தென் இந்திய திருச்சபை
மதுரை - இராமநாதபுரம் திருமண்டிலம்
அருப்புக்கோட்டை நகர் குருசேகரம்
இம்மானுவேல் தேவாலயம்
பாலர் ஞாயிறு சிறப்பு ஆராதனை முறை
1. ஆரம்ப ஜெபம்
2. ஆரம்ப பாடல்
3. ஆராதனைக்கு அழைப்பு
கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள். அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும். தம்மை தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாய் இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
4. போற்றுதல்
நடத்துபவர்:
பூமியெங்கும் மேன்மையுள்ள நாமத்தை உடையவராயும். குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டாக செய்கிறவருமாகிய பிதாவாகிய கடவுளை போற்றுவோமாக!
சபையார்
சருவலோகாதிபா நமஸ்காரம்...
நடத்துபவர்
குழந்தையாக இவ்வுலகில் அவதரித்து ஞானத்திலும் வளர்த்தியிலும் . தேவகிருபையிலும், மனுஷர்தயவிலும் விருத்தியடைந்து. பெற்றோருக்கு கீழ்ப்படிவதிலே நல்மாதிரியை வெளிப்படுத்திய இரட்சகர் இயேசு கிறிஸ்துவை போற்றுவோமாக!
சபையார்
திரு அவதார நமஸ்காரம்...
நடத்துபவர்
திருச்சபையின் வருங்கால தூண்களாகிய இளையோருக்கு நீதியை குறித்தும், நியாயத்தை குறித்தும் கண்டித்து உணர்த்தும் தேற்றரவாளனாகிய தூய ஆவியானவரை போற்றுவோமாக!
சபையார்
பரிசுத்த ஆவி நமஸ்காரம்...
நடத்துபவர்
அன்பிற்கும், ஐக்கியத்திற்கும் அடையாளமாக இருக்கும் திரியேக கடவுளை போற்றுவோமாக!
சபையார்
முத்தொழிலோனே நமஸ்காரம்
5. பாடல்
6. பாவ அறிக்கை
மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
ஆராதனை நடத்துபவர்
எங்களது ஜெபவாழ்விலே காணப்படும் குறைவுகளுக்காக, உமது திருவசனத்தை வாசிக்காமலும், நேசிக்காமலும் இருந்த குற்றத்திற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா
ஆராதனை நடத்துபவர்
ஆலய ஆராதனைக்கு செல்வதை, ஞாயிறு பள்ளிக்கு செல்வதை அசட்டையாக எண்ணியதற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு....
ஆராதனை நடத்துபவர்
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அன்பை அறிந்தும் நாங்கள் அவரது வார்த்தைக்கு கீழ்ப்படியாததற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு....
ஆராதனை நடத்துபவர்
பெற்றோரையும், பெரியோரையும் கனம் பண்ண தவறியதற்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு....
ஆராதனை நடத்துபவர்
எங்களது அன்றாட கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்றுவதிலே காணப்பட்ட அஜாக்கிரதைக்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பு வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு....
ஆராதனை நடத்துபவர்
உலகிற்கு வெளிச்சமாக வாழ அழைக்கப்பட்ட எங்களிலே வெளிப்பட்ட இருளின் செயல்களுக்காக கடவுளே உம்மிடம் மன்னிப்பை வேண்டுகிறோம்.
சபை
மன்னிப்பு மன்னிப்பு....
7. மன்னிப்பின் உறுதி கூறல்: போதகர்
8. பாடல்
9. திருமறை பாடம் I
10. நன்றி மன்றாட்டு
ஆராதனை நடத்துபவர்
அந்தகார இருளிலிருந்து தமது ஆச்சரியமான ஒளிக்கு அழைத்த கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக
சபை
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா - 2
ஆராதனை நடத்துபவர்
நாங்கள் சத்தியத்தை அறிகிற அறிவிலே வளரும் படியாக நீர் எங்களுக்கு தந்த பெற்றோர். ஞானப்பெற்றோர். இளையோர் திருச்சபை ஆசிரியர்கள்,போதகர். சபை பெரியோர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக'
சபை
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா...
ஆராதனை நடத்துபவர்
நமது திருமண்டிலத்தின் இளையோர் திருச்சபையின் ஊழியர்களிலே, ஊழியத்திலே காணப்படும் வளர்ச்சிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக
சபை
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
ஆராதனை நடத்துபவர்
திருமண்டில அளவிலான திருமறை தேர்விலும், வட்டகை மன்றத் தேர்விலும், திருச்சபை பிள்ளைகள் பங்கு பெற்று பரிசுகளை பெற கிருபை செய்த கர்த்தரை ஸ்தோத்தரிப்போமாக
சபை
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா...
11. மாறி மாறி வாசிக்க வேண்டிய சங்கீதம்
12. மன்றாட்டு
ஆராதனை நடத்துபவர்
இந்த நாளிலே நடைபெறுகின்ற பாலர் ஞாயிறு ஆராதனையை எங்களுக்கு பயனுள்ளதாக்கித் தாரும் கர்த்தாவே!
சபை
எந்தன் ஜெபவேளை உம்மை தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன்
ஆராதனை நடத்துபவர்
எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைப் போலவே நாங்களும் அனைவருடனும் அன்பு செலுத்த கிருபை தாரும் கர்த்தாவே!
சபை
எந்தன் ஜெபவேளை...
ஆராதனை நடத்துபவர்
எங்களுடைய சபையின் இளையோர்களுக்கு நல்ல சுகத்தையும். ஞானத்தையும் தாரும். அவர்கள் தங்கள் பெற்றோருக்கும். ஆசிரியர்களுக்கும், பெரியவர்களுக்கும் கீழ்ப்படிய அருள்புரியும் கர்த்தாவே!
சபை
எந்தன் ஜெபவேளை...
ஆராதனை நடத்துபவர்
எங்களுடைய சபையின் பிள்ளைகளையும், ஞாயிறு பள்ளி ஆசிரியர்களையும் ஆசீர்வதியும். இந்த ஊழியத்தின் மூலம் உமது நாமம் மகிமைப்படும்படியும், திருச்சபையிலே வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட உதவிபுரியும் கர்த்தாவே.
சபை
எந்தன் ஜெபவேளை...
ஆராதனை நடத்துபவர்
எங்கள் திருமண்டில இளையோர் திருச்சபை ஊழியங்களுக்காகவும், சிறுவர் மத்தியில் ஊழியம் செய்யும் அனைத்து ஸ்தாபன ஊழியர்களுக்காகவும் ஜெபிக்கிறோம் கர்த்தாவே.
சபை
எந்தன் ஜெபவேளை...
ஆராதனை நடத்துபவர்
தங்கள் இளவயதில் படிப்பதற்கு வசதி வாய்ப்பு இல்லாமல் பலவித வேலைகளை செய்து தங்களது குடும்பத்திற்காய் உழைக்கும் சிறார்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்களும் கல்வி கற்பதற்குரிய வாய்ப்பையும் சகல நன்மையுைம் பெற்றுக்கொள்ள உதவி புரியும் கர்த்தாவே.
சபை
எந்தன் ஜெபவேளை...
ஆராதனை நடத்துபவர்
நோயினாலும், பசியினாலும் வேதனைப்படும் சிறியோரையும், பெரியோரையும் உமது வல்லமையினால் குணமாக்கி ஆசீர்வதியும் கர்த்தாவே.
சபை
எந்தன் ஜெபவேளை...
13. கர்த்தருடைய ஜெபம் : வானகம் வாழ்த்ந்திடும்....
14. திருமறை பாடம் II
15. திருமறை பாடம் III
16. விசுவாச பிரமாணம்
17. சிறப்பு நிகழ்ச்சிகள்: ஞாயிறு பள்ளி பிள்ளைகள்
18. அறிவிப்புகள்
19. பாடல்
20. அருளுரை
21. பாடல்: கீர்த்தனை
22. நிறைவு ஜெபம்
23. நிறைவு பாடல்

இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.