாள்

Answer: B) காரியக்காரன்

     (மத்தேயு 20: 8)

 

05. வீட்டெஜமான் எந்த நேரத்தில் கூலியைக் கொடுத்தான்?

A) மத்தியானம்

B) பதினோராம் மணி வேலை

C) சாயங்காலம்

Answer: C) சாயங்காலம்

     (மத்தேயு 20: 8)

 


06. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ _________ .

A) குறைவு

B) சிலர்

C) மிகவும் சிலர்

Answer: B) சிலர்

     (மத்தேயு 20: 16)

 

07.இயேசுவிடம் வந்து: உம்மிடத்தில் ஓர் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்று சொன்னது யார்?

A) மரியாள்

B) மார்த்தாள்

C) செபதேயுவின் மனைவி

Answer: C) செபதேயுவின் மனைவி

     (மத்தேயு 20: 20)

 

08. செபதேயுவின் குமாரர் எத்தனை பேர்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: B) இரண்டு

     (மத்தேயு 20: 20,21)

 

09. செபதேயுவின் குமாரர் மேல் எரிச்சலானது யார்?

A) ஜனங்கள்

B) பரிசேயர்

C) இயேசுவின் சீஷர்கள்

Answer: C) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 20: 24)

 

10. பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் ________ செய்யக் கடவன்?

A) ஊழியம்

B) பணிவிடை

C) கடமையை

Answer: B) பணிவிடை

     (மத்தேயு 20: 26)

 


11. முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் ________ செய்யக் கடவன்?

A) ஊழியம்

B) பணிவிடை

C) கடமையை

Answer: A) ஊழியம்

     (மத்தேயு 20: 27)

 

12. ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்தது யார்?

A) சீஷர்கள்

B) ஆவியானவர்

C) மனுஷகுமாரன்

Answer: C) மனுஷகுமாரன்

     (மத்தேயு 20: 28)

 

13. இயேசு எரிகோவிலிருந்து புறப்பட்ட போது வழியருகே உட்கார்ந்திருந்த குருடர் எத்தனை பேர்?

A) இரண்டு பேர்

B) மூன்று பேர்

C) பத்து பேர்

Answer: A) இரண்டு பேர்

     (மத்தேயு 20: 30)

 

14. ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்றது யார்?

A) குருடர்

B) குஸ்டரோகி

C) சப்பாணி

Answer: A) குருடர்

     (மத்தேயு 20: 30)

 

15. குருடர்களை பேசாதிருக்கும்படி அதட்டியது யார்?

A) சீஷர்கள்

B) பரிசேயர்

C) ஜனங்கள்

Answer: C) ஜனங்கள்

     (மத்தேயு 20: 31)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.